கன்னத்தைத் தொட்டும் படம் வரையலாம்…. !

ஒரு வண்ணத்துப் பூச்சி உங்கள் கையில் இருக்கிறது, அதை படமாக வரைய நினைக்கிறீர்கள். கோடுகளால் அவுட்லைன் வரைந்து முடித்த பிறகு தான், ஆஹா… இந்த நிறத்துக்கு எங்கே போவது என குழம்பிப் போய் முடியைப் பிய்த்துக் கொள்வீர்கள் !

இலையுதிர்காலத்தில் அமெரிக்காவின் ஒரு காட்டுப் பகுதியில் நடக்கிறீர்கள், வண்ண வண்ண இலைகளைப் பார்த்து பிரமிக்கிறீர்கள். அதை ஓவியமாய் தீட்ட அமர்ந்தால் அங்கும் நிறப் பற்றாக்குறை உங்களை ஆட்டிப் படைக்கும்.

இப்படிப்பட்ட தவிப்புகள் இனிமேல் இருக்காது என தோன்றுகிறது. எந்த நிறம் வண்ணத்துப் பூச்சியிடம் இருக்கிறதோ, அதை அப்படியே தொட்டு உங்கள் காகிதத்தில் வரையக் கூடிய தொழில் நுட்பம் வந்திருக்கிறது.

கொரியாவிலுள்ள ஜின்சன் பார்க் என்பவர் கண்டுபிடித்திருக்கும் இந்த புதிய தொழில் நுட்ப பேனா எந்தப் பொருளிலும் உள்ள நிறத்தை ஸ்கேன் செய்து அதற்குரிய RGB அளவீடுகளை அறிந்து பேனாவில் மையைத் தானே தயாரித்துக் கொள்கிறதாம்.

காதலர்களுக்கு இனிமேல் கவலையில்லை, காதலியின் கன்னத்தைத் தொட்டே ஓவியம் தீட்டலாம்… காதல் ஓவியம் 🙂

வியக்க வைக்கும் இந்த கண்டுபிடிப்பு இதோ…

P1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதன் தொழில் நுட்பம் இதோ…

P4

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பச்சை நிறமே பச்சை நிறமே….

அழைத்ததும் வந்தாய் எந்தனிடமே…

P2

 

P3

Thanks :  http://winarco.com/color-picker-pen-by-jinsun-park/

 

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களிக்கலாமே…

13 comments on “கன்னத்தைத் தொட்டும் படம் வரையலாம்…. !

 1. அற்புதம்! அற்புதம்!!…

  அடடடா….
  எங்கேயோ சென்று கொண்டிருக்கிறோம்!!!…..
  அதுசரி… இப்போ நாம எங்கே நிற்கிறோம்??? 😉

  உங்கள் நல்ல நல்ல, ஆக்கபூர்வமான, தொழில்நுட்ப பதிவுகளுக்கு நன்றி சேவியர்!

  Like

 2. //காதலர்களுக்கு இனிமேல் கவலையில்லை, காதலியின் கன்னத்தைத் தொட்டே ஓவியம் தீட்டலாம்… காதல் ஓவியம்//

  அட நீங்க வேற, நானும் படம் வரைஞ்சு அந்த படத்த அவ பார்த்துட்டு இனிமேப்பட்டு படமே வரையமாட்டேன்னு சத்தியமெல்லாம் செய்ய வேண்டியதாப்போச்சு, அவள சமாதானம் செய்வதற்கு

  Like

 3. அய்யய்யோ, அப்புறம் கவிஞர்கள் தொல்லை தாங்க முடியாதே!!!

  உன் கன்னத்தைத் தொட்டு
  வன்னமெடுத்தேன்
  உயிர் வாழ்ந்தால் உன்னோடு –
  சபதமெடுத்தேன்
  சாம்பார் குண்டான்ல
  சக்கரையக் கவுத்தேன்
  நீ கெடைக்காமப் போனதால
  சட்டையைக் கிழித்தேன்

  ன்னு

  ஆளாளுக்கு எழுதக் கெளம்பிருவாங்களே…

  Like

 4. //சாம்பார் குண்டான்ல
  சக்கரையக் கவுத்தேன்//

  சைக்கிள் கேப்ல கொ.வெ கவிதையா

  Like

 5. அற்புதம், மிகவும் பயன் உள்ள ஒரு கண்டுபிடிப்பு.
  இனி வரும் காலங்களில் ஓவியம் என்ற துறை இதனால் மிகவும் வளர்ச்சி அடையும், ஆனல் ஓவியம் என்ற கலை இல்லாமல் போய்விடும்.

  Like

 6. //இனி வரும் காலங்களில் ஓவியம் என்ற துறை இதனால் மிகவும் வளர்ச்சி அடையும், ஆனல் ஓவியம் என்ற கலை இல்லாமல் போய்விடும்.//

  அப்படியெல்லாம் இல்லை. கம்ப்யூட்டர் வந்தபின் இலக்கியம் பாதிப்படைகிறதா என்ன ? இவையெல்லாம் கருவிகள் மட்டுமே ! விஷயம் மூளையில் தானே இருக்கிறது ! 😀

  Like

 7. /சைக்கிள் கேப்ல கொ.வெ கவிதையா

  //
  கொ.வெ கவிதை – சட்டென படித்தப்போ கோவேறுக் கழுதைன்னு வாசிச்சுட்டன் 😉

  Like

 8. //ஆளாளுக்கு எழுதக் கெளம்பிருவாங்களே…//

  எழுதட்டுமே தம்பி.. நாமளே எழுதறோமே 🙂

  Like

 9. //அட நீங்க வேற, நானும் படம் வரைஞ்சு அந்த படத்த அவ பார்த்துட்டு இனிமேப்பட்டு படமே வரையமாட்டேன்னு சத்தியமெல்லாம் செய்ய வேண்டியதாப்போச்சு, அவள சமாதானம் செய்வதற்கு//

  கலக்கறீங்க நித்தில் 🙂

  Like

 10. //அற்புதம்! அற்புதம்!!…

  அடடடா….
  எங்கேயோ சென்று கொண்டிருக்கிறோம்!!!…..
  அதுசரி… இப்போ நாம எங்கே நிற்கிறோம்???

  உங்கள் நல்ல நல்ல, ஆக்கபூர்வமான, தொழில்நுட்ப பதிவுகளுக்கு நன்றி சேவியர்!
  //

  மிக்க நன்றி ஷாமா 🙂

  Like

 11. Pingback: கன்னத்தைத் தொட்டும் படம் வரையலாம்…. ! | bgdurga

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s