புகை : குடும்பத்துக்குப் பகை

smoke

புகைத்தலைப் பற்றி நாளொன்றுக்கு ஒரு ஆராய்ச்சி ஏதேனும் ஓரிடத்தில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளில் ஒன்றேனும் “புகைத்தல் நல்லது” என குறிப்பிடுமா என ஆவலுடன் நோக்கும் புகை பிரியர்கள் ஏமாற்றம் மட்டுமே அடைகின்றனர்.

தற்போது வெளியாகியிருக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்று புகையை சுவாசிக்க நேரிடும் குழந்தைகளுக்கு குணாதிசயங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்திருக்கிறது.

அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி குழந்தைகள் நல மருத்துவ மனை நிகழ்த்திய இந்த விரிவான ஆய்வு குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் புகைசூழ் பகுதிகளில் தங்க நேரிடுவதால் ஏற்படும் சிக்கல்களை முன்னிலைப்படுத்துகிறது.

ஆஸ்த்மா நோய்க்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளை இந்த புகை மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள் உள்ளாக்குகிறது என கவலையுடன் குறிப்பிடுகிறார் இந்த ஆய்வை நிகழ்த்திய மருத்துவர் கிம்பர்லி யோல்டன்.

நிகோட்டினின் இணை பொருளான கோடினின் குருதியில் கலந்துள்ள அளவை வைத்து இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.

புகையை சுவாசிக்க நேரும் மக்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாக நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கடந்த ஆண்டு திடுக்கிடும் ஆய்வு ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புகைத்தல் என்பது புகைப்பவர்களை மட்டுமன்றி வளரும் இளம் தலைமுறையையே பாதிப்புக்கு உள்ளாக்குகிறது எனும் அதிர்ச்சிப் பாடத்தை இந்த புதிய ஆய்வும் உரக்கச் சொல்கிறது.

குறிப்பாக வீடுகளில் புகைக்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நலனை கேள்விக்குறியாக்குகின்றனர் என்றால் அது மிகையல்ல. புகைக்கும் பழக்கம் அறவே இல்லாதவர்கள் கூட பிறர் ஊதித் தள்ளும் புகையினால் பாதிப்புக்கு உள்ளாகும் அவலம் களையப்படவேண்டியதே.

புகைத்தல் தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் கேடு விளைவிக்கிறது என்பதை ஆய்வுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தன்மீதோ, குடும்பத்தின் மீதோ, சமூகத்தின் மீதோ அக்கறை உடையவர்கள் இந்தப் பழக்கத்திலிருந்து மீண்டு வருவார்களாக !

15 comments on “புகை : குடும்பத்துக்குப் பகை

 1. *** Now in the world man equal woman Smoker ***
  *** But nobody does’t know feature problan good Xavi ***

  Like

 2. ok i have to accept it. im a chain smoker how i can leave this habite. i don’t know how to leave smoke. if you have any idea’s about this. please report to me.

  Ungal Nanban……

  Like

 3. /*புகைத்தல் என்பது புகைப்பவர்களை மட்டுமன்றி வளரும் இளம் தலைமுறையையே பாதிப்புக்கு உள்ளாக்குகிறது*/
  புகை பிரியர்கள் இதை புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்

  Like

 4. //ok i have to accept it. im a chain smoker how i can leave this habite. i don’t know how to leave smoke. if you have any idea’s about this. please report to me.//

  இந்த சிகரெட் தான் எனக்கு அடிமை, அதற்கு நான் அடிமை இல்லைன்னு மனசுக்குள்ள சொல்லுங்க… நிச்சயம் நடக்கும்..

  Like

 5. vanathila yaagam valarppaar munivar
  vaauila pugai pidippaar manavar
  இதே போல இன்னொரு மறுமொழி இருக்கிறது; நீங்க ஏற்கனவே இதைச் சொல்லிட்டீங்க போல இருக்கே !
  ippadi varudea thavara yen msg display aguthulla

  Like

 6. மிகவும் அருமையான பதிவு!

  வளரும் அடுத்த தலைமுறையினருடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது, பலருக்கும் கெடுதியை உண்டுபண்ணும் இந்த புகைப்பழக்கத்தை நிறுத்திட புகைப்பவர்கள் முன்வர வேண்டும்.

  எவ்வளவுதான் சட்டங்கள் இயற்றினாலும், சம்பந்தப்பட்டவர்கள் மனது வைத்தால்தான் எல்லாமே சாத்தியப்படும்; ஆகவே, தயவுசெய்து இப்பதிவை படித்த, படிக்கப்போகும் அன்பர்கள் எல்லோரும் இனியாவது புகைத்தலை நிறுத்திக்கொள்ளும்படி விழைகிறேன்!

  ரொம்பநாளா தொடர்ந்துவரும் பழக்கத்தை இப்போது திடீரென்று நிறுத்துவது கடினமென்ற சொல்லுக்கே வேலையில்லை; மனமிருந்தால் மார்க்கமுண்டு! ஆகவே, மனது வையுங்கள் நண்பர்களே, சாதிக்கலாம். (போதிப்பதைப்போன்று, சாதிப்பதும் எளிதுதான்; எல்லாதுக்கும் மனசுதான் வேண்டும்!)

  நன்றி, வணக்கம்.

  Like

 7. /போதிப்பதைப்போன்று, சாதிப்பதும் எளிதுதான்; எல்லாதுக்கும் மனசுதான் வேண்டும்!)
  //

  இந்த ஒரு வரியில் அடங்கியிருக்கிறது வெற்றிக்கான வழி !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s