ரஹ்மானைப் பாராட்டாத ஒரே தலைவர்

rahman

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தைக் குறித்துப் பேசாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் ரஹ்மானுக்குக் கிடைத்திருக்கும் ஆஸ்கர் விருதுக்காக அவருக்கு வாழ்த்துச் சொல்வோம் என்று எல்லா அரசியல் தலைவர்களும் கட்சி வித்தியாசம் பாராமல் பாராட்டிக் கொண்டிருக்கையில் ஒரே ஒருவர் மட்டும் மௌனம் சாதிக்கிறார் !

எல்லா பத்திரிகைகளும் ரஹ்மானை முதல் பக்கத்தில் அலங்கரித்து கௌரவிக்கையில், அவருடைய கட்சி சார்பாக வெளிவரும் நாளிதழில் மட்டும் ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கிய விஷயம் கடைசி பக்கத்தில் அச்சாகியிருந்தது !

மகன் திரையில் புகை பிடித்தலை எதிர்க்கிறார், தந்தை திரையில் இசை அடித்தலைக் கூட எதிர்க்கிறாரா என்றும் தெரியவில்லை.
அப்படி என்ன வெறுப்போ மருத்துவருக்கு ரஹ்மான் மீது !

அல்லது ஆஸ்கர் மீது

அல்லது ஸ்லம் டாக் மில்லியனர் மீது !

திரைப்படங்களை ஒதுக்கும் மக்கள் தொலைக்காட்சியில் கூட உலகத் திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன !

இது திரைப்படங்கள் மீதான வெறுப்பா ?
அல்லது ரஹ்மான் மீதான வெறுப்பா ?

சிறுபான்மை இனத் தங்கமே” என சிறு நாசூக்கு அரசியல் அறிக்கை வெளியிட்டிருந்த கலைஞர் இதைக் கவனித்தால் “சிறுபான்மையினரை பாராட்ட மறுக்கும் கட்சி  – பா.ம.க என ஒரு புது அறிக்கை வெளியிட்டாலும் வெளியிடுவார் என யாரேனும் மருத்துவரிடம் சொன்னால் நலம்.

வீரப்பனைக் கூட சாதீய காரணங்களுக்காக பாராட்டும் ஒரு தலைவர், இசைக்காக தமிழர் ஒருவர் உயரிய விருது வாங்குவதை மனமாரப் பாராட்டாவிட்டால்…

தமிழ், தமிழ், தமிழன், தமிழீழம், தமிழ் தொலைக்காட்சி, தமிழ்ப் பத்திரிகை என்றெல்லாம் புலம்புவதில் என்ன அர்த்தமிருக்கப் போகிறது.

27 comments on “ரஹ்மானைப் பாராட்டாத ஒரே தலைவர்

 1. ராமதாசை எல்லாம் ஒரு தலைவர் லிஸ்டில் சேக்காதுங்கப்பா…. அது ஒரு சாதீய ….

  Like

 2. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory – http://www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

  Like

 3. உங்களின் நடுநிலைப்பார்வை மெய்சிலிர்க்க வைக்கிறது. நீங்களாகவே ஒரு முடிவை தேர்ந்தெடுத்துக்கொண்டு அதற்கேற்றார்போல் செய்திகளை நீங்களே உருவாக்குகிறீர்களே ஏன்? மக்கள் தொலைக்காட்சியில் 24ம் தேதி ரகுமானுக்கென்று அரைமணிநேர நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். ஒரு சினிமாத்துறையை சார்ந்தவருக்காக அவர்கள் ஒரு நிகழ்ச்சியை வழங்குவது இதுவே முதல் முறை. மேலும் ராமதாஸ் ரகுமானைப்பாராட்டி வெளியிட்ட அறிக்கை ராஜ் மற்றும் வின் செய்திகளில் வெளியானது. ரகுமான் ஆஸ்கார் வாங்கிய செய்தி மக்கள் செய்திகளில் இரண்டு நாளும் வெளியானது.

  Like

 4. வணக்கம் நண்பரே… நல்ல பதிவு. ஆனால் நீங்கள் கூறுவதை ஏற்க முடியாது. சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியில் ராமதாஸ் தொடர்பான செய்திகளை ஏறக்குறைய ஒதுக்கிவருகின்றனர். அதனால் தான் ரஹ்மானை பாராட்டி அவர் வெளியிட்ட அறிக்கை பலருக்கு தெரியவில்லை. மக்கள் தொலைக்காட்சியில் ரஹ்மானுக்கென தனியாக ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. சினிமா தொடர்பாக அவர்கள் ஒளிபரப்பிய ஒரே நிகழ்ச்சி இது தான்.
  ராமதாஸ் அரசியல் தந்திரங்கள், கயமைத்தனங்கள் ஊரறிந்தது தான். ஆனால் மக்கள் தொலைக்காட்சி விஷயத்தில் மட்டும் அவரைப் பாராட்டலாம்.

  Like

 5. YOU ARE UNAWARE OF WHAT IS HAPPENING .HE HAS ALREADY SENT HIE WISHES TO HIM.PLEAS DONT BE IGNORANT .NO POLITICAL STATEMENTS PLEASE.

  Like

 6. நண்பர்களுக்கு வணக்கம். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

  ரஹ்மான் விருது வாங்கிய போது மருத்துவர் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை. ஏன் அவரது பத்திரிகையான “தமிழ் ஓசை” நாளிதழில் கூட அவரது அறிக்கை இன்று தான் வெளியானது !

  மக்கள் தொலைக்காட்சியில் ஆஸ்கர் நிகழ்ச்சி நடந்ததை நான் அறியவில்லை. ஒருவேளை நான் இந்த பதிவு போட்ட பின் நடந்திருக்கலாம், அல்லது நான் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.
  பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள்.

  Like

 7. In Makkal News there was a coverage when Rahman got the golden globe award. Also when Rahman was nominated for oscar there was a coverage. On Sunday morning there was a flash news about his winning two oscars.

  I guess no political leader in TN wished the other Indian (Rashul Pookutty)who got Oscar along with AR Rahman!!!.

  Nithil

  Like

 8. நண்பரே,

  உங்களது பதிவில் நியாயமிருக்கிறது.

  அதேநேரத்தில், ரஹ்மான் ஆஸ்கார் வென்ற செய்தி, ‘மக்கள் தொலைக்காட்சி’யில் தலைப்புச் செய்தியாக வெளியானது என்பது ஆறுதலுக்குரியதே.

  -குளோபன்

  Like

 9. நன்றி நிதில். உண்மை தான், பூக்குட்டிக்காக கேரளத் தொலைக்காட்சிகள் நாள் முழுக்க நிகழ்ச்சி நடத்தின ! 🙂

  Like

 10. நன்றி குளோபன்.

  மக்கள் தொலைக்காட்சி நான் மிகவும் ரசிக்கும் தொலைக்காட்சி !
  என்னோட பேட்டி கூட நேற்று காலையில் ஒளிபரப்பாயிற்று மக்கள் தொலைக்காட்சியில் !

  Like

 11. Thalai, please send me the link, if your interview was recorded and posted in youtube. Please be careful while writing articles of this kind, as there is a chance to avoid your articles in “Thamizh Osai” 🙂

  Like

 12. Readers’ grievance is justifiable. Every leaders praised A.R. Rahman for his achievement over Oscar Award for the works related to Music he has done in the film Slamdog Millionaire. Nevertheless, Makkal TV has televised the information about Oscar Award to be presented to AR Rahman before the awarding function and ever after the function. But only thing is Maruthuvar did not individually express his admiration to A.R. Rahman. May be, he might have later articulated, which I have not known.

  Like

 13. விஜய், நீங்க சொன்னதனால தான் தனித்தனி பின்னூட்டம் போடாம இருக்கேன்.. இப்படியெல்லாம் “யோசிச்சு” பின்னூட்டமிட்டா, என்னால பதிலூட்டம் போடாம இருக்க முடியாது !

  +

  நன்றி ஆடம்… உங்கள் கருத்துக்கு !

  Like

 14. Not appreciating something is an individual choice.This attitude says a lot about the good doctor. Can you think of anybody behaving so badly against the congress party and the central govt while his son serves in the cabinet quite happily?.

  Like

 15. Don’t give important to Dr.Ramadas, If we give important he become a hero.
  It was happened that’s why he is ” JATHI HERO” If we want to achieve more …

  Like

 16. Pingback: Top Posts « WordPress.com

 17. NOTHING TO WORRY

  EVERY THINGS ON THAT WAY……………

  ” ALL CREDITS GOES TO GOD” NO MATER ramadas and others

  Like

 18. என்ன சேவியர்,
  உங்க பேட்டி மக்கள் தொலைகாட்சியில் வருதுன்னு ப்ளாக்கில் போடாம விட்டுட்டீங்க??

  அன்புடன்
  குகன்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s