மனுஷங்களைப் போல தான் பேய்களிலும். ஏகப்பட்ட குரூப்கள். சில வகைப் பேய்கள் மக்களோடு தான் இருக்கும். நள்ளிரவில் விசும்பல் சத்தம் கேட்பது, கட்டில் கிரீச்சிடுவது, யாரோ நடக்கிற மாதிரி கேட்பது இதெல்லாம் இந்த வகைப் பேய்களுடைய சமாச்சாரங்கள். தற்கொலை, விபத்து, கொலை என ஏடாகூடமாகச் செத்துப் போறவங்க தான் இந்த வகைப் பேய்கள். ரொம்ப உஷாரா இருங்க இவை புத்திசாலிப் பேய்கள்.
சில பேய்கள் சும்மாச் சும்மா ஒரே மாதிரி செயல்களைச் செய்து கொண்டே இருக்கும். கொஞ்சம் முட்டாள் பேய் என்று சொல்லலாம். பாழடைந்த மண்டபங்களில் கதவு அசைவது , ஊஞ்சல் ஆடுவது இப்படி சொல்லிவைத்த மாதிரி “எல்லோரும் ஒரே” கதை சொல்றாங்கன்னா, நாயகன் இந்த வகைப் பேய்கள் தான்.
சில வகைப் பேய்கள் நினைவு நாள் பேய்கள். செத்துப் போன நாளைக் கொண்டாட மட்டும் ஆவியா பூமிக்கு வருமாம். மற்றபடி சாதுவாக கல்லறைக்குள் தூங்கி விடும். ஆனா, ஒரே ஒரு நாள் வந்தாலும் கொஞ்சம் கெடுபிடியான பேயாகவே இருக்குமாம்.
சினிமாவில் வருவது போல, மனிதர்களைப் பிடித்து உள்ளே நுழையும் பேய்கள் இன்னொருவகை. மனிதனுக்குள் புகுந்து கொண்டு அதிகாரம் செய்யும். கொஞ்சம் டேஞ்சரஸ் பேய் இது.
“நிறைவேறாத ஆசை” பேய்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். பையனுக்கு கல்யாணம் பண்ணிப் பாக்க ஆசைப்பட்டேன் என ஏக்கத்துடன் இறந்து போனவர்கள், அந்தப் பையனுக்கு திருமணம் நடக்கும் வரை ஆவியாகி சுற்றிச் சுற்றி வருவார்களாம்.
சிலவகைப் பேய்கள் “மெசெஞ்சர் பேய்கள்”. நல்ல பேய்கள் லிஸ்டில் வைக்க வேண்டிய பேய்கள் இவை. பெரும்பாலும் ஒரு குடும்பத்திலுள்ள மரணச் செய்தியை நெருங்கிய சொந்தக்காரர்களுக்குச் சொல்லும் செய்தியாளன் இது. சட்டென மனதில் ஏதோ தோன்ற ஊருக்கு போன் பண்ணினால், “ஆமாப்பா இப்போ தான் தாத்தா போயிட்டார்” என கிடைக்கும் புரியாத கதைகளின் நாயகன் இந்தப் பேய்தான்.
இன்னொரு வகை பேய் பாசக்கார பேய். சொந்தக்காரர்களைத் தேடி வரும். பார்த்துவிட்டுப் போய்விடும். பல வேளைகளில் அது வருவதே கூட யாருக்கும் தெரியாது. இறந்து போன பிறகும் வீட்டிலுள்ளவர்களைக் காவல் காப்பவை இவை.
நல்ல பேய் இனத்தில் “பாதுகாக்கும் ஏஞ்சல்ஸ்” முக்கியமானவை. இவை ஒவ்வொருவருடைய தோளிலும் அமர்ந்திருந்து நம்மைப் பாதுகாக்குமாம். பல நேரங்களில் “மயிரிழையில்” தப்புவதெல்லாம் இந்த காவல் தேவதைகளின் புண்ணியத்தினால் தான்.
சில வகைப்பேய்களுக்கு தான் இறந்து போனதே தெரியாது. உயிருடன் இருப்பதாகவே நினைத்துக் கொள்ளும். குறிப்பாக ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் வசிக்கும் வயதானவர்கள் கவனிக்க யாருமின்றி இறந்து போனால், அவர்கள் ஆவியான பின்னும் மனிதர்களைப் போலவே வாழ்ந்து கொண்டே இருப்பார்களாம்.
பேய்களிலேயே இத்தனை வகையா… அடேங்கப்பா !
ஸார்
அருமையான கட்டுரை .தலைப்பை பார்த்தும் பேய்,பிசாசு எல்லாம் மூட நம்பிக்கை அப்படின்னு சொல்லி இருப்பாங்கன்னு நினைத்தேன்,ஆனா நீங்க உண்மையைத்தான் சொல்லி இருக்கீங்க.
LikeLike
அருமையான சுவாரஷ்யமான பொய் கட்டுரை SORRY பேய் கட்டுரை.
நெருப்பு சுடும் என்று குழைந்தைக்கு சொன்னால் அது எப்படி என்று அதுக்கு தெரியாது. கை வைத்த பிறகு தான் சுடும் என்றால் என்ன என்று தெரியும். அதே மாதிரி தான் இந்த பேய் சமாச்சாரமும். குழைந்தையா இருந்தப்போ எங்க வீடுள்ள என்ன பய முருத்த இதே மேட்டர சொன்னாங்க. இன்று வரை நானும் நெருப்ப தொட்டு பார்த்த மாதிரி பேய் யையும் சந்தித்து பார்க்கலாம்னு தினமும் இரவு 2 அல்லது 3 மணிக்கு அப்புறம் வீடு திரும்புரன் ஒரு பய புள்ளைங்களையும் காண இல்ல..
============================================
(உங்க வலை தளத்துக்கும் விகடனுக்கும் எதாச்சும் தொடர்பு இருக்க ?)
LikeLike
வருகைக்கும், சுவாரஸ்யமான தகவலுக்கும் நன்றி தம்பி ரிசாத்.
//உங்க வலை தளத்துக்கும் விகடனுக்கும் எதாச்சும் தொடர்பு இருக்க //
இது விகடனில் வெளியான என்னோட கட்டுரை தான் 🙂
LikeLike
//ஸார்
அருமையான கட்டுரை .தலைப்பை பார்த்தும் பேய்,பிசாசு எல்லாம் மூட நம்பிக்கை அப்படின்னு சொல்லி இருப்பாங்கன்னு நினைத்தேன்,ஆனா நீங்க உண்மையைத்தான் சொல்லி இருக்கீங்க.//
நன்றி தனபால் 🙂
LikeLike
ஆமா, நீங்க யாரை பேய்னு சொல்ரீங்க?
LikeLike
அதுவும் வகைகளோடு சொல்லியது அருமை…வாழ்த்துக்கள்
LikeLike
அண்ணா நான் பேய்ன்னு ஒண்ணு இருக்குன்னே நம்புறதில்ல.
அப்போ நீங்க சொல்றதைப் பாத்தா அப்பிடி ஒண்ணு இருக்கா ?நான் இங்க ஒரு கல்லறைக் காவியங்களுக்கு அருகில்தான் என் அடுக்குமாடித் தொடர்.நான் இரவிலும் வருகிறேன்.ஒருநாளும் கண்டதில்லையே.ஏன் வெயில் காலங்களில் பூங்கா போலிருக்கும் அங்கு போய் உலவி வருவதுமுண்டு.(அதுக்காக என்னயே பேய்ன்னு சொல்லிடாதீங்க.நான் இன்னும் சாகல.)
LikeLike
இந்த கட்டுரையில் இருப்பவை உண்மையாக நடப்பவைகள்தான். ஆனால் சில காரியங்கள் நம்பிக்கையில் உருவாகும் பிரேமையால் உருவாவன. சில காரியங்கள் உதாரணமாக தாத்தா இறந்த செய்தி. அது பிரபஞ்சத்தில் உள்ள காந்த அலைகளூடாக மிகவும் நெருங்கியவர்களுடன் ஏற்படும் எண்ண அலைகளின் சந்திப்பாகும். அத்துடன் எல்லோரும் ஓர் உண்மையை விளங்கி கொள்ளவேண்டும். நாம் எமது குழந்தைகளுக்கு கடவுளை கூறி பயமுறுத்துதலும் பேய்களை கூறி பயமுறுத்துதலும் ஓரேவிதமான மனநிலையையே ஊட்டும்.
LikeLike
//நாம் எமது குழந்தைகளுக்கு கடவுளை கூறி பயமுறுத்துதலும் பேய்களை கூறி பயமுறுத்துதலும் ஓரேவிதமான மனநிலையையே ஊட்டும்//
ஹா..ஹா… நல்லா சொன்னீங்க போங்க !
LikeLike
//இங்க ஒரு கல்லறைக் காவியங்களுக்கு அருகில்தான் என் அடுக்குமாடித் தொடர்.நான் இரவிலும் வருகிறேன்.ஒருநாளும் கண்டதில்லையே.ஏன் வெயில் காலங்களில் பூங்கா போலிருக்கும் அங்கு போய் உலவி வருவதுமுண்டு//
அரண்டவன் கண்ணுக்குத் தான் தெரியும் பேய்:D
LikeLike
ஐயையோ…. இப்படியெல்லாம் கூட இருக்கா?
இனி என்னைக் கண்டு எல்லோரும் ஓட்டம் எடுக்கப் போறாங்களே!… என்ன இருந்தாலும் என்னை இப்படி நீங்க காட்டிக் கொடுத்திருக்கக் கூடாது சேவியர்! 😀 😉
LikeLike
/ஐயையோ…. இப்படியெல்லாம் கூட இருக்கா?
இனி என்னைக் கண்டு எல்லோரும் ஓட்டம் எடுக்கப் போறாங்களே!… என்ன இருந்தாலும் என்னை இப்படி நீங்க காட்டிக் கொடுத்திருக்கக் கூடாது சேவியர்!//
😀 😀 😀
LikeLike
நாம் குழந்தைகளுக்கு கடவுளை கூறி பயமுறுத்துங்களே!…
அது நல்லது.
LikeLike
Abrahama அவர்களுக்கு, கடவுளை கூறி பயமுறுத்துதலும் பேய்களே கூறி பயமுறுத்துதலும் ஓன்றே. குழந்தைகளுக்கு இரண்டும் ஓரேவிதமான மனதாக்கத்தையே கொடுக்கும்.
LikeLike
வருகைக்கு நன்றி தமிழன்.
LikeLike
வருகைக்கு நன்றி ஆபிரகாம்.. எதைக் குறித்தும் பயமற்ற நிலையில் ஈடுபடுதலே உண்மையான ஆன்மீகம்… “Fear Not” தான் பாடம்…. !
LikeLike
super asathunga
LikeLike
நன்றி சதீஷ்…
LikeLike
nalla sonninga ponga
LikeLike
நன்றி ஸாபெர்…
LikeLike
idhellam muttalthanam
LikeLike
ITS TRUE
LikeLike
avigalil ethanai vagaigal erupathu acharyam thaan….ethanai peigalum kelvi patirundhalum athaan vagaigal eppothu thaan purindhathu….melum ungaluku therikindrathai pakirndha kolla vendum
LikeLike
hai xavier.i am very much interested in this subject.but still now i have no experience with them.how can i contact any one ஆவி ?pl help me.
LikeLike
poi unmaynu yarum solla mudiyathu , avagaavaga padum pothu than theriyum, anupavam patten solra
LikeLike
🙂
Sent on my BlackBerry® from Vodafone
LikeLike