நூல் : மஹிந்த ராஜபக்சே – சூழ்ச்சியும் தந்திரமும்

இலங்கையில் தனது அதிகாரத்தை நிறுவ மஹிந்த ராஜபக்சே செய்த முறையற்ற பல நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் நூல். இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகள் நரகமாக இருப்பதையும், அங்கே மனித உரிமை மீறல்கள் அப்பட்டமாக நிகழ்வதையும் ராகபக்சே செய்த படு மோசமான போர்க்குற்றங்களையும், தனது அக்கிரமமான நடவடிக்கைகளை நியாயப்படுத்த அவர் செய்யும் ராஜ தந்திரங்களையும், எல்லாவற்றுக்கும் அடிப்படையாக ராஜபக்சேவின் சுயநலம் இருப்பதையும் இந்நூல் சற்றும் மிகையின்றிப் படம் பிடித்துக் காட்டியுள்ளதுதினமணி, நூல் விமர்சனம் “

ராஜபக்சே எனும் பெயரே தமிழர்களின் நெஞ்சில் நீங்காத வடுவாக நிலைபெற்றிருக்கிறது. தமிழர்கள் என்றில்லை, மனித நேயத்தை மனதில் கொண்டு இயங்கும் எந்த ஒரு மனிதனுக்குமே அந்தப் பெயர் அலர்ஜியாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. மஹிந்த ராஜபக்சேவின் இளமைக் காலம் முதல் அவருடைய சமீபத்திய முகம் வரையிலான மாற்றங்களை படம் பிடித்துக் காட்டும் முயற்சியே இந்த நூல். ராஜபக்சே எனும் தனி மனிதனை மையமாகக் கொண்டு அவருடைய செயல்களையும், சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் இந்த நூல் அலசுகிறது.

வாய்ப்புக் கிடைத்தால் படியுங்கள், படித்தால் கருத்துத் தெரிவியுங்கள்.

விலை : 130 ரூபாய்கள்

பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர் , சென்னை – 16

9600086474

91-44-43534303/ 43534304

admim@blackholemedia.in

தமிழிஷில் வாக்களிக்க.

Advertisements

14 comments on “நூல் : மஹிந்த ராஜபக்சே – சூழ்ச்சியும் தந்திரமும்

 1. நன்றி. இந்த நூலை இவரைப் பற்றி எழுதி சீக்கிரம் கிடைக்காதா என்று எதிர்பார்த்து இருந்தேன்.

  தொடர்பு முகவரி மிகத் தெளிவு.

  Like

 2. ஒரு முன்னாள் நடிகனை அம்பலப் படுத்தும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணன்.

  Like

 3. எம் காலத்தில் எம் கண்முன்னால நடந்தவைகளை அறிந்து கொள்ள இந்த நூல் உதவும். இருபத்தியோராம் நூற்றாண்டின் ஒரு இனவெறி கொலைஞனை அறிய இது உதவட்டும்.

  யாழ்

  Like

 4. வரலாற்றின் தமிழன் என்றுமே வீரம் மிக்கவன் தான். வரலாற்றை முறையாகப் பார்த்தால் தெரியும். இராவணன் எனும் தமிழனை இராமன் எனும் வடயிந்தியன் கொன்றதும், அனுமான் எனும் தென்னிந்தியர்களின் உதவிக்கொண்டு தான். 30 ஆண்டுக்கால போரியல் வரலாற்றில், இரண்டு இலட்சம் இராணுவத்தினைரை இலங்கை பெறுக்கியும் நவீன ஆயுதங்களைக் குவித்தும் ஒன்றும் கிழிக்க முடியாததை; இலங்கை சிங்களம் எப்படி வெற்றிக்கொண்டது என்றால், பிரபாகரன் எனும் மாவீரன் உருவாக்கி விட்ட கருணாகரன் எனும் துரோகியின் துரோகத்தின் ஊடாகவே என்பது புரியும். ஆம் இங்கே ஒரு தமிழனை வைத்து இன்னொரு தமிழனை வெற்றிக்கொள்ளப்பட்டது.

  Like

 5. கருணா காசுக்காக எதையும் செய்யும் இணத்துரோகி என்றால், பதவிக்காக எதையும் செய்யும் மதத்துரோகி மகிந்தா என்பது பலருக்குத் தெரியாது. மகிந்தாவின் தந்தையின் பெயர்: டொண் அல்விஸ் ராஜபக்சே, அவனது பாட்டனின் பெயர்: டொண் டேவிட் ராஜபக்சே.

  Like

 6. மிக்க பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சேவியர். நம் ஒவ்வொரு படைப்புக்களும் சமூகத்திற்கு ஏதேனும் ஒரு நன்மையை பயக்குவதாகவே இருக்க வேண்டுமென எண்ணுபவரே சிறந்த படைப்பாளியாவார். அங்ஙனம், குழியில் விழுந்ததை பற்றி வருந்திக் கொண்டுள்ள நமக்கு மத்தியில், நமக்கான குழி எங்கிருந்து எப்படி ஏன் தோண்டப் படுகின்றதென ஆராய முனைந்தது பொறுப்புமிக்க, நல்ல, துணிவான சிந்தனை. நிச்சயம் தாயகம் சென்றால் தங்களின் புத்தகம் வாங்கி வர முயல்வேன்.

  சமூகத்தின் ஒரு அங்கமாய் என் நன்றிகளும் தங்களுக்கு உரித்தாகட்டு,

  வித்யாசாகர்

  Like

 7. மிக்க பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சேவியர். நம் ஒவ்வொரு படைப்புக்களும் சமூகத்திற்கு ஏதேனும் ஒரு நன்மையை பயக்குவதாகவே இருக்க வேண்டுமென எண்ணுபவரே சிறந்த படைப்பாளியாவார். அங்ஙனம், குழியில் விழுந்ததை பற்றி வருந்திக் கொண்டுள்ள நமக்கு மத்தியில், நமக்கான குழி எங்கிருந்து எப்படி ஏன் தோண்டப் படுகின்றதென ஆராய முனைந்தது பொறுப்புமிக்க, நல்ல, துணிவான சிந்தனை.

  வழிமொழிகின்றேன்

  Like

 8. //எம் காலத்தில் எம் கண்முன்னால நடந்தவைகளை அறிந்து கொள்ள இந்த நூல் உதவும். இருபத்தியோராம் நூற்றாண்டின் ஒரு இனவெறி கொலைஞனை அறிய இது உதவட்டும்.//

  நன்றி யாழவன்.

  Like

 9. //ஒரு முன்னாள் நடிகனை அம்பலப் படுத்தும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணன்./

  நன்றி எம்.ஆர்.ஆர்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s