தற்கொலை செய்யும் கடல் வாழ் உயிரினங்கள்

2-2627 

 

 

 

 

 

 

 

கூட்டம் கூட்டமாக விலங்குகள் தற்கொலை செய்வதை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா ? படு பயங்கர அதிர்ச்சியூட்டும் இந்த தற்கொலையில் உயிரிழந்திருக்கின்றன ஏராளம் டால்பின்கள் மற்றும் சுறா மீன்கள்.

கூட்டம் கூட்டமாக கடற்கரையோரமாக வருகின்றன டால்பின்கள், பின்பு அங்கேயே மரணித்து விடுகின்றன. சுறா மீன்களும் அப்படியே !

இப்படிப்பட்ட நிகழ்வுகளின் காரணம் புரியாமல் விழிக்கின்றனர் விஞ்ஞானிகள். ஆளுக்கொரு கணிப்பை வெளியிடும் அவர்களுக்குள்ளேயே முரண்பாடுகள் ஏராளம் ஏராளம்.

beached-whales-australia-photo3463

கடலுக்கு அடியில் உள்ள ஏதேனும் மாற்றங்கள் இத்தகைய கூட்டுத் தற்கொலைக்குக் காரணமாகியிருக்கலாம் என்பது பலர் சொல்லும் கருத்து !

இந்த வாரம் மட்டும் சுமார் எண்பது சுறா மீன்கள் மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரையோரமாக வந்து தற்கொலை செய்து கொண்டிருக்கின்றன !

கடற்கரையோரமாக வரும் சுறாமீன்களையும் டால்பின்களையும், மீண்டும் கொண்டு கடலுக்குள் விடும் மீட்புப் பணியும் இந்த இடங்களில் மும்முரமாய் நடைபெற்று வருகின்றன.

இந்த வாரம் நிகழ்ந்த இந்த தற்கொலை கடந்த சிலமாதங்களில் மட்டும் ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஐந்து நிகழ்வுகளிலுமாக சுமார் 500 சுறா மீன்கள் மடிந்திருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது.

whale1

ஆஸ்திரேலியாவைப் போலவே உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த தற்கொலை நிகழ்வுகள் நடக்கின்றன. இங்கிலாந்துப் பகுதியில் இறந்து போன டால்பின்களைப் பரிசோதித்தபோது அவை அதிக அளவில் மண்ணை அள்ளி உண்டதாக தெரியவந்திருக்கிறது.

இந்த தற்கொலைகளுக்கான காரணம் என்ன ?

மாசு படும் கடலா ? ஆழ்கடல் பயங்கரங்களா ? ஆழ்கடல் உயிரிகளினால் ஏற்பட்ட பயமா ? இல்லை ஏதேனும் அதிர்வலைகளின் பாதிப்பா ? என குழம்பிப் போயிருக்கிறது விஞ்ஞானம், நம்மைப் போலவே !

6-1814

26 comments on “தற்கொலை செய்யும் கடல் வாழ் உயிரினங்கள்

  1. சுனாமி ஏற்பட ஒரு சில மணி நேரங்களுக்கு முன் கடல் மீன்கள் கரையில் வந்து குதித்து குதித்து செத்துப் போனது. பினாங்கு தீவில் இது ஏற்பட்டதைக் கண்டேன். ஒரு வேளை கடலுக்குள் பொருளாதார நெருக்கடியோ 😛

    Like

  2. Reason is under the sea vibration is disturbig their comunication,so they lost their comunication with their relatives,so they get dipression then come suicide!
    so before suicide we should give them counselling therapy! by waves rute!!!
    Please Save Them!!!

    Like

  3. ஏதோ ஒரு இயற்கை அழிவு வரப்போகின்றது. வேறொன்றுமில்லை.

    Like

  4. வாசுகி நாஸ்ட்ராடாமஸ் கணக்குல ஆருடம் சொல்றிங்க…. சூப்பர் 🙂

    Like

  5. விக்கி, மகனே, நீதான் பீதியக் கிளப்புகிறாய். ஆமா, வழக்கமா சேவி அண்ணன் பண்ற வேலையை நீ பண்ணிக்கிடிருக்கே!!!

    பின்னூட்டங்களைத் தொடர்ந்து அதற்கு பதிலூட்டம் போடுறதப் பாத்தா நீ சேவி அண்ணனுக்கு பின்னூட்ட கோஸ்ட் ரைட்டர் ஆகிட்டியோன்னு தோணுது. 🙂

    Like

  6. அட நம்ம சித்தப்பு…. வாங்க வாங்க… நான் எழுதுறது என்ன அவ்வளோ டெரராவா இருக்கு… பீதியா இருக்குனு சொல்றிங்க… 🙂

    Like

  7. ஒருவேலை தமிழ்நாட்டு கட்சிகளின் கூட்டணி பேரத்தெல்லாம் கேள்விபட்டதனால் இருக்குமோ.. கொடுமதான் போங்க

    Like

  8. //
    ஒருவேலை தமிழ்நாட்டு கட்சிகளின் கூட்டணி பேரத்தெல்லாம் கேள்விபட்டதனால் இருக்குமோ.. கொடுமதான் போங்க//

    எதுக்கு வை.கோ வை கடுப்பேத்தறீங்க ! ? 🙂

    Like

  9. //அட நம்ம சித்தப்பு…. வாங்க வாங்க… நான் எழுதுறது என்ன அவ்வளோ டெரராவா இருக்கு… பீதியா இருக்குனு சொல்றிங்க… //

    சித்தப்புக்கு கரப்பான் பூச்சியைப் பாத்தாலே பீதி… அப்புறம் என்னத்த சொல்ல 😉

    Like

  10. //பின்னூட்டங்களைத் தொடர்ந்து அதற்கு பதிலூட்டம் போடுறதப் பாத்தா நீ சேவி அண்ணனுக்கு பின்னூட்ட கோஸ்ட் ரைட்டர் ஆகிட்டியோன்னு தோணுது.//

    சே.. இதுக்கும் தனியா ஒரு பதிலூட்டம் போட வேண்டியிருக்கே 😀

    Like

  11. //வாசுகி நாஸ்ட்ராடாமஸ் கணக்குல ஆருடம் சொல்றிங்க…. சூப்பர் //
    அந்த மனுஷனை ஏன் தேவையில்லாம இழுக்கறீங்க 😀

    Like

  12. //ஏதோ ஒரு இயற்கை அழிவு வரப்போகின்றது. வேறொன்றுமில்லை.//

    இயற்கை அழிவு தான் தொடர்கதையா வந்திட்டிருக்கே !

    Like

  13. //Reason is under the sea vibration is disturbig their comunication,so they lost their comunication with their relatives,so they get dipression then come suicide!
    so before suicide we should give them counselling therapy! by waves rute!!!
    Please Save Them!!!//

    ஏதோ லேடி இன் த வாட்டர் படத்தோட கதை மாதிரி இருக்கு 😀

    Like

  14. //சுனாமி ஏற்பட ஒரு சில மணி நேரங்களுக்கு முன் கடல் மீன்கள் கரையில் வந்து குதித்து குதித்து செத்துப் போனது. பினாங்கு தீவில் இது ஏற்பட்டதைக் கண்டேன். ஒரு வேளை கடலுக்குள் பொருளாதார நெருக்கடியோ //

    கடலுக்குள்ளே நெருக்கடியா ? இப்படியெல்லாம் சொல்லாதீங்க. அம்மாவோட தேர்தல் அறிக்கைல “கடலுக்கடியே உள்ள நெருக்கடியைத் தீர்த்து டால்பின்களைக் காப்போம்” என்று தேர்தல் அறிக்கை வுட்டாலும் வுடுவாங்க ! 😀

    Like

  15. ethoo oru vallarasu nadu kadalluku adiyil anukundu nuclear bomb blast seythu irukkalam antha vediyin athirchiyil meankal sethu madinthu poiirukum.sunami kuda athan vilaivaka irukkalam???dgbabu.india.

    Like

Leave a comment