வானம் – திருடப்பட்ட தலைப்பு !

சிலம்பரசனை வைத்து தமிழில் தயாராகி வரும் வானம் படம் தெலுங்கு வேதம் படத்தின் ரீமேக் என்பது பழைய கதை. ஆனால் அந்த “வானம்” எனும் டைட்டிலே திருடப்பட்டது என்பது எக்ஸ்குளூசிவ் நியூ ஸ்டோரி !

இயக்குனர் ஆர்.பாலுவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு.எம்.ஆர் வினோதன் ( 94428-30590 ) என்பவர் தான் இந்த டைட்டிலை தனது முதல் படத்துக்காக பதிவு செய்து வைத்திருக்கிறார். ஏகப்பட்ட கனவுகளும், இந்த டைட்டிலும் தான் அவருடைய பையில் ! பல நூல்களையும், இசை ஆல்பங்களையும் இவர் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். ஏராளமான நாடகங்களை மேடையேற்றியிருக்கும் இவருக்கு சொந்த ஊரில் பெரிய ரசிகர் வட்டாரமே உண்டு.

திடீரென தனது டைட்டிலை சிம்புவின் தலைக்கு மேல் பார்த்ததும் அப்செட் ஆகி விட்டார் மனுஷன். யாரோ பதிவு செய்த தலைப்பை ஒரு மரியாதை நிமித்தமாகக் கூட அனுமதி வாங்காமல் தன் படத்துக்கு பயன்படுத்தி விளம்பரம் செய்தவர்களை என்னவென்பது ? என கொதித்து விட்டார்.

ஏற்கனவே இந்தப் படத்துக்காக எல்லா பாடல்களையும் ரிக்கார்டிங் செய்ய பல இலட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார். இப்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் இயக்குனர் ஆர்.பாலுவின் விளையாடலாம் படம் முடியும் தருவாயில் இருப்பதால், அடுத்த மாதம் தனது வானம் படத்தை இயக்குவதாய் முடிவு செய்திருந்தார்.

விண்ணைத் தாண்டி வருவாயா ? வுக்கு அப்புறம் செண்டிமெண்டாக வானம் என்று வைக்க நினைப்பதில் தப்பில்லை. ஆனால் வழிப்பறிக் கொள்ளைக்காரன் போல செயல்படுவதிலும் எந்த நியாயமும் இல்லை ! எனும் வினோதனின் வார்த்தைகளில் நியாயம் இல்லாமல் இல்லை.

வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்திருக்கிறாராம். தட்ஸ் தமிழில் விரைவில் அப்டேட் எதிர்பார்க்கலாம் !

தமிழிஷில் வாக்களிக்க

7 comments on “வானம் – திருடப்பட்ட தலைப்பு !

 1. எளியோரை வலியோர் வாட்டினால் வலியோரை தெய்வம் வாட்டும். சினிமால இதெல்லாம் சகஜமப்பா….

  Like

 2. அண்ணாத்தே, அரசியல்ல இதெல்லாம் சகஜம். சினிமாவுலயும் ஜகஜம். ஆனா முதல் படக் கனவுடன் தலைப்பைப் பதிவு செய்தவர் இதை சும்மா விடக் கூடாது.

  Like

 3. Pingback: வானம் – திருடப்பட்ட தலைப்பு ! : VALAICHARAM

 4. நான் ஆறு மாதத்திற்கு முன் இந்த பெயரை (டைட்டில்) பதிவு செய்ய முற்பட்டேன் (எனது லட்சிய படத்திற்கு) ஆனால்…அது வேறொருவருடையது என்று தெரிந்து, வேறு பெயர் பதிவு செய்துவிட்டேன்…
  வினோத்…
  நல்ல தொகை கேட்டு வழக்கு பதிவு செய்யுங்கள்….
  வானம் வசப்படும்…..
  உதவி தேவையெனில்…
  onely1@gmail.com

  Like

 5. சினிமா காரங்களுக்கு மனசாட்சியே கிடையாது ஒரே வழி இயக்குனர்கள் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் முறையிடுவதுதான். வழக்கு என்று சென்றால் நம் சொத்தையே இழக்க நேரிடும்.

  – ஜெகதீஸ்வரன்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s