புரோகோலி புசியுங்கள்

broccoli 

புரோகோலி தெரியுமா ? பரவலாக பலரும் பயன்படுத்தாத இந்த காய்கறிக்கு வயிற்றில் புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தினமும் இரண்டு கைப்பிடி அளவு தளிர் புரோகோலியைச் சாப்பிட்டு வந்தால் உடலில் என்சைம்கள் அதிகமாய் சுரந்து அவை வயிற்றில் கான்சர் வரும் வாய்ப்பை வெகுவாகக் குறைக்கிறது என்பதே இவர்களுடைய புதிய ஆராய்ச்சி முடிவாகும்.

ஜப்பானில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் சுருங்கிய விளக்கம் வேண்டுமெனில் , “புரோகோலியில் உள்ள பயோ கெமிக்கல் பொருளான சல்ஃபோரோபேன் தான் இந்த பாதுகாப்புப் போரைப் புரிகிறது” எனச் சொல்லலாம்.

புரோகோலியை தினமும் உண்பது உடலிலுள்ள வாயு தொல்லைகளுக்கான நிரந்தரத் தீர்வாகி விடுகிறது. கூடவே வயிற்றில் கான்சர் வராமல் தடுக்கும் மாபெரும் பணியையும் செய்கிறது என்கிறார் ஜான் காப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜெட் பாகே.

புரோகோலியில் வைட்டமின் A, வைட்டமின் C, ஃபோலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்ற உடலுக்கு மிகவும் தேவையான சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது உடல் நலத்துக்கு மிகவும் பயனளிப்பது. குறிப்பாக உடலின் குருதி அழுத்தத்தை இது கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

இதிலுள்ள வைட்டமின் C, தெளிவான கண்பார்வைக்கு உதவுகிறது. கண்ணில் பூவிழுதல் (காட்டராக்) தொல்லையிலிருந்து கண்ணைக் காப்பாற்றவும் இந்த புரோகோலி துணை செய்கிறது.

இதிலுள்ள ஃபோலிக் அமிலம் தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு வரப்பிரசாதம் எனலாம். கூடவே வயதான பெண்களுக்கு வரக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு நோயிலிருந்தும் புரோகோலி பாதுகாக்கிறது.

அல்ஸீமர், நீரிழிவு, இதய நோய் உட்பட பல்வேறு நோய்களிலிருந்து உடலைக் காப்பாற்றும் சக்தி இந்த புரோகோலிக்கு உண்டு ! இரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த புரோகோலிக்கு அல்சர் நோய் வராமல் தடுக்கும் வல்லமை கூட உண்டு என்பது கூடுதல் தகவல்.

இன்னும் என்ன தயக்கம், புரோகோலி புசிக்க ஆரம்பிக்கலாமே !

0

Advertisements

14 comments on “புரோகோலி புசியுங்கள்

 1. //இதை இங்கு சீன அவரை என சொல்வார்கள்//

  மகனே, அது ஏதோ காலிஃப்ளவர் மாதிரி இருக்கும்னு கேள்விப் பட்டிருக்கேன். நீ என்னன்னா சீன அவரைன்னு சொல்றே….

  Like

 2. //மகனே, அது ஏதோ காலிஃப்ளவர் மாதிரி இருக்கும்னு கேள்விப் பட்டிருக்கேன். நீ என்னன்னா சீன அவரைன்னு சொல்றே….

  //
  அதானே ! அது பச்சை காலிபிளவர் மாதிரி தான் இருக்கும். மலேஷிய தம்பி வேற ஏதாச்சுப் பாத்துட்டு சொல்றானோ ?

  Like

 3. அடப் போங்கப்பா. எனக்கும் ப்ரோக்கோலி புசிக்க ஆசைதான். அது எனக்கு ஆயுசைக் கூட்டுது. ஆனா அதோட விலையைக் கேட்டதும் என்னோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுதே. என்ன செய்யிறது. (பிறகு ப்ரோக்கோலி புசிக்க ஆசைப்பட்டு ஒரு சிங்கிள் ப்ரொய்லர் கோழி புசிக்க முடியாமல் போய்விடுமே)

  Like

 4. பரவலாக தமிழகத்தில் கிடைப்பதில்லையே ? தமிழ்நாட்டில் விளையுமா ?

  Like

 5. /பரவலாக தமிழகத்தில் கிடைப்பதில்லையே ? தமிழ்நாட்டில் விளையுமா ?//

  இப்படியெல்லாம் கேட்டா நான் என்ன சொல்றது 😀

  Like

 6. /அடப் போங்கப்பா. எனக்கும் ப்ரோக்கோலி புசிக்க ஆசைதான். அது எனக்கு ஆயுசைக் கூட்டுது. ஆனா அதோட விலையைக் கேட்டதும் என்னோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுதே. என்ன செய்யிறது. (பிறகு ப்ரோக்கோலி புசிக்க ஆசைப்பட்டு ஒரு சிங்கிள் ப்ரொய்லர் கோழி புசிக்க முடியாமல் போய்விடுமே)//

  ஹா..ஹா… 😀

  Like

 7. கொஞ்சமாக வேக வைத்து, உப்பு, மிளகு போட்டுச் சாப்பிட்டால் சுவை அதிகம். ஜார்ஜ் புஷ்க்குப் (மகன்)
  பிடிக்காத காய். இதை ஊடகங்களுக்குச் செய்தியாக வேறு கொடுத்துவிட்டார். 🙂 தமிழ்நாட்டில்
  பிராகலி கிடைக்கிறதா?

  Like

 8. ப்ரோக்கோளி சமைக்கும் முறை:
  கோளிஃப்ள்வரைப்போலவே பிரிக்க வேண்டும். பிரிக்க முடியாத பெரிய துண்டுகளை வேண்டுமானால் சிறிதாக வெட்டிக் கொள்ளலாம்.சிறிது நேரம் உப்பு நீரில் போட்டு வைத்திருந்து புழுக்கள் இருந்தால் வெளியான பிறகு ஆவியில் மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்களுக்கு வேக விட்டு எடுக்கவும்.பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு 2 சிறிய வெங்காயம்,2பல் பூண்டு ,சிறு துண்டு இஞ்சி இம்மூன்றையும் இடித்துப் போட்டு[உறைப்புக்கு வேண்டுமானால் 4 சிவப்பு மிளகாயையும் சேர்க்கலாம்] நனகு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து உப்பும் இட்டு கடைசியாக அரைவேக்காடாக வெந்திருக்கும் ப்ரோக்கோளியையும் போட்டு கிளறி இறக்கி சூடு ஆறுவதற்குள் சாப்பிட வேண்டும். இது நம் இந்தியர்களுக்கு ஒத்துப் போகும் ரெசிபி. சாப்பிட்டு பார்த்து சொல்லுங்களேன். எப்படியிருந்தது என்று.

  Like

 9. நன்றி பரமேஸ்வரி. நான் லைட்டாக உப்பு போட்டு ஆவியில் கொஞ்சம் வேகவைத்து அப்படியே சாப்பிடுவேன். அது என் ஃபேவரிட் 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s