உலகம் : கொடுமையிலும், கொடுமை…

3தனது படுக்கையறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயதான குழந்தையை மலைப்பாம்பு ஒன்று இறுக்கிக் கொன்ற படு பயங்கர துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சம்பவம் நடந்தது இங்கல்ல, அமெரிக்காவில், புளோரிடா மாகாணத்தில்.

அந்த மலைப்பாம்பு காடு மலை தாண்டியெல்லாம் வரவில்லை சார்லஸ் ஜேசன் டார்னெல் என்பவர் வளர்த்தது. அவர் குழந்தையின் தாயின் பாய்பிரண்டாம்.

இரவில் எதேச்சையாக எழுந்தவர் கூண்டில் பாம்பைக் காணாமல் அங்கும் இங்கும் தேடினால், பாம்பு படுக்கையில் படுத்திருந்த குழந்தையை முறுக்கிப் பிடித்து கடித்துக் கொண்டிருந்ததாம். அலறியடித்துப் போய் பாம்பை அடித்து இழுத்து மாற்றியும், குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது மிகப்பெரிய சோகம்.

காட்டு விலங்குகளை வீட்டில் வளர்க்க சிறப்பு அனுமதி பெறவேண்டும். ஆனால் அந்த பாம்பு அனுமதி வாங்காமல் 2வளர்க்கப்பட்டதாம். ஆதாம் காலத்திலிருந்தே பாம்புக்கும், மனுஷனுக்கும் ஒத்து வருவதில்லை. அப்புறமும் எதுக்கு இந்த விபரீத ஆசையோ ?

மலைப்பாம்பை சின்னதாக இருக்கும் போது ஆசைப்பட்டு வாங்கி விடுகிறார்கள். அது வளர்ந்தபின் புலி வாலைப் பிடித்த கதையாகி விடுகிறது, வெளியே விடவும் முடியாமல், தொடர்ந்து வளர்க்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கிறார்கள். இது போன்ற சம்பவம் அமெரிக்காவில் நிகழ்வது இது பன்னிரண்டாவது முறையாம்.

காட்டில் இருக்க வேண்டியவை காட்டிலும், நாட்டில் இருக்க வேண்டியவை நாட்டிலும் இருப்பதே இயற்கையோடு இணைந்த வாழ்வு. அதை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க ஒரு இரண்டு வயது குழந்தையைப் பலிகொடுக்க வேண்டியிருந்ததே உலக மகா துயரம்.

பிடித்திருந்தால் தமிழிஷ் வாக்களிக்கலாம்..

Advertisements

16 comments on “உலகம் : கொடுமையிலும், கொடுமை…

 1. தாயின் பாய்பிரண்டோட பாம்பா. கலாசாரமோ, நாகரீகமோ இல்லாமல் என்னா வாழ்க்கை இது. பாவம் குழந்தை

  Like

 2. இது ஒரு விதமான கொடுமையா? 2-3 வருடங்களுக்கு முன் நியூ யார்க்கில் (செல்ஸீ) ஒரு “நாய்” (அவன் மனுஷன்னு சொல்ல மனசு வரல! ஏன்னு அப்புறமா புரிஞ்சிப்பீங்க) தன் வீட்டுல ஒரு புலி, முதலை & நாயை வளர்த்திருக்கு! அதுவும் பிஸி ஏரியாவில் இருக்கும் அபார்ட்மெண்டில்! எப்படி கொண்டுவந்து வீட்டில் குடிவைத்தான் என்று யாருக்கும் தெரியவில்லை! வீட்டில் இருக்கும் புலி உறுமும் போதெல்லாம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏதோ சர்ரௌண்ட் சவுண்டில் படம் பார்க்கிறான் என்று விட்டுவிட்டார்கள்! ஒரு நாள் புலிக்கும் முதலைக்கும் சண்டை வந்து அப்படியே நாயையும் (அவனை இல்லீங்க) பதம் பார்க்க அவன் அதை டாக்டரிடம் கூட்டிப் போக, அதைப் பார்த்த டாக்டர் என்னடா காட்டு மிருகம் பிராண்டியதைப்போல இருக்கே என்று போலிஸை கூப்பிட அப்புறம் பக்கத்து வீட்டுக்கார்கள் “ஆஆ” என்று வாயைப் பிளக்க் காட்டு மிருகங்களை கூண்டில் அடைத்து கூட்டிக்கொண்டு போனார்கள்!

  Like

 3. //ennaathu paamba vazakraangala!!!!!! athu paambuku(valakraanganu) theriuma!!!!!!!!!!!!!!!!//

  ரொம்ப நியாயமான கேள்வி… யாராவது கேட்டிருப்பாங்களா தெரியலை !

  Like

 4. /புலி உறுமும் போதெல்லாம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏதோ சர்ரௌண்ட் சவுண்டில் படம் பார்க்கிறான் என்று விட்டுவிட்டார்கள்//

  🙂

  இப்படியும் மனிதர்கள் 😀

  Like

 5. //அதை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க ஒரு இரண்டு வயது குழந்தையைப் பலிகொடுக்க வேண்டியிருந்ததே உலக மகா துயரம்….//

  அதுவும் இது உலகுக்கு 12ஆவது முறை.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s