வெயிலுக்குப் பயப்படும் ஆண்களே உஷார் !

இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் பெரும்பாலானோருக்குத் தந்திருக்கிறது எனலாம். அலுவலகத்தில் சுவர்களுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபட்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது சராசரி வாழ்க்கை.

இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று.
மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் வைட்டமின் டி குறைவது என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும்.

தேவையான அளவு வைட்டமின் டி உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன. தம்பதியர் பெற்றோராகும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. அதற்கு அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் சட்டையைக் கழற்றி ஓரமாய் வைத்து விட்டு கொஞ்சநேரம் வெயிலில் காலார நடந்து வருவது தான் !

இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரண்டு மாதங்களில் விந்தணுக்களின் வலிமையும், எண்ணிக்கையும், உருவமும் பல மடங்கு மேம்பட்டதாகச் சொல்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய மருத்துவர் கிளார்க்.

இந்த சோதனையில் மூலம் 35 விழுக்காடு பேர் குழந்தையின்மைச் சிக்கலையும் தீர்த்திருக்கின்றனர் என்பது வியப்பூட்டுகிறது.

அலுவலக அறைகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பவர்கள் அவ்வப்போது எழுந்து சாலையோர டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் டீயும் பெற்றுக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் அளவான உடற்பயிற்சி மேற்கொள்வதும் என உடலை ஆரோக்கியமாய் காத்துக் கொள்ளும் ஆண்கள் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை செழிக்கும்

27 comments on “வெயிலுக்குப் பயப்படும் ஆண்களே உஷார் !

 1. ஆண்களுக்கு மட்டும் அல்ல.குழந்தைகள் உட்பட மரம் செடி கொடி மிருகங்கள் அனைவருக்குமே உபயோகமான நல்ல பதிவு.

  Like

 2. //மரம் செடி கொடி மிருகங்கள் அனைவருக்குமே உபயோகமான நல்ல பதிவு.//

  இதுக்கெல்லாம் வாசிக்க தெரியுமோ???
  ம்ம்ம் காலம் மாறுதுஃ!!!

  Like

 3. அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள ‘இன் தமிழுக்கு’ In-Tamil.com வாருங்கள். இன் தமிழ் மூலம் உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்குங்கள்.

  Like

 4. அண்ணே ஏற்கனவே உலக மக்கள் தொகை கண்ணைக் கட்டுது… இதுல இந்த டிப்ஸ் தேவைதானா… குடும்பத்துக்கு ஒன்னு போதும்ணே…

  Like

 5. சோம்பமல் பேர்வழிகள் இனியாவது திருந்தட்டும்.

  Like

 6. சோம்பல் பேர்வழிகள் இனியாவது திருந்தட்டும்.

  Like

 7. ஊட்டச்சத்து

  புரதம் – இதன் முக்கியத்துவம்

  புரதங்கள் அமினோ அமிலங்களினால் ஆனவை. இவை உயிர்வாழ்வினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல வேலைகளை செய்வதற்கு இன்றியமையாத பொருளாகும். பெரும்பாலும் உடலிலுள்ள புரத அளவில் பாதியளவு தசை வடிவில் அமைந்துள்ளன. புரதத்தின் தரமானது உணவில் அமைந்துள்ள அத்தியாவசியமான அமினோ அமிலங்களைப் பொறுத்து அமைகிறது.

  புரதத்தின் செயல்பாடுகள்
  புரதமானது உடலில் ஏற்படக்கூடிய முக்கிய வேதியியல் மாற்றச் செயல்களுக்கு என்ஸைம் மற்றும் ஹார்மோன் வடிவிலும் தேவைப்படுகிறது. குழந்தை மற்றும் விடலைப் பருவத்தில் உடல் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஆதாரப்பொருட்களை புரதங்கள் தருகின்றது. வளர்ந்தவர்களில் தேய்மானம் மற்றும் சேதாரத்தினால் ஏற்படும் இழப்புகளை பராமரிக்க புரதங்கள் உதவியாயிருக்கின்றன.
  கற்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால்கொடுக்கும் காலங்களில் தாய்சேய் இருவரின் உடற்திசு வளர்ச்சிக்கும் மற்றும் பால் சுரப்பதற்கும் கூடுதலான புரதம் தேவைப்படுகிறது

  உணவில் எடுத்துக்கொள்ள வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட புரதத்தின் அளவு
  இறைச்சியில் உள்ள புரதங்கள் மிகவும் உயர்ரக புரதங்களாகும். அவற்றிலிருந்து உடலுக்கு தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் சரியான விகிதாசாரத்தில் கிடைக்கிறது. சைவ உணவு பழக்கமுள்ளவர்களுக்கும் தானியங்கள் மற்றும் முந்திரிப்பருப்பு, நிலக்கடலை போன்ற பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளும்போது போதுமான புரதங்கள் கிடைக்கின்றது. பால் மற்றும் முட்டையில் நல்ல தரமான புரதங்கள் உள்ளன. பயறு வகைகள், கடலை மற்றும் எண்ணெய் வித்துக்கள், பால் மற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பொருட்கள், இறைச்சி, மீன் மற்றும் கோழி இறைச்சி போன்றவை புரதம் அதிக அளவில் உள்ள சில பொருட்களாகும். தாவர உணவுகளில், சோயாபீன்ஸில் மிக அதிகளவு புரதம் கிடைக்கின்றது. இவை 40 சதம்வரை புரதங்களை கொண்டவை. 57 கிலோ உடல் எடை கொண்ட 16-18 வயதுடைய ஒரு ஆணுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு 78 கிராம் ஆகும். அப்படியிருக்க 50 கிலோ எடைகொண்ட அேத வயதை சேர்ந்த பெண்ணிற்கு ஒரு நாளைக்கு 63 கிராம் புரதம் தேவைப்படுகிறது. கற்பிணி பெண்களுக்கு 65 கிராம் புரதம் தேவைப்படுகிறது. பால் கொடுக்கும் காலங்களில் (குழந்தை பிறந்த 6 மாத காலம்வரை) பெண்களுக்கு ஒரு நாளைக்கு 75 கிராம் புரதம் தேவைப்படும்.

  உணவுப் பொருட்கள்

  சாப்பிடக்கூடிய பகுதியில் உள்ள புரதத்தின் அளவு (கிராம்/100 கிராம்/ )

  சோயாபீன்ஸ்

  43.2

  கொண்டக்கடலை, உளுந்து, பச்சை பயறு மற்றும் துவரை

  22

  நிலக்கடலை, முந்திரி மறறும் பாதாம் பருப்பு

  23

  மீன்

  20

  இறைச்சி

  22

  பால்(பசு)

  3.2

  முட்டை

  13.3 (ஒரு முட்டையில்)

  நுண்ணூட்டச் சத்துக்கள் – பாதுகாப்பளிக்கும் உணவுகள்

  நுண்ணூட்டச் சத்துக்கள் என்பவை மிக குறைந்த அளவிலேயே உடலுக்கு தேவைப்படுகிற வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் ஆகும். இவைகள் உடலில் ஏற்படும் உடற்சிதைமாற்ற செயல்களுக்கு உறுதுணையாய் இருந்தும், நோய்களை எதிர்க்வும் அவற்றிலிருந்து உடலை பாதுகாக்கவும் உதவுகின்றது. இவை உடல் நலனையும் மற்றும் நீண்ட ஆயுளையும் பேணிக்காக்க அவசியமாகும். வைட்டமின் ஏ கொழுப்பில் கரையகூடிய தன்மைகொண்ட வைட்டமின் ஆகும். கண் பார்வை, நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் தோல் செயல்பாடுகளில் வைட்டமின் ஏ முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்தியாவில் 3 சதம் பள்ளி செல்லும் வயதுடைய சிறுவர்கள் வைட்டமின் ஏ பற்றாக்குறையின் அறிகுறிகளான பைடாட் ஸபாட்ஸ் (கண்ணில் வெண்மையான பகுதியில் முக்கோன வடிவில் சாம்பல்நிற தோற்றம்) என்பவையால் அவதிப்படுகின்றன. வைட்டமின் ஏ பற்றாக்குறையின் ஆரம்பநிலையில் ஏற்படும் அறிகுறியானது மாலைக்கண் நோய் (இரவில் பார்வை இழப்பு) ஆகும்.

  வைட்டமின் ஏ யின் முக்கியத்துவங்கள்

  * நல்ல கண் பார்வைக்கு வைட்டமின் ஏ அவசியம். வைட்டமின் ஏ குறைபாடு மாலைக்கண் நோய் மற்றும் பிற குறைபாடுகளை ஏற்படுத்தும்
  * கற்ப காலத்திலும் மற்றும் அவற்றிற்கு முன்னும் பெண்களுக்கு வைட்டமின் ஏ குறைபாடு ஏற்படுவதை தடுப்பதன் மூலம் இறப்பு மற்றும் நோயுற்று ஆரோக்கியம் குறையும் தன்மையை பெருமளவில் குறைக்கலாம்
  * உணவில் வைட்டமின் ஏ அதிகளவில் எடுத்துக்கொள்வதினால் அதன் பற்றாக்குறைவால் ஏற்படும் நோய்களை தடுக்கலாம்

  வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ள உணவுகள்

  * பச்சை நிற கோஸ், அனைத்து வகை கீரைகள், காய்கறி வகைகள், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ண பழங்கள் காய்கறிகளில், பீட்டா கரோடின் எனும் பொருள் மிக அதிகளவில் கிடைக்கிறது
  * பீட்டா கரோடீன் வைட்டமின் ஏ வாக மாற்றப்படுகிறது.
  * இறைச்சி ஒன்றே வைட்டமின் ஏ யின் முக்கிய உற்பத்தி ஸ்தானம்
  * பால் மற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பொருட்கள், முட்டையின் மஞ்சள் நிறகரு, சிவப்பு பாமாயில், மீன் மறறும் மீன் எண்ணெய் போன்றவற்றில் வைட்டமின் ஏ மிக அதிக அளவில் கிடைக்கிறது. சில உணவுப்பொருட்களில் உள்ள மொத்த பீட்டா கேராடினின் அளவு பின்வருமாறு

  உணவுப்பொருளின் பெயர்

  சாப்பிடக்கூடிய பகுதியில் உள்ள பீடா கேராடீனின் அளவு (மைக்ரான்/100 கிராம்)

  கொத்தமல்லித் தழை

  4800

  கருவேப்பிலை

  7110

  முருங்கைக்கீரை

  19690

  வெந்தயக்கீரை

  9100

  கேரட்

  6460

  மாம்பழம்

  1990

  பப்பாளி பழம்

  880

  பூசணி

  1160

  வைட்டமின் சி

  வைட்டமின் சி ஒரு அத்தியவசியமான நுண்ணூட்டச்சத்து. இது நோய் தொற்றுவதை தடக்கிறது. வைட்டமின் சி பற்றாக்குறை ஸ்கர்வி என்னும் நோயினை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் பலவீனம், பற்களின் ஈர்களில் இரத்தக்கசிவு மற்றும் எலும்பு வளர்ச்சியில் குறைபாடு போன்றவை ஏற்படுகின்றன. காயம் ஆறுதல், அமினோ அமிலம் மற்றும் மாவுப் பொருட்களின் வேதியல் மாற்றங்கள் மற்றும் ஹார்மோன் எனும் வேதி கூட்டுப்பொருள் உண்டாவதற்கு வைட்டமின் சி உதவி செய்கிறது. இரும்பு சத்தை உடல் எடுத்துக் கொள்ளும் தன்மையை அதிகரிக்கின்றது.

  இரும்புச் சத்து

  இரத்த சிவப்பு அணுக்களில் உள்ள ஹிமோகுளோபின் என்னும் பொருள் உருவாவதற்கு இரும்புச் சத்து முக்கிய தேவை ஆகும். இந்த ஹிமோகுளோபினானது பிராணவாயுவினை நுரையீரலிலிருந்து இரத்தத்தின் மூலம் உடற் திசுக்களுக்கு எடுத்தும் செல்லும் செயலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நமது நாட்டில் இரத்த சோகை என்பது சிறுபிள்ளைகள், பருவ வயது பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களில் ஏற்படும் ஒரு முக்கிய உடல் நலக் கேடு ஆகும். மக்கள் தொகையில் ஏறக்குறைய 50 சதவிகிதத்தினர், முக்கிய ஊட்டச்சத்துப் பற்றாக்குறையினால் ஏற்படும் இரத்தேசாகையினால் பாதிப்கப்படுகின்றனர். ஊட்டச்சத்துப் பற்றாக்குறையினால் ஏற்படும் இரத்தேசாகையினால், இளைஞர்களின் செயல்திறன் மற்றும் சிறுபிள்ளைகளில் கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

  இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுபொருட்கள்

  * கீரை வகைகள், உலர்ந்த பழவகைகள், பயறு வகைகள், கம்பு மற்றும் கேழ்வரகு ஆகியவைகளில் இரும்புச்சத்து அதிகமுள்ளன. 3-5 சதவீதம் வரை இரும்புச்சத்து மட்டுமே உடலானது தாவரப்பொருட்களிலிருந்து உட்கிரகிக்கிறது.
  * இறைச்சி மீன் மற்றும் கோழி இறைச்சி
  * நெல்லி, கொய்யா மற்றும் சிட்ரஸ் வகை பழங்களான கமலா ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களிலிலிருக்கும் வைட்டமின் சி, உடலானது இரும்புச்சத்தை உட்கிரகிக்க உதவுகிறது
  * உணவிற்கு பின் தேனீர் (டி) மற்றும் குழம்பி (காபி) சாப்பிடுவதை தவிர்க்கவும்

  அயோடின்

  * அயோடின் தைராக்ஸின் எனப்படும் தைராய்டு ஹார்மோன் உண்டாவதற்கான மிக முக்கிய மூலக்கூறு ஆகும். இந்த தைராக்ஸின் ஹார்மோன் ஒரு நபரின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு அவசியமாகும்
  * ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 100-150 மில்லிகிராம் அயோடின் தேவைப்படுகிறது. இந்த அளவு ஒரு நபரின் வயது மற்றும் உடல் செயல் நிலையை பொருத்து வேறுபடும்
  * அயோடின் குறைபாடு ஒழுங்கின்மைகள் என்பது இந்தியாவில் ஏறபடக்கூடிய ஒரு முக்கிய நுண்ணூட்டச்சத்து குறைபாட்டு ஒழுங்கின்மையாகும்
  * கர்ப்பிணி பெண்களில் அயோடின் குறைபாடு ஏற்படும்போது இது கற்பத்தில் வளரும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது
  * நமக்கு நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து முக்கியமாக கடல் உணவு மற்றும் தண்ணீரிலிருந்து அயோடின் கிடைக்கிறது
  * கோஸ், காலிபிளவர், மரவள்ளிக்கிழங்கு போன்ற காய்கறிகளில் காணப்படும் ஒரு வகை பொருளினால், உடல் அயோடின் உபேயாகப்படுத்துவதை தடுக்கிறது
  * அயோடின் குறைபாட்டு ஒழுங்கின்மைகள் ஏற்படாமல் தடுக்க ஒவ்வொருவரும் அயோடின் சேர்க்கப்பட்ட உப்பினை உணவில் பயன்படுத்த வேண்டும்

  விடலைப்பருவத்தில் வளர்ச்சி

  * அயோடின் தைராக்ஸின் எனப்படும் தைராய்டு ஹார்மோன் உண்டாவதற்கான மிக முக்கிய மூலக்கூறு ஆகும். இந்த தைராக்ஸின் ஹார்மோன் ஒரு நபரின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு அவசியமாகும்
  * ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 100-150 மில்லிகிராம் அயோடின் தேவைப்படுகிறது. இந்த அளவு ஒரு நபரின் வயது மற்றும் உடல் செயல் நிலையை பொருத்து வேறுபடும்
  * அயோடின் குறைபாடு ஒழுங்கின்மைகள் என்பது இந்தியாவில் ஏற்படக்கூடிய ஒரு முக்கிய நுண்ணூட்டச்சத்து குறைபாட்டு ஒழுங்கின்மையாகும்
  * கர்ப்பிணி பெண்களில் அயோடின் குறைபாடு ஏற்படும்போது இது கற்பத்தில் வளரும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது
  * நமக்கு நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து முக்கியமாக கடல் உணவு மற்றும் தண்ணீரிலிருந்து அயோடின் கிடைக்கிறது
  * கோஸ், காலிபிளவர், மரவள்ளிக்கிழங்கு போன்ற காய்கறிகளில் காணப்படும் ஒரு வகை பொருள், உடலானது அயோடின் உபேயாகப்படுத்துவதை தடுக்கிறது
  * அயோடின் குறைபாட்டு ஒழுங்கின்மைகள் ஏற்படாமல் தடுக்க ஒவ்வொருவரும் ஐயோடின் சேர்க்கப்பட்ட உப்பினை உணவில் பயன்படுத்த வேண்டும்

  விடலைப்பருவத்தில் தேவைப்படும் சத்துக்கள்

  நமக்கு சக்தி ஏன் தேவைப்படுகிறது

  மனித இனம் தங்களுடைய அன்றாட உடல்ரீதியான வேலைகளை செய்யவும், உடல் வெப்பநிலையை சரியாக சீராக பராமரிக்கவும், உடலில் அன்றாட வளர்சிதை மாற்றங்கள் ஏற்படுவதற்கும், உடல் வளர்ச்சிக்கும் போதுமான அளவு சக்தி தேவைப்படுகிறது. இந்தியாவில் 50 சதவிகிதம் ஆண்கள் மற்றும் பெண்கள், நாட்பட்ட சக்தி பற்றாக்குறைவினால் பாதிக்கப்படுகின்றனர் என தேசிய கண்காணிப்பு குழுவின் ஆய்வு தெறிவிக்கிறது.

  * ஒவ்வொரு தனி நபரின் அன்றாட சக்தி தேவையின் அளவு அந்த நபரின் அன்றைய சக்தி இழப்பு அல்லது செலவு செய்வதை பொறுத்து அமைகிறது. இதுமட்டுமின்றி வயது, உடல் எடை, செய்யும் வேலைகளின் தன்மை, உடல் வளர்ச்சி மற்றும் உடலமைப்பு பொறுத்து அமைகிறது. இந்தியாவில் உணவிலிருநது பெறப்படும் மொத்த சக்தியின் அளவில் 70-80 சதவித சக்தியானது உணவுத்தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் கிழங்குகளிலிருந்து பெறப்படுகிறது
  * குழந்தைகள் மற்றும் விடலைப்பருவத்தினர் தங்களது அன்றாட தேவைக்கான சக்தியில் 55-60 சதம் வரை மாவுச்சத்துப்பொருட்களிமலிருந்து பெருகின்றனர்
  * விடலைப்பருவத்தினரின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு மிக அதிகளவிலான சக்தி தேவைப்படுகிறது. உதாரணம் 16-18 வயது பெண்களுக்கு ஒரு நாளுக்கு 2060 கிலோ காலரிஸ் சக்தியும் ஆண்களுக்கு 2640 கிலோ காலரிஸ் சக்தியும் தேவைப்படுகிறது
  * கர்ப்ப காலத்தின்போது, கர்ப்பத்தில் வளரும் குழந்தைகள் வளர்ச்சிக்கும், கர்ப்பிணி பெண்ணின் உடல் நலத்திற்கும் கூடுதலான அளவு சக்தி தேவைபடுகிறது
  * குறைவான அளவு சக்தியுள்ள பொருளை உட்கொள்ளும்போது சத்து பற்றாக்குறைவு ஏற்படுகிறது. அதே வேலையில் அதிகளவு உட்கொள்ளும்போது உடற்பருமன் ஏற்படுகிறது

  சக்தி அதிகம் உள்ள உணவு

  * தானியங்கள், பருப்பு வகைகள், கிழங்குகள், தாவர எண்ணெய்கள், நெய் வெண்ணெய், எண்ணெய் வித்துக்கள், கொட்டைகள், சர்க்கரை மற்றும் வெள்ளம் போன்றவை
  * நாம் அதிகளவில் தானியவகை உணவிலிருந்து நமக்கு தேவையான சக்தியினை (கேலாரிஸ்) பெருவதினால் வெவ்வேறு வகையான தானியங்கள் உட்கொள்ள பழகிக்கொள்வது நல்லது
  * தானிய வகைகளான கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவை குறைந்த விலையில் கிடைக்கக் கூடியவை. அதே சமயம் அதிக சத்தானவை

  உணவுப் பொருட்கள்

  100 கிராம் சாப்பிடக் கூடிய பகுதியிலிருந்து கிடைக்கும் சக்தியின் அளவு (கிலோ காலரிஸ்)

  அரிசி

  345

  கோதுமைமாவு

  341

  சோளம்

  349

  கம்பு

  361

  கேழ்வரகு

  328

  மக்காச்சோளம்

  342

  கொழுப்புச் சத்து மற்றும் மனித நலம்

  கொழுப்புச் சத்து என்பது நமது உணவில் உள்ள ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இது நமது உடலில் பல்வேறு வேலைகளை செய்ய உதவுகிறது. கொழுப்பிலிருந்து அதிகளவு சக்தி கிடைக்கிறது. அதாவது ஒரு கிராம் கொழுப்பிலிருந்து 9 கிலோ காலரிஸ் சக்தி கிடைக்கிறது. நமது உணவில் உள்ள கொழுப்பில் கரையக் கூடிய வைட்மின்களான ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவற்றை உணவிலிருந்து உடலானது எடுத்துக்கொள்ள குறைந்த அளவு கொழுப்பு அவசியம் தேவை.

  * உணவில் உள்ள கொழுப்பானது தாவர உணவிலிருந்தும் மற்றும் இறைச்சியிலிருந்தும் கிடைக்கிறது
  * தாவர எண்ணெய் வகைகளிருந்து, உடலுக்குத் தேவையான எஸன்ஷியல் ஃபாட்டி ஆசிட்ஸ் (ஈ.எப்.ஏ) மற்றும் அன்சாச்சுரேட்டேட் ஆசிட் (மோனோ அன்சாச்சுரேட்டேட் ஃபாட்டி ஆசிட்(எம்.யூ. எப்.ஏ) மற்றும் பாலி அன்சாச்சுரேட்டேட் ஃபாட்டி ஆசிட்(பி.யூ. எப்.ஏ)) எனப்படும் கொழுப்பு அமிலங்கள் கிடைக்கின்றன
  * நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து நமக்கு தேவையான எஸன்ஷியல் ஃபாட்டி ஆசிட்ஸ் எனப்படும் கொழுப்பு அமிலங்கள் கிடைக்கின்றது. இவை நமது உடலில் பல முக்கிய செயல்பாடுகளை செய்கின்றன
  * பெரியவர்கள், குறைந்த அளவில் சாச்சுரேட்டேட் ஃபாட் எனப்படும் கொழுப்பு பொருட்களை உட்கொள்ள வேண்டும். (நெய் வெண்ணெய் போன்ற உணவு பொருட்கள்)
  * உடலுக்குத் தேவையான அன்சாச்சுரேட்டேட் ஃபாட்டி ஆசிட் எனும் கொழுப்பு அமிலமானது, தேங்காய் எண்ணெய்யை தவிர மற்ற எல்லா தாவரவகை எண்ணெய்யிலும் மிக அதிகளவு உள்ளது
  * சாச்சுரேட்டேட் ஃபாட் அதிகமாக இருக்கும் நெய், வெண்ணெய் போன்ற உணவு பொருட்களை மிக அதிக அளவில் உட்கொண்டால், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பு பொருளின் அளவு அதிகப்படும். அப்படி கொலஸ்ட்லாலின் அளவு அதிகரிப்பது உடல் நலத்திற்ககு நல்லதல்ல. மேலும் உடற்பருமனடைதல், இதய மற்றும் இரத்த நாளம் சம்மந்தமான கோளாறுகளை ஏற்படுத்தும்.
  * சமையலுக்கு பயன்படுத்தப்படும் கொழுப்பு பொருட்களான தாவர வகை எண்ணெய், வனஸ்பதி, வெண்ணெய் மற்றும் நெய் போன்றவைகள் காணக்கூடிய கொழுப்பு பொருட்கள் என்றழைக்கப்படும். உணவில் உள்ள மற்ற கொழுப்புப் பொருட்களை காணக்கூடாத கொழுப்பு என்பர்
  * இறைச்சியிலிருந்து சாச்சுரேட்டேட் ஃபாட் எனப்படும் கொழுப்பு பொருள் மிக அதிகளவில் கிடைக்கப்பெருகிறோம்

  பரிந்துரைக்கப்பட்ட உணவின் அளவு

  * இளம்பிள்ளைகள் மற்றும் விடலைப் பருவத்தினருக்கான உணவில் கொழுப்பின் அளவு 25 கிராம்
  * அதிக அளவில் எந்தவித உடல் உழைப்பும் செய்யாத வாலிப வயதினருக்கு தேவைப்படும் கொழுப்பின் அளவு ஒரு நாளுக்கு 20 கிராம்
  * கர்ப்பிணி பெண்கள் மற்றும் பால்கொடுக்கும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 30கிராம் கொழுப்பு பொருளானது தேவைப்படுகிறது

  சமைக்க பயன்படுத்தும் எண்ணெயில் காணப்படும் லினோலிக், லினோலினிக் அமிலங்களின் அளவு (கிராம்ஸ்/100 கிராம் எண்ணெய்)

  எண்ணெய்

  லினோலிக்
  அமிலம்

  லினோலினிக் அமிலம்

  மொத்தம் ஈ.எப்.ஏ

  நெய்

  1.6

  0.5

  2.1

  தேங்காய்

  2.2

  2.2

  வனஸ்பதி

  3.4

  3.4

  பாமாயில்

  12.0

  0.3

  12.3

  கடுகு

  13.0

  9.0

  22.0

  கடலை

  28.0

  0.3

  28.3

  அரிசி தவிடு

  33.0

  1.6

  34.6

  எள்

  40.0

  0.5

  40.5

  சூரிய காந்தி

  52.0

  52.0

  சோயா பீன்ஸ்

  52.0

  5.0

  57.0

  Like

 8. சிறு குழந்தைகள் நாள் முழுக்க‌
  வீட்டின் வெளியிலேயே
  இருக்க விரும்பி அடம்
  பிடிக்கின்றன! ஐயகோ!

  Like

 9. //சிறு குழந்தைகள் நாள் முழுக்க‌
  வீட்டின் வெளியிலேயே
  இருக்க விரும்பி அடம்
  பிடிக்கின்றன! ஐயகோ!//

  என்ன செய்ய அக்கினி பொசுக்குதே 🙂

  Like

 10. Pingback: வெயிலுக்குப் பயப்படும் ஆண்களே உஷார் ! « SEASONSNIDUR

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s