வரும் வழியில் : அல்வா தயாரிப்பாளரின் “நிலாவில் மழை”

“அடடா… கேட்டைப் போட்டுட்டாங்களா “ என சலிப்புடன் ரயில்வே கேட்டின் முன்னால் காரை நிறுத்தியபோது வந்தது அந்த தொலைபேசி அழைப்பு.
“நீங்கள் சேவியரா ?”

ஏதோ ஓர் அறிமுகமல்லாத நடுத்தர வயது ஆண் குரல் தொலைபேசியின் மறு பக்கத்திலிருந்து எட்டிப் பார்த்தது.

“ஆமா சார்… நீங்க ?” எனது கேள்வியில் எதிர்பார்ப்பும், யோசனையும்.

“நீங்க நல்லா கவிதை எழுதறீங்க சார். ஒரு நண்பர் மூலமா தான் இந்த எண் கிடச்சுது” மறுமுனைக் குரல் சொல்ல கொஞ்சம் வியப்பு. இணையத்தில் எழுதும் கவிதையைப் படித்துவிட்டு அதைப் பாராட்ட சிரமப்பட்டு தொலைபேசி எண்ணைக் கண்டு பிடித்து பேசுகிறாரே என அவர் மீது மரியாதை கூடியது.

“நீங்க நிறைய புக்ஸ் எல்லாம் கூட போட்டிருக்கீங்க இல்லையா ?” குரல் விசாரித்தது.

“ஆமா சார் 11 புக் வெளிவந்திருக்கு….”

“சினிமாவுக்கு பாட்டு எழுதத் தெரியுமா சார் ?” மறுமுனைக் குரல் கேட்டது.

“எழுதத் தெரியும். வாய்ப்பு வந்தா எழுதுவேன்… “ என்றேன் நான்.

“சார் நான் ஒரு படம் தயாரிக்கிறேன். படத்தோட பெயர் நிலாவில் மழை …” என ஆரம்பித்தார் அவர்.

“நிலாவில் மழை ! ரொம்ப நல்ல கவித்துவமா இருக்கு சார் “ என்றேன்.

“என்னோட தம்பி சுகுமார் தான் இசையமைக்கிறார். சுஜாதாம்மா பாடறமாதிரி ஒரு பாட்டு இருக்கு சார். அதை நீங்க எழுத முடியுமா ?” அந்தக் குரல் கேட்டது.
இதென்னடா… இப்படியெல்லாம் அழைத்து பாட்டெழுத வாய்ப்புத் தரும் சூழலுக்கு தமிழ் சினிமா வந்து விட்டதா என யோசித்தபடியே “கண்டிப்பா எழுதலாம் சார்… சூழல் சொல்லுங்க” என்றேன்.

“சுஜாதாம்மா பாடறாங்க. ஜனாதிபதி முன்னால. அந்த பாட்டு முடிஞ்சதும் எல்லோரும் கை தட்டி இந்த பாட்டை இசையமைத்த சுகுமாருக்கும், பாடிய சுஜாதாவுக்கும் விருது குடுக்கிறாங்க… இது தான் சூழல். ஆனா கொஞ்சம் கஷ்டமான பாடல். ஒவ்வொரு பூக்களுமே … பாடல் மாதிரி எழுதணும்.. முடியுமா சார் ?” சவால் விடுவது போல கேட்டது அந்த தயாரிப்பாளரின் குரல்.

“கண்டிப்பா அதை விட நல்லாவே எழுதித் தரேன். அந்த பாடலுக்கான மெட்டை மட்டும் எனக்குக் குடுங்க..” என்றேன்.

“சரி சார். ரொம்ப சந்தோஷம். பாட்டு எழுதறதுக்காக உங்களுக்கு 1000 ரூபா தரேன்.. “

“எனக்கு பணமெல்லாம் வேண்டாம் சார். ஒரு வாய்ப்பு குடுக்கறீங்க நான் எழுதறேன்.. அவ்வளவு தான்” என்றேன்.

“சரி சார். அப்போ ஒரு 15000 ரூபா பேமெண்ட் பண்ணிடுங்க… படம் ரிலீசானதும் ரிட்டர்ன் பண்ணிடுவோம்” தயாரிப்பாளர் தனது அல்வா மூட்டையைப் பிரித்தார். எனக்குத் தொலைபேசியின் இந்தப் பக்கம் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

“என்ன பேமெண்ட் சார் ? “ அப்பாவியாய் கேட்டேன்.

“எல்லாம் ஒரு ரொட்டேஷன்ல தான் பண்ணிட்டிருக்கோம். உங்க பணத்தையும் நாங்க படம் முடிஞ்சதும் ரிட்டர்ன் பண்ணிடுவோம்” என்றது அந்த சால்ஜாப்புக் குரல்.

“இல்லை சார். எனக்கு அதுல எல்லாம் விருப்பம் இல்லை. இன்னிக்கு சினிமால பாட்டு எழுதற பலரும் என்னோட நண்பர்கள். சில இயக்குன நண்பர்களும் உண்டு. யாரிடமும் நான் வாய்ப்புக் கேட்டது கூட இல்லை. எனக்கு சினிமாவுக்குப் பாட்டெழுதும் கிரேஸ் எல்லாம் இல்லை…. “ விளக்கினேன்.

“நீங்க.. பணம் செலவு பண்ணி புக் எல்லாம் போடறீங்களே சார். பாட்டெழுதினா பிரபலம் ஆயிடலாம் இல்லையா ? “ என்றார் ஆசை காட்டும் விதமாக.

“யார் சொன்னது நான் பணம் செலவு செய்து புக் போடறேன்னு ? எனக்கு அமெரிக்காவுல பி & எஃப் கம்பெனி வருஷத்துக்கு 1.5 மில்லியன் டாலர் காண்ட்ராக்ட் போட்டிருக்காங்க தெரியுமா ? அதுக்கே எழுதிக் கொடுக்க நேரமில்லாம கஷ்டப்படறேன்” நான் இந்தப் பக்கம் இருட்டுக் கடை அல்வாவைத் திறந்தேன்.

அவ்வளவு தான் மறுமுனை அல்வாவில் மழை பார்ட்டி எஸ்கேப் !!!
நண்பர்களே… உஷார் !!! ஏமாந்துடாதீங்க… “நிலாவில் மழை” பெய்யாது எப்போதும்.

27 comments on “வரும் வழியில் : அல்வா தயாரிப்பாளரின் “நிலாவில் மழை”

  1. //thideernu cinema padal asiriyarayitta appauram putikka mutiyathu. maranthutathingka sir
    //

    என்னைத் தேடி வாய்ப்பு வரும் வரை நானாய் போகப் போவதில்லை. எனவே நான் பாடல் எழுதும் வாய்ப்பு இல்லை 😀

    Like

  2. //enna kodumai xavier sir ithu?

    “pathu suthanama irunga rasa , ippadi pala pear kinampi irukaingey
    //

    உண்மை 🙂 ஏமாத்தறதுல மக்களுக்கு கற்பனை நல்லா வேலை செய்யுது !

    Like

  3. /படத்தோட பெயரைக் கேட்டதுமே நீங்க கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம்./

    அவரோட பேரைக் கேட்டதுமே உஷாராயிருக்கணும் 😀

    Like

  4. //ஹா ஹா ஹா ஹா ஹா….. ஐயோ ஐயோ….. சரியா கிளம்பிருக்காங்கய்யா…. மாமா பிஸ்கோத்து….//

    சரின்னு சொல்லி அவனைச் சந்தித்து போட்டோ எடுத்து போட்டிருக்கணும் 😉 தப்பு பண்ணிட்டேன் 😀

    Like

  5. நிலாவில் மழை ! ரொம்ப நல்ல கவித்துவமா இருக்கு சார் “ என்றேன்.

    ஹா ஹா… அதானே ..

    கடலை போட்டவருக்கு அல்வா…. சூப்பர்..

    ” butterfly” சூர்யா

    Like

  6. Pingback: ஸ்டோரி டிஸ்கஷன் « விஜய்கோபால்சாமி

  7. சேவியர் ,
    நீங்க இப்படி கேட்டிருக்கனும் ” அவனா நீயு?” 🙂

    Like

Leave a comment