முட்டைப் பிரியர்களுக்கோர் நற்செய்தி….

Egg3

முட்டை சைவப் பிரியர்களின் முதன்மை உணவாக மாறிப்போயிருக்கும் காலம் இது. முட்டை அசைவம் என்றாலே நம்பத் தயாராய் இல்லை இன்றைய இளம் தலைமுறை. ஆனால் அவர்களைக் கலக்கமுறச் செய்வதெல்லாம் முட்டையைக் குறித்து உலவிக் கொண்டிருக்கும் ஏராளமான கட்டுக் கதைகள் தான்.

“முட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும் இது, அது ..” என அடுக்கடுக்காய் வைக்கப்படும் பல்வேறு பயமுறுத்தும் அறிக்கைகளால் முட்டையை உண்ணலாமா வேண்டாமா என குழப்பத்திலேயே இருக்கின்றனர் பெரும்பாலானோர்.

அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்த ஆனந்தத்துக்கு உள்ளாக்குகின்றன சமீப காலமாய் வெளியாகும் முட்டை குறித்த ஆராய்ச்சிகள். அவற்றில் ஒன்று “தினம் ஒரு முட்டை” உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று.

முட்டை தரும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் செயலையே செய்கின்றன என ஒரு விரிவான ஆய்வின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.

முட்டை வயிற்றில் உள்ள என்சைம்களுடன் கலந்து உருவாக்கும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தும் மருந்துகள் செய்யும் அதே பணியையே அடிபிறழாமல் செய்கின்றன எனும் தங்களது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர் கனடாவின் ஆல்பர்டா பல்கலைக் கழக ஆய்வாளர்கள்.

முட்டையை வேகவைத்து என்றல்ல, பொரித்து ஆம்லேட்களாக உட்கொள்வதும் சிறந்த பயனளிக்கிறது என்று சொல்லி ஆம்லேட் பிரியர்களின் வயிற்றில் முட்டை வார்க்கின்றனர் இவர்கள்.

முட்டை உண்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும், இதய நோய்கள் வரும், அது இது என அச்சுறுத்திக் கொண்டிருந்த தகவல்களுக்கு இன்னொரு ஆராய்ச்சி முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.

உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வரக் காரணமாகாது. அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானதல்ல. மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் படவேண்டியவை. இன்னும் சொல்லப்போனால் தினம் இரண்டு முட்டைகளை உண்பது உடலுக்கு நல்லது. உங்கள் எடை கட்டுக்குள் வைத்திருக்கக் கூட இது உதவும் என சிலிர்ப்பூட்டும் தகவல்களைச் சொல்லி முட்டைப் பிரியர்களை ஆனந்தக் கூத்தாட வைக்கின்றனர் இங்கிலாந்தைச் சேர்ந்த இன்னொரு ஆராய்ச்சிக் குழுவினர்.

வாரத்துக்கு மூன்று முட்டைகளே ஆரோக்கியமானது என இங்கிலாந்து மருத்துவர்கள் நிர்ணயித்திருந்த கட்டுப்பாடுகளின் கட்டுகளையெல்லாம் அவிழ்த்து விட்டு , தினம் இரண்டு சாப்பிடுங்கள் என அறிவுறுத்த ஆரம்பித்திருக்கிறார்களாம்.

பிறகென்ன, நீங்களும் முட்டையை மறுபடியும் நேசியுங்கள் .

24 comments on “முட்டைப் பிரியர்களுக்கோர் நற்செய்தி….

 1. சொல்லிட்டீங்கள்ள, விடுங்க…. ஒரு அண்டா நெறைய முட்டைய ஒடச்சு ஊத்தி உள்ளாறயே உக்காந்துக்குறேன்…

  Like

 2. சாதாரணமாக நான் அவித்த முட்டை (வெள்ளை கரு மட்டும்) ஒரு நாளைக்கு ஐந்து சாப்பிடுவேன், இப்பொழுது நன்கு உடல் Mass கூடியுள்ளது. Half-boil என்றால் ஒரு வேலைக்கே மூன்று சாப்பிடுவேன் (ஆனால் இது உடலுக்கு நல்லது இல்லை ஆனால் அடிமயாகிட்டேனே)

  Like

 3. தினம் முட்டை சாப்பிட்டால் சுகெர் வரும் என்று ஒரு பதிவில் படித்தேன்

  Like

 4. அவிச்ச முட்டைல சால்ட் பெப்பர் போட்டு சாப்ட்டா, எவ்ளோ நல்லா இருக்கும் தெரியுமா?

  வட இந்தியாவுல மிளகாய சைட் டிஷ்ஷா வெச்சிகிட்டு அவிச்ச முட்டையை சாப்பிடுறாங்க!

  Like

 5. ஆஹா நல்ல செய்தி சொன்னிங்க…

  //எங்க ஊருக்கு இது நல்ல செய்தி! நல்லா வியாபாரம் ஆகுமே!..//

  உங்க பதிவ பாத்த நீங்க முட்டை வியாபாரம் பண்றீங்க போல..

  Like

 6. /உங்க பதிவ பாத்த நீங்க முட்டை வியாபாரம் பண்றீங்க போல..//

  முட்டை கணக்கு வழக்கு பாக்காம உள்ளே தள்ளுவதோட சரி ! 😀

  Like

 7. /அவிச்ச முட்டைல சால்ட் பெப்பர் போட்டு சாப்ட்டா, எவ்ளோ நல்லா இருக்கும் தெரியுமா?

  வட இந்தியாவுல மிளகாய சைட் டிஷ்ஷா வெச்சிகிட்டு அவிச்ச முட்டையை சாப்பிடுறாங்க!
  //

  முட்டை எப்படி கிடச்சாலும் சூப்பர் தான் 😀

  Like

 8. /சாதாரணமாக நான் அவித்த முட்டை (வெள்ளை கரு மட்டும்) ஒரு நாளைக்கு ஐந்து சாப்பிடுவேன், இப்பொழுது நன்கு உடல் Mass கூடியுள்ளது. Half-boil என்றால் ஒரு வேலைக்கே மூன்று சாப்பிடுவேன் (ஆனால் இது உடலுக்கு நல்லது இல்லை ஆனால் அடிமயாகிட்டேனே)//

  அடேங்கப்பா 😉

  Like

 9. //சொல்லிட்டீங்கள்ள, விடுங்க…. ஒரு அண்டா நெறைய முட்டைய ஒடச்சு ஊத்தி உள்ளாறயே உக்காந்துக்குறேன்…//

  பாத்து, அன்னியன் மாதிரி பொரிச்சுடப் போறாங்க 😉

  Like

 10. namakkalluku nalla news . muttai uruppathi patthathu.dhinam oru muttai oru naparukku.kalai unavu muttai,malai unavu muttai,iravu unavu muttai.muttaiin kalam,

  Like

 11. முட்டை … முட்டை… என்று முட்டைசெய்தி சொன்னிங்க ஆனால் என்ன முட்டை சொல்ல இல்லை

  Like

 12. //முட்டை … முட்டை… என்று முட்டைசெய்தி சொன்னிங்க ஆனால் என்ன முட்டை சொல்ல இல்லை//

  அடி ஆத்தி… இது வாத்தி போட்ட முட்டை இல்லை…. கோழி போட்டது !

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s