வயசோ 17, கொலையோ 30 !!!

 

girl

தமாஷ் என்று தான் முதலில் நினைத்தார்கள். ஒரு டீன் ஏஜ் பெண் சிரித்துக் கொண்டே “நான் 30 பேரைக் கொன்றிருக்கிறேன்” என்றால் யார் தான் நம்புவார்கள் ? ஆனால் கொன்ற நபர்களின் பட்டியலையும், கொலை செய்த நுணுக்கங்களையும் அவள் விவரிக்க ஆரம்பித்தபோது தான் பிரேசில் காவல் துறையே ஒட்டுமொத்தமாக அதிர்ந்தது.

தெருவில் சும்மா அடி தடியில் இறங்கியதால் கைதானவள் தான் இந்தப் பெண். சின்னப் பொண்ணு விசாரித்து அனுப்பி விடலாம் என்று தான் போலீஸ்காரர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். “என்னம்மா தெருவில எல்லாம் சண்டை போடறே ? நீ யாரு ?” எனும் பார்மாலிட்டி கேள்வியைத்தான் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவள், நான் ஒரு சீரியல் கில்லர். முப்பது ஆண்களைத் துடிக்கத் துடிக்க குத்திக் கொன்றிருக்கிறேன் என விவகாரமாய்ப் பேச ஆரம்பித்திருக்கிறாள்.

எனக்கு துப்பாக்கியைப் பிடிக்க தைரியமே இல்லீங்க. ஆனா ஒரு கத்தி கிடைச்சா சதக் சதக்குன்னு குத்தி ஒருத்தனை கொல்றதெல்லாம் எனக்கு கை வந்த கலை. என தேர்ந்த கொலையாளியின் லாவகத்துடனும், ஆரவாரத்துடனும் பேசியிருக்கிறாள் பிரேசிலின் சா போல் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண். கேட்டுக் கொண்டிருந்த போலீஸ்காரர்களுக்குத் தான் முதுகெலும்பில் குளிர் நதி ஓடியிருக்கிறது.

பஸ்ட் பஸ்டா ஒருத்தனை காலி பண்ணும்போ எனக்கு பதினைஞ்சு வயசு. அதுக்கு அப்புறம் ரொம்ப சுறுசுறுப்பாயிட்டேன். எப்படியும் இரண்டு மூணு வருஷம் தான் கொலை செய்ய முடியும். அப்புறம் பதினெட்டு வயசாயிடும் இல்லையா ? மேஜரானப்புறம் கொலை செஞ்சா தண்டனை பெருசா இருக்கும். அதனாலதான் இரண்டு வருஷத்துல சடசடன்னு 30 கொலை செஞ்சுட்டேன். இப்போ எல்லா உண்மையையும் ஒத்துக்கறேன். எனக்கு வயசு இப்போ பதினேழு தானே ? என சட்டத்தை நோக்கி கண்ணடிக்கிறாள் இவள்.

குற்றவாளி மைனராய் இருந்தால் அவர்களுடைய பெயரை வெளியிட பிரேசில் சட்டம் அனுமதிக்காது. எனவே இந்தப் பெண்ணின் பெயரையும் வெளியிட பிரேசில் காவல்துறையினர் மறுத்துவிட்டனர். இருந்தாலும் மிகவும் தெளிவாகவும், தீர்க்கமாகவும், திட்டமிட்டும் கொலைகளைச் செய்திருப்பதால் இவளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கவேண்டும் என்றே பிரேசில் காவலர்கள் விரும்புகின்றனர்.

“பார்க்க ரொம்ப அப்பாவியா இருக்கிறாள். இவள் சொல்வது உண்மை என்பதை எங்களால் முதலில் நம்பவே முடியவில்லை. தீர விசாரிச்சப்புறம் தான் நம்ப முடிஞ்சுது. கொலையை எப்படிச் செய்தேன் என்பதை அவள் நடித்துக் காட்டியபோது பதறிவிட்டேன் ” என சிலிர்க்கிறார் ஒரு காவல் அதிகாரி.

முதல் கொலை செய்த கத்தி அவளுக்கு ராசியான கத்தியாகிவிட்டது போல ! அதே கத்தியைக் கொண்டு தான் அத்தனை கொலைகளையும் அரங்கேற்றியிருக்கிறாள். ஆனால் எதற்காகக் கொலை செய்தாள் என்ற காரணம் மட்டும் தெளிவாக இல்லை.

ஆண்களை மட்டுமே கட்டம் கட்டிக் கொலை செய்திருப்பதைப் பார்க்கும் போது அவளுக்கு ஆண்களிடம் வெறுப்பு இருக்கலாமோ எனும் சந்தேகமும் எழுகிறது. ஆனால் அவள் எதையும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. பணத்துக்காகவும், பழி வாங்கவும், நீதியை நிலைநாட்டவும் (?!) கொலைகள் செய்தேன் என்பதே அவளுடைய வாக்குமூலம்.

ஒருமுறை பார் ஒன்றில் தண்ணி அடித்துக் கொண்டிருந்தபோது ஒருவனுடன் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. கோபத்தில் கையிலிருந்த பிராண்டி கிளாஸை அவள் மீது வீசியிருக்கிறான். அவ்வளவு தான். அவனுக்கு ஸ்பாட் வைத்துவிட்டாள் இந்தப் பெண். இப்படி ஒவ்வோர் கொலைக்குப் பின்னும் ஒவ்வோர் காரணங்களைச் சொல்கிறாள். இவள் கொலை செய்ததை நம்பும் போலீஸ், அவள் சொல்லும் கதைகளையெல்லாம் இன்னும் நம்பவில்லை. ஏதேனும் ஒரு கொலைகாரக் கும்பலின் வாடகைக் கொலையாளியாக இவள் இருந்திருக்கலாம் எனும் சந்தேகமே போலீஸுக்கு !

பிரேசிலுக்கு என்ன சாபமோ தெரியவில்லை. தொடர் கொலையாளிகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த ஆண்டு பதினாறு வயதான டீன் ஏஜ் பையன் ஒருத்தன் பன்னிரண்டு பேரைக் கொன்றதாக ஒப்புக் கொண்டான். கடைக்காரர் ஒருவர் கன்னத்தின் அடித்ததற்காக அவனைச் சுட்டுக் கொன்றதாக உற்சாகத்துடன் பேசி அதிர்ச்சியளித்தான்.

கடந்த வாரம் ஐம்பது வயதான வாலஸ் சோஸா எனும் டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மாட்டினார். “அவரே குண்டு வைப்பாராம், அப்புறம் அவரே கரெக்டா போய் எடுப்பாராம்” ன்னு முதல்வன் படத்தில் வரும் வசனம் இவருக்கு செம பொருத்தம். கிரைம் தொடர் ஒன்றை நடத்தும் அவர், தன்னுடைய நிகழ்ச்சி பரபரப்பாய் பேசப்படவேண்டும் என்பதற்காக அவரே கொலைகளை நிறைவேற்றியிருக்கிறார். திட்டமிட்டு கொலையை அரங்கேற்றிவிட்டு, தனது டீமை காமராவுடன் முதல் ஆளா அங்கே அனுப்பி பரபரப்புகளைப் பதிவு செய்து வந்தார் அவர். கடந்த வாரம் வகையாக மாட்டிக்கொண்டார்.

இப்போ மாட்டியிருப்பது இந்த டீன் ஏஜ் பெண் ! மைனர் வயசு என்பதால் சட்டம் கடுமையாய் இருக்காது என்பதே டீன் ஏஜ் கொலையாளிகள் அதிகரிக்கக் காரணம் என்கின்றனர் பிரேசில் மக்கள். சட்டம் கடுமையாக வேண்டும், சின்ன வயசு என்பதற்காக திட்டமிட்ட கொலைகளை விட்டு விடக் கூடாது எனவும் ஆவேசப்படுகின்றனர்.

இந்தப் பெண்ணோ படு கூலாக இருக்கிறார். என்னோட கொலைகளைப் பார்த்து குடும்பத்தினர் அப்செட் ஆக மாட்டாங்கன்னு நினைக்கிறேன் என்கிறாள் சிரித்துக் கொண்டே.

0

மிழிஷில் வாக்களிக்க…

10 comments on “வயசோ 17, கொலையோ 30 !!!

 1. செல்வச் செழிப்பு… அது இருந்தால் வாழ்க்கையில் எல்லாம் சலித்துப் போய் புதுப் புது த்ரில்ல்கள் தேவைப் படுகின்றன. அது போன்ற சந்தர்ப்பங்களில்தான் இந்த மாதிரி குற்றங்கள் நிகழ்கின்றன. நாம் ஏழை நாடாகவே இருந்துவிட்டுப் போவோம்!

  http://kgjawarlal.wordpress.com

  Like

 2. அடுத்து நம்ம நாடுகள்ளையும் இது நடக்கும்..
  இதுக்கெல்லாம் முதல் காரணம் சினிமா மற்றும் சீரியல்..

  Like

 3. வரவர அமெரிக்க சினிமா மாதிரி பதிவுளை போட ஆரம்பிச்சிட்டீங்க.
  அதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது. சந்தோஷமா படிச்சிட்டு போற மாதிரி பதிவு எழுதுங்க அண்ணாச்சி.

  Like

 4. //
  வரவர அமெரிக்க சினிமா மாதிரி பதிவுளை போட ஆரம்பிச்சிட்டீங்க.
  அதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது. சந்தோஷமா படிச்சிட்டு போற மாதிரி பதிவு எழுதுங்க அண்ணாச்சி.

  //

  சரி சகோதரி…. 🙂

  Like

 5. //அடுத்து நம்ம நாடுகள்ளையும் இது நடக்கும்..
  இதுக்கெல்லாம் முதல் காரணம் சினிமா மற்றும் சீரியல்..//

  😦

  Like

 6. //செல்வச் செழிப்பு… அது இருந்தால் வாழ்க்கையில் எல்லாம் சலித்துப் போய் புதுப் புது த்ரில்ல்கள் தேவைப் படுகின்றன. அது போன்ற சந்தர்ப்பங்களில்தான் இந்த மாதிரி குற்றங்கள் நிகழ்கின்றன. நாம் ஏழை நாடாகவே இருந்துவிட்டுப் போவோம்!//

  வித்தியாசமான பார்வை ஜவகர் ! நன்றி !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s