“குஷி” யான பங்கி ஜம்பிங்

எதுலப்பா திரில் இருக்குன்னு கண்ணுல விளக்கெண்ணை போட்டு தேடினவங்க கண்டுபிடிச்சது தான் இந்த ஜம்பிங். பங்கின்னா கயிறு, ஜம்பிங்னா குதிக்கிறது. கயிறைக் கட்டிட்டு குதிங்கறதைத் தான் ஸ்டைலா பங்கி ஜம்பிங்னு சொல்றாங்க. பயங்கர உயரமான ஒரு பாலமோ, அல்லது அணைக்கட்டுப் பகுதியோ, பள்ளத்தாக்கோ தான் இதுக்கு வசதியானது.

கால்கள் இரண்டையும் ஒரு கயிறில் கட்டி உங்களை பல நூறு அடி உயரத்தில இருந்து தள்ளி விடுவாங்க. கயிறு அறுந்திருமோ, அவுந்திருமோங்கற பயத்துலயே பாதி உயிர் போகும், கீழே தலைகீழா போய் சேருவோம். அதோட நிக்காது கயிறு மேலே வரும், நாமும் மேலே வருவோம். மறுபடியும் கயிறு கீழே போகும். ஐயோ, போதுமப்பா ஆளை விடுங்கன்னு நினைக்கற வரைக்கும் திரில் பின்னியெடுக்கும். இதற்குன்னு சர்டிபிகேட் வாங்கின நிறைய நிறுவனங்கள் உண்டு. அதை விட்டுட்டு  மேட் இன் சைனா மாதிரி லொடக்கு நிறுவனங்களிடம் போய் பங்கி ஜம்ப் பண்ணினீங்கன்னா அவ்ளோ தான். உங்களுக்கே அது ஒன்வே ஆயிடும்.

இப்படித் தான் 1997ல் லாரா பேட்டர் எனும் பெண் ஒரு டி.வி ஷோவுக்காக பங்கி ஜம்பிங் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். பாவம், விதி விளையாடியது. கயிறு தள்ளாடி அவிழ்ந்தது. கோரமாகப் பலியானார். இப்படி அங்கும் இங்கும் அடிக்கடி திகில் செய்திகள் வந்தாலும் இந்த விளையாட்டின் கிரேஸ் தீரவில்லை.  ஜேம்ஸ்பாண்ட் 1995ல் கோல்டன் ஐ படத்தில் ஆரம்பித்து வைத்தார். குஷி படத்துல குதித்த விஜய் வரை நிறைய ஹீரோக்கள் பங்கி ஜம்ப் பண்ணியிருக்காங்க.

தெகிரிய பார்ட்டிங்க கயிறைக் கட்டிட்டு குதிங்க ( கயிறை கால்ல கட்டுங்க பிளீஸ்) . உடான்ஸ் பார்ட்டிங்க, என்னப்பா பங்கி ஜம்பிங், எனக்கு மங்கி ஜம்பிங் கூட தெரியும் என சொல்லி நைஸா எஸ்கேப் ஆயிடுங்க.

Thanks : Ananda Vikatan

வாக்களிக்க விரும்பினால், கிளிக் போதும்…

Advertisements

4 comments on ““குஷி” யான பங்கி ஜம்பிங்

 1. ஐ..யை..யோ…. சேவியர்!
  ரொம்பவே பயமுறுத்துறீங்க! 😦
  “Skydiving”… “சாகசப் பிரியன்”… “Bungee jumping”… இப்படியாக பட்டியல் நீ….ள்….கிறதே… இன்னும் என்னவெல்லாம் பதிவுசெய்யப் போறீங்களோ….

  ஓ..ஓ..ஓ.. நானும் எஸ்கேப் ஆகிட்டேன் 🙂 … with my monkey jump 😉

  Like

 2. அப்படின்னா கால்ல கல்லையும் சேர்த்து கட்டிட்டு குதிக்கிற மாதிரி ஒரு த்ரில் விளையாட்டு ஒன்னு ஆரம்பிக்கலாமா ?

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s