“ஹேர் டை” : ஆபத்தாகும் அழகுப் பொருள் !

 215 வயதான கர்லா ஹேரிஸ் க்கு நடனப் போட்டியில் கலந்து கொள்ளும் நாள் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. இரண்டொரு நாளில் நடனப் போட்டி. போட்டியில் அழகாய் தெரிய வேண்டும் எனும் உந்துதலால் தனது அழகிய நேரான கூந்தலுக்கு கொஞ்சம் வர்ணம் சேர்க்க விரும்புகிறாள் சிறுமி கர்லா.

லோரியல் நிறுவனத்தின் தயாரிப்பான கூந்தல் நிறமியை வாங்கி வருகிறாள். லோரியல் என்பது பாரிசை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் உலகிலேயே மிகப் பெரிய அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வீட்டுக்கு வந்து, தனது தலையில் கொஞ்சமாய் தலையில் அந்த “ஹேர் டை” யை தேய்க்கிறாள். கொஞ்சம் எரிச்சல், அரிப்பு வருவது போலத் தோன்றுகிறது. ஏன் அரிக்கிறது என யோசித்துக் கொண்டே தனது வேலையை முடித்துக் கொள்கிறாள்.

இரவில் நிம்மதியாய் தூங்கி, மறுநாள் காலையில் உற்சாகமாய் எழும்பிய சிறுமி, தனது பல வண்ணக் கூந்தல் எப்படி மிளிர்கிறது என கண்ணாடியில் பார்த்தபோது அதிர்ந்து போகிறாள். அவளுடைய முகம் ஒரு பூசணிக்காய் போல வீங்கியிருக்கிறது. !!

அழகு சாதனப் பொருட்கள் ஆபத்தையும் தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கின்றன என்பதற்கான ஒரு சிறு உதாரணம் தான் மேற்கூறிய இந்த நிகழ்வு.

அந்த ஹேர் டை யில் நச்சுப் பொருளான PPD எனும் வேதியல் பொருள் இருந்ததே இந்த ஒவ்வாமைக்குக் காரணம் என்பது பின்னர் தெரிய வந்திருக்கிறது. இந்த பொருள் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.1

 

உலகின் மாபெரும் நிறுவனத்தின் பொருட்களிலேயே இந்த விஷத் தன்மை இருக்கிறதெனில் மற்ற பொருட்களைப் பற்றி கேட்கவே வேண்டாம் என அதிர்ந்து போயிருக்கின்றனர் விஷயம் கேள்விப்பட்டோர்.

வெறுமனே வீக்கம் வந்துவிட்டு விலகிப் போகும் சமாச்சாரம் என்று இதை தள்ளி விட முடியாது. இந்த வீக்கம் பெரிதாகி நாக்கு, தொண்டை போன்றவை அளவுக்கு அதிகமாகி வீங்கி விட்டால் உயிருக்கே ஆபத்து என்பது அச்சுறுத்தும் உண்மையாகும்.

” விஷப் பொருள் இருக்கிறது என்று தெரிந்தும் அதை அனுமதிப்பது என்பது அந்த நிறுவனத்தை நம்பும் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைக்கும் செயல். இனிமேல் என் வாழ்நாளில் ஹேர் டை எனும் பேச்சுக்கே இடமில்லை” என கலங்கிப் போய் கூறுகிறாள் சிறுமி.

ஹேர் டை உபயோகிப்பவர்களில் 7.1 விழுக்காடு மக்களுக்கு ஏதேனும் எதிர் விளைவுகள் ஏற்படுவதாக 2007ம் ஆண்டைய புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.

இந்த அழகுப் பொருட்களிலெல்லாம் எந்த அச்சுறுத்தலும் இல்லை, மக்கள் இதைத் தைரியமாகப் பயன்படுத்தலாம் என லோரியல் நிறுவனம் தனது மறுப்பில் தெரிவித்துள்ளது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழும் நிகழ்வுகளைப் பொதுமைப் படுத்தக் கூடாது என்பது அவர்களின் வாதம். எனில் எதையும் உதாசீனப் படுத்தக் கூடாது என்பது நமது விருப்பம் !

 

 

 

15 comments on ““ஹேர் டை” : ஆபத்தாகும் அழகுப் பொருள் !

  1. ரொம்ப நல்ல பதிவு நண்பா.. 😀
    அதிகமா மேக்கப் போட்டு பசங்கள ஏமாற்றும் பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு 😛

    Like

  2. அன்புள்ள சேவியர் அவர்களுக்கு,
    ராஜா எழுதிக்கொள்வது.நலம் நாடுவதும் அதே! தங்களது வாழ்க்கை எப்படி உள்ளது? போதிய நேரம் இல்லாத்தால் தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப இயலவில்லை. தங்களது ஹேர்டை கட்டுரையை ஜூன் 2009 இதழில் பிரசுரம் செய்கிறேன்.
    வேறு ஏதேனும் விசேசம் உண்டா?

    Like

  3. //அன்புள்ள சேவியர் அவர்களுக்கு,
    ராஜா எழுதிக்கொள்வது.நலம் நாடுவதும் அதே! தங்களது வாழ்க்கை எப்படி உள்ளது? போதிய நேரம் இல்லாத்தால் தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப இயலவில்லை. தங்களது ஹேர்டை கட்டுரையை ஜூன் 2009 இதழில் பிரசுரம் செய்கிறேன்.
    வேறு ஏதேனும் விசேசம் உண்டா?//

    நன்றி ராஜா 🙂 நலம்.. நலமென நம்புகிறேன். நேரமிருக்கையில் மடல் எழுதுங்கள்.

    Like

  4. //அதிகமா மேக்கப் போட்டு பசங்கள ஏமாற்றும் பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு //

    மேக்கப் இல்லேன்னா யாரும் கண்டுக்க மாட்டேங்கறாங்களாமே !! 😉

    Like

  5. //// GOOD FOR HEALTH ……

    // SUPER ……
    //

    நீ ரொம்ப கலர் அடிச்சு சுத்திட்டிருக்கிறதா கேள்விப்பட்டேன்.. பாத்து நடந்துக்கோ 😀

    Like

  6. //A PERSON SHOULD CONDUCT A TEST BEFORE USING ANY DYE.FOR ANY ALLERGIC REACTION.//

    உண்மை .. சில சோதனைகள் முடிவுக்கு 48 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். !

    Like

  7. கொல கொலையா (கலர் கலரா) முந்திரிக்கா… நிறைய நிறைய சுத்தி வா
    கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?… கூட்டத்துல இருக்கான் (L’Oreal Hair Dye) கண்டுபுடி!
    L’Oreal Hair Dye பற்றிய பதிவைத் தந்தமைக்கு நன்றி சேவியர்.

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s