பாலியல் எனும் வார்த்தையை பலரும் பல விதமான கண்ணோட்டங்களில் அணுகுகின்றனர். சிலருக்கு பாலியல் என்றாலே மிட் நைட் கேள்வி – பதில் நிகழ்ச்சி தான் ஞாபகத்துக்கு வரும். கல் தோன்றி மண்தோன்றாக் காலத்திலேயே பேசப்படும் “சுய இன்பத்தால ஆண்மை போயிடுமா டாக்டர்” டைப் கேள்விகள் தான் சிலரைப் பொறுத்தவரை பாலியல் விழிப்புணர்வு விஷயங்கள். வார இதழ்களுக்குக் கல்லா கட்டும் முக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்று.
இன்னும் சிலருக்கு பாலியல் என்பது படுக்கையறைப் புரபசர் வாத்சாயனாரின் வழிமுறைகளை விளக்குவது. பாலியல் கல்வி என்றாலே பலரும் பதட்டப்படுவதற்கு இது தான் காரணம். “ஸ்கூல்ல தியரி சொல்லிக் குடுப்பீங்க. பிள்ளைங்க போய் பிராக்டிக்கல் கத்துகிட்டா என்ன பண்றது ?” என்பது சிலருடைய அங்கலாய்ப்பு !
இன்னும் சிலருக்கு பாலியல் என்பது பழுப்பேறிப் போன காகிதத்தில் கடைகளின் உள்பக்கமாய்த் தொங்கும் “சரோஜா தேவிக் கதைகள்”. யாருக்கும் தெரியாமல் வாங்கி, படித்து பொழுதைப் போக்கும் சமாச்சாரம். “எங்கும் நிறைந்திருக்கும். ஆனால் யார் கண்ணுக்கும் தெரியாது” எனும் புதிருக்கு கடவுள் என்பது மட்டுமல்ல விடை. இத்தகைய புத்தகங்களும் தான். இப்போது டெக்னாலஜியும், பிராட்பேண்டும், ஹைடெக் செல்பேசியும் வந்தபிறகு சரோஜா தேவி இ-புக் வடிவம் எடுத்திருக்கிறது. அது ஒன்று தான் வித்தியாசம்.
கடலின் கரையில் அலைகள் அதிகமாய் இருக்கும். ஆனால் அலைகளே கடலல்ல என்பதைச் சொல்லும் நூல்கள் தமிழில் மிக மிக அரிது. அந்த வெற்றிடத்தை கன கட்சிதமாக நிரப்பியிருக்கிறது எழுத்தாளர், சகபதிவர், நண்பர் பத்மஹரி அவர்களுடைய “பாலியல் – இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன?” எனும் நூல். தேவையற்ற, அதிகம் அலசப்பட்ட விஷயங்களை லாவகமாய்த் தாண்டி பாலியல் குறித்துத் தெரியாத விஷயங்களை அறிவியல் பூர்வமாக அணுகியதில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார் ஆசிரியர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். படித்தது உயிரி தொழில்நுட்பவியல். இப்போது ஜப்பானில் பி.ஹைச்.டி க்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதுவும் ஸ்டெம் செல் குறித்த ஆராய்ச்சி. ஏதோ ஒரு நரைத்த தலை பேராசிரியர் அடையவேண்டிய இடத்தை இந்தச் சின்ன வயதிலேயே அடைந்திருக்கும் எழுத்தாளருக்கு, தமிழும் கைவந்திருப்பது தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கிடைத்த பாக்கியம் என்று சொல்லலாம்.
ஏதோ பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்காரே, வாசிச்சா புரியுமா ? எனும் சந்தேகத்துடன் தான் இவருடைய எழுத்தை வாசிக்கத் துவங்கினேன். சரளமாய் ஓடித் திரியும் இவருடைய தமிழ் ஒரு இனிய ஆச்சரியம். அறிவியல் விஷயங்களை ஜஸ்ட் லைக் தேட், தமிழில் விதைத்து விட்டுப் போவதில் வெற்றி கண்டிருக்கிறார்.
ஃபீடோ பீலியா எனும் குழந்தைகள் மீதான வன்முறை, கள்ள உறவுகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், விலங்குகளோடான உறவுகள் – போன்ற பல விஷயங்கள் இதுவரை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் அலசப்பட்டதில்லை. அல்லது அதுகுறித்துத் தமிழில் நான் வாசித்ததில்லை. பத்மஹரியின் நூல் அந்த பணியை சிறப்பாகச் செய்திருக்கிறது.
முதல் நூலையே பாலியல் சார்ந்து எழுதியிருப்பதில் பாலியல் குறித்த புரிதல் சமூகத்துக்குத் தேவை எனும் அவருடைய அக்கறை புலப்படுகிறது.
தொடரும் அவருடைய நூல்களில் சமூகம் மேலும் பயனடையும் எனும் நம்பிக்கை பலப்படுகிறது !
வாழ்த்துக்கள் ஹரி ! தொடர்க உங்கள் பயணம்.
நூல் விலை : 130/; –
கிடைக்குமிடம் :
Blackhole Media Publication Limited, No.7/1, 3-rd Avenue, Ashok nagar, Chennai-600 083. India
Cell: (+91) 9600086474, 9600123146
Email: admin@blackholemedia.in
Website: http://blackholemedia.in/
Nice share
Thanks
LikeLike
ரொம்ப ரொம்ப நன்றிங்க. என்னை நானே வித்தியாசமான கோணத்துல பார்க்க முடிஞ்சது உங்க விமர்சனத்துல! அப்புறம், முதல் பந்திலேயே சிக்ஸர் அடிச்சது நானில்ல, உண்மையச் சொன்னா நீங்கதான்! உங்க விமர்சனம்தான் அதுக்கு உதாரணம்! பிரமாதம்…..
உங்க விமர்சனம் படிச்சபின்னாடி, எழுத்தாளருக்கான தகுதி என்னன்னு நீங்க சொன்னது நினைவுக்கு வருகிறது! நன்றிங்க…..
LikeLike
good nalla muyarchi.valthukal pala
LikeLike
Pingback: செக்ஸ்: “பாலியல், இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன?”, வாங்கிவிட்டீர்களா? « மேலிருப்பான்
Pingback: செக்ஸ்: “பாலியல், இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன?”, வாங்கிவிட்டீர்களா? « மேலிருப்பான்
நன்றி சீனு !
LikeLike
//ரொம்ப ரொம்ப நன்றிங்க. என்னை நானே வித்தியாசமான கோணத்துல பார்க்க முடிஞ்சது உங்க விமர்சனத்துல! //
உங்க தன்னடக்கம் வாழ்க 🙂
LikeLike
நன்றி கீதா 🙂
LikeLike
Pingback: என்னது அவருக்கு புற்றுநோயா? ஐயய்யோ…..அப்போ அவரு அவ்வளவுதானா??!! « மேலிருப்பான்