அமெரிக்காவிலுள்ள ஒக்லஹாமாவில் 1914ல் பிறந்தார் இசைக்கலைஞர் பில்லி டிப்டன். சிறு வயதிலேயே அவருக்கு இசையில் ஆர்வம் அதிகம். அவருடைய இளம் வயதிலேயே பெற்றோர் டைவர்ஸ் வாங்கி கொண்டு கிளம்பி விட்டார்கள். அதனால் உறவினர் ஒருரிடம் ஐக்கியமாகி வளர்ந்தால் பில்லி. அதற்குப் பின் அவருடைய பெற்றோரைக் குறித்து அவரும் அதிகமாய் அலட்டிக் கொள்ளவில்லை.
இசை ஆர்வம் அவருக்குள் கொழுந்து விட்டு எரிய ஜாஸ் பயின்றார். பின்னர் சாக்ஸபோன், அது இது என இசையில் வளர்ந்தார். ஊரிலுள்ள சிறு சிறு இசைக் குழுக்களில் முதலில் பாடினார். கொஞ்சம் கொஞ்சமாக இசை அவரை உயர்த்தியது. பின் ஓரளவு பிரபலமான இசைக் குழுக்களுடன் இணைந்து ஊர் சுற்றினார். சென்ற இடங்களிலெல்லாம் நல்ல பெயர் கிடைத்தது. கே.எஃப்.எக்ஸ்.ஆர் எனும் ஒரு இசைக்குழுவையே ஆரம்பித்து நடத்துமளவுக்கு வளர்ந்தார்.
அடுத்த கட்டமாக இசை ஆல்பங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். அவருடைய ஸ்வீட் ஜோர்ஜியா பிரவுண் மற்றும் பில்லி டிப்டன் பிளேஸ் ஹை ஃபை ஆன் பியானோ இரண்டும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. அப்புறமென்ன ஆல்பம் தயாரிப்புகள் தொடர்ந்தன. இவருக்கு நிறைய பெண் ரசிகர்கள் இருந்தார்கள். பல பெண்களுடன் “நெருக்கமாக” வாழ ஆரம்பித்தார். அதனால் இவரை ஒரு “பெண் பித்தன்” என்று கூட மக்கள் நினைத்தார்கள். ஒரு வழியாக 1960 கிட்டி கெல்லி எனும் பெண்ணுடன் வாழ்க்கையில் செட்டில் ஆனார். தம்பதியர் ஜான், ஸ்காட் மற்றும் வில்லியம்ஸ் என மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தனர். பிள்ளைகளெல்லாம் “இவரு ரொம்ப நல்ல டாடி” என்று சொல்லுமளவுக்கு ஒரு நல்ல தந்தையாகவும் வாழ்ந்தார்.
1989ல் தனது 74வது வயதில் பில்லி டிப்டன் இறந்தார். அப்போது தான் வெளிவந்தது உலகை அதிர்ச்சியூட்டும் ரகசியம். பில்லி டிப்டன் உண்மையில் ஆண் அல்ல ! ஒரு பெண் ! உலகமே வியந்தது. அவர் சுற்றித் திரிந்த பெண் தோழிகளெல்லாம் வியந்தனர். அவருடைய ரசிகர்கள், பிள்ளைகள், மனைவி எல்லோருமே அதிர்ந்தனர் !!! பத்திரிகைகளெல்லாம் முதல் பக்கத்தில் வியப்பு காட்டின.
பெண்களிடம் ரகசியம் நிற்காது என யாருப்பா சொன்னது ?
ஃ
இப்படியெல்லாம் நடக்குதா உலகத்தில !!!
LikeLike
” One man born from woman One man fell down from woman ”
Take care gents !!!
LikeLike
irrukalam ippadium.. enna seivathu..
But an good publish..
Continue..
LikeLike
புராணத்தில் கடவுளர் நினைக்கும் போது பெண்ணாகவும் ஆணாகவும் மாறினார்கள் இவருக்கு அது போல பெண்ணாக மாற முடியவில்லை போலும்..
LikeLike
/பெண்களிடம் ரகசியம் நிற்காது என யாருப்பா சொன்னது ?…../
அதுதான் நிற்க இலையே !!
அப்படி நின்று இருந்த இந்த தகவல் கூட நமக்கு தெரிஞ்சு இருக்காதே 😛
LikeLike
//அதுதான் நிற்க இலையே !!
அப்படி நின்று இருந்த இந்த தகவல் கூட நமக்கு தெரிஞ்சு இருக்காதே //
அஸ்க் புஸ்க்… பார்ட்டி செத்தப்புறம் தானே கண்டு பிடிச்சாங்க !
LikeLike
//புராணத்தில் கடவுளர் நினைக்கும் போது பெண்ணாகவும் ஆணாகவும் மாறினார்கள்//
அதனால் தான் அது புராணம் என்று அழைக்கப்படுகிறது 😀
LikeLike
நன்றி வாகைபிரபு…
LikeLike
என்ன ரவி… இப்படி சொல்றீங்கோ…
LikeLike
ஆச்சரியம் தான் நித்தில் 😀
LikeLike