When A Stranger Calls : திரை விமர்சனம்

13

இந்த வாரம் ஒரு திரில்லர் (என்று சொல்லப்பட்ட ) “When A Stranger Calls”  என்னும் படத்தைப் பார்க்க நேரிட்டது.

ஒரு பணக்காரருடைய வீட்டில் இரண்டு குழந்தைகளைக் கவனிப்பதற்காக பணியமர்த்தப்படுகிறார் ஒரு இளம் பெண். குழந்தைகள் மேல் மாடியில் நிம்மதியாகத் தூங்க, போரடித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது.

“போய் குழந்தைகளைப் பாரு” என தொலைபேசியில் வரும் குரலை (வழக்கம்போலவே ) முதலில் அலட்சியமாய் நினைக்கிறாள். பின் குழந்தைகளைக் காணாமல் திடுக்கிட்டு, பதட்டப்பட்டு, திக் திக் நிமிடங்களுடன் அங்கு மிங்கும் ஓட இரவு நீள்கிறது.

அழைப்பு எங்கிருந்து வருகிறது என கடைசி கட்டத்தில் போலீஸ் டிரேஸ் செய்து விடுகிறது. பார்த்தால், அழைப்பு வீட்டுக்கு உள்ளிருந்தே வருகிறது. !  பதட்டம் அதிகரிக்க சத்தம், அலறல், வீல் வீல், காச் மூச், என படம் முடிகிறது.

நவீனங்கள் இல்லாத 1979 களில் வந்த படத்தை இன்றைய நவீன யுகத்தில் மீண்டும் படமாக்கினால் எப்படியெல்லாம் சொதப்பலாம் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்

மிகப்பெரிய பணக்காரருடைய வீடு !!!  ஒரு இண்டர்நெட் கூடவா இல்லை, ஒரு கண்காணிப்பு கேமரா கூடவா இல்லை ? அவசர அலாரம் கூடவா இல்லை? பக்கத்து கெஸ்ட் ஹவுசில் மகன் இருக்கும்போ பேபி சிட்டர் எதுக்கு ? சரி எதுக்கு தேவையில்லாமல் அடிக்கும் போனை எடுக்க வேண்டும் ? ( போன் பூத் போல ஒரு வலுவான காரணம் இல்லை ), இப்படி படம் முழுக்க கேள்விகள் கேட்டுக் கேட்டு நமக்கே ஒரு கட்டத்தில் போரடித்து விடுகிறது.11

தனிமையான பங்களா, நதிக்கரை ஓரமான வீடு, நிசப்த இரவு, நீளமான வராண்டாக்கள், ஆங்காங்கே திறந்து கிடக்கும் கதவுகள், கண்ணாடிக் கதவுகளில் மங்கலாய் அசையும் உருவம், படபடக்கும் திரைச்சீலை என ஒரு சாதாரண திகில் படத்துக்கு என்னென்ன அம்சங்கள் இருக்குமோ அத்தனையும் பிரசண்ட்.

ஆமா இந்தப் படத்தைத் தான் “விடியும் வரை காத்திரு..” என தமிழில் எடுக்கிறார்களா ? டிரெய்லர் பாத்தா அப்படித் தான் தெரியுது ! ஐயோ ஆள விடுங்க சாமி !

பொறுமையாய் அமர்ந்து ஒன்றரை மணிநேரம் படம் பார்த்து முடித்தபின் தோன்றியது, நல்லவேளை கதாநாயகியாவது பார்க்கும்படி இருக்கிறார்.

8 comments on “When A Stranger Calls : திரை விமர்சனம்

  1. //ஆமா இந்தப் படத்தைத் தான் “விடியும் வரை காத்திரு..” என தமிழில் எடுக்கிறார்களா ? டிரெய்லர் பாத்தா அப்படித் தான் தெரியுது ! ஐயோ ஆள விடுங்க சாமி !//

    அப்படியா?

    Like

  2. சேவியர் ஸார்..

    என்ன ரொம்ப நாளா மட்டம் போட்டுட்டீங்க.. பார்க்கவே முடியலே..

    நீங்கள் சொன்னது உண்மையாகவும் இருக்கலாம்..

    படம் வந்திரட்டும்.. பார்த்திரலாம்..!

    Like

  3. இது மாதிரியான படங்கள் கதாநாயகிக்காகவே ஓடுகிறது..

    Like

Leave a comment