வாழ்நாள் முழுவதும் புகை பிடித்துத் திரிவதும், அளவுக்கு மிக அதிகமான எடையுடன் இருப்பதும் ஒரே மாதிரியான பாதிப்பைத் தரும் என அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர் யூகே ஆராய்ச்சியாளர்கள்.
உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனை உலகளாவிய பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. பல்வேறு நாடுகளும் ஏதேனும் செய்து இந்த சிக்கலிலிருந்து மீண்டு வரவேண்டும் என முயன்று கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று இங்கிலாந்து.
இந்த ஆராய்ச்சி சுமார் 90 ஆயிரம் பேரை வைத்து மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்டது. இதன் முடிவாக, அளவுக்கு மிக மிக அதிகமாக எடையுடன் இருப்பவர்கள் தங்கள் வாழ்நாளில் பத்து ஆண்டுகளை இழக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது.
அதாவது சாதாரணமான உடல் எடையை விட 18 கிலோ அதிகமாய் இருப்பவர்களுக்கு வாழ்நாளில் மூன்று ஆண்டுகள் குறையும். சாதாரண உடல் எடையை விட சுமார் 40 கிலோ அதிகமாய் இருந்தாலோ ஆயுளில் 10 ஆண்டுகள் குறையும் என கணக்கு வைத்துக் கொள்ளலாம்.
எது சரியான எடை என எப்படிக் கண்டு பிடிப்பது ?
அதற்கு BMI எனும் அளவையை வைத்திருக்கிறார்கள். இத்தனை உயரமெனில் இந்த எடை சரியானது எனும் கணக்கே அது.
சுமார் ஐந்தடி உயரமுள்ள மனிதர் 45 கிலோ எடையுடன் இருப்பது ஆரோக்கியமானது. ஐந்தரை அடி உயரமெனில் 55 கிலோ, ஆறடி உயரமெனில் எழுபது கிலோ என உத்தேசக் கணக்கு வைத்துக் கொள்ளலாம். ஆண்கள் பெண்கள் வேறுபாட்டில் இவை சற்றே மாறுபடும்.
(எடை (பவுண்டில்) x 4.88) / (உயரம் – அடி )2 என்னும் சூத்திரத்தை BMI கண்டறிய பயன்படுத்துகின்றனர். ஒரு கிலோ என்பது 2.2 பவுண்ட்
வாழ்நாள் முழுவதும் புகை பிடிப்பதும், உடல் எடை அதிகமாய் இருப்பதும் ஒரே போன்ற அச்சுறுத்தல் என்பது புதிய தகவல் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய ரிச்சர்ட் பீட்டோ என்பவர்.
தேவையற்ற மேலைநாட்டு உணவுப் பழக்கங்களை தவிர்த்து, இயற்கை உணவுக்கும், சுகாதார வாழ்க்கை முறைக்கும் மாறுவதும், உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதுமே இந்தச் சிக்கலில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளும்.
நல்ல தகவல்…
பொருத்தமான படம்… 😉
LikeLike
நல்ல பதிவு!
அதுக்கு நமீதா படத்தை போட்டது நல்ல நையாண்டி!
LikeLike
//நல்ல பதிவு!
அதுக்கு நமீதா படத்தை போட்டது நல்ல நையாண்டி!
//
🙂
LikeLike
/நல்ல தகவல்…
பொருத்தமான படம்…
//
😀
LikeLike
நல்ல தகவல்.
அது சரி, நமீதா எப்ப யூகே ஆராய்ச்சியாளரா ஆனாங்க?
LikeLike
Goog impermation
Do you know how many k.g Namitha ?
LikeLike
மீள்-பின்னூட்டம்:
சுகமான சுமைகள் சுமையாகா,
நமியைக் கண்டும் இமைத்த இமை இமையாகா!!!
LikeLike
//சுகமான சுமைகள் // ஒன்னும் புரியல
LikeLike
////சுகமான சுமைகள் // ஒன்னும் புரியல//
எனக்கும் தான் 🙂
LikeLike
/சுகமான சுமைகள் சுமையாகா,
நமியைக் கண்டும் இமைத்த இமை இமையாகா!!!//
திருக்குறள் மாதிரி திரும்பத் திரும்ப சொல்லிட்டிருக்கே போல… மவனே கல்யாணம் ஆயிடுச்சு ஞாபகம் ( ஞாபகத்தை மட்டும் ) வெச்சுக்கோ 🙂
LikeLike
//Goog impermation
Do you know how many k.g Namitha ?//
எனக்கு எப்படிப்பா தெரியும் ? சரத் குமார் கிட்டே கேட்டு பாரேன் 🙂
LikeLike
//நல்ல தகவல்.
அது சரி, நமீதா எப்ப யூகே ஆராய்ச்சியாளரா ஆனாங்க?//
ம்ம்ம்….. நமீதா பற்றி தான் சமூகத்துல எத்தனை எத்தனை கேள்விகள் 😀
LikeLike
//நமீதா பற்றி தான் சமூகத்துல எத்தனை எத்தனை கேள்விகள்//
சரியாய் சொன்னிங்க பா…
தகவளுக்கு நன்றி.
LikeLike
////நமீதா பற்றி தான் சமூகத்துல எத்தனை எத்தனை கேள்விகள்//
சரியாய் சொன்னிங்க பா…
தகவளுக்கு நன்றி.
//
😀
LikeLike
annae engalae yenn ippadi namitha padam kaati vaada vekkareengae? yenn indhae attagaasam?
LikeLike