இது, மீன் சமாச்சாரம் !

 fish_cartoon08

மீன் அசைவம் என சிலர் ஒதுக்க, அசைவப் பிரியர்களிலும் பலர் மீன் ‘கடல் உணவு’ என கைகழுவ, மீன் உணவு என்பது வெறும் சுவை தொடர்பானது அல்ல, உங்கள் அறிவை விருத்தி செய்யும் வல்லமையும் அதற்கு உண்டு என கூற வந்திருக்கிறது ஆராய்ச்சி முடிவு ஒன்று.

அதாவது வாரம் ஒருமுறைக்கு மேலாக மீன் உணவு உண்பது பதின் வயது பருவத்தினருடைய மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறதாம். கவனிக்கவும், ஒருமுறைக்கு மேல் உண்பதே பலனளிக்கிறது.

பதின் வயது பகுதியின் இரண்டாவது பகுதி, மூளையில் பெருமளவு மாற்றங்கள் நிகழும் பகுதி. ஆங்கிலத்தில் இதை பிளாஸ்டிசிடி என அழைக்கிறார்கள்.

அதாவது இந்தக் காலகட்டத்தில் தான் பதின் வயதினருடைய திறமை எப்படி இருக்கும், அவர்களுடைய உணர்வு ரீதியான செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் மூளை முடிவு செய்கிறது.

இந்தக் காலகட்டத்தில், அதாவது 15 வயதுக்கு மேல் மீன் உணவை வாரம் ஒரு முறையை விட அதிகமாய் உண்பது அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கு பெருமளவில் உதவுகிறதாம்.

ஸ்வீடனின் நிகழ்த்தப்பட்ட விரிவான இந்த ஆய்வு சுமார் 5000 பேரை வைத்து நிகழ்த்தப்பட்டது. இதில் மீன் உணவு உண்டவர்களின் திறன் வெகுவாக உயர்ந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

பதின் வயதினருடைய அறிவு, புதிதாய் எதையேனும் கற்றுக் கொள்ளவேண்டும் எனும் ஆர்வம் இவையெல்லாம் மீன் உணவினால் மெருகேறுகிறதாம்.

அதிலும் குறிப்பாக ஒமேகா – 3 நிரம்பியுள்ள மீன்களை உண்பது மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

 

12 comments on “இது, மீன் சமாச்சாரம் !

  1. /பதிவுக்கு நன்றி..
    இந்த தகவல 10 வருடத்துக்கு முன்னுக்க சொல்லி இருக்க கூடாத ???//

    இப்போ தானே படிச்சேன் 😀

    Like

  2. ஆனந்த விகடனின் நீங்கள் எழுதியது நீங்கள் தான் என்று சொல்லியிருந்ததை உள்வாங்கிய போது மொழி நடை எவ்வாறு இருக்கிறது என்று உள்ளே சுற்றி வந்தாலும் அத்தனை திறமைகளும் ஒருங்கே இருக்கிறது.

    http://deviyar-illam.blogspot.com

    Like

  3. //ஆனந்த விகடனின் நீங்கள் எழுதியது நீங்கள் தான் என்று சொல்லியிருந்ததை உள்வாங்கிய போது மொழி நடை எவ்வாறு இருக்கிறது என்று உள்ளே சுற்றி வந்தாலும் அத்தனை திறமைகளும் ஒருங்கே இருக்கிறது//

    நன்றி ஜோதிஜி.

    Like

  4. Pingback: இது, மீன் சமாச்சாரம் ! « SEASONSNIDUR

Leave a comment