ஆ.வி : வயலின் மர்மம் !

AS14வரலாற்றையே வியக்க வைத்த ஆண்டோனியோ, இசைக்கருவிகள் செய்பவர். 1644க்கும் 1737க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார். இவருடைய பேவரிட் இசைக்கருவி வயலின். தனக்கே உரிய ஸ்பெஷல் பார்முலா படி அவர் உருவாக்கிய வயலின்கள் அதி அற்புதம். அதை எப்படி உருவாக்கினார், என்ன கணக்கு வைத்திருந்தார் என்பதெல்லாம் அவர் வெளிப்படுத்தாத மாபெரும் ரகசியம்.

பழைய வயலின்களின் பார்முலாக்களை இவர் ஒதுக்கித் தள்ளினார். தனக்கென சில ஐடியாக்களை உருவாக்கினார். கன கட்சிதமாக ஒவ்வொரு பாகத்தையும் உருவாக்கினார். இவருடைய இசைக்கருவியிலிருந்து ஒரு நூலிழை மாற்றத்தை ஏற்படுத்தினால் கூட இசை அபஸ்வரமாகி விடுகிறது. அந்த அளவுக்கு அவருடைய வயலின் உருவாக்கும் நேர்த்தி இருந்தது.AS16

இவருடைய வயலினில் இருந்து தெய்வீக இசை கசியும் என உருகுகின்றனர் இசை ரசிகர்கள். உலகின் பல இசை ஜாம்பவான்களுடைய இறுதி ஆசையே ஒருமுறையேனும் இவருடைய இசைக்கருவியில் இசைக்க வேண்டும் என்பது தான்.

இன்று வரை இவருடைய வயலின் தான் உலகில் நம்பர் 1. உலகிலேயே இவருடைய வயலின்கள் தான் அதிக பட்ச தொகைக்கு ஏலமிடப்படுகின்றன. கடைசியாக இவருடைய வயலின் ஒன்று மூன்றரை மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போய் அசத்தியது.

வயலின் மட்டுமன்றி கிடார், செலோஸ், வயலோஸ் என வேறு பல இசைக்கருவிகள் செய்வதிலும் இவர் கெட்டிக்காரர். இவருடைய வாழ்நாளில் ஆயிரத்து நூறுக்கு மேற்பட்ட இசைக்கருவிகளைச் செய்திருக்கிறார். 1698க்கும் 1730 க்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் செய்த இசைக்கருவிகள் தான் உலகிலேயே இன்று வரை சூப்பர் இசைக்கருவிகள்.

இவருடைய வயலினில் இருந்து எப்படி இந்த அற்புத இசை வருகிறது என நிபுணர்கள் ஆராய ஆரம்பித்து சில நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று வரை ரகசியங்கள் அவிழவில்லை. உலகெங்கும் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களில் இவருடைய இசைக்கருவிகள் இருக்கின்றன. பலருடைய தலையையும் பிய்க்க வைக்கும் ரகசியங்களைச் தன்னுள் சுமந்தபடி.

நன்றி : விகடன்

To Vote