ரோபோ : இது புதுசு !!

முதலில் ரஜினியும் ஐஸ்வர்யாராயும் மச்சு பிச்சுவில் ஆடியதைக் காட்டினார்கள். பின்னர் ரஜினி கோவாவில் ஹாயாய் அமர்ந்திருப்பதைக் காட்டினார்கள். இப்போது என்ன புடிச்சாங்க எனும் எதிர்பார்ப்போடு வந்தீர்களெனில் கொஞ்சம் நிதானம் கொள்ளுங்கள். இது நிஜ ரோபோவின் படங்கள் !

ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் வழக்கம் போலவே இந்த முறையும் ஒரு புதிய ரோபோவைத் தயாரித்து வியக்க வைத்திருக்கின்றனர். ரிப்லீ ஆர்-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, இது வரை வெளியான ரோபோக்களிலேயே நவீனமானது என்கின்றனர் இதன் தயாரிப்பாளர்கள்.

கடந்த 2005ம் ஆண்டு இவர்கள் உருவாக்கிய ரிப்லீ க்யூ 1 எனும் ரோபோவின் நவீன வடிவம் இந்த புதிய ரோபோ.

ஐந்து வயதான ஒரு சிறுமியைப் போலவே தோற்றமளிக்கும் இந்த ரோபோ மனிதர்களைப் போலவே நடந்து, கண் சிமிட்டி, தலையை அசைத்து செயல்படுமாம். ஒரு ரோபோவுடன் உரையாடுகிறோம் எனும் சிந்தனையே சில வேளைகளில் வராது என்கின்றனர் இதன் தயாரிப்பாளர்கள்.

இரும்புக் கை, பிளாஸ்டிக் தலை என்றெல்லாம் இல்லாமல் மனித மேனியைப் போலவே இதன் மேல் பாகத்தைத் தயாரித்திருக்கின்றனர். தொட்டால் ஒரு குழந்தையைத் தொடும் உணர்வு ஏற்படும் என்பது இதன் சிறப்பம்சம்.

ரோபோக்களின் நவீனமயமாதல் ஒரு காலத்தில் நம்மிடையே உலவுபவர்களில் யார் உண்மை, யார் ரோபோ எனும் குழப்பத்தை ஏற்படுத்துமளவுக்கு முன்னேறலாம் என கருதப்படுகிறது.

என்னதான் இருந்தாலும் ஒரு குழந்தையைப் போல ரோபோவைப் பார்ப்பது கொஞ்சம் உறுத்தத்தான் செய்கிறது !

21 comments on “ரோபோ : இது புதுசு !!

 1. இரண்டு வாரங்கள் முன்பு, இங்கு நடபெற்ற ‘ஆராய்ச்சியாளர்களுக்கான கிழமை’ நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிந்தது. அதில் ஒரு நிகழ்ச்சியில் டைனசோர் குட்டியுடைய ரோபோ ஒன்று கொண்டு வந்து காட்டினார்கள். அதை தொடும்போது, இரும்பு, பிளாஸ்டிக்கை தொடுவது போலவே இல்லாமல், ஒரு உண்மையான குட்டியை தொடுவது போலவே இருந்தது. அந்த குட்டியும், சத்தம் போடுவது, தலை அசைப்பது, வால் ஆட்டுவது, தடவிக் கொடுத்தால் அதற்குரிய எதிர் வினை சத்தம் கொடுப்பது என்று ஒரு உண்மையான குட்டி போலவே இருந்தது.

  Like

 2. KALI MUTHI POCHI MAME..

  ORU KULANTHAI KITTA PEASINA ITHA VIDA 200 MADANGU SANTHOSAM IRUKUMLA MACHI..

  ATHA VITTUTU ARIYIVAL ENDRA PERULA EN EPDI MOKKA PODURANGA????

  Like

 3. /அறிவியல்இன் வளர்ச்சி வியக்க வைக்கிறது/

  சூப்பர். தமிழ்ல டைப் பண்ணியிருக்கீங்க !!! 🙂 நன்றி 🙂

  Like

 4. /ORU KULANTHAI KITTA PEASINA ITHA VIDA 200 MADANGU SANTHOSAM IRUKUMLA MACHI..//

  ஏன் 200 ஓட நிப்பாட்டிட்டீங்க. அது அளவிட முடியா ஆனந்தம் ! மச்சி !

  Like

 5. பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!!!
  இதெல்லாம் நல்ல விடயங்களுக்கு பயன்பட்டால் நல்லது.
  இல்லாவிடடால் திரைப்படங்களில் வருவது போல ரோபோக்களாலேயே உலகம் ஒரு பாடுபடும்!!!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s