இந்த நக்கல் தானே வேணாங்கிறது !

imag0067

 

இது அரசியல் காலம்.

இனிமேல் புகைப்பது, சினிமா காரர்களைப் பகைப்பது போன்ற சமாச்சாரங்களெல்லாம் சில நாட்களுக்கு நடக்காது என்பதைத் தெரிந்து தானோ என்னவோ இவ்வளவு ஹாயாக, போர்ட் மேலேயே கையைப் போட்டு புகைத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர்.

“என்னங்க… நோ பார்க்கிங்னா, அங்கே வண்டியை நிப்பாட்டுவீங்க ! நோ ஸ்மோக்கிங்னா அங்கே புகை பிடிப்பீங்களா என சிரித்துக் கொண்டே கேட்டேன்” (கொஞ்சம் பயந்து கொண்டு கூட )

அவர் நக்கல் பேர்வழி போல,

“தமிழ் நாடு கெட்டுப் போச்சுங்க. வண்டியை நிப்பாட்டற இடமா பாத்து நோ பார்க்கிங் போர்ட் மாட்டுவாய்ங்க. அதே போல நான் தம் அடிக்கிற இடமா பாத்து இந்த போர்டையும் மாட்டியிருக்காய்ங்க” என்றார் கூலாக !

“யாராச்சும் போன் பண்ணி கம்ப்ளயிண்ட் பண்ணினா என்ன பண்ணுவீங்க ?” என்றேன்

“தம்மு அதுக்குள்ள முடிஞ்சுடும். நான் கிளம்பிடுவேன். நீ இப்போ கிளம்பு காத்துவரட்டும்” என்றார், முறைத்துக் கொண்டே.

திருடனாய் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

17 comments on “இந்த நக்கல் தானே வேணாங்கிறது !

  1. இந்த கைக்கு சொந்தகாரர் யார்? இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

    Like

  2. வி எம் சி ஹனிபா வா இருப்பாரோ ?
    அவுருதான் ஏதோ ஒரு படத்துல
    நோ பார்க்கிங் பக்கத்துல லாரிய நிப்பாட்டுவாரு.

    ம்ஹூம் …
    உலகம் அவ்வளவுதான் …

    நாமளாவது செய்யாம இருப்போம்

    Like

  3. அறிஞர் அண்ணா எப்போதும் கருப்புச் சட்டை அணிவதை கட்டாயமாகப் பின்பற்றியதில்லை. ஆனால் காங்கிரஸ் அரசு கருப்புச் சட்டை அணியத் தடை விதித்தபோது அவரும் கருப்புச் சட்டை அணிந்தார்.

    ஆகவே அந்த நண்பரின் செயலை ஒரு கலகக்காரனின் போராட்டமாகப் பார்க்க வேண்டும். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்.

    Like

  4. Hi dear
    **** I know this hand and this colour shirt also
    ****Thans for sirippuwordpress ( Jok only )

    Like

  5. //ஆகவே அந்த நண்பரின் செயலை ஒரு கலகக்காரனின் போராட்டமாகப் பார்க்க வேண்டும். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்//

    மறுபடியும் அதே இடத்தில் அதே “கை”யைப்( இதில் அரசியல் இல்லை 🙂 பார்க்க நேர்ந்தால் தெரிவிக்கிறேன் )
    😀

    Like

  6. //இந்த கைக்கு சொந்தகாரர் யார்? இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்//

    Like

  7. போஸ் கொடுக்கிறது சேவியர் அண்ணன் தானோனு சந்தேகமாக இருக்கு அதே வேளையில் அவரை தற்காத்து பேசும் சித்தப்பு வேலையா இருக்குமோனும் யோசிக்கிறேன். 🙂

    Like

  8. அடப் பாவி விக்கினேஸ்வரா, என்னையும் வில்லங்கத்துல கோத்துவிட்டுட்டியேடா……………..

    நல்ல வேள கடைசியா நான் எழுதுன பதிவு ஒன்னு இன்னும் ட்ராப்ட்லயே இருக்கு. பப்லிஷ் பண்ணிருந்தா சந்தேகமே இல்லாம நானும் இதுக்கு உடந்தைன்னு சொல்லிருப்பே. தப்பிச்சேண்டா சாமி….

    Like

  9. //போஸ் கொடுக்கிறது சேவியர் அண்ணன் தானோனு சந்தேகமாக இருக்கு அதே வேளையில் அவரை தற்காத்து பேசும் சித்தப்பு வேலையா இருக்குமோனும் யோசிக்கிறேன்.//

    “கை” யைப் பற்றி சந்தேகப் படரது இப்போ சகஜமாகிப் போச்சு !

    Like

  10. /அடப் பாவி விக்கினேஸ்வரா, என்னையும் வில்லங்கத்துல கோத்துவிட்டுட்டியேடா……………..//

    உண்மையை யார் கிட்டேயும் சொல்லமாட்டேன்.. கவலைப் படாதீங்க 😉

    Like

  11. //வி எம் சி ஹனிபா வா இருப்பாரோ ?………..//

    டாக்டர் விஜய் சார்னு நான் நினைக்கின்..
    அவருதான் No Smoking இடத்துல Smoke பண்ணுவாரு..
    (அழகிய தமிழ் மகன் ல பாத்தது)

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s