தாய்க்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் : குழந்தைக்கு ரொம்ப நல்லது !

Pablo-Picasso-Mother-And-Child-25656காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை, ஒரே தலை சுற்றல் வாந்தி மயக்கம் என “மார்னிங் சிக்னெஸ்” குறித்துப் புலம்பும் தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு உற்சாக டானிக்காக வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

தாய்மைக் காலத்தின் முதல் பாகத்தில் இத்தகைய அசௌகரியங்களைச் சந்திக்கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிக அறிவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என அறிவிக்கிறது இந்த ஆராய்ச்சி.

தலை சுற்றல், வாந்தி , மயக்கம் எல்லாமே ஆரோக்கியமான தாய்மையின் அடையாளங்கள் எனவும், இத்தகைய அறிகுறிகள் காணப்படும் பெண்களின் குழந்தைகள் இதயம் தொடர்பான நோய்கள் வருவதிலிருந்து தப்புகிறார்கள் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கூடவே இப்படிப்பட்ட சிக்கல்கள் அன்னைக்கு இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பும் பெருமளவில் குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

121 தாய்மார்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு குழந்தைகளுடைய மூன்றாவது வயது மற்றும் ஏழாவது வயதில் சோதனைகளை நடத்தியது. இதில் தாய்மைக்காலத்தில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்த தாய்மார்களின் குழந்தைகளை விட தாய்மைக்காலத்தில் கஷ்டப்பட்ட தாய்மார்களின் குழந்தைகள் படு சுட்டிகளாக இருந்தார்களாம்.

சரளமாகப் பேசுவது, சிறு சிறு கணிதங்களைச் செய்வது என நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தாய்மைக் காலத்தில் நிகழும் ஹார்மோன் வெளியேற்றமே இந்த “மார்னிங் சிக்னெஸ்” எனப்படும் சிக்கல்களுக்குக் காரணம் எனவும், இது கருவையும், கருப்பையையும் பாதுகாக்கும் நிகழ்வு எனவும் மருத்துவ விளக்கம் அளிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தாய்மைக் காலத்தில் சிக்கல்களைத் தாங்க வேண்டிய தாய்மார்களுக்கு இந்த தகவல் மிகவும் உற்சாகமூட்டும் என்பதில் ஐயமில்லை.

வாந்தி, மயக்கம் வரும்போதெல்லாம் தன் குழந்தையின் அறிவாற்றல் விருத்தியடைகிறது என நினைத்து அன்னையர்  இனிமேல் மகிழ்ச்சி அடைவார்களாக.

18 comments on “தாய்க்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் : குழந்தைக்கு ரொம்ப நல்லது !

  1. ஹாஸ்பிடல் பில்லப் பாத்தா அப்பாக்களுக்கு மயக்கம் தலைசுற்றல் எல்லாம் வருமே, அது கூட பாப்பாவுக்கு நல்லதா? 🙂

    Like

  2. //ஹாஸ்பிடல் பில்லப் பாத்தா அப்பாக்களுக்கு மயக்கம் தலைசுற்றல் எல்லாம் வருமே, அது கூட பாப்பாவுக்கு நல்லதா//

    சமீபத்தில் திருமணமான இவருடைய கேள்விய பார்த்தா இவருக்கு மயக்கம் வந்திருக்குமோ. வாழ்த்துக்கள்

    Like

  3. ஹாஸ்பிடல் பில்லப் பாத்தா அப்பாக்களுக்கு மயக்கம் தலைசுற்றல் எல்லாம் வருமே, அது கூட பாப்பாவுக்கு நல்லதா?

    குப் என சிரிப்பு வந்தது.. வேகமாக சிரிக்க முடியவில்லை.. காரணம் நான் அலுவலகத்தில் இருந்தேன். வாழ்த்துக்கள்..
    எம். ஹாமீம்

    Like

  4. அன்பு நெஞ்சங்களே, வாழ்த்து தெரிவிப்பதை ஜூன் முதல் வாரம் வரை நிறுத்தி வையுங்கள்.

    Like

  5. நித்தில், உங்களுடைய பின்னூட்டங்கள் பலவும் ரசிக்கும்படியாகவும் விரும்பும்படியாகவும் இருக்கிறது. நீங்களும் எழுத வர வேண்டும் என்று என் பங்குக்கு ஒரு அழைப்பை வைக்கிறேன்.

    Like

  6. //நித்தில், உங்களுடைய பின்னூட்டங்கள் பலவும் ரசிக்கும்படியாகவும் விரும்பும்படியாகவும் இருக்கிறது. நீங்களும் எழுத வர வேண்டும் என்று என் பங்குக்கு ஒரு அழைப்பை வைக்கிறேன்.
    //

    அந்த அழைப்பை அலசல் அவையில் நிகழ்த்தியமைக்கு வி.கோ வுக்கு நன்றிகள் 🙂

    Like

  7. //அன்பு நெஞ்சங்களே, வாழ்த்து தெரிவிப்பதை ஜூன் முதல் வாரம் வரை நிறுத்தி வையுங்கள்.
    //

    ஓ…. ! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !

    Like

  8. //ஹாஸ்பிடல் பில்லப் பாத்தா அப்பாக்களுக்கு மயக்கம் தலைசுற்றல் எல்லாம் வருமே, அது கூட பாப்பாவுக்கு நல்லதா?

    குப் என சிரிப்பு வந்தது.. வேகமாக சிரிக்க முடியவில்லை.. காரணம் நான் அலுவலகத்தில் இருந்தேன். வாழ்த்துக்கள்..
    எம். ஹாமீம்
    //

    இது வி.கோ வோட குறைந்த பட்ச நகைச்சுவை… ஆளு பலே கில்லாடிங்க… 🙂

    Like

  9. It is indeed a gratifying news to pregnant ladies. This will persuade them to bear the above problems in the welfare of the child. Hats off to this invention

    Like

  10. While this may be an encouraging news to pregnant ladies who have the above symtoms but at the same time those who do not have such problems may inlcined to feel that their children may be lack of wisdom. Is there any more advance research will be put forth to equally encourage such sector

    Like

  11. மிகவும் உபயோகமான கட்டுரை. அந்த சிரமங்களை தாய் மார்கள்
    மகிழ்வாக எடுத்து கொள்கின்றனர்!

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s