டைரியில் எழுதாதவை : கமல், கந்தசாமி & அறிவுஜீவிகள் !

 Mohan_Kamal 

அறிவு ஜீவிகள் துவைத்துக் காயப்போட்ட உன்னைப் போல் ஒருவன் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கடந்த வாரம் தான் கிடைத்தது. நல்ல வேளை ! படத்தில் ஊடாடும் பார்ப்பனீயத் தன்மைகளையும், தார்மீகக் கோபங்களுக்குள் புதைக்கப்பட்ட வரலாற்று வன்மங்களையும் பிரித்தறியும் வல்லமை எனக்கு இல்லை. எனவே படத்தை ரொம்பவே ரசித்தேன் !! என்ன பண்ண, நானும் ஒரு காமன் (அட ! அந்த காமன் இல்லை) மேன் தானே !

 

சில சினிமாப்பாடல்களைக் கேட்கும் போது வியப்பாக இருக்கிறது. ஒருவரி எழுதி விட்டு ஒரு கட்டிங் போட்டு வந்து அடுத்த வரி எழுதுவார்களோ என யோசிக்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு முரண் படுகிறார்கள் கவிஞர்கள். கவிதைக்கு முரண் அழகுங்கறதை தப்பா புரிஞ்சுகிட்டாங்களான்னே தெரியலை

முன்னாடியெல்லாம் ஒரு படத்தில எழுதும் பாடலுக்கும், இன்னொரு படத்தில் எழுதும் பாடலுக்கும் இடையே தான் முரண்படுவார்கள் கவிஞர்கள். அப்புறம் ஒரு படத்துல இருக்கும் இரண்டு பாடல்களுக்கிடையே முரண்படுவார்கள். சினிமா பாடலில் கூட ஏதாச்சும் கவிதை தேடும் மோசமான புத்தியுள்ள கூட்டத்தில் நானும் ஒருத்தன். “ஆட்டுப் பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு .. “ என்று கிழக்குச் சீமையில் எழுதிவிட்டு “அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் அன்பு வளக்கும் ஆட்டுப்பாலுங்க” என்று அண்ணாமலையில் எழுதிய கவிப்பேரரசு தான் இன்றும் என் பேவரிட் பாடலாசிரியர் 🙂

லேட்டஸ்ட் படங்களையே லேட்டா கேக்கற நிலமையில் இப்போ நான். ஓடிப் போய் கேசட் ரிலீசாகற முதல் நாளே பாட்டு கேக்கற வயசெல்லாம் ஓடிப்போச்சு. வளரும் கவிஞர் விவேகா கந்தசாமில லிரிக்ஸ்ல கலக்கியிருக்காருல்ல என்று என் நண்பன் சொன்னான் சில மாசத்துக்கு முன்னாடி. அப்படியா என்று ஒரு சந்தோஷ உற்சாகத்தில் பாட்டு கேட்டேன்…

ஒரு வரி, “கடவுள் இல்லேன்னு சொன்னார் ராமசாமி, காதல் இல்லேன்னு சொல்றான் இந்த கந்த சாமி” அடடே ! என பார்த்திபன் கவிதை போல வியந்தால் அடுத்த வரியில் ஐயா சொல்கிறார் “ஹிட்லர் பேத்தியே, ஹிட்லர் பேத்தியே… காதலொன்னும் யூதனில்லை கொல்லாதே..” அய்யோ போடா !

 

“கமல் 50  நிகழ்ச்சியில் ரஜினியின் பேச்சைக் கேட்டு அசந்து விட்டேன். ரஜினியைப் பற்றி நான் கொண்டிருந்த பிம்பத்தையெல்லாம் உடைத்தெறிந்தேன். தீவிர கமல் ரசிகரான நான் நேற்று முதல் முறையாக நெகிழ்ந்தேன். ரஜினி உண்மையிலேயே கிரேட் தான்.” என்றார் பத்திரிகைத் துறையில் மிக உயரிய இடத்தில் இருக்கும் நெருங்கிய நண்பர் ஒருவர். அடடா கேட்காமல் போயிட்டோமேன்னு கொஞ்சம் பீல் பண்ணினேன். வேறென்ன பண்ண முடியும் ?

 

ஒரு முறை அமெரிக்காவில் ஓய்வாக ஒரு பிரபல நடிகருடன் அமர்ந்து “வைன்” பேச்சில் லயித்திருந்தேன். ஆள் தான் வில்லன்னு இல்லை, அவரோட நக்கல் எல்லாமே வில்லத்தனமாய் தான் இருந்தது.

“என்னய்யா விஜய்.. இளைய தளபதியாம் ? எந்த போருக்கு போனான்.. ஹா…ஹா..ஹா” என்று ஆரம்பித்து எல்லா இளம் நடிகர்களையும் ஒரு புரட்டு புரட்டி எடுத்தார் ஐயா. கடைசியில் கமலைப் பற்றியே பேச ஆரம்பித்தார்.

என்னய்யா உலக நாயகன் ? உலகத்துல எல்லாருக்கும் அவனை தெரியுமா ? அப்படின்னா உகாண்டாவுக்கும் அவன் தான் நாயகனா என சகட்டு மேனிக்கு பேசிக் கொண்டிருந்த அவர் கமலுடன் சரிக்கு சமமாக ஒரு படத்தில் நடித்தவர்.

ரொம்ப மப்பு தலைக்கு ஏற, “கமலுக்கு நடிக்கவே தெரியாது. ஏதோ மலச்சிக்கல் வந்தவன் மாதிரி முகத்தை வெச்சிருப்பான்” என கடைசியில் போட்டாரே ஒரு போடு. கையிலிருந்த பானத்தை ஒரே மூச்சில் லபக்கி விட்டு எஸ்கேப் ஆனேன்.

16 comments on “டைரியில் எழுதாதவை : கமல், கந்தசாமி & அறிவுஜீவிகள் !

  1. //மலச்சிக்கல் வந்தவன் மாதிரி முகத்தை வெச்சிருப்பான்//

    அவரு யார்ருன்னு கிசு கிசு பாணியில் சொன்னா நல்லா இருக்கும். அடுத்த வாட்டி அவரை பார்த்தா, பெரிய சலாம் போடுவேன்,

    Like

  2. //“ஆட்டுப் பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு// இது அந்தக் காலத்தில் (‘அந்தக்காலம்’னு சொல்ற அளவுக்கு எனக்கு வயசாயிடுச்சா?!) பாராளுமன்றம் வரை பிரசினை ஆனதாய் குமுதத்தில் படித்த ஞாபகம்! அதற்கு அவரும் அடுத்த வரியான “…காராம் படு ஓட்டி வாரான்டி…”ங்கறதை பிரத்தியேகமா சொல்றதுக்குத்தான் அப்படி எழுதினேன்னு பதில் சொன்னார்!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    Like

  3. “கமலுக்கு நடிக்கவே தெரியாது………./”

    அம்மாடி யாருபா அந்த பயபுள்ள நம்ம உலக நாயகனையே நடிக்க தெரியாதுனு பீதிய கேலபுறது.

    Like

  4. //அம்மாடி யாருபா அந்த பயபுள்ள நம்ம உலக நாயகனையே நடிக்க தெரியாதுனு பீதிய கேலபுறது.//

    என்னத்த சொல்ல… 😀

    Like

  5. //அவரு யார்ருன்னு கிசு கிசு பாணியில் சொன்னா நல்லா இருக்கும். அடுத்த வாட்டி அவரை பார்த்தா, பெரிய சலாம் போடுவேன்,
    //

    எதுக்குங்க… 🙂

    Like

  6. படத்தில் ஊடாடும் பார்ப்பனீயத் தன்மைகளையும், தார்மீகக் கோபங்களுக்குள் புதைக்கப்பட்ட வரலாற்று வன்மங்களையும் பிரித்தறியும் வல்லமை எனக்கு இல்லை.

    enna parpaneeyathai kandeeraiya neer ippadathil….. Ella cinema naaigalukkum, inda parpaneeya subject than periya comerciala poche. sambandame illama oru madisar mami paatto, allathu oru kudumi mama charactero involve panni… oru saraarai kindal panniye evanuga vaitha valathavunagalache… Indha kamal mattum enna- ullukul egappata atthiga ennangala vechikittu— veliyila peryia naathigan mathiri nadiche periya ala ayitan

    Like

  7. அண்ணாத்தே.. இன்னொரு வாட்டி நல்லா படிங்க… நான் என்ன சொல்லியிருக்கேன்னு புரியும் D

    Like

  8. “கமலுக்கு நடிக்கவே தெரியாது………./”

    kandippaga avarukku nadippunna eannaney theariyaathunu ninaikkireyn!

    Like

  9. உண்மைதான்!!!…. கமலுக்கு எங்கே நடிக்கத் தெரியும்?…
    அவர் எங்கே நடிக்கிறார்???…. படத்தில் அவர் வாழ்கிறார்! 😀

    அன்புடன், கமல் ரசிகை 🙂 😉

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s