ஆஸ்கர் விருதுகளை அள்ளிய இசைப்புயலுக்கு நானும் ஒரு வாழ்த்துச் சொல்லவில்லையேல் பிளாக் உலகம் என்னை மன்னிக்காது.
ரஹ்மானுக்கு விருது கிடைக்குமா ? எனும் எதிர்பார்ப்புடன் காலையில் நிகழ்ச்சியைப் பார்க்க அமர்ந்தால், அட… அலுவலகத்தில் மிக முக்கியமான மீட்டிங் இருப்பது நினைவுக்கு வந்து தொலைந்தது. (இல்லையேல் நான் தொலைந்திருப்பேன் என்பது வேறு விஷயம் )
பிறகென்ன, வரும் வழியில் கேள்விப்பட்டேன் இரண்டு விருதுகளை ரஹ்மான் வாங்கிய மகிழ்ச்சிச் செய்தியும். ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் அமோக அறுவடையும்.
வாழ்த்துக்கள் ரஹ்மான்.
நான் பூஜை செய்ததால் தான் ரஹ்மானுக்கு விருது கிடைத்தது, நான் ஏற்கனவே ஆரூடம் சொல்லியிருந்தேன், அவரு ஜாதகம் அப்படி என்றெல்லாம் இனிமேல் சில நாட்களுக்கு நம்மூர் பத்திரிகைகள் நகைச்சுவைகளை அள்ளி விடும் என்பதில் ஐயமில்லை.
ஸ்லம் டாக் மில்லியனர் – படத்தின் பிரமிப்பூட்டும் விருது அறுவடை உலகுக்கு ஒரு மிகப்பெரிய பாடத்தைச் சொல்லியிருக்கிறது. அதாவது எவரையும் சின்னப் பசங்க என்று கண்டு கொள்ளாமல் விட்டு விடாதீர்கள் என்பதே அது. என சுவாரஸ்யமாய் கூறுகிறது அமெரிக்காவின் யூஎஸ் ஏ டுடே நாளிதழ்.
ஹாலிவுட்டின் கதவுகள் இந்திய திசையை நோக்கி மெலிதாய் திறந்திருக்கின்றன. இனிமேல் இந்தியத் திறமைகள் ஆஸ்கர் மேடையில் அடிக்கடி நுழையும் என நம்பலாம்.
திறந்திருக்கும் கதவை யார் கவனிக்கிறார்களோ இல்லையோ, கமல் கவனித்திருப்பார்.
//கமல் கவனித்திருப்பார்//
திறமை உள்ளவர்களூக்கு இந்த மாதிரியான விருதுகள் தான் உற்சாக பானம்… அக்காமால ஜிப்சி போல… கமலுக்கு விருது பெற தகுதி இருக்கு அண்ணா…
LikeLike
உண்மை..
LikeLike
yenna sir yen namela yaru irukaa. by subash
LikeLike
>>இனிமேல் இந்தியத் திறமைகள் ஆஸ்கர் மேடையில் அடிக்கடி >>நுழையும் என நம்பலாம்
ini kumthalaka kumma kuthu pattellam hollywood la pattiya kealapum-:)
LikeLike
நன்றி சுபாஷ்.. நானும் கவனித்தேன்… உங்க பேர்ல இன்னொருத்தர் இருக்கார் 🙂
LikeLike
Now Indian music reached American Standard but for world standard we need to go…. Rahman will reach that level soon.
LikeLike
// Why you forgot Ilayaraja ‘
// Pleasa write some thing about Ilayaraja “
LikeLike
நானும் ஒரு வாழ்த்து சொல்லிவிடுகிரன்
வாழ்த்துக்கள் ரஹ்மான்.
LikeLike
My Salute to A.R.Rahman and Slumdog Team…
Kamalukku nichayam oscar kidaikkum… avar oru “Ulaga Nayagan”, Dhasavadhara Vendhan….
LikeLike
வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் நண்பர்களே…
LikeLike
/ini kumthalaka kumma kuthu pattellam hollywood la pattiya kealapum-:)//
அப்போ தேவாக்கு ஆஸ்காரா ? !!!
LikeLike
என்னைப்பொருத்த வரை இந்த ஆஸ்கார் விருதுகள் பூவோட சேர்ந்த நாறு மாதிரிதான் நமக்கு கிடைத்துள்ளது. ஒரு சுத்தமான முழுக்க முழுக்க இந்தியர்களால் எடுக்கப்பட்ட படத்திற்கு கிடைந்திருந்தால் பெருமை பட்டுக்கொள்ளலாம்.
ஆனால் இந்தப்படத்தைப் பார்க்கும் போது, பூவோடு சேர்ந்த நாறு மாதிரியில்லை, பண்றியோடு சேர்ந்த எதோ மாதிரிதான் எனக்கு தெரியுது.
இதை விட சிறப்பான இசை,பாடல்கள் நிறைந்த எத்தனையோ இந்தியப்படங்கள் வந்துள்ளன, அதெற்கெல்லாம் விருதுகிடைத்துவிட்டதா என்ன?
LikeLike
//அப்போ தேவாக்கு ஆஸ்காரா ? !!! //
ஹ ஹ
ஸ்ரீ காந்த்தேவா கும் இனி கிடைக்குமா ??
LikeLike
Rehmanuku vazhthukal…..
Nammoor arasiyalvathigaluku eppavo kodauthu irukanum OSCAR..
LikeLike
நன்றி நாடோடி 🙂
LikeLike
🙂 நன்றி ரிசாத் வருகைக்கு…
LikeLike
வருகைக்கு நன்றி ஜெயகுமார்
LikeLike