எந்திரன் : எனது பார்வையில்

 

எந்திரன் படத்தைப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் ஒருவழியாக நிறைவேறிவிட்டது ! பொதுவாகவே படம் வருவதற்கு முன் ஏகப்பட்ட பில்டப் களைக் கொடுத்தால் படம் கால் நீட்டிப் படுத்துவிடும் என்பது ஐதீகம் ! கந்தசாமி, இராவணன் என சமீபத்திய உதாரணங்கள் எக்கச் சக்கம். ஆனால் எந்த உதாரணத்திலும் சிக்காதவர் தான் ரஜினி. அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது எந்திரன்.

கிராபிக்ஸ், அது இது என ஏகப்பட்ட கதைகள் உலவியபோது படம் நல்லா இருக்குமா என ஒரு சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகங்களுக்கெல்லாம் படத்தில் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.  உண்மையிலேயே படத்தில் ஷங்கர் மிரட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஹாலிவுட் படங்களிலேயே லாஜிக் பாக்காத நமக்கு இதுல ஆங்காங்கே லாஜிக் பாக்காம இருக்கிறதொண்ணும் பெரிய விஷயமில்லை.

ரஜினி விரும்பிக் கேட்டுக் கொண்டதாலயா என்று தெரியாது, வழக்கத்துக்கு மாறாக படத்தில் ஏகப்பட்ட முத்தக் காட்சிகள். அழகாக இருந்த ஐஸ்வர்யா ராய், இந்தப் படத்தில் கொள்ளை அழகாகத் தெரிகிறார். ஆனால் அந்த உலக அழகையே சில இடங்களில் மிஞ்சுமளவுக்கு ரஜினியின் மேக்கப் அசத்தலாய் வசீகரிக்கிறது. குறிப்பாக காதல் காட்சிகளில் நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினியின் நடிப்பு கவித்துவமாய் சாரலடிக்கிறது.

வில்லனாய் வரும் ரஜினி மனதில் அமர்க்களமாய் வந்து அமர்ந்து கொள்கிறார். அடேங்கப்பா என வியக்கவைக்கும் அளவுக்கு ரஜினியின் வில்லத்தனமான விஷயங்கள் பிரமிப்பூட்டுகின்றன. “கருப்பு ஆடு” காட்சியில் கைத்தட்டல் அடங்க வெகு நேரமாகிறது. “என்னை யாராலும் அழிக்க முடியாது” எனும் சாதாரண வாசகத்தையே பஞ்ச் டயலாக் ரேஞ்சுக்கு சொல்ல ரஜினியால் மட்டும் தான் முடியும். சொல்லப்போனால் ஹீரோவை விட வில்லன் நடிப்பில் பொளந்து கட்டுவேன் என இன்னொரு முறை சொல்லியிருக்கிறார்.

இசை அமர்க்களம். பின்னணி இசையிலும் ரஹ்மானின் இசை புகுந்து விளையாடியிருக்கிறது. ஹாலிவுட் ஐகான் ஆகிவிட்டதான் இனிமேல் ஹாலிவுட் காரர்களும் இந்த படத்தைப் பார்க்கக் கூடும் எனும் அதீத சிரத்தையாய் இருக்கலாம். அல்லது ஷங்கர் ரஹ்மானை துரத்தித் துரத்தி வேலை வாங்கியிருக்கலாம். எப்படியோ இசை ரொம்பவே மிரட்டுகிறது.

பாடல் காட்சிகளைச் சொல்லவே வேண்டாம். ஷங்கரின் படத்தில் பாடல் காட்சிகள் அற்புதமாகத் தான் இருக்கும். இதில் கிளிமஞ்சாரோ, காதல் அணுக்கள் பாடல்களில் வியப்பூட்டுகிறார் மனுஷன். கிளிமஞ்சாரோ கடைசிப் பாடலாய் இருக்கும் என நினைத்தேன்… அரிமா..அரிமா அந்த இடத்தில் அமர்ந்திருக்கிறது அமர்க்களமாய்… ! இரும்பிலே ஒரு இதயம் பாடலை இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம்.

ஒளிப்பதிவு, லொக்கேஷன், காஸ்ட்யூம் என எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கின்றன. முதல் பாதி செதுக்கி வைத்தது போல கன கட்சிதம். இரண்டாம் பாதி இடையில் கொஞ்சம் நீஈஈண்டு அப்புறம் மறுபடியும் பரபரப்பில் முடிந்திருக்கிறது.

வாத்தியாரின் வசனங்கள் அசத்தல். எளிமையாய், கூர்மையாய் வசீகரிக்கிறது. ஒரு சின்ன உதாரணம்… ரோபோ – மனித காதல் பற்றிப் பேசுகையில்… “இது இயற்கைக்கு முரணானது என்கிறார்களே….”, “இல்லை.. இது இயற்கைக்குப் புதுசு ” !  வாவ் !

இனிமேல் இத்தகைய வசனங்களைத் தர அவர் இல்லையே எனும் ஏக்கம் கனமாய் வந்து அமர்கிறது.

ஷங்கருக்கு இது ஒரு மைல் கல் ! அடுத்து தைரியமாய் ஹாலிவுட் படம் இயக்கலாம். சூப்பர் ஸ்டாரின் மகுடத்தில் இது ஒரு சிகரக் கல் !

ஷங்கரின் கனவை நனவாக்கிய கலா நிதி மாறன் அடுத்து கமலை வைத்து மர்மயோகி படத்தை எடுத்து கமலின் கனவையும் நனவாக்குவாராக…

எந்திரனை மிஸ் பண்ணிடாதீங்க ! டையமாச்சு எந்தி…RUN

பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்….

23 comments on “எந்திரன் : எனது பார்வையில்

  1. //ஷங்கரின் கனவை நனவாக்கிய கலா நிதி மாறன் அடுத்து கமலை வைத்து மர்மயோகி படத்தை எடுத்து கமலின் கனவையும் நனவாக்குவாராக…
    //

    ரஜினி பட விமர்சனத்துல கமலைப் பற்றிப் பேசின ஒரே ஆள் நீங்களா தான் இருப்பீங்க…. 🙂

    Like

  2. எந்திரன் வெற்றி தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி. தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி.

    அரசியல்வாதி போல பேசவேண்டியிருக்கிறது,

    படம் நல்லாயிருக்குன்னு சொன்னதே மகிழ்ச்சி. கந்தசாமிக்கு முதல் ஷோ போய் நான் அழுத அழுகை இருக்கறதே. சொல்லி மாளாது. அதனால் எந்திரனை அடுத்து வாரத்திற்கு தள்ளி வைத்திருக்கிறேன். சீ்க்கரம் பார்க்கனும். ஆமாம் டிக்கெட் விலை எவ்வளவு.!

    Like

  3. மிகவும் அருமையான விமர்சனம். நாங்கள் மீடியா கம்பெனியில் பணிபுரிகிறோம் .அனால் எங்களுடைய தொழில் ரீதியான விமர்சகர்களை விட உங்கள் விமர்சனம் நேர்த்தியாக இருந்தது.எங்களுடைய எல்லா ஊழியர்களையும் உங்களின் இந்த விமர்சனத்தை படிக்க சொல்லி அனுப்பி இருந்தார் எங்கள் பாஸ்.உங்களின் இயல்பான,அழகான எழுத்து நடை எங்கள் எல்லாரையும் மிகவும் ரசிக்க வைத்தது.நன்றி.திரு சேவியர் அவர்களே.

    Like

  4. Boss

    Fantastic review…..

    Enthiran is a mega hit movie in TAMIL, Telugu & Hindi and is expected to create new Box Office History in collections and is going to be the first tamil film to enter many of the countries’ Box Office….

    Just wait for a day or two on this Box Office updates from the media

    Like

  5. படம் என்றாலே நமக்கு ஒத்துவராது…ஆனால் உங்கள் விமர்சனம் கேட்டதும் படம் பாக்கணும் போல தோணுகிறது.

    Like

  6. //படம் என்றாலே நமக்கு ஒத்துவராது…ஆனால் உங்கள் விமர்சனம் கேட்டதும் படம் பாக்கணும் போல தோணுகிறது.//

    பாருங்க… பாருங்க. பாத்துட்டு சொல்லுங்க 🙂

    Like

  7. //மிகவும் அருமையான விமர்சனம். நாங்கள் மீடியா கம்பெனியில் பணிபுரிகிறோம் .அனால் எங்களுடைய தொழில் ரீதியான விமர்சகர்களை விட உங்கள் விமர்சனம் நேர்த்தியாக இருந்தது.எங்களுடைய எல்லா ஊழியர்களையும் உங்களின் இந்த விமர்சனத்தை படிக்க சொல்லி அனுப்பி இருந்தார் எங்கள் பாஸ்.உங்களின் இயல்பான,அழகான எழுத்து நடை எங்கள் எல்லாரையும் மிகவும் ரசிக்க வைத்தது.நன்றி.திரு சேவியர் அவர்களே.
    //

    மனம் திறந்த வெளிப்படையான பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி !

    Like

  8. கந்தசாமிக்கு முதல் ஷோ போய் நான் அழுத அழுகை இருக்கறதே. சொல்லி மாளாது. //

    நொந்த சாமி ஆயிட்டீங்க போல 😀

    Like

Leave a comment