உயர் குருதி அழுத்தமா ? சமையலறைக்கு ஓடுங்கள்

உயர் குருதி அழுத்தம் இருக்கிறதா ? கவலை வேண்டாம் தினமும் ஒரு துண்டு பூண்டு சாப்பிடுங்கள் குருதி அழுத்தமெல்லாம் அழுத்தமெல்லாம் காணாமலேயே போய் விடும்.

இப்படிச் சொல்லியிருப்பது ஆஸ்திரேலியாவின் ஆராய்ச்சி முடிவு ஒன்று. பழங் காலத்திலிருந்தே பூண்டு சாப்பிடுவதை ஊக்கப்படுத்தி வந்தது தான் நமது பாட்டி வைத்தியம். இப்போது அது மருத்துவ அங்கீகார முலாம் பூசப்பட்டு அறிவியல் அறிக்கையாக வந்திருக்கிறது.

பாட்டிகளும், தாத்தாக்களும் சொன்ன வைத்தியத்தை மறந்து விட்டிருந்த நமது உதாசீனத்துக்குக் குட்டு வைத்திருக்கிறது இந்த ஆராய்ச்சி என்று கூட சொல்லலாம்.

இன்றைக்கு வினியோகிக்கப்படும் உயர் குருதி அழுத்தத்துக்கான மாத்திரைகளை விட அதிக பலனளிக்கக் கூடியது இந்த பூண்டு வைத்தியம் என்பது குறிப்பிடத் தக்கது.

உலகெங்கும் பல கோடி பேர் மிகச் சாதாரணமாகப் பாதிப்புக்கு உள்ளாகும் நோய் உயர் குருதி அழுத்தம். உயிருக்கே கூட உலை வைக்கும் இந்த நோயை பெரும்பாலானோர் ஒரு பொருட்டாகக் கூட எண்ணுவதில்லை என்பது தான் உறைய வைக்கும் உண்மை.

ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த விரிவான ஆராய்ச்சி சுமார் ஐந்து மாத காலம் தொடர்ச்சியாக நடந்திருக்கிறது. பல்வேறு உலக ஆய்வுகளின் முடிவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் முடிவாகத் தான் பூண்டு, பல உயர் குருதி மாத்திரைகளை விட வலிமை வாய்ந்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் முதுகெலும்பான மருத்துவர் கேரின் ரெய்ட் இதைக் குறித்துக் கூறுகையில், உயர் குருதி அழுத்தத்தை மருந்துகளால் குணப்படுத்த முடியுமோ இல்லையோ, பூண்டின் மூலம் குணப்படுத்திவிடலாம் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

உயர் குருதி அழுத்தமா ? இனிமேல் மருத்துவமனைகளை நோக்கி ஓடாமல் சமையலறையை நோக்கி ஓடுங்கள். சமையலறையிலேயே அதற்குரிய மருந்து இருக்கிறது !!

16 comments on “உயர் குருதி அழுத்தமா ? சமையலறைக்கு ஓடுங்கள்

  1. //வடுவூர் குமார் சொன்னது- இதோ ஓடுகிறேன்… சமையலறைக்கு.//
    நானும் தான்.

    Like

  2. Thanks. An essential information. I took it for 3,4 months. Then stopped as my neighbours complainted about garlic smell from me.

    Like

  3. சின்ன பூண்டா பெரிய பூண்டா? எத்தனை பூண்டுகள்? எந்த நேரத்தில்? சாப்பாட்டிற்கு முன்னமா இல்லை சாப்ப்பாட்டிற்கு பிறகா? பலன் தெரிய எவ்வளவு நாளாகும்? கடித்து சாப்பிடனுமா இல்லை வாயில் போட்டு தண்ணி குடிச்சி விழுங்கனுமா? ஏப்பம் வந்தால் பூண்டு வாடை வருமே? அதை அப்படியே விட்டுவிடலாமா இல்லை அதை தடுக்க மருந்து மாந்திரை உள்ளதா? எந்த வயதிற்கு ஏற்புடையது? வெரும் பூண்டு மட்டும் சாப்பிடனுமா இல்லை தேன் அல்லது பால் போன்றவற்றில் அரைத்து கலந்துக் கொள்ளலாமா? 😛

    Like

  4. ஒரு டம்ளர் பாலில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, நான்கு அல்லது ஐந்து உரித்த பூண்டு போட்டு நன்றாக வேகவிடவும். பால் ஒரு டம்ளராக வற்றியவுடன், இரவில் படுக்க போகுமுன் குடிக்கவும். இது இரத்த அழுத்தத்தையும், கொலொஸ்த்ரொலையும் குறைக்கும்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s