மனிதனின் மூதாதையார் இதோ….

Fossil 

ஆதாம், பிரம்மா என மதங்கள் முதல் மனிதனின் தோற்றம் குறித்து பல்வேறு தகவல்களைச் சொல்லிக் கொண்டிருந்தாலும் விஞ்ஞானம் அதையெல்லாம் நம்பத் தயாராய் இல்லை.

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்பதையே விஞ்ஞானம் பொதுவாக ஏற்கிறது. எனில் குரங்குகள் எங்கிருந்து வந்தன ? அதன் மூதாதையார் யார் என எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடையாய் இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது இந்த உலர் எலும்புக் கூடு.

இந்த உயிரி வாழ்ந்த காலம் சுமார் 4.7 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது எனும் செய்தி வியப்பூட்டுகிறது.

குரங்குகள், மனிதன் போன்ற அனைத்துக்குமே முன்னோடியாக இருக்கக் கூடும் இந்த உயிரி என்பதே விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

உலகிலுள்ள உயிரிகள் இரண்டு மாபெரும் பிரிவாகப் பிரிந்து ஒரு பிரிவு குரங்கு, மனிதன் என மாறியது, இன்னொரு பிரிவு லெமூரியர்கள், இதர ராட்சத விலங்குகள் என மாறியது. இந்த உயிரி அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என விஞ்ஞான பாஷை பேசுகின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த எலும்புக் கூடு ஒரு பெண் உயிரியின் எலும்புக் கூடு எனவும், இதற்கு மனிதர்களுடைய இயல்புகள் பல இருந்திருக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த எலும்புக் கூடைக் கொண்டு மனிதர்களுக்கும் பிற உயிரிகளுக்கும் இடையேயான தொடர்பை இந்த எலும்புக் கூடு விளக்கும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

சமூகத்துக்குப் பயனளிக்கும் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் நல்லது தான் !

14 comments on “மனிதனின் மூதாதையார் இதோ….

 1. ஆய்வுகள் யாவும் காலத்துக்குக் காலம் மாற்றியமைக்கப்படக் கூடியவை!…
  உண்மைகளே உலகில் நிரந்தரம்….
  கடவுள் மனிதனைப் படைத்திருந்தால் பூமியிலே “மனிதம்” இருந்திருக்கும்…..
  அதை விடுத்து, குரங்கிலிருந்து வந்ததாலோ என்னவோ (ஆய்வுகளின் கூற்றுப்படி)
  மனிதரிடையே “மனிதம்” செத்து, “மிருகம்” தழை(தளை)த்து விட்டது.

  * தளை = மிருகம் *

  Like

 2. இக்கூற்றின் படி அது முதல் மனிதனின் எலும்போ.. ?(ஒரு போதும் இல்லை) இது ஒரு கடவுள் நம்பிக்கை இளைத்தவன் சொலும் கட்டுக்கதை… மனிதனுக்கு முந்தியது எறும்பு இனம் என்று சொன்னது விஞ்ஞானம் ஆனால் இன்று வரை எறும்பு இனம் ஏன் மாறவில்லை..

  உண்மையே உண்மை.. யாவரும் அறிவீர்..

  Like

 3. மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்றால் ”ஏன் குரங்குகள் இன்னும் குரங்குகளாகவே” இருக்குகின்றன.
  ஏன் மனிதனாக மாறவில்லை.

  குரங்குகளைவிட ”பன்றியின் அணுக்கள் மனித அணுக்களுக்கு ஒத்தவையாக உள்ளன ”அதற்காக
  மனிதன் பன்றியிலிருந்து பிறந்தவன் என்று
  சொன்னாலும் சொல்லுவார்கள்.

  Like

 4. கிறித்தவ நம்பிக்கை
  உலகில் தோன்றிய முதல் மனிதன் ஆதாம் ஏவாள் என்று பரவலாக நம்பப்படுகிறது.
  இசுலாமிய நம்பிக்கை
  உலகில் தோன்றிய முதல் மனிதன் ஆதாம் என்றும் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் கூறுகிறது. ஆதாமின் விலா எழும்புகளிலிருந்து ஏவாள்(பெண்) படைக்கப்பட்டதாகவும் குர் ஆன் கூறுகிறது.
  முதல் மனிதனை களி மண்ணிலிருந்து படைக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது.

  Like

 5. ஒரு விஞ்ஞான கருத்து பிழையென நிரூபிக்கப்பட்டவுடன், அது ஒதுக்கப்பட்டு, அதனுடன் தொடர்புடைய விவாதங்கள் மற்றும் கருத்து பரிமாற்றங்கள் அனைத்தும் நிறத்தப்பட்டுவிடும். ஆனால் டார்வினிசத்தில் அவ்வாறு நிகழவில்லை. டார்வினிஸ்டுகள் தங்களது கோட்பாட்டிற்கு எதிரான கருத்துகள் மறுக்க முடியாது வலுப்பெற்றிருந்த போதிலும் டார்வினிஸ்டுகள் அதை புறந்தள்ளி விட்டு தொடர்ந்து அவர்களுடைய நம்பிக்கையை நிலைநாட்ட கடுமையாக முயற்சிக்கின்றனர்.

  Like

 6. //ஒரு விஞ்ஞான கருத்து பிழையென நிரூபிக்கப்பட்டவுடன், அது ஒதுக்கப்பட்டு, அதனுடன் தொடர்புடைய விவாதங்கள் மற்றும் கருத்து பரிமாற்றங்கள் அனைத்தும் நிறத்தப்பட்டுவிடும். ஆனால் டார்வினிசத்தில் அவ்வாறு நிகழவில்லை. டார்வினிஸ்டுகள் தங்களது கோட்பாட்டிற்கு எதிரான கருத்துகள் மறுக்க முடியாது வலுப்பெற்றிருந்த போதிலும் டார்வினிஸ்டுகள் அதை புறந்தள்ளி விட்டு தொடர்ந்து அவர்களுடைய நம்பிக்கையை நிலைநாட்ட கடுமையாக முயற்சிக்கின்றனர்.//

  😀

  Like

 7. சில சமயம் விஞ்ஞானிகளும் இப்படி கதை கட்ட ஆரம்பிச்சுடுறாங்க!

  Like

 8. டார்வினின் கண்டுபிடிப்பு ஒன்றும் எடுத்தோம், கவிழ்த்தோமென எடுக்கப்பட்டதல்ல. முறையான ஆய்வுகளும், முழுமையான தகவல்களுமே இதற்கு அத்தாச்சி!.

  இதில் ஆன்மீகத்தின் கருத்தை நுழைத்தால் அறிவு இல்லாமல் போய்விடும் என்பது என் கருத்து. திடீரென வானிலிருந்து மனிதனை மட்டும் இறைவன் எழும்பிலிருந்து படைத்தான், நேரடியாக உருவாக்கினான் என்ற கற்பனைகளை நம்புவதை விட அறிவியல் உகந்ததாகவே படுகிறது.

  – ஜெகதீஸ்வரன்.
  http://sagotharan.wordpress.com

  Like

 9. //இதில் ஆன்மீகத்தின் கருத்தை நுழைத்தால் அறிவு இல்லாமல் போய்விடும் என்பது என் கருத்து/

  சிறு திருத்தம். மதத்தில் நுழைந்தால் என்று எழுதுங்கள், ஆன்மீகம் அற்புதமானது. அதை அனுபவிக்க வாழ்நாள் முயற்சி வேண்டும்.

  Like

 10. மனிதன் எங்கிருந்து தோன்றினானோ? அதுகூட தேவையில்லை,முதலில் இந்த உலகம் தோன்றிய அதிசயம் பற்றி என்ன சொல்கிறார்கள்? இந்த வானம் எப்படி தோன்றியது? இயற்கை என்றால் எப்படி உருவானது? கடவுள் என்றால் அவர் தோன்றியது எப்படி? இதற்கு முதலில் அறிவியல் என்ன சொல்கிறது? மதத்தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்? இதற்கு பதில் சொல்லுங்கள்.தன்னால் மனிதன் தோன்றிய விதம் தெரிந்துவிடும்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s