ஜூ.வி : ஈரமில்லாத ஈரான் சட்டம்.

Iran prison 2“தலைவரே.. அவளுக்கு நாளை மரண தண்டனை “

“அதற்கென்ன …நிறைவேற்று”

“இல்லை. வந்து…. அவள் ஒரு கன்னிப் பெண்”

“ஓ… அப்படியா… அப்போ வழக்கம் போல், இன்று இரவு அவளைக் கெடுத்து விடு. அவள் சாகும்போது கன்னியாய் இருக்கக் கூடாது. அது முக்கியம் “

இது உரையாடல் உண்மை என்றால் நம்ப முடிகிறதா ? நம்பித்தான் ஆகவேண்டும். இதற்குச் சாட்சியாய் இருப்பவை ஈரானின் சிறைகளின் சுவர்களும், அங்கே எதிரொலிக்கும் கன்னிப் பெண்களின் அலறல்களும்.

ஈரான் நாட்டு பாசிஜ் ராணுவத்தினரின் வேலைகளை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார் ஒரு பாசிஜ் வீரர். ருகோல்லா கோமினி கண்டுபிடித்த இயக்கம் தான் இந்த பாசிஜ் மிலிட்டரி. அதாவது நாட்டிலுள்ள பதினைந்து வயதுக்கும் நாற்பந்தைந்து வயதுக்கும் இடைப்பட்டவர்களைக் கொண்டு கட்டி எழுப்பப்படும் ஒரு மக்கள் படை. 1979ம் ஆண்டு இது துவங்கப்பட்டது. “இரண்டு கோடி இளைஞர்களைக் கொண்ட ஒரு நாடு, இரண்டு கோடி போர் வீரர்களைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்” எனும் அறைகூவலுடன் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த இயக்கம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த இயக்கத்தில் சேர்ந்தனர். அல்லது வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டனர். இவர்களுடைய முக்கியமான பணி நாட்டில் மத நம்பிக்கைகளைப் பரப்புவது. மத மீறல்களைத் தடுப்பது, வழிபாட்டு இடங்களைப் பாதுகாப்பது, போர்களில் ஈடுபடுவது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் தலைவன் என்ன கட்டளையிடுகிறானோ அதை மறுப்புச் சொல்லாமல் நிறைவேற்றுவது.

கடந்த ஜூன் மாதம் ஈரானின் பிரதமாரகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மஹ்மத் அஹ்மதின்ஜா. இவருடைய தேர்தலே ஒரு பித்தலாட்டம் என அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பெரும்பாலான நாடுகள் பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட்டன. இந்தியா வழக்கம் போல வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டு நமக்கெதுக்கு வீண்வம்பு என சைலண்டாகி விட்டது. ஈரானிலோ இவருக்கு எதிராய் பலத்த பலத்த போராட்டங்கள்.

இந்தப் போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 13 வயதான ஒரு சிறுவனும், 15 வயதான ஒரு சிறுமியும் அடக்கம். பார்க்கவே ரொம்ப சின்னப் பசங்களாக இருக்கிறார்களே என அவர்களை விடுவித்துவிட்டார் ஒரு பாசிஜ் வீரர். அவ்வளவுதான் அவரைத் தூக்கி ஜெயிலில் போட்டுவிட்டார்கள். காரணம் ஈரானின் பார்வையில் 9 வயதான சிறுமிகளும், 13 வயதான சிறுவர்களும் பெரியவர்கள்!

இவர் சமீபத்தில் “ஜெருசலேம் போஸ்ட்” பத்திரிகைக்கு அளித்த பேட்டி தான் உலகையே உலுக்கி எடுக்கிறது.

எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என் பெயரை சொல்ல மாட்டேன் என அச்சத்துடன் ஆரம்பிக்கிறார் அவர். நான் பாசிஜ் வீரன். பதினாறு வயதில் நான் பாசிஜ் குழுவில் சேர்ந்தேன். சேர்ந்தேன் என்று சொல்வது தவறு. எனக்கு சாப்பாடு போட வழியில்லாத அம்மா, எனக்கு சாப்பாடாவது கிடைக்கட்டும் என பாசிஜ் குழுவில் சேர்த்து விட்டார். இல்லாவிட்டால் பட்டினியில் செத்துவிடுவேனோ, அல்லது போதைக்கு அடிமையாகி விடுவேனோ எனும் பயம் அம்மாவுக்கு.

பாசிஜ் குழு வில் எக்கச்சக்க சிறுவர்கள் உண்டு. அவர்களுக்கு நிறைய அதிகாரங்கள் உண்டு. சிறு வயதிலேயே ரவுடிகளைப் போல அவர்கள் சுற்றித் திரிவார்கள். கடைகளில் பணம் கொடுக்காமல் பொருட்களை எடுத்துச் செல்வார்கள். இளம் பெண்களைப் பார்த்தால் “தொட்டு”த் தொட்டு சில்மிஷம் செய்வார்கள். இளம் பெண்கள் மறுப்புச் சொல்லாமல் ஒத்துழைக்க வேண்டும். இதெல்லாம் எனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. ஒரு விதத்தில் இதெல்லாமே சிறுவர்கள் மீதான வன்முறைதான். என்றவர் தொடர்கிறார்.

எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. தலைவன் அலி ஹமினீ இடும் செயலை நாங்கள் செய்கிறோம். கொல்வதோ, அழிப்பதோ, தடுப்பதோ எதுவானாலும் சொல்வதைச் செய்வேன். பொதுவாக அரசுக்கு எதிரான கலவரங்களைத் தடுப்பதில் எங்களுடைய பணி கடுமையாகவே இருக்கும். ஆனால்…. என நிறுத்தியவர் பிறகு சொன்னவை தான் உலுக்கி எடுக்கும் சம்பவங்கள்.

கொஞ்ச நாட்கள் ஜெயிலில் பணியாற்றினேன். ஜெயிலில் ஏராளம் சிறுமிகளும், இளம் பெண்களும் இருப்பார்கள். ஒன்பது வயதாகிவிட்டாலே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்பது ஈரானியச் சட்டம்.

கன்னிப் பெண்களைக் கொல்ல சட்டம் இடம் தராது. அதனால் அதற்கு முந்தின நாள் இரவில் அந்தப் பெண்ணை ஒரு வீரன் முறைப்படி “கல்யாணம்” செய்து கொண்டு உறவு கொள்ள வேண்டும். அப்போது தான் மறுநாள் “சட்டப்படி” அவர்கள் கொல்லப்பட முடியும். கன்னித்தன்மையுடன் செத்துப் போனால் அவர்கள் சொர்க்கத்துக்குப் போய் விடுவார்கள் என்பது மதநம்பிக்கை.

இந்த காலகட்டம் தான் எனக்கு மிகவும் கடினமான காலம். 18 வயதிலேயே பெண்களைக் “கல்யாணம் செய்து கெடுக்கும்” பணியைக் கொடுத்தார்கள். எனது பணிக்காக எனது மேலதிகாரிகளெல்லாம் என்னைப் பாராட்டுவார்கள். என் மனது மிகவும் வேதனைப்படும். சின்னச் சின்னப் பெண்களெல்லாம் என் காலைப் பிடித்துக் கெஞ்சுவார்கள். அவர்களுக்கு மரணம் பயமில்லை, இந்த பாலியல் உறவு தான் பயம். எங்கே நரகத்துக்குப் போய்விடுவோமோ என பயந்து அலறுவார்கள்.

சில பெண்கள் நகங்களினால் தங்கள் முகம், கழுத்து உடல் என எல்லா இடங்களையும் கீறிக் கொள்வார்கள். கதறுவார்கள், தடுப்பார்கள். பலவேளைகளில் சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து தான் என் கடமையைச் செய்ய வேண்டியிருக்கும். என அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் சொல்கிறார் அவர்.

அந்த திருமணங்களெல்லாம் சட்ட பூர்வமானவை. எனவே சட்ட ரீதியாகவோ, மத ரீதியாகவோ நான் எதுவும் தவறு செய்யவில்லை. ஆனால் நான் செய்வது கொடுமை என்பது என் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும். எனக்கும் மனைவியும், இரண்டு குழந்தைகளும் உண்டு என கவலையுடன் முடிக்கிறார் அவர்.

அதிர வைக்கும் இத்தகைய பகிரங்க மனித உரிமை மீறல்களுக்கு எதிராய் ஏதேனும் தீர்வுகள் வருமா என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி !

0

 

பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்….

23 comments on “ஜூ.வி : ஈரமில்லாத ஈரான் சட்டம்.

 1. முக்காடு போட்டு முகத்தை மறைத்து கொடுக்கும் பேட்டியெல்லாம் எடுபடாது ஐயா.மீடியாக்களும்,மேற்கத்திய குள்ளநரிகளும் இது போன்ற அவதூறுகளை காலம் காலமாய் பரப்பி வருகின்றன.அதையே இங்கும் செய்து தங்கள் அரிப்பை தீர்த்து கொள்கிறார்கள்.இஸ்லாமிய சட்டங்களை கடுமையாக பின்பற்றும் நாடு ஈரான்.இது போன்ற அவதூறுகளால் அந்த சட்டங்களே காடுமிராண்டிதனமானது என்று சொல்வது தான் அவர்களின் நோக்கம்.இதில் எந்த அளவு உண்மை இருக்கும் என்பதை ,,,,,,,

  Like

 2. //கன்னித்தன்மையுடன் செத்துப் போனால் அவர்கள் சொர்க்கத்துக்குப் போய் விடுவார்கள் என்பது மதநம்பிக்கை//

  மதங்களின் பெயரால் மனித இனம் செய்துவரும் கொடுமைகள் ஏராளம். காடுகளிலும் மலைகளிலும் மிருகங்களைபோல திரிந்துகொண்டிருந்த மனிதன கட்டுப்படுத்துவதற்காகவும் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும் ஒரு சிலரால் ஆரம்பிக்கப்பட்ட மதங்களால் மனித இனம் தற்சமயம் அழிவை நோக்கி போகிறதென்றால் அந்த கருத்து மிகையல்ல.

  //கடந்த ஜூன் மாதம் ஈரானின் பிரதமாரகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மஹ்மத் அஹ்மதின்ஜா//

  பிரதமரல்ல, அதிபர்

  Like

 3. சரியாக சொன்னீங்க நண்பரே. இது போன்று சில முஸ்லீம் நாடுகளில் நடக்கிறது. ஆனால் அதை வெளிகொண்டு வந்தாலும் சில பேர் ஏற்றுக்கொள்வதில்லை.காரணம் அவர்கள் சார்ந்து இருக்கும் மதம்தான். மதங்களை தூக்கி எரிந்து விட்டு நல்ல மனிதர்களாய் வாழவேண்டும் என்பதே என் ஆசை. உங்கள் முயற்ச்சிக்கு என் பாராட்டுக்கள்..

  Like

 4. பெண்களின் மீதான வன்முறையினை எந்த மதமும் கண்டிப்பாக அனுமதிக்காது முரடர்கள் சட்டத்தினை கையில் எடுத்துக்கொண்டு செய்யும் கொடுன்செயலுக்கு கடவுள் நிச்சயம் தகுந்த தண்டனை அளிப்பார்.

  Like

 5. Oh my God, வாசிக்கும்போது இருதயம் வேகமாக அடித்துக்கொள்கிறது!

  Like

 6. Mr.basheer
  ungal maruppai kadumaiyana varthigalal sonnathupol ingu(iran) nadakkum arasiyal kolygal matrum manitha urimai meeralai ungalal solla iyalathu..intha katturaiyil sonnavai anaithum nadakka,anaithu vitha saathiyakoorugal iran-il undu enpadhi unaravum..last two years iam working in iran only.i saw lot of pictures and video clips related to this issue. During rally against govt..police done a big attact to public..if u want more details i can send.. Iran totally isolated from other countries because of this.
  Matham vearu! manitham vearu!please understand..

  Like

 7. /பெண்களின் மீதான வன்முறையினை எந்த மதமும் கண்டிப்பாக அனுமதிக்காது முரடர்கள் சட்டத்தினை கையில் எடுத்துக்கொண்டு செய்யும் கொடுன்செயலுக்கு கடவுள் நிச்சயம் தகுந்த தண்டனை அளிப்பார்.//

  அருமை !

  Like

 8. /சரியாக சொன்னீங்க நண்பரே. இது போன்று சில முஸ்லீம் நாடுகளில் நடக்கிறது. ஆனால் அதை வெளிகொண்டு வந்தாலும் சில பேர் ஏற்றுக்கொள்வதில்லை.காரணம் அவர்கள் சார்ந்து இருக்கும் மதம்தான். மதங்களை தூக்கி எரிந்து விட்டு நல்ல மனிதர்களாய் வாழவேண்டும் என்பதே என் ஆசை. உங்கள் முயற்ச்சிக்கு என் பாராட்டுக்கள்..//

  செய்தி அதிர்ச்சியளித்ததால் பதிவு செய்ய விரும்பினேன் அவ்வளவே ! நல்லதை எடுப்பவர் பாக்கியவான்கள் ! 🙂

  Like

 9. சகோதரர்கலுக்கு அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உன்டாகட்டும்.

  மனிதனாக படைக்கப்பட்ட ஒவ்வெருவருக்கும் இன்றைக்கு இவ்வுலகில் தேவை படுவது இந்த ((சாந்தியும் சமாதானமும்தான்)) அதனால்தான் ஒவ்வெருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் வேலையில் அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உன்டாகட்டும் எனறு தொடங்க சொல்லும் ஒரே மார்க்கம் அது இஸ்லாம் மார்க்கம் தான்.
  சிறுநீர் கழித்தாலும் அதை உட்காந்துதான் கழிக்க வேன்டும் கழித்து விட்டு அதை தண்ணீரை கொன்டு சுத்தம் செய்துகொள்ளவேன்டும். தண்ணீர் அறுந்தினாலும் அதை உட்காந்துக்கொன்டுதான் அருந்தவேன்டும், ஆனாக பிறந்தால், ஆனுறுப்பை சுன்னத் (கத்னா) செய்துகொள்ளவேன்டும். பெண்ணாக பிறந்தால் அவர்கள் இப்படிதான் உடை அனிய வேன்டும் இப்படிதான் இருக்க வேன்டும், இப்படிதான் நடந்துக்கொள்ளவேன்டும் என்று கட்டளையிட்டு சொல்ல கூடிய ஒரே மார்க்கம் அது இஸ்லாம் மார்க்கம்தான். இதை படிக்கும் மாற்று மதத்தவர் யாரும் இருப்பினும் அவர் தயவுசெய்து இதை சிறிது சிந்தித்து பார்க்க வேன்டும். சிறுநீர் ஏன் உட்காந்து கழிக்கவேன்டும். தண்ணீர் ஏன் உட்காத்து அருந்தவேன்டும், சிருநீர் கழித்துவிட்டு ஏன் அதை இந்த இஸ்லாம் தண்ணீரை கொன்டு சுத்தம் செய்துகொள்ள சொல்லுது, ஏன் ஆனாக பிறத்தால் சுன்னத் செய்துகொள்ள சொல்கிறது என்று இப்படி எல்லாவற்றையும் நமது மூலையை கொன்டு சிந்திதுத்துபார்த்தாள், அதில் அறிவுடையோருக்கு நல்ல படிப்பினை இருக்கின்றது.
  எந்த மதத்திலும் சொல்லாத, எந்த பெரியாராலும் சொல்லாத இப்படி பட்ட சின்ன சின்ன விஷயத்திலெல்லாம் இஸ்லாம் இப்பாடி மூக்கை நுழைக்குதே அப்படி என்னாதான்டா இதில் உள்ளது என்று சிந்தித்து பார்க்க எந்த ஒரு அறிவுடையவனும் தயங்க மாட்டான்..
  இப்போழுது சகோதரர் கவிமதி என்று அழைக்கப்படும் ஹசன் பசீர் சொன்னதை பார்ப்போம்.

  ஏனெனில் இஸ்லாம் எதையும் ஆய்வுக்குட்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளாதே என தெளிவாக சொல்லுகிறது.எனவே வினா எழுப்பும் தஸ்லீமாக்களை தாக்குவதைவிட்டு நாம் தான் சுய விமர்சனம் செய்துக்கொள்ளவேண்டும்.
  இந்து மதம் என்கிறார்கள். அதில் பல கடவுல் இருப்பதாக கூருகிறார்கள். இதில் செவிட்டு சாமி என்று ஒரு கடவுல் இருப்பதாகவும் கூறுகிரார்கள். அதை கும்பிடும்போது, அதுக்கு கேட்க்கும் வகையில் இவர்கலுடைய கைய்ய தட்டிவிட்டுதான் கும்பிடுவார்களாம். ஏனேண்றால் கடவுலுக்கு காது கேட்காதாம். உன்மயிலேயே சிரிப்புதாங்க. இதை உங்கலுடைய இந்த https://sirippu.wordpress.com போட்டால் படிப்பவர்கல் சிரிப்பார்கள். இப்படி இந்து மதம் என்று சொல்லிகொன்டு அதில் ஒரு பாடு குறைகலை வைத்துகொன்டு இவனெல்லாம் மற்றவர்களின் மார்க்கத்தை குறைக்கூறிகொன்டு இருக்கின்றார்கல் என்பதை நினைக்கும் போழுதும் சிரிப்புதான் வருகிறது.

  Like

 10. //ஏனெனில் இஸ்லாம் எதையும் ஆய்வுக்குட்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளாதே என தெளிவாக சொல்லுகிறது.எனவே வினா எழுப்பும் தஸ்லீமாக்களை தாக்குவதைவிட்டு நாம் தான் சுய விமர்சனம் செய்துக்கொள்ளவேண்டும்.//

  மிகவும் சரியாகச் சொன்னீர்கள் இப்றாஹீம்!

  பெரும்பாலானா இஸ்லாமிய நாடுகளில் கடுமையான சட்டங்களை இயற்றி, அதனை செயல்படுத்துவது குற்றங்களை குறைப்பதற்காகத்தான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்!

  அத்துடன், இங்கே கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் நாம் எல்லோருமே சுயமதிப்பீடு செய்துகொண்டு, பிறகு பிறருடைய மதங்களைப்பற்றி அலசி ஆராய்வோமே!

  Like

 11. mr.niththil, seviyar ponroruku islaththi patti enthe arivum illai enpethu therikirathu. (kanni pen maranam adainthal suvarkam poval arnu islaththil illai. moththathil mooda nampikkaikal islathil illai) ithanal USin kai pommai eluththalrana karuththai muttaha nampi viddarkal pavam. ,

  Like

 12. சகோதரர் ஈரானையும், இஸ்லாத்தையும்n தவராக விளங்கியிருக்கின்றார் அல்லது தவராக காட்ட முனைகின்றார். ஈரானின் “பஸீஜ்” உடய பணி சிறைச்சாலைகளை பாதுகாப்பதல்ல அத்தோடு இஸ்லாமியப் புரட்சியை பிடிக்காதவர் போல் தெரிகிறது. அமெரிக்க, இங்கிலாந்து பற்றி பேசுவதில் இது தெரிகிறது. மேலும் “பஸீஜ்” இல் 18வயது நிரம்பினால் மட்டுமே இணைந்து கொள்ள முடியும். இன்னும் சொல்லப் போனால் பெய்கள் விடயத்தில் ஆண்களின் தளையீடு அங்கு இடம் பெறாது. “பஸீஜ்” படயயில் பெண்களும்(அணுமதித்த ஆடையுடன்) இருப்பது சகோதரருக்கு தெரியாது போலும்… ஈரானுக்குச் சென்று பார்த்தால் அங்கு அங்குள்ள நிலை புரியும். விபச்சாரத்திற்கு ஒருபாதும் அங்கு இடமில்லை என்புது 100வீதம் உண்மை.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s