“வாக்கிங்” போற பார்ட்டியா நீங்க ?

walkingஉடற்பயிற்சி என்றாலே பெரும்பாலானவர்கள் சொல்லும் அறிவுரை “நடப்பது” தான். தினமும் அரை மணி நேரம் நடந்தால் போதும், உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்கும், உடல் சுறுசுறுப்படையும், தேவையற்ற கொழுப்பு குறையத் துவங்கும் என்றெல்லாம் மக்கள் பயன்களை அடுக்குவதுண்டு.

அறிவுரையைக் கேட்பவர்கள் கேட்க மறந்து போகும் விஷயங்களில் சில எப்படி நடக்கவேண்டும், எத்தனை வேகமாக நடக்க வேண்டும் போன்றவை.

உலகெங்கும் பலருக்கும் இருக்கக் கூடிய இந்தக் குழப்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் இப்போது ஒரு ஆராய்ச்சி மூலம் தீர்த்து வைத்திருக்கிறார்கள்.

அதாவது நிமிடத்திற்கு சராசரியாக நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பதே அளவான மிதமான உடற்பயிற்சி, இந்த வேகத்தில் தினமும் முப்பது நிமிடங்கள் நடப்பது சரியான உடற்பயிற்சி என்கின்றனர் அவர்கள்.

எதிர்பார்க்கும் பயன் கிடைக்க வேண்டுமெனில் ஆண்களின் நடை வேக விகிதம் நிமிடத்துக்கு 92 அடிகள் முதல் 102 அடிகள் வரை இருக்க வேண்டும் எனவும் , பெண்களுக்கு 91 முதல் 115 வரை இருக்க வேண்டும் எனவும் அவர்களுடைய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

97 பேரை வைத்து நடத்திய இந்த ஆராய்ச்சி இறுதி முடிவாக, ஆண்களோ, பெண்களோ நிமிடத்துக்கு சுமார் நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பது நல்லது எனும் முடிவை எட்டியிருக்கிறது.

இந்த ஆராய்ச்சி ஆரோக்கியமான மக்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆரோக்கியம் குறைவானவர்களோ, மிக அதிக எடை கொண்டவர்களோ அதற்கு ஏற்றார்போல் நடையின் வேகத்தை மிதப்படுத்தலாம் என்கிறார் இந்த ஆராய்ச்சி தொடர்பான பேராசிரியர் கேரி டோனோவன்.

தொடர்ந்த உடற்பயிற்சி எப்போதுமே நல்லது. அதுவும் நீச்சல், நடை போன்றவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை.

எனவே, அறைகளுக்குள் அடைந்து கிடக்காமல் வெளியே வந்து நடங்கள்.

கவனம் தேவை, நிமிடத்துக்கு நூறு அடிகள் !

32 comments on ““வாக்கிங்” போற பார்ட்டியா நீங்க ?

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    http://www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதயுடன்)
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

    இவன்
    உலவு.காம்

    Like

  2. //
    எனவே, அறைகளுக்குள் அடைந்து கிடக்காமல் வெளியே வந்து நடங்கள்.
    //

    தினமும் 30 – 60 நிமிடம் உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக வைத்திருக்கிறேன்.

    இதெல்லாம் தேவையா என்று கூறும் மடையர்களின் அறிவுரைகளை தூக்கி வீசி விட்டு, வாரத்துக்கு ஐந்து நாளாவது செய்கிறேன்!

    Like

  3. சக்கரை வியாதி இருப்பதால தினசரி நடப்பவன் நான்.

    பொதுவா, பலரும் நடக்கும் பழக்கத்த வைத்திருப்பவர்கள்தான். உயிர் நண்பன்கிட்ட கைமாத்தா ஒரு 50 ரூபா கேட்டு பாருங்க. ஒடனே “நடைய கட்டுவாரு”

    🙂

    இந்த சுட்டிய தட்டுங்க:

    http://www.sathyamurthy.com/2009/03/10/when-i-took-a-walk-on-the-beach/

    Like

  4. // I am walking per minits 100 feet
    // My partnar walking per minit 90 feet only
    // What should I do ?

    Like

  5. எங்கெங்க கேட்கிறார்கள்.
    ஒரே ஒரு முறை மருத்துவமனையில் படுத்துட்டு வந்தாதான் புரியுமோ என்னவோ!!
    காசு கொடுத்து தான் எல்லாவற்றையும் கேட்பேன் என்கிறார்கள்.பணம் நிறைய இருக்கு என்று நினைக்கிறேன்.

    Like

  6. நாள் முழுக்க நடக்கலாம்தான் ஹி ஹி…இவங்க கூட வந்தாங்கன்னா

    Like

  7. //கவனம் தேவை, நிமிடத்துக்கு நூறு அடிகள் !…..//

    நடப்பவங்களுக் சரி, ஓடுரவங்களுக்கு ?

    //நாள் முழுக்க நடக்கலாம்தான் ஹி ஹி…இவங்க கூட வந்தாங்கன்னா..//

    யாரு ?

    Like

  8. நிமிஷத்துக்கு நூறு அடி வைச்சா, எல்லாரும் ”இவன் நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னு” சொல்லிருவாங்க…

    Like

  9. //நாள் முழுக்க நடக்கலாம்தான் ஹி ஹி…இவங்க கூட வந்தாங்கன்னா..//

    யாரு ?

    என்னா கேள்வி சின்னப்புள்ள தனமா… படத்ல இருக்கிறவங்கதான்

    Like

  10. குறைந்தபட்சம் நெற்றியில் வியர்வைப் பூக்கள் அரும்பும்படி நடக்கவேண்டும் என சுஜாதா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதாக நினைவு.

    Like

  11. //how about the joggers

    could you please put some advice about jogging.
    //

    அது கொஞ்சம் வேகமா நடப்பாங்களே.. அதைப்பற்றி தானே சொல்றீங்க ?

    Like

  12. //குறைந்தபட்சம் நெற்றியில் வியர்வைப் பூக்கள் அரும்பும்படி நடக்கவேண்டும் என சுஜாதா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதாக நினைவு.//

    இப்படி நடந்தா பூக்கள் என்ன பூந்தோட்டமே அரும்பும் ! 🙂

    Like

  13. //என்னா கேள்வி சின்னப்புள்ள தனமா… படத்ல இருக்கிறவங்கதான்//

    அசிஸ்டெண்டா சேந்துடுங்க… கூடவே நடந்துட்டே இருக்கலாம் 🙂

    Like

  14. //நிமிஷத்துக்கு நூறு அடி வைச்சா, எல்லாரும் ”இவன் நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னு” சொல்லிருவாங்க…//

    சித்தப்பு… அது வேற அடி !

    Like

  15. //எங்கெங்க கேட்கிறார்கள்.
    ஒரே ஒரு முறை மருத்துவமனையில் படுத்துட்டு வந்தாதான் புரியுமோ என்னவோ!!
    காசு கொடுத்து தான் எல்லாவற்றையும் கேட்பேன் என்கிறார்கள்.பணம் நிறைய இருக்கு என்று நினைக்கிறேன்.//
    //

    சரியா சொன்னீங்க !

    Like

  16. //சக்கரை வியாதி இருப்பதால தினசரி நடப்பவன் நான்.

    பொதுவா, பலரும் நடக்கும் பழக்கத்த வைத்திருப்பவர்கள்தான். உயிர் நண்பன்கிட்ட கைமாத்தா ஒரு 50 ரூபா கேட்டு பாருங்க. ஒடனே “நடைய கட்டுவாரு”
    //

    ஹா..ஹா 🙂 நடக்கணும்ன்னு ஆசைப்படறவங்க பட்டியல்ல இருக்கிறவன் நான். எழும்பும்போ ஓடவேண்டியிருக்கிறதனால நடக்க முடியறதில்லை 😀

    Like

  17. //தினமும் 30 – 60 நிமிடம் உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக வைத்திருக்கிறேன்.

    இதெல்லாம் தேவையா என்று கூறும் மடையர்களின் அறிவுரைகளை தூக்கி வீசி விட்டு, வாரத்துக்கு ஐந்து நாளாவது செய்கிறேன்!
    //

    பிரமாதம் !!!!

    Like

  18. //சேவியண்ணே, உங்களுக்கு நான் சித்தப்புவா!!! //

    அதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகறீங்க ??வயசு கம்மியான சித்தப்புன்னு வெச்சுக்கோங்க ! எனக்கு ஒரு நியாயம் விக்கிக்கு ஒரு நியாயமா ? 😉

    Like

  19. //எனக்கு ஒரு நியாயம் விக்கிக்கு ஒரு நியாயமா ?//

    பாவம் அவன் அறியாச் சிறுவன்…

    Like

  20. //பாவம் அவன் அறியாச் சிறுவன்…//

    பாவம், அவன் அறியாச் சிறுவனா ?
    அவன் “பாவம் அறியாச் சிறுவனா ?”

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s