ஈழத் தமிழர்களின் மீதான கரிசனை பல்வேறு வடிவங்களில் தமிழகம் முழுவதும் வெளிப்பட்டுக்கொண்டிருப்பது கண்கூடு.
கவன ஈர்ப்பாக தனது உயிரைக்கூட மாய்க்கும் வெறித்தனமான ஆதரவாளர்கள் முதல், மனதளவில் முழுமையாய் ஆதரிக்கும் மௌன ஆதரவாளர்கள் வரை தமிழகம் முழுவதும் நிரம்பியிருக்கின்றனர்.
இந்த சூழலில் மத அமைப்புகளும் போர் எதிர்ப்பையும், தமிழர் ஆதரவையும் வெளிப்படையாகத் தெரிவிக்கத் துவங்கியிருக்கின்றன.
கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் சார்பில் தமிழகத்தில் பல இடங்களில் கறுப்புக் கொடி பேரணிகள், வாயிலும், கண்களிலும் கறுப்புத் துணி கட்டியும், போராட்டங்களில் ஈடுபட,
புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவ அமைப்பினரும் வெளிப்படையான பிரார்த்தனைக் கூட்டங்களையும், ஆதரவு மறையுரைகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.
தமிழர் நலன் எனும் வலுவான அடித்தளத்தின் மேல் தமிழகம் முழுவதும் எழுந்திருக்கும் இந்த அலை, தமிழர்களைக் கரை சேர்க்க வேண்டும் என்பதே இப்போதைய ஈழத் தமிழர் குறித்த ஈரவிழிகளின் கனவுகள்.
ஃ
*** Every body want stop the war save Tamil people ***
*** We will also pray for them ***
LikeLike