எட்வர்ட் லீட்ஸ்கால்னின் ஐந்து அடி உயரமும், வெறும் நாற்பத்து ஐந்து கிலோ எடையுமுள்ள மெல்லிய மனிதர். ஆனால் அவருக்குள் டன் டன்னாய் ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.
தனது 25வது வயதில் பட்டாம் பூச்சிக் கனவுகளுடன் பதினாறு வயதான ஆக்னஸ் எனும் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால் பாவம், திருமணத்துக்கு முந்தின நாள் ராத்திரி “மாப்பிள்ளை புடிக்கலை” என்று சொல்லி பெண் எஸ்கேப்.
எட்வர்ட் மனசில் அந்த தேவதை சிறகடித்துக் கொண்டே இருந்தது. அதன் பின் வேறு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காமல் அமெரிக்காவிலுள்ள புளோரிடா பகுதியில் ஒரு நிலத்தை வாங்கினார். அங்கே அதி பயங்கர எடையுள்ள பவளப் பாறைகள் இருந்தன.
தனி ஆளாக அந்தப் பவளப் பாறைகளில் சிற்பங்கள் செய்யத் துவங்கினார் எட்வர்ட். பெரிய இயந்திரங்கள் எதுவும் இல்லை. சின்னச் சின்ன கருவிகள் மட்டும் தான். அந்த பவளப் பாறைகளினாலேயே ஒரு வீடையும் கட்டி ராக் கேட் பார்க் என அதற்குப் பெயரிட்டார். எப்போதோ தன்னை உதறிச் சென்ற ஹீரோயினுக்கு அந்த இடத்தையும் டெடிகேட் செய்தார்.
ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள இந்த பாறைகளை எப்படி புரட்டினார், நகர்த்தினார், உடைத்தார், தூக்கினார் என்பதெல்லாம் வியப்பான ரகசியங்கள். அதைவிடப் பெரிய ரகசியம் அத்தனை பாறைகளையும் ஒற்றை அனுமனாக தூக்கிக் கொண்டு போய் இன்னொரு இடத்தில் வைத்தார் என்பது தான்.
“எப்படிங்க இவ்ளோ எடையை தூக்கியிருக்கீங்க ? வெட்டியிருக்கீங்க ? “ என ஆச்சரியத்துடன் கேட்டால், “சீக்ரெட் தெரிஞ்சா இதெல்லாம் ஜுஜூபி மேட்டர் தான்” என்பார்.
தனது 64வது வயதில் 1951ல் எட்வர்ட் மரணமடைந்தார். அவருடைய பாறை ரகசியங்கள் இன்னும் உடைபடாமல் உறுதியுடனே இருக்கின்றன.
ஃ
அதிசயம்…
LikeLike
நன்றி ரிசாத்.
LikeLike
அவர் கட்டிய “Rock” Gate Park போன்று அவரது காதலும் கடைசிவரை “பாறை” போல் உறுதியாகவே இருந்திருக்கிறது….
அதிசயம் ஒருபுறம்!…. நெஞ்சை நெகிழ வைக்கும் காதல் கதை மறுபுறம்!….
அழகான பதிவுக்கு நன்றி சேவியர்!
LikeLike
//அவர் கட்டிய “Rock” Gate Park போன்று அவரது காதலும் கடைசிவரை “பாறை” போல் உறுதியாகவே இருந்திருக்கிறது….
அதிசயம் ஒருபுறம்!…. நெஞ்சை நெகிழ வைக்கும் காதல் கதை மறுபுறம்!….
அழகான பதிவுக்கு நன்றி சேவியர்!//
நன்றி ஷாமா…
LikeLike