வேட்பாளர்களை கதிகலங்க வைக்கும் சி.ஐ.டி ரிப்போர்ட்கள் !

7karunanidhi1அந்தக் கட்சி இந்தக் கட்சி என்றில்லாமல் எல்லா கட்சிகளிலுமே வேட்பாளர் தேர்வுக் குளறுபடி உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் இன்னும் யாரை எங்கே நிறுத்தலாம் எனும் முடிவுக்கே வராமல் குய்யோ முய்யோ என கூச்சல் போட்டு கட்சியின் மானத்தையே வாங்கிக் கொண்டிருக்கிறது.மக்களவைத் தேர்தலை விட வேட்பாளர் தேர்வே அவர்களுக்கு பெரும் சவாலாகிக் கொண்டிருக்கிறது !

மதிமுக, பாமக, போன்ற “வேறு வழியில்லா” கட்சிகள் ஏற்கனவே நினைத்து வைத்திருந்தவர்களை நிறுத்தி விட்டு ஒதுங்கிக் கொண்டனர்.

தனிக் கட்சிகளால் அப்படி ஒதுங்க முடியவில்லை. திருவள்ளூர், பெரம்பலூர் வேட்பாளர்களை அதிமுக அதிரடியாக மாற்றி பரபரப்பை ஏற்படுத்த, தே.மு.தி.க தனது மதுரை வேட்பாளரை மாற்ற அடுத்த மாற்றத்துக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது தி.மு.க!

மூன்று நான்கு வேட்பாளர்களை தி.மு.க மாற்றலாம் எனும் செய்தி திமுக வட்டாரத்தில் பரபரப்பாக அலசப்படுகிறது.

அதில் முக்கியமானவர், தன் படத்துக்கு, தானே போஸ்டர் ஒட்டி, தானே டிக்கெட் எடுத்துக் கொடுத்து, படம் பார்க்க வருபவர்களுக்கு தன் செலவில் பிரியாணியும் வாங்கிக் கொடுக்கும் “நாயகன்” ரித்தீஷ் !  “அவருக்கெல்லாம் சீட் கொடுத்து தலைமை எங்களை  அவமானப்படுத்தும் என நினைக்கவில்லை” என கொதித்துப் போய் திரிகின்றனர் காலம் காலமாய் திமுகவுக்கு விசுவாசமாய் உழைத்து வந்த ராமநாதபுரம் பகுதி தொண்டர்கள்.

தூத்துக்குடி வேட்பாளர் எஸ்.ஆர். ஜெயதுரை மீது மக்களிடையே ஆதரவே இல்லை. ஒரு செக்ஸ் டாக்டர்ப்பா அவரு என கிண்டலடிப்பதிலேயே மக்கள் குறியாக இருக்கிறார்களாம். சி.ஐ.டி ரிப்போர்ட் கண்டு அதிர்ந்து போயிருக்கிறது திமுக தலைமை.

இன்னொன்று கள்ளக்குறிச்சி, அங்கே ஆதிசங்கரருக்கு மவுசு இல்லையாம்.

நான்காவது குமரி !

குமரி மாவட்டத்தில் திமுக வேட்பாளர் நின்றால் நிச்சயம் தோல்வி என்பது தான் இன்றைய நிலமை. அங்குள்ள காங்கிரஸ் மக்கள் அவ்வளவு தூரம் கொதித்துப் போயிருக்கின்றனர். எனவே ஹெலன் டேவிட்சனை மாற்றிவிட்டு வைகோ போட்டியிடப் போகும் விருதுநகருக்கு திமுக தனது இடத்தை மாற்றலாமா எனவும் யோசிக்கிறது.

இந்த மாற்றங்களையெல்லாம் கொளுத்திப் போடுவது சி.ஐ.டி ரிப்போர்ட்கள். மதுரையையே பெரும்பாலும் மையமாக வைத்து இயங்கும் இந்த சிஐடி குழுக்கள் தொகுதிகளில் சென்று கண்டறிந்து வரும் செய்திகள் பலவும் அரசியல் தலைமை இடங்களைக் கதி கலங்க வைக்கிறதாம்.

எப்படித் தான் இவர்களெல்லாம் பல அடுக்கு கண்களில் மண்ணைத் தூவி வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்தார்கள் என்பதே தலைமைகளின் தலையை உலுக்கும் பிரச்சனையாகியிருக்கிறது.

ஆங்காங்கே மாறிக்கொண்டிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றவர்களைக் கதி கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் தில்லு முல்லு செய்து போலி ரிப்போர்ட்களைத் தயாரித்து தலைமையின் கண்ணில் மண்ணைத் தூவியவர்கள் அதிர்ந்து தான் போயிருக்கிறார்களாம்.

இந்த மாற்றங்கள் மீது கலைஞருக்கு உடன்பாடில்லையாம். ஆனால் அழகிரியும், ஸ்டாலினும் இந்த மாற்றங்கள் வராவிடில் தேவையில்லாமல் தோல்வியை விரும்பி அழைப்பது போல் ஆகிவிடும் என அழுத்தம் கொடுக்கின்றனராம். விஷயம் ரொம்ப நாள் உள்ளுக்குள்ளேயே இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

எங்க ஊருல ஒரு பழமொழி உண்டு !

மலியும்போ சந்தைக்கு வந்து தானே ஆவணும் !

16 comments on “வேட்பாளர்களை கதிகலங்க வைக்கும் சி.ஐ.டி ரிப்போர்ட்கள் !

 1. //மலியும்போ சந்தைக்கு வந்து தானே ஆவணும் !//

  எத்தனை நாளைக்குத்தான் பழமொழிய அப்படியே சொல்லுவீங்க. கொஞ்சம் மாத்தித்தான் சொல்லுங்களேன்.

  கத்திரிக்கா முத்துனா ஒளவர் சந்தைக்கி வந்து தானே ஆகனும்…

  Like

 2. //கத்திரிக்கா முத்துனா ஒளவர் சந்தைக்கி வந்து தானே ஆகனும்…//

  அதானே… மாத்திட்டா போச்சு 🙂

  Like

 3. //// Will be win Mr. Austin (DMDK )//

  வாய்ப்பே இல்லை !!! ஆஸ்டின் கொஞ்சம் வாக்கு வாங்கிட்டு ஒதுங்கிடுவார்… பாஜக அந்த கேப் ல நுழைஞ்சுடுவாங்க !

  Like

 4. hi friends,……this time kanyakumari MP seat sure will get to BJP….if congress or DMK never will get chance……..bcoz 3 strong persons against for BJP 1.BELLARMIN = HE WILL GET VOTES VILAVANCODE, MARTHANDAM and Mondaymarket area communist vote and roman cathalik vote,
  2. Austin = he will get more than 50 % fishermens votes
  3. Dmk or Congress (Helen Davidson or Mr. X)= they also will get more than 50 % CSI christians votes so no problem for BJP They have constent votes more than 3.5 laks so they will win easily…………..PON. RADHAKRISHNAN(BJP) = HE IS A NICE PERSON HE will get BJP constant votes + 25% fishermens votes also becoz 1998 to 2004 he done nice works for beech area and remedy of Tsunami

  Like

 5. //காங்கிரஸ் இன்னும் யாரை எங்கே நிறுத்தலாம் எனும் முடிவுக்கே வராமல் குய்யோ முய்யோ என கூச்சல் போட்டு கட்சியின் மானத்தையே வாங்கிக் //

  அது குய்யோ முரையோனு சொல்லுவாங்களே 😛

  Like

 6. Pingback: Top Posts « WordPress.com

 7. //காங்கிரஸ் இன்னும் யாரை எங்கே நிறுத்தலாம் எனும் முடிவுக்கே வராமல்//

  கடைசி வரைக்கும் முடிவுக்கே வராமல் இருக்க கடவதாக…. இவங்க ஜெயித்து தமிழகத்துக்கு ஆகப்போறது ஒன்னுமில்ல

  Like

 8. Vetpalar Thervu – Entha thirudan easya makkalai emathuvano antha Thirudanai shortlist seivathu!!!!!!
  Vetpalar Matram – Kappam kattatha kayavagalai thalamai thokki adipathu!!!!
  Ithuku CID vera use panragala hmmmm ellam namma selvavileye seiranga…..

  Like

 9. /Vetpalar Thervu – Entha thirudan easya makkalai emathuvano antha Thirudanai shortlist seivathu!!!!!!
  Vetpalar Matram – Kappam kattatha kayavagalai thalamai thokki adipathu!!!!
  Ithuku CID vera use panragala hmmmm ellam namma selvavileye seiranga…..//

  நாடோடி வழக்கம் போல நச் !

  Like

 10. //கடைசி வரைக்கும் முடிவுக்கே வராமல் இருக்க கடவதாக…. இவங்க ஜெயித்து தமிழகத்துக்கு ஆகப்போறது ஒன்னுமில்ல//

  இந்த தேர்தல் சுவாரஸ்யமா இருக்கும் போல 😉

  Like

 11. YOU ARE ABSULTELY CORRECT. I AM FROM A CURSED TOWN OF NAZARETH, TUTUCORIN DISTRICT. EXCEPT MR. NESAMONI WHO WAS A VETERAN FROM KANYAKUMAI, NOBODY HAS DONE ANYTHING FOR THE SO CALLED,’christian belt” OF TUTUCORIN AND KANYAKUMARI DIST.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s