ஆகதன் : விமர்சனம் ! நாணமில்லே சத்யராஜ் ?

சத்தியராஜின் முதல் மலையாளப் படமான ஆகதன் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. மலையாள இயக்குனர்களில் எனக்குப் பிடித்த இயக்குனர்களில் ஒருவரான கமல் இயக்கியிருக்கும் படம் இது. பல அற்புதமான படங்களை மலையாள உலகுக்கு நல்கியவர் இவர். சரி, இவருடைய ஆகதன் கதை என்ன ?

காஷ்மீரின் ஒரு துயர இரவு. ஆனந்தமான அம்மா, அப்பா, அக்கா என வாழ்ந்த சிறுவனுடைய கண் முன்னாலேயே தீவிரவாதிகள் பெற்றோரைக் கொன்று விடுகிறார்கள். சகோதரியையும், சிறுவனையும் காப்பாற்றும் இராணுவ அதிகாரி சகோதரியைக் கெடுத்து கோமா நிலைக்குத் தள்ளி விடுகிறார். பல ஆண்டுகள் நினைவு திரும்பாமலேயே மருத்துவமனையில் கிடந்து அப்படியே இறந்து விடுகிறாள் சகோதரி. சிறுவன் வளர்ந்து பெரியவனானபின் அந்த இராணுவ அதிகாரியைத் தேடிப் பிடித்து பழி தீர்ப்பது தான் கதை ! ( நெசமாவே இதான் கதை ! )

மஞ்ஞு மழக்காட்டில் எனத் தொடக்கும் மனதை உருக்கும் பாடலுடன் தொடங்குகிறது படம். ஒரு இனிமையான குடும்பத்தின் அழகிய நினைவுகளுடன் அஜயன் வின்செண்டின் ஒளிப்பதிவில் ஸ்தம்பிக்க வைக்கும் அழகிய காட்சிகளுமாய் படம் நகர்கிறது. படம் முழுக்க ஒளிப்பதிவும், அவ்ஸேப்பச்சனின் இசையும் இதமாகப் பயணிக்கின்றன.

திலீப் ஹீரோ. அவருடைய அக்மார்க் நகைச்சுவைகள் ஏதும் படத்தில் இல்லை என்பது பெரும் குறை. அவருக்கு சீரியஸ் கதாபாத்திரம். அவ்வப்போது லேப்டாப்பை திறந்து குடும்ப போட்டோவைப் பார்த்துக் கொள்கிறார். (முன்பெல்லாம் பர்சிலிருந்து ஒரு நைந்து போன படத்தை எடுத்துப் பார்ப்பார்கள். இது ஹை பட்ஜெட் படமாம் அதனால ஒரு லேப்டாப் ! ) ஹீரோயின் சார்மி. திலீப்புடன் நெருக்கமாகவும், டி ஷர்ட்களுடன் இறுக்கமாகவும் வந்து கொடுத்த காசுக்கு நடித்துவிட்டுப் போயிருக்கிறார்.

சரி, அப்போ சத்தியராஜ் ! அவர் தான் ஆர்மி ஜெனரல். ஹீரோவின் டீன் ஏஜ் சகோதரியை கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் கற்பழித்துக் கொன்ற ஆர்மி ஜெனரல். பெற்றோரின் பிணங்களுக்கு இடையே, சிறுவனின் கண் முன்னாலேயே ஒரு பாலியல் பலாத்காரத்தை அரங்கேற்றியவர். இப்படி ஒரு நச் கதாபாத்திரம் வேண்டும் என்பதற்காகத் தான் ரஜினியின் சிவாஜியில் கூட நடிக்கமாட்டேன் என்று சொன்னீங்களா சத்யராஜ் சார் ?

ரிட்டையர்ட் இராணுவ ஜெனரலுக்குரிய கம்பீரம் சத்தியராஜிடம் இருக்கிறது. ஆனால் அவருக்குக் கொடுத்திருக்கும் டப்பிங், ஐயோ… ஒட்டாமல் உரசாமல் எங்கோ தொங்குகிறது. குறிப்பாக சத்தியராஜின் குரலைக் கேட்டவர்களுக்கு டப்பிங் குரல் கொஞ்சமும் ரசிக்கப் போவதில்லை. என்ன பண்ண சத்தியராஜுக்கு தான் மலையாளம் வராதே. “ஞானும் திலீபும் பிரண்டாச்சி” எனுமளவுக்கு தான் அவருடைய மலையாளம் என்பதை அவருடைய ஒரு பேட்டியிலேயே சொல்லி விட்டார்.

படத்தில் உறுத்தலாய் எழுந்த இன்னொரு சம்பவம், படத்தின் துவக்கக் காட்சிகளில் ஒன்று. காட்சியில் வண்டியில் அடிபட்ட மூதாட்டி ஒருத்தியை ஹீரோவும் ஹீரோயினும் காப்பாற்றி மருத்துவமனை ஒன்றில் சேர்க்கிறார்கள். உடனே ஒரு காட்டுவாசிக் கூட்டம் ஓடி வருகிறது “அம்மா…” என்று கத்தியபடி. “அது தமிழர் கூட்டம். கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல், காப்பாற்றிக் கொண்டு வந்த ஹீரோவிடம் இருந்த பணத்தையெல்லாம் பிடுங்கிவிட்டு, ஹீரோயினை தரக்குறைவாய் நடத்தி விட்டுப் போய் விடுகிறார்கள்.

“இப்படியும் மனுஷங்க, உதவி செய்யப் போனா…” என ஹீரோ சலித்துக் கொள்கிறார். வழக்கமாகவே ஒரு தமிழனை வில்லனாக்கி அவனை செமையாக உதைத்து தமிழ் சமூகத்தையே உதைத்துத் தள்ளி விட்டது போல பெருமிதப்படுபவை தான் பெரும்பாலான மலையாள சினிமாக்கள். இந்தப் படம் ஒரு படி மேலே போய், வில்லன்கள் மட்டுமல்ல, தமிழர்கள் எல்லோருமே படிப்பறிவும், நன்றியும் இல்லாத காட்டுவாசிகள் என்றும் பறைசாற்றியிருக்கிறது. சாதாரண ஒரு மலையாளப் படத்தில் இப்படி ஒரு காட்சி இருந்திருந்தால் மலையாளிகளுடைய வெவரமில்லாத்தனம் என ஜஸ்ட் லைக் தேட் போயிருக்க முடியும். ஆனால் தன்மானத் தமிழன் சத்யராஜ் நடித்திருக்கும் முதல் மலையாளப் படத்திலேயே இப்படியென்றால் ?

சத்யராஜ் இந்தக் காட்சியைப் பார்க்கவில்லையா ? அல்லது “ஐயா கமல், தமிழர்கள் இப்படி கிடையாது. படிப்பறிவு உள்ளவங்க தான். நன்றிக்குப் பெயர் போனவங்க தான்” ன்னு சொல்றதுக்கு ஆர்மி ஆபீசருக்கு தெம்பு வரவில்லையா ? அதை விட்டு விட்டு “கமல் சாரே.. நிங்ங்அள் சூப்பர் சீன் வெச்சாச்சி ” என்று கைதட்டிப் பாராட்டி விட்டு வரத் தான் முடிந்திருக்கிறதா ? அப்பவே மைல்டா டவுட் ஆனேன்யா..

தனது மலையாளப் படத்தின் கதாபாத்திரத்தைப் பற்றி ஏகத்துக்குச் சிலாகித்துப் பேசினார் சத்தியராஜ் ! என்ன ? இதுவா சூப்பர் கதாபாத்திரம் ? தமிழ் சினிமாவில் பார்க்காத சத்தியராஜ் இங்கே எங்கே ? ! மலையாளிகள் பாராட்டும் கடைசிக் காட்சி கூட வால்டர் வெற்றிவேலில் பார்த்ததை விட கம்மி தான் !

இன்னொரு காட்சியில் லயோலா கல்லூரியில் படித்த ஒரு தமிழர் வருவார். அவரை “சாப்பாட்டு ராமன்” என கிண்டலடிப்பார்கள் ! இப்படி படம் முழுக்க தமிழ் சார்ந்த விஷயங்கள் எல்லாமே கொச்சைப்படுத்தப்பட்டிருக்கின்றன, சத்யராஜ் உட்பட ! ஆகதன் சத்யராஜின் முதல் மலையாளப் படம் என்பது எல்லோருக்கும் தெரியும். கடைசி மலையாளப் படமா என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும் !

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

12 comments on “ஆகதன் : விமர்சனம் ! நாணமில்லே சத்யராஜ் ?

  1. 🙂 அட இன்னுமா சத்யராஜையெல்லாம் நல்லவர்னு நம்பிக்கிட்டிருக்கீங்க? அவரெல்லாம் காசுக்கு மட்டும்தான் குரைப்பார். ஆனா, தொழில் சுத்தமா இருக்கும். தமில், தமில் நு பேசுறவந்தான் இன்னிக்கு தமிழ்க் காவலன்..

    Like

  2. //இப்படி ஒரு நச் கதாபாத்திரம் வேண்டும் என்பதற்காகத் தான் ரஜினியின் சிவாஜியில் கூட நடிக்கமாட்டேன் என்று சொன்னீங்களா சத்யராஜ் சார் ?//

    இதைத்தான் எங்க ஊர்ல வெந்த புண்ணுல வேல் பாய்ச்சறதுன்னு சொல்வாங்க! உள்ளூர்ல மேனேஜர் போஸ்ட் தந்தாக்கூட சுணங்கறவங்க சவுதியில மில்ரைட் ஃபிட்டரா வேலைக்குப் போவாங்க!!

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s