பெண்கள் கவனத்துக்கு….

vidisha-_2_பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 68,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இது ஏன் நிகழ்கிறது என ஆராய்ந்தால் அதற்கும் காரணியாக சமூக ஏற்றத்தாழ்வும், பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வியும், தரப்படாத சமூக சமத்துவமுமே முன்னால் நிற்கிறது. வளர்ந்த உலக நாடுகளை விட வளரும் நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலுமே இத்தகைய அவலங்கள் அதிக அளவு நிகழ்கின்றன என்பது ஒன்றே போதும் இந்தக் கருத்தை வலுவூட்ட.

ஆப்பிரிக்கா போன்ற பின் தங்கிய நாடுகளில் இன்னும் பாலியல் கல்வியோ, கருத்தடையின் தேவைகள் குறித்த விழிப்புணர்வோ பரவவில்லை. வறுமையின் உச்சத்தில் இருந்தாலும் அங்கே தான் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆப்பிரிக்கப் பகுதி உட்பட 35 பின் தங்கிய நாடுகளில் குடும்பம் ஒன்றுக்கு ஐந்து குழந்தைகள் என்னும் விகிதம் இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிவிக்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் மேலைக் கலாச்சாரத்தை மேலாடையாய் கொண்டுள்ள நவீன நகர்ப்புறங்களைத் தவிர்த்தால் இன்னும் கலாச்சாரத்தின் ஆடைகளைத் தரித்துத் திரியும் கிராமத்து மூலைகளில் இத்தகைய விழிப்புணர்வு எழவில்லை என்பதே உண்மை.

உலகெங்கும் சுமார் ஐந்து கோடி பெண்கள் சரியான கருத்தடை சாதனங்கள் உபயோகிக்காததால் கருத்தரிக்கின்றனர் எனவும், கூடவே இரண்டரை கோடி  பெண்கள் கருத்தடை சாதனங்களின் தோல்வியால் கருத்தரிக்கின்றனர் எனவும் திகைப்பூட்டும் தகவல்களை அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

கருக்கலைப்பு என்பது ஒரு குழந்தையைக் கொலை செய்வது என்பதுடன் தாயின் உடல் நலத்தையும் பெருமளவில் பாதிக்கிறது. பிற்காலத்தில் தாய்மையடையும் வாய்ப்பைக் கூட இது கணிசமாகக் குறைத்து விடுகிறது.

வலுவான அடித்தளமும், சமூகக் கல்வி, விழிப்புணர்வு, முழுமையான அரசு ஈடுபாடு இவை இல்லாவிட்டால் இத்தகைய அவலங்கள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பது மட்டும் வலியூட்டும் உண்மையாகும்.

21 comments on “பெண்கள் கவனத்துக்கு….

 1. என்ன வெளையாட்டு இது, ஒரு பின்னூட்டம் கூட போடாம. நல்ல விஷயம் சொல்லிருக்காரு, என்னா இது சின்னப் பிள்ளத்தனமா. அத்தன பேரும் வரிசைல நின்னு பின்னூட்டம் போட்டுட்டு போங்க.

  Like

 2. மிகவும் நல்லதொரு பதிவு.நம் சகோதரர்கள் இதுபோன்ற பதிவுகளை பின்னூட்டமிட்டு விழிப்புணர்வு பெறுவதோடு நம் மக்களுக்கும் புரிய வைத்தல்நலம்

  Like

 3. நண்பரே நல்ல விழிப்புணர்ச்சி பதிவு வாழ்த்துக்கள்
  வழிக்காட்டல் தேவைப்பட்டுக்கொண்டிருக்கிறது

  – கிளியனூர் இஸ்மத்

  Like

 4. இந்த மாதிரி படம் உங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது. தனி கூகிள் இருக்கா..??
  பதிவும் சூப்பர்தான் சேவியர்.

  Like

 5. //என்ன வெளையாட்டு இது, ஒரு பின்னூட்டம் கூட போடாம. நல்ல விஷயம் சொல்லிருக்காரு, என்னா இது சின்னப் பிள்ளத்தனமா. அத்தன பேரும் வரிசைல நின்னு பின்னூட்டம் போட்டுட்டு போங்க.//

  😀

  Like

 6. Pingback: மங்கையர் பக்கம் » Blog Archive » பெண்கள் கவனத்திற்கு…

 7. மிகவும் நல்லதொரு பதிவு thanks நல்ல விஷயம் சொல்லிருக்காரு,

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s