அலெக்ஸ் எர்லாண்ட்சன் சுவீடனில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலான ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பம் என்றாலே மரங்களோடு தொடர்பு இருப்பது இயல்பு தானே. அலெக்ஸ்க்கும் மரங்கள் என்றால் கொள்ளை பிரியம். எப்போதும் மரங்களில் விளையாடிக் கொண்டிருந்த அவர், 1925 முதல் மரங்களை வளர்க்க ஆரம்பித்தார். அதுவும் எப்படி ? தனக்குப் பிடித்தமான வித விதமான டிசைன்களில்.
முதலில் பேப்பரில் அவருக்குப் பிடித்தமான ஒரு படத்தை வரைவார். பின் தோட்டத்திலுள்ள மரங்களை அதே போல வளர்ப்பார். அவருடைய குடும்பத்தினர் அதைப் பார்த்து வாயடைத்துப் போவார்கள். கூடை, செயர், ஏணி, பாம்பு, கோபுரம், இதயம், வளையம், போன் பூத் என இவருடைய மரங்கள் அசத்தின.
வித்தியாசத்தை மக்கள் ரசிக்கிறார்கள் என்பது அவருக்கு லேட்டாய் தான் புரிந்தது. உடனே கலிபோர்னியாவிலுள்ள ஸ்காட்ஸ் வில்லில் ஒரு இடத்தை வாங்கினார். அங்கே அவரது மரங்கள் வளர்ந்தன. சட்டென பல இடங்களுக்கும் தகவல் பரவ புகழ் பெற்றார்.
இவருடைய மரங்களுக்கு சில ஸ்பெஷாலிடீஸ் உண்டு. செயர் போல மரங்களை வளர்த்துவார். இயற்கையின் விதிப்படி மரங்கள் உயரமாகும், செயரும் உயரமாகும் இல்லையா ? ஆனா அலெக்ஸ் வளர்த்த மரங்கள் அப்படியே தான் இருந்தன. “எப்படி இதையெல்லாம் வளர்த்தினீங்க ?” என வியப்பாய் அவரிடம் கேட்டால், “நான் மரங்களிடம் பேசுவேன். நான் சொல்வது போல அவை வளரும்” என்பாராம்.
அலெக்ஸ்க்கு வயதானது. மரங்களைச் சென்று பார்க்க முடியவில்லையே என துயரம் தொண்டையை அடைக்க 1963ல் தனது மரங்களையெல்லாம் விற்றார். விற்றபின் அவருக்கு இருந்த நிம்மதியும் போச்சு. அடுத்த ஆண்டே தனது 79 வது வயதில் அலெக்ஸ் மறைந்தார். மரங்களை அவர் எப்படி வளர்த்தினார் என்பது ஒரு மாபெரும் ரகசியம். கடைசி வரை அந்த ரகசியத்தை அவரும் சொல்லவில்லை, அவர் வளர்த்த மரங்களும் சொல்லவில்லை !
ஃ
சேவியர்
இந்த தகவல் உண்மை தான்..
ஒரு மரத்தில் பூ பூகவிட்டால் அதன்ன் அருகில் அமர்து பூ பூக சொல்லி பேசும் பலரை நான் எனது ஊரில் பார்த்து இருக்கின். என்ன ஆச்சர்யம் அவர்கள் பேசிய ஓர் இரு நாட்களில் பூ பூத்துவிடும். நீங்களும் இதை முயற்சிக்கலமே.
LikeLike
//ஒரு மரத்தில் பூ பூகவிட்டால் அதன்ன் அருகில் அமர்து பூ பூக சொல்லி பேசும் பலரை நான் எனது ஊரில் பார்த்து இருக்கின்//
ஓ… நல்ல மேட்டரா இருக்கே. லவ் பூக்கா விட்டாலும் பின்னாடியே சுற்றிச் சுற்றிப் பூக்கச் சொல்பவர்களைத் தான் நான் பார்த்திருக்கிறேன் 😀
LikeLike
மரம் என்றதும் நினைவுக்கு வருவது. ஐயப்பன் தரிசனம் என்பதை விட வழியெங்கும் பார்த்த மரங்கள் இன்னமும் கண்களுக்குள். உடன் பயணித்த கேரள நண்பர் ஒவ்வொரு இடத்திலும் சென்ற வருடத்தை விட இப்போது ஏன் இந்த முள்வேலி என்றதுக்கு அவர் சொன்ன காரணம் ?
அத்தனை பேர்களும் திறந்தவெளி தரிசனத்தை தந்து நிர்”மலமாய்” ஆக்கி விடுவதால் என்ற போது மரத்துடன் பேசுவர்களை கூட மரக்காடுகளை எதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பவர்களைப்பற்றி அதிக யோசனையாய் இருக்கிறது.
LikeLike
/அத்தனை பேர்களும் திறந்தவெளி தரிசனத்தை தந்து நிர்”மலமாய்” ஆக்கி விடுவதால் //
மரம் உரம் பெறும். விட்டுடுங்க 🙂
LikeLike