செல்போன்கள் ஆளுக்கு இரண்டு என மாறிவிட்ட இன்றைய சூழலில் செல்போன் தொடர்பான குற்றங்கள் உலகம் முழுவதும் மலிந்து கிடக்கின்றன. செல்போன் குற்றங்களில் முதல் இடத்தில் நிற்கிறது ஆபாசப் படங்கள், வீடியோக்கள் !
பத்து கல்லூரி மாணவர்களின் செல்போன்களைப் பரிசோதித்தால் அதில் ஆறு பேருடைய செல்போன்களிலாவது நிச்சயம் இருக்கும் சில ஆபாசப் படங்கள் அல்லது ஆபாச வீடியோக்கள்.
இந்தப் படங்களில் இருப்பவர்கள் நடிகைகளோ, பாலியல் தொழிலாளிகளோ அல்ல. பள்ளி, கல்லூரி மாணவிகள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அல்லது குடும்பப் பெண்கள் என்பது அதிர வைக்கிறது. அவர்களுடைய தனிமையை ஊடுருவிப் பார்க்கும் வல்லூறுக் கண்களே இந்த குற்றங்களின் பின்னணியில் இயங்கும் காரணகர்த்தாக்கள்.
அதிர்ச்சியூட்டும் இத்தகைய படங்கள் பல ஆயிரக்கணக்கான பெண்களுடைய வாழ்க்கையை நாள் தோறும் சீரழிக்கிறது என்பதே இதன் பின்னணியில் உறையும் வலிமிகுந்த உண்மையாகும்.
சக பணியாளியையோ, மாணவியையோ, தோழியையோ ஆபாசமாய் படம் எடுத்து அதை மற்றவர்களுக்குக் காண்பிக்கப் போவதாய் செய்யப்படும் “பிளாக் மெயில்” பல ஆயிரம் பெண்களுடைய கற்பையும், நிம்மதியையும், வாழ்க்கையையும் கலைத்து எறிந்திருக்கிறது
இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என நீங்கள் நினைத்தால் அது மாபெரும் தவறு, நரை வயதுப் பெரியவர்கள் பலரும் இத்தகைய குற்றங்களின் ஊடாக இயங்குகின்றனர். பொது இடங்கள், பூங்காக்கள், இண்டர்நெட் காஃபேக்கள் தொடங்கி படுக்கையறைகளும், கழிவறைகளும் கூட இந்த ரகசியக் கண்காணிப்புப் பட்டியலில் இருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.
தனியே ரகசியமாய் எடுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் யூ டியூப் போன்ற தளங்களில் மலிந்து கிடக்கின்றன என்பதும். உலகம் முழுவதிலுமுள்ள மொபைல் பயன்பாட்டாளர்களால் பார்க்கப்படுகின்றன என்பதும் நமது தனிமையின் மீதே ஒரு பயத்தை ஏற்படுத்திவிடுகிறது.
“எல்லோரிடமும் கேமரா போன்கள் இருக்கும் போது, குற்றவாளிகள் பொது இடங்களில் குற்றங்களைச் செய்யத் தயங்குவார்கள், பத்திரிகையாளர்கள் சட்டென கண் முன்னால் நிகழும் நிகழ்ச்சிகளைப் படமெடுத்து விட முடியும்” என ஏகப்பட்ட பில்டப் கதைகளோடும், எக்கச் சக்க எதிர்பார்ப்புகளோடும் சந்தைக்கு வந்த மொபைல் போன்கள் இன்று அந்தரங்கங்களின் வெளிச்ச மேடையாகியிருப்பது கவலைக்குரிய ஒன்று.
போதாக்குறைக்கு மொபைல் நிறுவனங்கள் போன்களின் விலையையும், மெமரி கார்ட்களின் விலையையும் சகட்டு மேனிக்கு குறைத்து வருவது அங்கிங்கெனாதபடி எங்கும் அதி நவீன கேமராக்கள் நிரம்பி வழிய ஒரு காரணமாகிவிடுகிறது.
இன்றைய அதி நவீன மொபைல் போன்கள் பெரும்பாலும் ஒரு சின்ன கம்ப்யூட்டராகவே செயல்படுகின்றன. சில விரல் அசைவுகளினால் இணையத்தொடர்பை ஏற்படுத்தவும், தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளவும் முடியும் என்பதனால் பிழைகள் பரவும் வேகமும் ஜெட் வேகமாகியிருக்கிறது.
இந்த ஆபத்தைக் கருத்தில் கொண்டு பல நாடுகள் கேமரா மொபைல் போன்களுக்கான அனுமதியை மறுத்து வருகின்றன. உதாரணமாக சவுதி அரேபியாவில் கேமரா போன்களுக்கு அனுமதி இல்லை. அமெரிக்காவிலும் நீச்சல் குளம் போன்ற பொது இடங்களில் கேமரா போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
பெரும்பாலான சாப்ட்வேர் அலுவலகங்களில் கேமரா மொபைல்களை அனுமதிப்பதில்லை. சாப்ட்வேர் நிறுவனங்களின் அமைப்பையோ, ரகசியங்களையோ, படமெடுத்துவிடக் கூடாது எனும் முன்னெச்சரிக்கையே இதற்கான காரணம். இதற்காக அலுவலகங்கள் கேமராக்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டியோ, மொபைல் கேமராக்களை முழுமையாய் தடை செய்தோ சட்டங்களைக் கொண்டு வருகின்றன.
சில சாப்ட்வேர் அலுவலகங்களில் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கேமரா இயங்காதவாறு செய்து விடுகின்றனர். உங்கள் மொபைலில் கேமரா இருந்தாலும் இந்த அலுவலக வளாகத்தில் நுழைந்தவுடன் அவை செயலிழந்து விடுகின்றன.
கம்ப்யூட்டர்களைப் போலன்றி இந்த மொபைல் படங்களை தனிமையான இடங்களிலிருந்து பார்த்து விட முடியும் என்பதனால் இளைய தலைமுறையினரை இந்த மொபைல் வீடியோக்கள் ஒரு அடிமையாகவே மாற்றியிருக்கின்றன.
நவீன ரக போன்கள் ஒரு தொடுதலிலேயே “யூ டியூப் (You Tube)” பாலியல் வீடியோக்களை இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பதும், பல பில்லியன் டாலர் பிசினஸ் மொபைல் பாலியல் வீடியோ தொழிலில் மறைந்துள்ளது என்பது கவனிக்கத் தக்கது.
நம்மைச் சுற்றி உருவமற்ற நிழலாய் எப்போதுமே தொடரும் இத்தகைய சிக்கல்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் ?
1. எத்தனை நம்பிக்கைக்குரிய நண்பராய் இருந்தாலும், உங்களை கவர்ச்சியாகவோ, அந்தரங்கமாகவோ படம் எடுக்க அனுமதிக்காதீர்கள். ஆண் தோழர்கள் என்றல்ல உங்கள் பெண் தோழியர்களுக்கும் அனுமதி அளிக்காதீர்கள். ஏராளம் படங்கள் சக தோழியரால் எடுக்கப்படுபவையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
2. “உடனே அழித்து விடுவேன்” எனும் வாக்குறுதியுடன் எடுக்கப்படும் இந்தப் படங்களை சில வினாடிகளிலேயே வேறொரு கைப்பேசிக்கோ, மின்னஞ்சலுக்கோ உங்களுக்குத் தெரியாமலேயே அனுப்பிவிட்டு உங்கள் முன்னால் சாதுவாக படங்களை அழித்துக் காண்பிப்பது வெகு சுலபம் என்பதை உணருங்கள்.
3. தனியாக ஆண்களுடன் தங்க நேரிடும் சூழல்களில் இரட்டைக் கவனம் கொண்டிருங்கள். எந்தக் காரணம் கொண்டும் மது, போதை போன்றவற்றை விரும்பியோ, கட்டாயத்தின் காரணமாகவோ உட்கொள்ளாதீர்கள்.
4. உங்கள் மொபைலில் புளூடூத் ஆன் செய்யப்பட்டிருந்தால் உங்கள் மொபைலில் உள்ள படங்களையோ, செய்திகளையோ உங்களுக்குத் தெரியாமலேயே திருடிச் செல்ல நிறைய மென்பொருட்கள் உள்ளன. எனவே தேவையற்ற நேரங்களில் புளூடூத் ஐ ஆஃப் செய்து விடுங்கள்.
5. வெப் கேம் – மூலமாக காதலர்களுடன் பேசும் பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் அந்தரங்கங்களை வீடியோவில் அரங்கேற்றாதீர்கள். இவை வழியிலேயே திருடப்பட்டு வக்கிரக் கண்களால் விவகாரமாக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
6. இண்டர்னெட் காஃபேக்களில் – யாருமே இல்லை, விரும்பிய தனிமை இருக்கிறது என உங்கள் சில்மிஷங்களை நிகழ்த்தாதீர்கள். பல இண்டர்னெட் கஃபேக்கள் ரகசிய கேமராக்களைப் பொருத்தி நீங்கள் தனிமை என நினைக்கும் அறைக்குள் செய்வதை படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.
7. பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் செல்லும் போதும் ஏதோ ஒரு மூன்றாவது கண் உங்களைக் கவனிக்கிறது எனும் உள்ளுணர்வு கொள்ளுங்கள்.
8. எந்தக் காரணம் கொண்டும் “பிளாக் மெயிலுக்கு” பணிந்து விடாதீர்கள். பிளாக் மெயில் செய்பவர்கள் தங்கள் தேவை முடிந்ததும் உங்களுக்குத் தந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரச்சினை முளைக்கும் போதே ரகசியமாய் காவல் துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்.
9. யாரேனும் உங்களுக்கு “விவகாரமான” குறுஞ்செய்தியோ, படமோ, வீடியோவோ அனுப்பினால் அதற்கு துவக்கத்திலேயே ஒரு அழுத்தமான முற்றுப் புள்ளி இட்டு விடுங்கள். இவையெல்லாம் உங்களை வலையில் விழவைக்கும் தந்திரங்கள். “ஸ்போர்டிவ்”வாக எடுத்துக் கொள்கிறேன் பேர்வழி என நீங்களே போய் அந்த மாய வலையில் விழுந்து விடாதீர்கள். அப்படி வரும் தகவல்களை உடனுக்குடன் அழித்தும் விடுங்கள்.
10. உங்கள் மொபைல் எண்ணை இணைய தளங்களிலோ, ஆர்குட் போன்ற இடங்களிலோ கொடுக்காதீர்கள். இவை உங்களுக்கு தேவையற்ற எஸ்.எம்.எஸ்கள் வரவோ, சிக்கல்கள் வரவோ வழிவகுக்கக் கூடும்.
11. மொபைல் போன்களை அதற்குரிய சர்வீஸ் செண்டர்களிலோ, அல்லது மிகவும் நம்பிக்கைக்குரிய நபர்களிடமோ மட்டுமே கொடுங்கள். இல்லையேல் உங்கள் மொபைல் போன் “குளோனிங்” செய்யப்படக் கூடும் !
12. உங்கள் வீட்டில் குழந்தைகளோ, பதின் வயது சிறுமிகளோ இருந்தால் மிகவும் கவனம் தேவை. நெருங்கிய உறவினர்களானாலும், நண்பர்களானாலும் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை மட்டுமே வழங்குங்கள். கேமரா விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்காதீர்கள்.
13. எந்தக் காரணம் கொண்டும் விளையாட்டாக உங்கள் உடல் “அழகை” நீங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் மொபைலில் இருந்து அவை இன்னோர் மொபைலுக்கு திருடப்பட்டு விடலாம்.
14. நீங்கள் பேசுவதையெல்லாம் அட்சர சுத்தமாக பதிவு செய்யும் வல்லமையுள்ளவை நவீன கேமராக்கள். எனவே பேசும்போது கூட “இந்த உரையாடல் பதிவுசெய்யப்பட்டால்…” எனும் எச்சரிக்கை உணர்வுடனே பேசுங்கள்.
எல்லா வினைக்கும் உரித்தான எதிர்வினைகள் கேமரா மொபைல்களுக்கும் உள்ளன. ஒட்டுமொத்த தடை விதித்தல் சாத்தியமற்ற சூழலில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
மிக நல்ல, காலத்திற்கு தேவையான பதிவு. தனிமனித ஒழுக்கம்தான் மிக சிறந்த தீர்வு.
LikeLike
EVERY BODY SHOULD READ THIS .
LikeLike
அட!திருட்டுப்பயலே !
அப்படி சொல்லத் தோணரது!
கமலா
LikeLike
//உதாரணமாக சவுதி அரேபியாவில் கேமரா போன்களுக்கு அனுமதி இல்லை// சவுதியில் கேமரா போன்களுக்கு தடையில்லை. பொது இடங்களில் படம் எடுப்பதுக்குதான் தடை.
நான் கேள்விப்பட்ட தகவல். ஒரு தம்பதியினரது அந்தரங்க தருனம் வலையில் அந்த தம்பதியினருக்கு தெரியாமலே பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதாம். விசாரித்ததில் அவர்களின் வக்கிர புத்தியால் அவர்களே படம்பிடித்து பார்த்துவிட்டு அழித்தும்விட்டனர். பின்னர் ஏதோ புகைப்படத்தை print போடுவதற்காக memory cardஐ studioவில் கொடுத்தபோது அந்த studioவில் வேலைசெய்பவர் ஏதோ softwareஐ வைத்து அழித்த தாக நினைத்த video clippingஐ மீட்டெடுத்து வலையில் பதிவேற்றினாராம். எப்படியெல்லாம் இருக்கான்ங்க…
உபயோகமான பதிவு சேவியர்
LikeLike
Dear Friend,
In saudi arabia there is no restriction to use Camera Mobile phone & even they arer selling here,So please change the below information in your blog.
Thanks,
Shahul,
Riyadh – KSA.
//உதாரணமாக சவுதி அரேபியாவில் கேமரா போன்களுக்கு அனுமதி இல்லை// சவுதியில் கேமரா போன்களுக்கு தடையில்லை. பொது இடங்களில் படம் எடுப்பதுக்குதான் தடை.
LikeLike
கடைப்பிடிக்க வேண்டிய விடயங்க உங்க பதிவில் இருக்கு
வரும் முன் காப்பதும், காற்றுல்ல போதே தூற்றிக்கொள்வதும் அவரவர் ஜாக்கிரதையிலேயே இருக்கு
LikeLike
அழகான அவசியமான பதிவு.
LikeLike
நீங்கள் கூறும் விஷயங்கள் அதிக அளவு மக்களை, குறிப்பாக இளைய சமுதாயத்தினரை சென்றடைய வேண்டும்.
அதற்கு என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். இந்த கட்டுரையை அதிக அளவில் படிக்கப்படும் இதழ்களில் வெளிவரச்செய்ய என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள். உங்களின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்.
– அன்புடன் gk2009
LikeLike
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது. இன்றைய இளைஞர்கள் குறிப்பாக பெண்கள் மிகவும் எச்சரிகையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை தெளிவாக விளக்கியிருகிருகிறீர்கள். மிகவும் நன்றி.
LikeLike
//பின்னர் ஏதோ புகைப்படத்தை print போடுவதற்காக memory cardஐ studioவில் கொடுத்தபோது அந்த studioவில் வேலைசெய்பவர் ஏதோ softwareஐ வைத்து அழித்த தாக நினைத்த video clippingஐ மீட்டெடுத்து வலையில் பதிவேற்றினாராம்..//
இவ்வகையான மென்பொருட்கள் இன்றைய சமூத்தில் நிறைந்து காணப்படுகின்றது. உதரணமாக TUNE UP என்ற மென்பொருளை குறிப்பிடலாம். இவ்வகையான பொருட்கள் மூலம் DELETE செய்யப்பட தகவலை பெரமுடியுமே தவிர FORMAT செய்யப்பட MEMORY CARD இல் இருந்து எத்தகவலையும் பெறமுடியாது.ஆகவே உங்கள் MEMORY CARDயை FORMAT செய்து பவனை செய்யுங்கள்.
LikeLike
//உங்கள் மொபைலில் புளூடூத் ஆன் செய்யப்பட்டிருந்தால் உங்கள் மொபைலில் உள்ள படங்களையோ, செய்திகளையோ உங்களுக்குத் தெரியாமலேயே திருடிச் செல்ல நிறைய மென்பொருட்கள் உள்ளன. எனவே தேவையற்ற நேரங்களில் புளூடூத் ஐ ஆஃப் செய்து விடுங்கள்.
//
அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய விஷயம்……பகிர்ந்தமைக்கு நன்றி
LikeLike
/அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய விஷயம்……பகிர்ந்தமைக்கு நன்றி//
மிக்க நன்றி இரவுப் பறவை 🙂
LikeLike
//இவ்வகையான மென்பொருட்கள் இன்றைய சமூத்தில் நிறைந்து காணப்படுகின்றது. உதரணமாக TUNE UP என்ற மென்பொருளை குறிப்பிடலாம். இவ்வகையான பொருட்கள் மூலம் DELETE செய்யப்பட தகவலை பெரமுடியுமே தவிர FORMAT செய்யப்பட MEMORY CARD இல் இருந்து எத்தகவலையும் பெறமுடியாது.ஆகவே உங்கள் MEMORY CARDயை FORMAT செய்து பவனை செய்யுங்கள்.//
அருமையான கருத்துக்கு நன்றி நண்பரே..
LikeLike
//நீங்கள் கூறும் விஷயங்கள் அதிக அளவு மக்களை, குறிப்பாக இளைய சமுதாயத்தினரை சென்றடைய வேண்டும்.
அதற்கு என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். இந்த கட்டுரையை அதிக அளவில் படிக்கப்படும் இதழ்களில் வெளிவரச்செய்ய என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள். உங்களின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்//
நன்றி மூர்த்தி 🙂
LikeLike
//அழகான அவசியமான பதிவு.//
நன்றி விக்னேஷ்வரி… 🙂
LikeLike
//கடைப்பிடிக்க வேண்டிய விடயங்க உங்க பதிவில் இருக்கு
வரும் முன் காப்பதும், காற்றுல்ல போதே தூற்றிக்கொள்வதும் அவரவர் ஜாக்கிரதையிலேயே இருக்கு
//
உண்மை 🙂
LikeLike
//அழகான அவசியமான பதிவு.//
நன்றி விக்னேஷ்வரி 🙂
LikeLike
//Dear Friend,
In saudi arabia there is no restriction to use Camera Mobile phone & even they arer selling here,So please change the below information in your blog
//
நன்றி 🙂
LikeLike
/நான் கேள்விப்பட்ட தகவல். ஒரு தம்பதியினரது அந்தரங்க தருனம் வலையில் அந்த தம்பதியினருக்கு தெரியாமலே பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதாம். விசாரித்ததில் அவர்களின் வக்கிர புத்தியால் அவர்களே படம்பிடித்து பார்த்துவிட்டு அழித்தும்விட்டனர். பின்னர் ஏதோ புகைப்படத்தை print போடுவதற்காக memory cardஐ studioவில் கொடுத்தபோது அந்த studioவில் வேலைசெய்பவர் ஏதோ softwareஐ வைத்து அழித்த தாக நினைத்த video clippingஐ மீட்டெடுத்து வலையில் பதிவேற்றினாராம். எப்படியெல்லாம் இருக்கான்ங்க…
உபயோகமான பதிவு சேவியர்
//
நன்றி நித்தில் 🙂
LikeLike
//அட!திருட்டுப்பயலே !
அப்படி சொல்லத் தோணரது!
//
😀
LikeLike
//EVERY BODY SHOULD READ THIS //
வருகைக்கு நன்றி ரவி 🙂
LikeLike
/மிக நல்ல, காலத்திற்கு தேவையான பதிவு. தனிமனித ஒழுக்கம்தான் மிக சிறந்த தீர்வு.//
மிக்க நன்றி விஜய்.
LikeLike
Unnoda experiencea ithu…?
LikeLike
good post.
LikeLike
பல பெண்களின் வாழ்க்கையில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை மிகத் தெளிவாக உணர்த்தியதற்கு நன்றி. இது போன்ற குற்றங்களிலிருந்து தப்பிக்க வழிகூறும் அறிவுரைகள் சூப்பர்.
LikeLike
/சரியாக சொன்னீங்க நண்பரே. இது போன்று சில முஸ்லீம் நாடுகளில் நடக்கிறது. ஆனால் அதை வெளிகொண்டு வந்தாலும் சில பேர் ஏற்றுக்கொள்வதில்லை.காரணம் அவர்கள் சார்ந்து இருக்கும் மதம்தான். மதங்களை தூக்கி எரிந்து விட்டு நல்ல மனிதர்களாய் வாழவேண்டும் என்பதே என் ஆசை. உங்கள் முயற்ச்சிக்கு என் பாராட்டுக்கள்../
நன்றி கவிதா !
LikeLike
// Unnoda experiencea ithu…?//
உங்களுக்கு இந்த பெயர் ரொம்ப பொருத்தம் ! 😉
LikeLike
Pingback: வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் ! « SEASONSNIDUR
good words to tell our’s.
and good advices…..
LikeLike