கல்கியில் உங்க “ஊர்ப்பாசத்தை” எழுதுங்க….

சில ஆண்டுகளுக்கு முன்பு எனது கவிதைச் சாலை தளத்தில் கிராமம் பற்றிய எனது பதிவு ஒன்றைப் போட்டிருந்தேன். அது கல்கி உதவி ஆசிரியரின் கண்ணில் பட்டு விட என்னைத் தொடர்பு கொண்டார்.

உங்களுடைய கிராம அனுபவம் சுவையாக இருந்தது. வாசகர்களுடைய கிராம அனுபவங்களை வாரா வாரம் எழுதும் “ஊர்ப்பாசம்” எனும் ஒரு தொடர் கொண்டு வந்தால் என்ன எனும் ஐடியா, உங்கள் படைப்பைப் படித்ததும் எனக்குத் தோன்றியது என்றார்.

நம்ம படைப்பு கூட யாருக்கோ ஒரு ஐடியா குடுக்கிறதே என ஓரத்தில் எழுந்த மகிழ்ச்சியை அங்கேயே உட்காரச் சொல்லி விட்டு

“ரொம்ப சந்தோசம்” என்றேன்.

“முதலில் உங்கள் கிராமம் பற்றி எழுதி அனுப்புங்கள். கிராமத்தின் புகைப்படங்களும், உங்கள் புகைப்படமும் அனுப்புங்கள்” என்றார்.

அனுப்பினேன்.

இந்த வார கல்கியில் “நல்லா இருக்கியா மக்களே” எனும் தலைப்பில் அது வெளியாகியிருக்கிறது.

இணைய நண்பர்களுக்கும் இந்த விஷயத்தைச் சொல்லுங்கள். அவர்கள் விரும்பினால் அவர்களுடைய ஊரின் நினைவுகளையும், நெகிழ்வுகளையும் பதிவு செய்யலாம். ஊரின் புகைப்படங்களும், எழுதுபவரின் புகைப்படமும் ரொம்ப முக்கியம் என்றார்.

கண்டிப்பா சொல்றேன் – என்றேன். 

சொல்லி விட்டேன். எல்லோருடைய மனதிலும் பசுமையாய் அசைபோட்டுக் கிடக்கும் ஊர்ப்பாசத்தைத் தட்டி எழுப்புங்கள். கல்கிக்கு அனுப்புங்கள்.

அவருடைய மின்னஞ்சல் முகவரி இது தான் : suryakalki@gmail.com

சமீப காலமாக அதிகரித்திருக்கும் இணைய, அச்சு ஊடகக் கைகுலுக்கல் எழுத்துகளுக்கிடையேயான வேறுபாட்டை விரைவிலேயே அகற்றிவிடும் எனும் நம்பிக்கையைத் தருகிறது.

எழுதுங்கள், வாழ்த்துக்கள்.

பிடித்திருந்தால்… வாக்களியுங்கள்…

Advertisements

10 comments on “கல்கியில் உங்க “ஊர்ப்பாசத்தை” எழுதுங்க….

  1. //நம்ம படைப்பு கூட யாருக்கோ ஒரு ஐடியா குடுக்கிறதே//

    வாவ் சேவியர்…. நிறைய கிராமங்களை எமக்குச் சுற்றிக்காட்டப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள்!

    Like

  2. //நம்ம படைப்பு கூட யாருக்கோ ஒரு ஐடியா குடுக்கிறதே என ஓரத்தில் எழுந்த மகிழ்ச்சியை அங்கேயே உட்காரச் சொல்லி விட்டு//

    இங்கதான் நீங்க எழுந்து நிக்குறீங்க சேவியர் சார்!

    வாழ்த்துக்களும், நன்றியும்!

    Like

  3. //இங்கதான் நீங்க எழுந்து நிக்குறீங்க சேவியர் சார்!

    வாழ்த்துக்களும், நன்றியும்!

    //

    நன்றி நண்பரே… 😀

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s