ஐ.டியை குறி வைக்கும் எலக்ட்ரானிக் சிகரெட்

smoke3

சமூக நலனில் அக்கறை கொண்ட சில அரசியல் தலைவர்களும், நலவாழ்வு நிலை பெறவேண்டுமெனும் வேட்கை கொண்ட நல்லவர்களும் போராடிப் போராடி புகையற்ற வாழ்வுக்கான ஒரு வாசலைத் திறந்து வைக்கும் போது வந்திருக்கிறது எலக்ட்ரானிக் சிகரெட்.

பெரும்பாலும் கணினி மென்பொருள் நிறுவனங்களைக் குறிவைத்து இந்த பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது. ( பாவம் ஐ.டி யோட தற்போதைய நிலை தெரியாது போல )

எரியாது ஆனால் புகை வரும்
நிக்கோட்டின் மட்டுமே உண்டு, அதுவும் உங்களுக்குத் தேவையான அடர்த்தியில் என்றெல்லாம் கூவிக் கூவி பிரச்சாரம் செய்து, கூடவே கலர்புள் விளம்பர கையடக்கப் பிரதிகளையும் கொடுக்கிறார்கள்.

எங்கள் அலுவலகத்துக்கு முன்பு கடை விரித்திருந்த மூன்று பேரை அணுனேன்.

எப்படி இழுக்கவேண்டும், எப்படி காட்ரிஜ் மாற்ற வேண்டும் என்றெல்லாம் செய்முறை விளக்கம் செய்து கொண்டிருந்தவர்களிடம் கேட்டேன்.

smoke2“என்னங்க இது…”

“இது எலக்ட்ரானிக் சிகரெட் … நவீனத்தின் மகத்தான கண்டுபிடிப்பு… உடலுக்கு கெடுதல் இல்லாத சிகரெட் இது..”

“ஓ.. கெடுதல் இல்லையா ? அப்போ நிகோட்டினே இல்லையா ?” இது நான்.

“ம்..வந்து… நிகோடின் இருக்கு. ஆனா நிகோடின் தீமைன்னும் எந்த அறிக்கையும் சொல்லலையே…” விற்பனைப் பெண் இழுத்தார்.

அடப்பாவிகளா ? முழுப்பூசணிக்கா சோத்துல மறையாதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். இங்கே ஒரு பூசணித் தோட்டமே சோத்துக்குள்ள மறையுதே… என்று மனம் திடுக்கிட்டது

“என்னங்க இப்படி சொல்றீங்க ? ஒரு சிகரெட்ல இருக்கிற நிகோடினை மனுஷனோட இரத்தக் குழாயில செலுத்தினா அவன் உடனே செத்துடுவான்.. தெரியாதா உங்களுக்கு” என்றேன்.

“ஐ..மீன்…. சாதா சிகரெட்ல நிகோடினோட சேர்த்து வேறையும் நிறைய தீமைகள் இருக்கு.. இதுல அதெல்லாம் இல்லை…” இழுத்தார்கள் விற்பனையாளர்கள்.

“இதுல சயனைட் மட்டும் இருக்கு, மத்ததுல சலனைடும் பூச்சி மருந்தும் இருக்குன்னு சொல்றமாதிரி இருக்கு நீங்க சொல்றது.. .. “ என்றேன்

அதற்குள் கொஞ்சம் கூட்டம் கூடிவிட விற்பனையாளர்கள் என்னை எப்படியும் விரட்டி விடவேண்டும் எனும் நோக்கத்தில் ஒன்று சேர்ந்தார்கள்.

“நீங்க குடிக்கிற காஃபில கூட நிகோடின் இருக்கு தெரியுமா…” விற்பனை பெண் கொஞ்சம் நக்கலாகவே கேட்டார்.

“இருக்கு… ஆனா அதுல இருக்கிற அளவு எவ்வளவு எம்.ஜி தெரியுமா ?” நானும் விடவில்லை.

“சார்… விருப்பம் இருந்தா வாங்குங்க சார்… இல்லேன்னா விட்டுடுங்க.. நாங்க யாரையும் கம்பல் பண்ணல..” ஜகா வாங்கியது சிகரெட் கிளிகள்.smoke1

“நான் உங்களைச் சொல்லலீங்க.. அதோ பாருங்க, சிகரெட் புடிக்கக் கூடாதுன்னு போர்ட் போட்டிருக்கு, அதுக்கு பத்தடி தூரத்துல நீங்க சிகரெட் விக்கறீங்க.. நியாயமா ?” என்றேன்.
அதற்குள் கூட்டத்திலிருந்து ஒரு சிகரெட் பிரியர்

“இது எவ்ளோ ஆகுதுங்க ?” என்றார்

“நாலு சிகரெட் நானூறு ரூபா… ஒவ்வொரு சிகரெட்டும் பத்து சாதா சிகரெட்டுக்கு சமம்’ விற்பனையாளர் என்னை விட்டு அங்கே தாவினார்.

“ஓ… நானூறு ரூபாய்க்கு நான் 100 வில்ஸ் வாங்கி அடிப்பேன்” சொல்லிச் சென்றார் அவர்.  ஐடியில் எப்போ வேலை போகுமோ எனும் கவலையில் இருந்தவர் அவர் !.

“அதெல்லாம் ஹெல்த்தியானது இல்லை. அன்கெல்தி தான் குடிப்பீங்கன்னா குடிங்க…” என்றார் விற்பனையாள பெண் அவரை நோக்கி.

“என்னங்க.. நீங்க ஏதோ ஆப்பிள் ஜூஸ் விக்கற மாதிரி பேசறீங்க.. இதுவும் அன் கெல்தி தான்… “ என்றேன்.

கூட்டம் சலசலவென சிரிக்க, விற்பனை செய்து கொண்டிருந்த மூன்று பேரும் இந்த சனியன் ஒழிந்தபிறகு வரலாம் கடை கட்டலாம் எனும் முடிவோடு நடையைக் கட்டினர்.

ஐயா அன்புமணி, சிகரெட்டுக்கு தடை என்றால் அது எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கும் பொருந்தும் என்று ஒரு தடவை சொல்லிடுங்க.

பின் குறிப்பு : புகைப்படத்தில் இருக்கும் நண்பர் என்னுடைய விண்ணப்பத்தின் பேரில் ஒரு போஸ் குடுக்கிறார் அவ்வளவே. மற்றபடி அவருக்கும் சிகரெட்டுக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை.

18 comments on “ஐ.டியை குறி வைக்கும் எலக்ட்ரானிக் சிகரெட்

 1. எனக்கு தெரிந்த வரை நிகோடின் தனிப்பட்ட முறையில் கான்சினோஜனாக செயல்படுவதில்லை. மூளையில் நியுரோட்ரன்ச்மீட்டர்களை தூண்டும். இரத்த அழுத்ததை சற்றே அதிகரிக்கும். சிகரெட்டில் அத்துடன் இன்னும் 40 வகை வேதிப்பொருள் இருக்கின்றன. அநத புகையில் உள்ள கார்பன் மோனாக்சைட் மிக மோசமான கார்சினோஜன்.

  ஆர்கன்சாஸ் மாநிலத்தில் நிகோடின் மட்டும் எப்படி அல்சைமருக்கு மருந்தாக உபயோகிக்கலாம் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். புகைபிடிக்காதவர்களுக்கு புகை ப்டிப்பவர்களைவிட அல்சைமர் வருவது அதிகம் என்றும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

  மேலும் புகை பிடிப்பது சிகரெட்டில் வடிகட்டி இருப்பது , திறந்த வெளியிலா இல்லையா என்பதை பொறுத்தெல்லாம் மாறும்.
  காப்பியில் காஃபிந்தான் இருக்கிறதே ஒழிய நிக்கோடின் இல்லை.

  எனக்கும் புகைபிடித்தலில் உடன்பாடு இல்லை என்றாலும், எனக்கு தெரிந்த அளவில் உண்மைக்கு புறம்பாக சில செய்திகள் (நிக்கோடினை செலுத்தினால் இறந்துவிடுவார், காப்பியில் நிக்கோடின் உண்டு) இருந்ததால் இந்த பின்னூட்டம். சில மருத்துவமனைகளில் மிக மோசமான அல்சைமர் நோயாளிக்களுக்கு குறைந்த அளவு நிக்கோடின் செலுத்துவது உண்டு, வலி அதிகமானால் மார்பின் தருவது போல.
  புகை ப்டிக்காதிருத்தல் நன்மை என்ற அளவில் ஒப்புக்கொள்கிறேன்.

  Like

 2. //“என்னங்க.. நீங்க ஏதோ ஆப்பிள் ஜூஸ் விக்கற மாதிரி பேசறீங்க.. இதுவும் அன் கெல்தி தான்… “ என்றேன்.//
  ha ha ha

  //பின் குறிப்பு : புகைப்படத்தில் இருக்கும் நண்பர் என்னுடைய விண்ணப்பத்தின் பேரில் ஒரு போஸ் குடுக்கிறார் அவ்வளவே. மற்றபடி அவருக்கும் சிகரெட்டுக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை.//
  nambitom nanbare

  Like

 3. விரிவான பதிலுக்கு நன்றி பத்மா அரவிந்த். நீங்கள் சொன்ன கருத்துக்கள் குறித்து தகவல்கள் நிறைய திரட்டியதில் நிகோடின் மிகவும் ஆபத்தானது என்பதே கிடைத்திருக்கிறது 🙂

  Like

 4. அடடா… வியாபரத்திலயும் மண்ண வாரி போட்டுட்டு பதிவு வேற போட்டிருக்கிங்களா… சிகரட் கிளிகள் உங்களை தேடாமல் இருந்தால் சரி… 🙂

  Like

 5. சேவியர்:
  Parkinson’s disease: implications for therapy.
  Quik M, O’Leary K, Tanner CM.

  The Parkinson’s Institute, Sunnyvale, California, USA. mquik@parkinsonsinstitute.org

  Accumulating evidence suggests that nicotine, a drug that stimulates nicotinic acetylcholine receptors, may be of therapeutic value in Parkinson’s disease. Beneficial effects may be several-fold. One of these is a protective action against nigrostriatal damage. This possibility stems from the results of epidemiological studies that consistently demonstrate an inverse correlation between tobacco use and Parkinson’s disease. This reduced incidence of Parkinson’s disease has been attributed to the nicotine in tobacco products, at least in part, based on experimental work showing a protective effect of nicotine against toxic insults. Second, several studies suggest a symptomatic effect of nicotine in Parkinson’s disease, although effects are small and somewhat variable. Third, recent data in nonhuman primates show that nicotine attenuates levodopa-induced dyskinesias, a debilitating side effect that develops in the majority of patients on levodopa therapy. Collectively, these observations suggest that nicotine or CNS selective nicotinic receptor ligands hold promise for Parkinson’s disease therapy to reduce disease progression, improve symptoms, and/or decrease levodopa-induced dyskinesias. (c) 2007 Movement Disorder Society.Mov Disord. 2008 Sep 15;23(12):1641-52
  there are many more articles in journals that discusses the therapeutic value of Nicotine alone. They are alos reseraching in ADD, Parkinson, and also in mental disorders. above research is published in 2008.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s