பெண்கள் “வாயாடி”களாவது நல்லது !

பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம் ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை.

நலமா எனத் தொடங்கும் உரையாடல் குழந்தைகள், வீடு, வேலை, மாமியார், நண்பர்கள் என கிளை விட்டுப் பரந்து விரிந்து பொழுது போவதை அறியாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

பெண்களின் உரையாடல் பெரும்பாலும் வறட்டு உரையாடலாய் இருப்பதில்லை. சிரிப்பும், கேலியும், கிண்டலும், உற்சாகமும் என உலகத்தின் மிக முக்கியமான பணி உரையாடல் என்பது போல அவர்கள் அதில் ஒன்றி விடுவார்கள்.

ஆண்கள் பலருக்கும் இந்த கலை வாய்ப்பதில்லை. “நலமா ?” என ஆரம்பிக்கும் உரையாடல் “நல்லா இருக்கேன்” என்ற பதிலைக் கேட்டபின் எப்படித் தொடர்வது என தெரியாமல் நொண்டியடிக்கும்.

அதனால் எழுகின்ற பொறாமையோ என்னவோ “ இந்தப் பெண்களே இப்படித்தான், யாரையாவது பார்த்தால் போதும் மணிக்கணக்காய் பேச ஆரம்பித்து விடுவார்கள்” என ஆண்கள் அடிக்கடி அலுத்துக் கொள்கிறார்கள்.

இப்படி மனம் விட்டு உரையாடுவதும், நண்பர்களுடன் பேசி மகிழ்வதும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது எனும் புதிய ஆராய்ச்சி ஒன்றை மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டு கதை பேசும் பெண்களின் மனதில் இன்னும் கொஞ்சம் இன்பத்துப் பால் வார்த்திருக்கிறார்கள்.

மனித உடலிலுள்ள புரோகெஸ்ட்ரோன் எனும் ஹார்மோன் மன அழுத்தத்தையும், கவலை, பதட்டம் போன்றவற்றையும் குறைக்கக்கூடிய தன்மை உடையது. மனம் விட்டுப் பேசி சிரித்து உரையாடும் பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் அதிக அளவில் இருப்பதாகவும், இதுவே பெண்களின் மன மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருவதாகவும் அவர்கள் மருத்துவ விளக்கமும் அளிக்கின்றனர்.

இத்தகைய உரையாடல்கள் வெறுமனே பொழுது போக்காக மட்டும் அமைந்து விடாமல் பெண்களுடைய நட்பு இறுக்கத்துக்கும், உதவும் மனப்பான்மைக்கும் கூட துணை செய்கிறதாம்.

ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் தொலைக்காட்சித் தொடர்களில் மாலை நேரம் முழுவதும் செலவிடும் பெண்களுக்கு உரையாடலுக்காய் செலவழிக்கும் நேரம் குறைந்து கொண்டே வருகிறது என்பது கண் கூடு. அத்தகைய சற்றும் பயன் தராத தொலைக்காட்சித் தொடர்களை விலக்கி விட்டு ஆரோக்கியமான உரையாடலுக்குப் பெண்கள் திரும்ப இந்த ஆராய்ச்சி அழைப்பு விடுக்கிறது.

நன்றி : பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்கலாமே ..

14 comments on “பெண்கள் “வாயாடி”களாவது நல்லது !

 1. நல்ல பதிவு சேவியர், என் மனைவி, அவருடைய சகோதரியின் விழா ஒன்றிற்குச் சென்று அனைவரையும் சந்தித்து விட்டு திரும்பினார். வந்தவுடன் அங்கு நடந்த ஒவ்வொன்றையும் சொல்லி சொல்லி சிரித்தார். முகத்தில் அதுவரையில்லாத ஒளியையும் மலர்ச்சியையும் பார்க்க முடிந்தது. அப்போது இங்கே அவர் அந்தளவிற்கு மகிழ்ச்சியாய் இல்லையோ என்ற குற்றவுணர்வும் எழுந்தது. எனில் இன்னும் அதிக நேரத்தை செலவிட்டு அக்கறையுடனும் அன்புடனும் கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடியது. பிறந்த வீட்டுச் சூழ்நிலையிலும் அவர்களை தோழிகளை, உறவினர்களை காணும் போது அவர்களின் தோற்றம் வேறு மாதிரி தோன்றுவதை கவனிக்க முடிகிறது.

  Like

 2. அவங்களை வேடிக்கை(சைட் அடிக்கிற) பார்க்கிற பசங்க ஆரோக்கியமும் சேர்ந்து கூடுதானு யாரவது ஆராய்ச்சி பண்ணுங்கப்பா

  Like

 3. //அதனால் எழுகின்ற பொறாமையோ என்னவோ “ இந்தப் பெண்களே இப்படித்தான், யாரையாவது பார்த்தால் போதும் மணிக்கணக்காய் பேச ஆரம்பித்து விடுவார்கள்” என ஆண்கள் அடிக்கடி அலுத்துக் கொள்கிறார்கள்.

  100% true Anna.
  சொல்லிட்டீங்க இல்ல…. இனி பேசி பேசியே ___________ கொடுத்திருவோம்.

  Like

 4. // 100% true Anna.
  சொல்லிட்டீங்க இல்ல…. இனி பேசி பேசியே ___________ கொடுத்திருவோம்……..//

  ஆஹா சும்மா இருந்த சங்க ஊதிடின்களே..
  நாங்க பவம்.. 😛

  Like

 5. //ஆஹா சும்மா இருந்த சங்க ஊதிடின்களே..
  நாங்க பவம்.. //

  அடடா.. பெண்கள், பெண்களோட பேசிட்டு இருந்தாங்கன்னா உங்களுக்கு தான் நல்லது 🙂 கொஞ்ச நேரம் நீங்க ரெஸ்ட் எடுக்கலாம் 😉

  Like

 6. //summave ava 3 manineram pesuvaa
  ippo ithuveraiya
  enna kodumai anna ithu
  avvvvvvvvvvvvvvvvv//

  “பேச்சு பேச்சா இருக்கணும்” ன்னு வடிவேலு பாணில சொல்லிட்டு நடையைக் கட்டுங்க பாஸு…

  Like

 7. //அவங்களை வேடிக்கை(சைட் அடிக்கிற) பார்க்கிற பசங்க ஆரோக்கியமும் சேர்ந்து கூடுதானு யாரவது ஆராய்ச்சி பண்ணுங்கப்பா//

  சைட் அடிக்கிறவங்களுக்கு கண்ணுல பவர் கூடும். (எத்தனை பவர்ன்னு டாக்டர் கிட்டே கேளுங்க சாமியோவ் )

  Like

 8. //நல்ல பதிவு சேவியர், என் மனைவி, அவருடைய சகோதரியின் விழா ஒன்றிற்குச் சென்று அனைவரையும் சந்தித்து விட்டு திரும்பினார். வந்தவுடன் அங்கு நடந்த ஒவ்வொன்றையும் சொல்லி சொல்லி சிரித்தார். முகத்தில் அதுவரையில்லாத ஒளியையும் மலர்ச்சியையும் பார்க்க முடிந்தது. அப்போது இங்கே அவர் அந்தளவிற்கு மகிழ்ச்சியாய் இல்லையோ என்ற குற்றவுணர்வும் எழுந்தது. எனில் இன்னும் அதிக நேரத்தை செலவிட்டு அக்கறையுடனும் அன்புடனும் கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடியது. பிறந்த வீட்டுச் சூழ்நிலையிலும் அவர்களை தோழிகளை, உறவினர்களை காணும் போது அவர்களின் தோற்றம் வேறு மாதிரி தோன்றுவதை கவனிக்க முடிகிறது.//

  பிரமாதம்… நன்றிகள்…

  Like

 9. please visit:-தொடுப்பகம் பாருங்கள்

  * NIDUR SEASONS
  * nidurseasons.com
  * seasons nidur (wordpress)
  அருமை. அனுபவம் கை கொடுக்கும் தங்கள் பெற்றதாக எண்ணி மறு பதிப்பு என் வலையில் வரேப்போகிறது தங்கள் வாழ்துகலுடன்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s