இலக்கியவாதி ரஜினி ரசிகராய் இருக்கலாமா ?

பத்திரிகை உலக நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சின் இடையே எந்திரன் பற்றிய பேச்சும் வந்தது. அது வராம ஒரு பேச்சு இப்பல்லாம் இருக்க முடியுமா என்ன ?

“எந்திரன் பாட்டு கேட்டீங்களா ? ” என்று கேட்டார்.

“நல்லாயிருக்கு… ரொம்ப ரசிச்சு கேக்கறேன். கார்க்கியோட வரிகள் தான் அவ்வளவு ரசிக்கும்படியா இல்லை” ன்னு சொன்னேன்.

“உங்களுக்கு எந்திரன் பாட்டு புடிச்சிருந்துதா ?” என்று அவர் ஒரு உலக மகா ஆச்சரியத்துடன் கேட்டார். ஏதோ நான் சொல்லக் கூடாததைச் சொன்னது போல ! “ஆமா.. நான் ரஜினி ரசிகன். அதனால எனக்கு பாட்டு ரொம்பவே புடிச்சிருந்துது” என்றேன்.

“இதைச் சொல்ல உங்களுக்கு வெக்கமாயில்லையா ?” என்றார் பட்டென்று.

“பாட்டு புடிச்சிருக்குன்னு சொல்றதுக்குக் கூட வெக்கப்படணுமா என்ன?” என்றேன்

அதைச் சொல்லல. ரஜினி ரசிகர்ன்னு சொல்றீங்களே ! ஒரு எழுத்தாளர் இப்படி சொல்லலாமா ? என்று ஆரம்பித்தார். அப்புறம் அவரோட பட்டறிவு அகராதியிலிருந்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார். நம்ம சின்ன மூளைக்குள் அதெல்லாம் சென்று சேரவில்லை. அவரோட பேச்சு தான் ஆச்சரியத்தையும், கேள்விகளையும் எழுப்பி விட்டுக்கொண்டிருந்தது.

ஒருவேளை இலக்கியவாதியாய் இருப்பவர்களுக்கு ரஜினியைப் பிடிக்கவே கூடாது என்று ஏதேனும் விதிமுறை வைத்திருக்கிறார்களோ என்னவோ ?

நான் பொதுவாகவே அறிவு ஜீவிகளை விட்டுத் தள்ளியே இருக்க விரும்புவேன். அதுக்குக் காரணம் இல்லாமலில்லை. “நாளைக்கு என்ன பண்றதுன்னு யோசிக்கல” ங்கற ஒரு வரியையே “அடுத்த நாளைக்குறித்த பிரக்ஞையற்று வனாந்தர வெளியில் வட்டமடிக்கிறது மனசு” என்று எழுதினால் தான் இலக்கியம் என்று பேசுபவர்கள் சுத்த போர் எனக்கு. ஒரு பக்கக் கட்டுரையை அரை நாள் படிக்குமளவுக்கு சுழற்றிச் சுழற்றி எழுதும் பலரை நான் நிராகரித்ததுண்டு. தினத்தந்தி ரேஞ்சுக்கு சிம்பிளா இருந்தா போதும் என்பது என் சிந்தனை. எழுத்து என்பது தமிழ் தெரிந்த எல்லோருக்குமே புரியவேண்டும், இலக்கியம் தெரிந்தவர்களுக்கு மட்டுமல்ல.

சினிமா குறித்த பேச்சுகளில் ரஷ்ய படம், ஈரானிய படம், குறும்படம் என்று நான்கு விஷயம் பேசுவதை கௌரவமாய் நினைப்பவர்கள் உண்டு. கூகுளில் தேடி பெயரைப் படித்து விட்டு வருவார்களோ எனும் சந்தேகம் எனக்குண்டு.

ஒரு இலக்கிய விமர்சகர் ஒருவரிடம் ரெண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சார்த்தரைத் தவிர வேறு யாரைப் பற்றியும் பேசுவதாய் இல்லை. உங்களுக்கு சார்த்தரைப் பிடிக்குமா என்றார்.

“ஆல்ஃபர்ட் மால்கம் எழுதிய சூயிசைடல் திங்கிங் தான் எனக்குப் பிடிச்ச நூல்” படிச்சுப் பாருங்க, அசந்துடுவீங்க என்றேன். அப்படி ஒரு நூலும் கிடையாது, எழுத்தாளரும் கிடையாது.

“அந்த புக் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்.. ஆனா படிச்சதில்லை” என்றார் அவர். இல்லாத ஒரு புக்கைச் சொன்னால் கூட கேள்விப்பட்டிருக்கிறேன் என்று சொல்வதே கவுரவம் என்று நினைக்கிறாரே என உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.

எதுக்குத் தான் இப்படி அடுத்தவங்களுக்காக வாழறாங்களோ மக்கள். இவர்களைப் பார்க்கும் போதெல்லாம் “இது என்னோட அப்பான்னு சொல்ல வெக்கப்படற பையன்” கதை தான் ஞாபகத்துக்கு வரும். என்னைப் பொறுத்தவரை, ரசனையில் உயர் ரசனை கீழ் ரசனை என்றெல்லாம் கிடையாது. அது தனிப்பட்ட சிலிர்ப்புகள் சார்ந்தது. அதீத ரசனை பற்றிப் பேசற சிலர் தங்களோட தனி வாழ்க்கையில் நிகழ்த்தும் சில “ஆங்…” ரக ரகசிய ரசனைகள் நமக்குத் தெரியாததா ?

சரி அதெல்லாம் இருக்கட்டும், எந்திரன் பிரிவியூ டிக்கெட் ஒண்ணு கிடைக்குமா ?

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

48 comments on “இலக்கியவாதி ரஜினி ரசிகராய் இருக்கலாமா ?

  1. /*ரசனையில் உயர் ரசனை கீழ் ரசனை என்றெல்லாம் கிடையாது*/

    Hi Xavier- I too agree with your statement….

    Like

  2. Well said. “இலக்கியவாதி” என்று சொல்லிக் கொள்பவர்கள் எதற்கு ஒரு definition-க்குள் சிக்கிக் கொள்ள வேண்டும்? முதலில் நாம், நாமாக இருக்கும் தைரியம் வேண்டும். பின்பு மற்ற எல்லாம்.

    Like

  3. நெத்தியடி 🙂

    – என். சொக்கன்,
    பெங்களூரு.

    Like

  4. “நாளைக்கு என்ன பண்றதுன்னு யோசிக்கல” ங்கற ஒரு வரியையே “அடுத்த நாளைக்குறித்த பிரக்ஞையற்று வனாந்தர வெளியில் வட்டமடிக்கிறது மனசு”

    200% Agreed. The article is more suitable for Vijay Fans than Rajini Fans.Of late it has become a fashion or to boast of their intellectual intelligence by mocking Vijay.

    Like

  5. ரஜினிசாரை சாக்கிட்டு இலக்கியவாதிகளை நகைச்சுவைக்கு உட்படுத்தப் படாத பாடு படுவதை கண்டிக்கிறேன். நம்மை நாம் மட்டுமாவது இலக்கியவாதி என்று அழைத்துக்கொள்ள வேண்டும் என்கிற உங்கள் கொள்கையில் எனக்கும் உடன்பாடு உள்ளது. வனாந்தர வெளி போன்ற அபத்தமான சொற்சேர்க்கைகளை எந்த இலக்கியவாதியும் எழுத மாட்டார். நீங்கள் நினைப்பதைவிட அவர்களின் சொல்வீச்சு அதிகம். ரசிகராக இருப்பது வேறு, முதல் வரிசையில் உட்கார்ந்து விசில் அடிப்பது வேறு. இந்த ஆல்பர்ட் மால்கம் சம்பவம் நடக்கவேயில்லை மற்றும் இந்த இடுகைக்காகவே உருவாக்கினீர்கள் என்பதான ரகசியம் நமக்குள்ளே இருக்கட்டும்.

    Like

  6. //வனாந்தர வெளி போன்ற அபத்தமான சொற்சேர்க்கைகளை எந்த இலக்கியவாதியும் எழுத மாட்டார்//

    உங்கள் தளத்துக்கு வந்தேன்… இரண்டு பத்தி வாசித்தேன்…

    காலமும் வெளியும் இணையுமொரு புள்ளியில் முகிழ்த்த கண்காணா பூமியொன்றில் ஒரு வனம் இருந்தது. பல்வகை விலங்குகள் பூட்டப்பட்ட, பறவைகள் அடைக்கப்பட்ட ஒரு விசித்திரப் பிராந்தியம் அந்த வனம். வாசகர்கள் காலடித் தடம் பதியாத இந்தத் தன்னந்தனித்துவப் பிரதேசத்தை பல்வேறுபட்ட உயிர்வாழ் மிருகங்கள் பகிர்ந்துவந்தன. அந்த வனத்தினூடே மனிதர் அறியா மர்ம மொழியில் தன்னோடு தானே பேசிக்கொண்டு இலக்கில்லாத் திசையில் ஒரு அவர்ண திரவ நாகமாய் சதா பயணித்தபடி இருந்தது அந்த ஜல நதி.

    —————–
    என்று இருக்கிறது !

    ஒரு சின்ன கேள்வி. தீவிர இலக்கியத்தில் தூய தமிழ் வராதா ?அல்லது விசித்திரம், பிராந்தியம், ஜலம் எல்லாமே தீவிரத் தமிழா ? தெரியாம கேக்கறேன்.. கோச்சுக்காதீங்க….

    Like

  7. //200% Agreed. The article is more suitable for Vijay Fans than Rajini Fans.Of late it has become a fashion or to boast of their intellectual intelligence by mocking Vijay.//

    நன்றி மகேஷ்…

    Like

  8. . தனக்காக யோசிக்கிறவன் மனுஷன். ஊர்க்காக யோசிக்கிறவன் இலக்கியவாதி. யோசிச்சதை புஸ்தகமா போடுறவன் இலக்கணவாதின்னு சொல்லலமா இல்லாட்டி வியாபாரின்னு ?

    Like

  9. //நெத்தியடி

    – என். சொக்கன்,
    பெங்களூரு.
    //

    நன்றி சார்… ரொம்ப சந்தோஷம் உங்களை இங்கே பாத்ததுல….

    Like

  10. //முதலில் நாம், நாமாக இருக்கும் தைரியம் வேண்டும்//

    கலக்கிட்டீங்க பிரியா ! அவ்ளோ தான் விஷயம்.

    Like

  11. பதிவு மிக அருமை:) நமக்கு பிடித்ததை சொல்வதற்க்கு எதற்கு வெக்கபட வேண்டும்?

    Like

  12. எழுத்தாளனுக்கு மொழி ஒரு கருவி மட்டுமே. அது அவனுக்கு தெரிந்த மொழியாக இருந்தால் போதும். சமஸ்கிருதம் கலந்து எழுதினால் படைப்புக்கு தானாக காத்திரம் கூடுவது தமிழ் எழுத்துலகில் ஒரு நிதர்சன சூத்திர நிரூபணம். தூய தமிழில் படிக்க சில ஆயிரம் ஆண்டுகள் பின்னே செல்ல வேண்டும். கால இயந்திரமோ, இன்று வரை புனைவளவிலேயே இருக்கிறது.

    Like

  13. இலக்கியவாதியாக இருக்கும் ஒருவனுக்கு ரஜினியை பிடித்துப்போவதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் இலக்கியவாதியாக ரஜினியைப் பிடித்துப்போவதற்குக் காரணங்கள் இல்லை. உங்கள் பதிவின் பின்னர்தான் யோசித்துப்பார்த்தேன், காரணங்கள் பிடிபடுகிறதே இல்லை.

    பேயோனின் முதல் பின்னூட்டத்தில் இடுகை மீதான பார்வை சுவாரசியமாக இருக்கிறது.

    Like

  14. (“நாளைக்கு என்ன பண்றதுன்னு யோசிக்கல” ங்கற ஒரு வரியையே “அடுத்த நாளைக்குறித்த பிரக்ஞையற்று வனாந்தர வெளியில் வட்டமடிக்கிறது மனசு” என்று எழுதினால் தான் இலக்கியம் என்று பேசுபவர்கள் சுத்த போர். எழுத்து என்பது தமிழ் தெரிந்த எல்லோருக்குமே புரியவேண்டும், இலக்கியம் தெரிந்தவர்களுக்கு மட்டுமல்ல)

    இது..
    இது… எனக்கு பிடிச்சிருக்கு! 🙂

    Like

  15. //நான் பொதுவாகவே அறிவு ஜீவிகளை விட்டுத் தள்ளியே இருக்க விரும்புவேன். அதுக்குக் காரணம் இல்லாமலில்லை. “நாளைக்கு என்ன பண்றதுன்னு யோசிக்கல” ங்கற ஒரு வரியையே “அடுத்த நாளைக்குறித்த பிரக்ஞையற்று வனாந்தர வெளியில் வட்டமடிக்கிறது மனசு” என்று எழுதினால் தான் இலக்கியம் என்று பேசுபவர்கள் சுத்த போர் எனக்கு. ஒரு பக்கக் கட்டுரையை அரை நாள் படிக்குமளவுக்கு சுழற்றிச் சுழற்றி எழுதும் பலரை நான் நிராகரித்ததுண்டு. தினத்தந்தி ரேஞ்சுக்கு சிம்பிளா இருந்தா போதும் என்பது என் சிந்தனை. எழுத்து என்பது தமிழ் தெரிந்த எல்லோருக்குமே புரியவேண்டும், இலக்கியம் தெரிந்தவர்களுக்கு மட்டுமல்ல.

    சினிமா குறித்த பேச்சுகளில் ரஷ்ய படம், ஈரானிய படம், குறும்படம் என்று நான்கு விஷயம் பேசுவதை கௌரவமாய் நினைப்பவர்கள் உண்டு. கூகுளில் தேடி பெயரைப் படித்து விட்டு வருவார்களோ எனும் சந்தேகம் எனக்குண்டு.

    ஒரு இலக்கிய விமர்சகர் ஒருவரிடம் ரெண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சார்த்தரைத் தவிர வேறு யாரைப் பற்றியும் பேசுவதாய் இல்லை. உங்களுக்கு சார்த்தரைப் பிடிக்குமா என்றார்.

    “ஆல்ஃபர்ட் மால்கம் எழுதிய சூயிசைடல் திங்கிங் தான் எனக்குப் பிடிச்ச நூல்” படிச்சுப் பாருங்க, அசந்துடுவீங்க என்றேன். அப்படி ஒரு நூலும் கிடையாது, எழுத்தாளரும் கிடையாது.

    “அந்த புக் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்.. ஆனா படிச்சதில்லை” என்றார் அவர். இல்லாத ஒரு புக்கைச் சொன்னால் கூட கேள்விப்பட்டிருக்கிறேன் என்று சொல்வதே கவுரவம் என்று நினைக்கிறாரே என உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.//

    போட்டுத்தாக்குங்க.. இவங்க இம்சை எல்லை மீறி போய்ட்டு இருக்கு.. :))

    Like

  16. ஆங்கில இலக்கிய மாணவன் என்ற முறையில் சிறு கருத்தை சொல்ல விரும்புகிறேன். இலக்கியம் என்றால் “picture of life” என்றுதான் படிப்பிக்கப்பட்டோம் நாங்கள், அவ்வளவுதான். வாழ்க்கை பற்றிய புனைவுகள் எல்லாமே இலக்கியம் தான். காலங்கள் போகப்போக புதிய உட்பிரிவுகள், வகைகள் தோன்றும். மொத்தமாக அவற்றை நான்கு பிரிவுகளில் பிரிக்கலாம். கட்டுரை, கவிதை, நாவல், நாடகம். இவற்றில் நூற்றுக்கணக்கான உட்பிரிவுகள். எந்த ஒரு எழுத்தையும் படித்துப்பாருங்கள். இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் அடங்கும். சினிமா என்பது கூட நாடகத்தின் வளர்ந்த வடிவம் தான். ஆனால் இந்த இலக்கிய வாதிகள் குழப்பமாக எழுதினால் தான் அது இலக்கியம் என்று வரையறை வைத்திருக்கிறார்கள், கொஞ்ச பேர் மட்டும் படிக்கும் பத்திரிகையாக இருக்க வேண்டும், படித்தால் ஒரு சலிப்பும், ஆயாசமும் வர வேண்டும், கூடவே சோகமாக இருக்க வேண்டும், பிரெஞ்சு வார்த்தைகளும், வடமொழி வார்த்தைகளும், புதிது புதிதாய் புரியாத வார்த்தைகளும் இருக்க வேண்டும் (கெட்டவார்த்தைகளோ வட்டார வழக்கோ இருந்தால் தூவி இருந்தால் ரொம்ப நல்லது, அது தூய இலக்கியமே தான்). அவர்களைப் பொறுத்தவரை சுஜாதாவாக இருந்தாலும் சரி, ராஜேஷ் குமாராக இருந்தாலும் சரி, அவர்கள் இலக்கிய வாதிகள் அல்ல. மக்களுக்குப்புரியக் கூடாது, அவ்வளவுதான். பேயோனின் இரண்டு பாராக்களையும் படித்துப்பாருங்கள். எவ்வளவு கடினமாக இருக்கிறது?

    Like

  17. //அடுத்த நாளைக்குறித்த பிரக்ஞையற்று வனாந்தர வெளியில் வட்டமடிக்கிறது மனசு//

    i can’t control my laugh. 🙂 🙂

    Like

  18. எஸ்கா: “எவ்வளவு கடினமாக இருக்கிறது” என்பது rhetorical கேள்வி. எனவே கேள்விக்குறி போடக் கூடாது. ஆச்சரியக்குறி வேண்டுமானால் பயன்படுத்தலாம்.

    Like

  19. நன்றி எஸ்கா. விரிவாக எழுதியிருக்கிறீர்கள். புரிந்து சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

    Like

  20. இலக்கியவாதியாக இருக்கும் ஒருவனுக்கு ரஜினியை பிடித்துப்போவதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் இலக்கியவாதியாக ரஜினியைப் பிடித்துப்போவதற்குக் காரணங்கள் இல்லை. உங்கள் பதிவின் பின்னர்தான் யோசித்துப்பார்த்தேன், காரணங்கள் பிடிபடுகிறதே இல்லை.

    பேயோனின் முதல் பின்னூட்டத்தில் இடுகை மீதான பார்வை சுவாரசியமாக இருக்கிறது.

    //
    நன்றி “நா” மதுவதனன். வருகைக்கும், கருத்துக்கும்.

    Like

  21. சேவியர், ரொம்ப நாளைக்கப்புறமா நாம சந்திக்கறோம்! நலமா? போட்டு சாத்து சாத்துன்னு சாத்தியிருக்கீங்க. உண்மை!
    //

    ஆமா சார். எப்படி இருக்கீங்க ?

    Like

  22. //பதிவு மிக அருமை:) நமக்கு பிடித்ததை சொல்வதற்க்கு எதற்கு வெக்கபட வேண்டும்?//

    அதே !

    Like

  23. //எழுத்தாளனுக்கு மொழி ஒரு கருவி மட்டுமே. அது அவனுக்கு தெரிந்த மொழியாக இருந்தால் போதும். சமஸ்கிருதம் கலந்து எழுதினால் படைப்புக்கு தானாக காத்திரம் கூடுவது தமிழ் எழுத்துலகில் ஒரு நிதர்சன சூத்திர நிரூபணம். தூய தமிழில் படிக்க சில ஆயிரம் ஆண்டுகள் பின்னே செல்ல வேண்டும். கால இயந்திரமோ, இன்று வரை புனைவளவிலேயே இருக்கிறது.//

    உங்கள் வருகைக்கும் பார்வைக்கும் நன்றி.

    Like

  24. ரசிப்புத் தன்மை அனைவருக்குள்ளும் உண்டு.
    ரசிகனாக இருப்பதையும் தவறென்று சொல்லமாட்டேன்.
    ஆனால் கட்டவுட்டுக்கு பால் ஊற்றும் அளவுக்கு போவதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.

    Like

  25. //பேயோன் சொன்னது,
    எஸ்கா: “எவ்வளவு கடினமாக இருக்கிறது” என்பது rhetorical கேள்வி. எனவே கேள்விக்குறி போடக் கூடாது. ஆச்சரியக்குறி வேண்டுமானால் பயன்படுத்தலாம்.//

    அய்யா பேயோன், தெய்வம்யா நீங்க…

    Like

  26. //சேவியர் சொன்னது,
    நன்றி எஸ்கா. விரிவாக எழுதியிருக்கிறீர்கள். புரிந்து சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.// அது மட்டுமில்லீங்க. ரொம்ப நாள் புலம்பல் இது.. கொட்டுறதுக்கு இடம் கொடுத்ததற்கு நன்றி.

    Like

  27. //ரசிப்புத் தன்மை அனைவருக்குள்ளும் உண்டு.
    ரசிகனாக இருப்பதையும் தவறென்று சொல்லமாட்டேன்.
    ஆனால் கட்டவுட்டுக்கு பால் ஊற்றும் அளவுக்கு போவதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை//

    வழிமொழிகிறேன்… !

    Like

  28. //அது மட்டுமில்லீங்க. ரொம்ப நாள் புலம்பல் இது.. கொட்டுறதுக்கு இடம் கொடுத்ததற்கு நன்றி//

    மகிழ்ச்சி 🙂

    Like

  29. ////பேயோன் சொன்னது,
    எஸ்கா: “எவ்வளவு கடினமாக இருக்கிறது” என்பது rhetorical கேள்வி. எனவே கேள்விக்குறி போடக் கூடாது. ஆச்சரியக்குறி வேண்டுமானால் பயன்படுத்தலாம்.//

    அய்யா பேயோன், தெய்வம்யா நீங்க…
    //

    இந்தப் பதிவு தனி மனிதத் தாக்குதலுக்குள் செல்லக் கூடாது எனும் விருப்பம் எனக்கு உண்டு.

    Like

  30. என்னவென்று சொல்வது? உங்கலுடைய எல்லா கட்டுரைகலுமே நன்றாக இருக்கிறது. நான் இலங்கையிலிருந்து சாஜஹான்.

    Like

  31. ரஜினி ரசிகனின் இலக்கிய முகம் பார்க்க இங்கே வாருங்கள். மனுஷன் கலக்குறார். இலக்கியவாதியாக விரும்பி இருப்பவர்கள் இருக்கட்டும்.. ஆனால் ரஜினியைப் போன்ற மாஸ் கடவுள்களின் ரசிகனாய் இருப்பது ஏதோ பாவம் செய்ததுபோல் சொல்பவர்களுக்கு உங்கள் ட்ரீட்மெண்ட் மிகப் பொருத்தம்..

    http://www.thaiyal.com/

    Like

  32. //ரஜினி ரசிகனின் இலக்கிய முகம் பார்க்க இங்கே வாருங்கள். மனுஷன் கலக்குறார். இலக்கியவாதியாக விரும்பி இருப்பவர்கள் இருக்கட்டும்.. ஆனால் ரஜினியைப் போன்ற மாஸ் கடவுள்களின் ரசிகனாய் இருப்பது ஏதோ பாவம் செய்ததுபோல் சொல்பவர்களுக்கு உங்கள் ட்ரீட்மெண்ட் மிகப் பொருத்தம்..

    http://www.thaiyal.com/
    /

    நன்றி ஜெயக்குமார்.

    Like

  33. //ரஜினியிடம் எனக்கு பிடித்தது இரண்டு. ஒன்று ஆன்மீகம். இரண்டு உழைப்பு.

    – ஜெகதீஸ்வரன்,
    //

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாய் ரஜினியைப் பிடிக்கிறது என்பதே உண்மை.

    Like

  34. //என்னவென்று சொல்வது? உங்கலுடைய எல்லா கட்டுரைகலுமே நன்றாக இருக்கிறது. நான் இலங்கையிலிருந்து சாஜஹான்.//

    நன்றி ஷாஜகான்

    Like

  35. //தனி மனிதத்தாக்குதல் அல்ல. இருப்பினும் மன்னிக்கவும்.//

    புரிதலுக்கும், வருகைக்கும்… நன்றி 🙂

    Like

Leave a comment