அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா – 1

dmdk

அரசியல் சதுரங்க விளையாட்டு பரபரப்புக் கட்டத்தை எட்டியிருப்பதை சென்னையின் மூலை முடுக்கெங்கும் காண முடிகிறது.

தேமுதிக இப்படி ஒரு பெரிய கட்சியாக உருவெடுக்கும் என யாரும் நினைத்திருக்கவில்லை. வீசோ வீசென்று அவரை நோக்கி எல்லா விதமான வலைகளும் வீசப்படுகின்றன.

விஜயகாந்துக்கு பல கவலைகள் இருக்கின்றன.

ஒன்று, திமுக, அதிமுக – போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டேன். வைத்தால்…., ,என்றெல்லாம் வீர வசனங்களைப் பேசியதால் தான் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஒரு தனி அடையாளம் இருக்கிறது. கூட்டணி வைத்தால் அந்த இமேஜ் பாதிக்கப்படலாம் என்பது ஒரு குவார்டர் கவலை.

ஒருவேளை கூட்டணி வைக்காமல் போனாலும் வாக்குச் சதவீதம் குறைந்து போய் சிக்கல் உருவாகலாம் என்பது ஒன்னொரு ஆஃப் கவலை.

எனினும் இந்தக் கவலைகளையெல்லாம் விட மிகப்பெரிய ஃபுள் கவலை விஜயகாந்துக்கு இருக்கும் கடன்.

சுமார் 750 கோடி வரை ஒரு தனி நபரிடமே கடனாய் வைத்திருக்கிறாராம் விஜயகாந்த். அப்படியானால் அந்தக் கடனை கொஞ்சமேனும் அடைக்க ஏதாவது வழி செய்ய வேண்டுமே !

7 இடங்களும் 600 கோடி ரூபாய்களும்

வேண்டும்.

என்பது தான் தேமுதிக தரப்பிலிருந்து திமுக வுக்கு அனுப்பப்பட்ட செய்தியாம். அதாவது பா.ம.க வுக்கு 6 இடங்கள் திமுக ஒதுக்கினால் தனக்கு அதை விட ஒரு இடம் அதிகமாய் ஒதுக்கி ஏழு இடங்கள் வேண்டும் என கேப்டன் கர்ஜித்தாராம்.

கூடவே அந்த 600 !!! கோடி !!!! தமிழனுக்கு “வாக்கு” தான் முக்கியம் !!!! கொஞ்சம் கொஞ்சமாச்சும் கடனை அடைக்கணும்ல! !

திமுக தரப்போ, காங்கிரசைக் கூப்பிட்டு பெருசுங்களா உங்களுக்கு 15 சீட் !

அதுல நீங்க எப்படி வேணும்னாலும் பேசிக்கோங்க. வேணும்னா தேமுதிக க்கு 7 குடுத்துட்டு நீங்க 8 இடத்துல போட்டியிட்டாலும் எனக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை என புள்ளி வைத்துவிட்டதாம்.

எனினும், அரசியலில் புள்ளிகள் மாறுவதும், நீள்வதும் அழிவதும் எல்லாம் சகஜமாச்சே. பா.ம.க திமுகவில் சேர்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் (அன்பு மணி சும்மா விடுவாரா என்ன ? ) தேமுதிகவுக்கு அதைவிட அதிக இடங்கள் தருவது சாத்தியமில்லை என்பது திமுகவின் வாதம். பாவம் காங்கிரஸ் தான் இதில் மாட்டிக் கொண்டு டவலுக்குக் கீழே விரல் பிடித்துக் கொண்டிருக்கிறது.

ஆமா, வை.கோ ன்னு ஒரு தலைவர் இருந்தாரே.. அவர் என்ன ஆனார் என்றேன் அப்பாவியாய் ஒரு அரசியல் பிரமுகரிடம்

“யாரு ? உண்ணாவிரதம் இருக்கிற பெருசுகளுக்கு ஜூஸ் குடுத்துட்டு இருப்பாரே அவரா ?” என்ற அவரது கேள்விக்குப் பின் நான் ஏதும் கேட்கவும் இல்லை.

அவர் எதுவும் சொல்லவும் இல்லை.

12 comments on “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா – 1

 1. /*சுமார் 750 கோடி வரை ஒரு தனி நபரிடமே கடனாய் வைத்திருக்கிறாராம் விஜயகாந்த். அப்படியானால் அந்தக் கடனை கொஞ்சமேனும் அடைக்க ஏதாவது வழி செய்ய வேண்டுமே */

  தாங்கள் குறிபிட்ட இந்த தனி நபர் சென்னையில் ஒரு சிறந்த நிகர் நிலை பல்கலை கழகத்தின் துணை வேந்தர் மட்டும் எம். ஜி. ஆரின் ரத்தத்தின் ரத்தம், தற்பொழுது கன்யா குமரி இல் அண்ணா கழகத்தின் முலம் மக்கள் அவை தேர்தலில் போட்டி இட காத்து இருப்பவர்

  ஏன் யுகம் சரி தானே?

  Like

 2. /// Now Captan 750 cr borrow money I can not belive that
  /// Any way He has people wealth for future this enough
  /// Next Tamil Nadu ( MLA ) election third big party in T.N
  /// ” Best luck for Vijayakanth “

  Like

 3. என்ன பென். நீங்க ஏதோ தேர்ந்த அரசியல் வாதி போல ஏதேதோ சொல்றீங்க ! அதெல்லாம் நானறியேன் பராபரமே 🙂

  Like

 4. என்னடா நாம எழுதுற மாதிரி இன்னொருத்தரும் எழுதக் கெளம்பிட்டாரேன்னு பாத்தேன், அது நீங்கதானா!!! வெளங்கும்… போட்டி பலமாயிருச்சுரா கோவாலு… பொட்டியக் கட்டிற வேண்டியது தான்…

  Like

 5. 750 cr debt ellaam beyond imagination..etttho hollywood movies lla vara unbelievable madiri irrukku..neengga eppavvum correct info poddivuinggannu nambinnen..kavvuthinngalle thalai..

  Like

 6. //etttho hollywood movies lla vara unbelievable madiri irrukku//

  நம்ப முடியாததெல்லாம் நடக்கும் லக்கி 🙂 கடன் கொடுத்தவரு அதிமுக சார்பா நாகர்கோவில் தொகுதியில் போட்டி போட மும்முரமா இருக்கார் !! 😀

  Like

 7. //என்னடா நாம எழுதுற மாதிரி இன்னொருத்தரும் எழுதக் கெளம்பிட்டாரேன்னு பாத்தேன், அது நீங்கதானா!!! வெளங்கும்… போட்டி பலமாயிருச்சுரா கோவாலு… பொட்டியக் கட்டிற வேண்டியது தான்…

  //
  இந்த விஷயத்துல நீங்க என்னோட குரு. பேசாதேன்னு சொன்னா கம்முன்னு இருந்துட போறேன்… இதுக்குப் போயி பொட்டி, கிட்டின்னு….

  Like

 8. ஆமா, வை.கோ ன்னு ஒரு தலைவர் இருந்தாரே.. அவர் என்ன ஆனார் என்றேன் அப்பாவியாய் ஒரு அரசியல் பிரமுகரிடம்

  “யாரு ? உண்ணாவிரதம் இருக்கிற பெருசுகளுக்கு ஜூஸ் குடுத்துட்டு இருப்பாரே அவரா ?” என்ற அவரது கேள்விக்குப் பின் நான் ஏதும் கேட்கவும் இல்லை.

  அவர் எதுவும் சொல்லவும் இல்லை.

  //
  இது சுப்பர்

  Like

 9. ///
  இந்த விஷயத்துல நீங்க என்னோட குரு. பேசாதேன்னு சொன்னா கம்முன்னு இருந்துட போறேன்… இதுக்குப் போயி பொட்டி, கிட்டின்னு….
  ///

  அட என்ன இது சின்னபுள்ளத் தனமா… மூணு லட்சம் முறை பார்வையிடப்பட்ட அலசல் தளம் எங்க பத்தொம்போதாயிரத்தில தெனறிக்கிட்டிருக்க நான் எங்க? நான் இவருக்கு குருவாம்ல…. காமெடி பண்றாரு… இருங்க உங்களுக்கு போன் போட்டு வேப்பில அடிக்கிறேன்…

  Like

 10. //அட என்ன இது சின்னபுள்ளத் தனமா… மூணு லட்சம் முறை பார்வையிடப்பட்ட அலசல் தளம் எங்க பத்தொம்போதாயிரத்தில தெனறிக்கிட்டிருக்க நான் எங்க? //

  குறும்பு !!!! 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s