நந்தலாலாவா ? கிகுஜிரோவா ? : எது பெஸ்ட் ?

 நந்தலாலாவைப் பற்றி எழுதாவிட்டால் உம்மாச்சி கண்ணைக் குத்தி விடும் என்று கனவில் எச்சரிக்கப்பட்டேன். இருந்தாலும் கிகுஜிரோவைப் பார்க்கும் முன் நந்தலாலா குறித்து ஏதும் எழுதக் கூடாது என்று பிடிவாதமாய் இருந்தேன். காரணம் ஜப்பானிய கிகுஜிரோ சூப்பர் என்றும், தமிழ் நந்தலாலா அதன் ஈயடிச்சான் காப்பி என்றும் வடிவேலு பாணியில் ஷடடடடாஆ… என சலிக்குமளவுக்கு விமர்சனங்களும், மோதல்களும், சண்டைகளும்,  இத்யாதிகளும்.

இன்று தான் கிகுஜிரோவை அமைதியாக அமர்ந்து பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அற்புதமான படம். தாயின் அன்புக்காக ஏங்கும் சிறுவனின் உணர்வுகளை மிக அற்புதமாகப் படம்பிடித்திருந்த படம். மனதை வசீகரிக்கும் பின்னணி இசையில், கண்களை இதமாக்கும் ஒளிப்பதிவில், மென்மையாய் நம்மை அறியாமலேயே மூழ்கடித்து விடும் இயக்கத்தில் கிகுஜிரோ சபாஷ் போட வைக்கிறது.

முதலில் மிஷ்கினுக்கு ஒரு மிகப்பெரிய நன்றியைச் சொல்ல வேண்டும். கிகுஜிரா என்றொரு படம் இருப்பதே நந்தலாலா வராமல் இருந்திருந்தால் யாருக்கும் தெரிந்திருக்காது. ஒரு நல்ல ஜப்பானியப் படத்தை தமிழ் கூறும் நல்லுலகுக்கு காட்டிக் கொடுத்தாரே, அதுக்கு முதல் நன்றி.

கிகுஜிரோவின் தாக்கத்தில் உருவான தமிழ்ப்படம் நந்தலாலா அவ்வளவு தான். இரண்டு படங்களுக்குமிடையே ஒப்பிடக்கூடிய காட்சியமைப்புகளும், சிந்தனையும் இருந்தாலும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் இரண்டு படத்திலும் உண்டு.

ஒரு படத்தின் கருவை எப்படி மொழிக்கும், கலாச்சாரத்துக்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்ப உருவாக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நந்தலாலாவைச் சொல்லலாம். நந்தலாலாவின் படம் முழுக்க வரும் காட்சியமைப்புகளும், மாந்தர்களும், அவர்களுடைய நுட்பமான உணர்வுகளும் கிகுஜிரோவில் இல்லை. ஜப்பானிய திரைப்படத்தில் விரியும் கலாச்சார மனிதர்கள் நந்தலாலாவில் இல்லை. நாலு ஐட்டம் ஒரே மாதிரி இருக்குங்கறதுக்காக “அதே” சாப்பாடு என்பது கொஞ்சம் ஓவர் தான்.

இசைஞானியைப் பற்றிப் பேசாமல் நந்தலாலாவைப் பேசமுடியாது. சேதுவின் சாயல் ஆங்காங்கே இசையில் தெரிந்தாலும் உணர்வுகளின் அடிப்படையில் இசைஞானி இசையை விளையாட விட்டிருப்பது பிரமிக்க வைக்கிறது. பல காட்சிகளை அதன் உணர்வுகளின் அடிப்படையில் ஒரே இசைச் சங்கிலி பிணைத்து வைப்பது விவரிக்க முடியாத இன்பம்.

ஹாலிவுட் திரைப்படங்களின் பின்னணி இசை தனியே சிடிகளாக வெளியிடுவார்கள். அப்படிப்பட்ட சிறந்த பின்னணி இசை சிடிகளின் மேல் எனக்கொரு அதீத காதல் உண்டு. இன்னும் கிளாடியேட்டர் பின்னணி என் பேவரிட் லிஸ்டில் கம்பீரமாய் இருக்கிறது. அவ்வப்போது இசையைத் தவழ விட்டு கண்மூடிக் கிடப்பது ஒரு சோம்பேறிச் சுகம். அப்படி ஒரு பின்னணி இசை சிடி நந்தலாலாவுக்கு வரவேண்டும். அப்படி வந்தால் நாலு காப்பி வாங்க வேண்டும்.

இசைஞானியைப் பேசவிட்டு வசனங்கள் மௌனித்திருப்பது நந்தலாலாவின் இன்னொரு வசீகரம். கிகுஜிரோவில் பாதிப் படத்திலேயே சிறுவனுக்கு தாயைக் குறித்த உண்மை தெரிந்து விடுகிறது. அதன் பின் தவழும் காட்சிகள் சிறுவனின் சோகத்தையும் சுமந்தே பயணிக்கிறது. நந்தலாலாவோ மாறுபட்ட காட்சியமைப்பினால் ஆழமாகி விடுகிறது.

கிகுஜிரோவில் இறுதியில் தன் பாட்டியிடம் வந்து விடுகிறான் சிறுவன். தமிழில் அனியாயமாகப் பாட்டியை தனியே விட்டு விட்டு பாவம் சம்பாதித்து விட்டார் இயக்குனர். இருந்தாலும் வலிந்து திணிக்கப்படும் சுப்ரமணியபுரக் குப்பை வன்முறைகள், அங்காடித் தெருச் செயற்கைச் சோகங்கள் ஏதும் இல்லாமல் நிறைவாய் படத்தை முடித்திருப்பதில் மனம் நெகிழ்ந்து விடுகிறது.

இதொன்றும் புதுசில்லை. இருவர் சேர்ந்து பயணிக்கும் திரைப்படங்கள் ஹாலிவுட்டிலும் பிற மொழிகளிலும் நிறையவே உண்டு. அதில் கிகுஜிரோவும் ஒன்று.

கிகுஜிரோவின் அதே தொனியில், அதே காட்சி மொழியில் நந்தலாலாவை மிஷ்கின் எடுத்திருந்தாலும் நந்தலாலா, ஒரிஜினல் படத்தை விட பல மடங்கு உயரமாய் இருக்கிறது என்பது எனது கருத்து.

தவமாய் தவமிருந்து படத்துக்குப் பின் என் மனதில் உயரமாய் வந்து அமர்ந்து கொண்ட இரண்டாவது தமிழ்ப்படம் நந்தலாலா !

நன்றி மிஷ்கின்.

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.

17 comments on “நந்தலாலாவா ? கிகுஜிரோவா ? : எது பெஸ்ட் ?

 1. கிகுஜிரோவில் இறுதியில் தன் பாட்டியிடம் வந்து விடுகிறான் சிறுவன். தமிழில் அனியாயமாகப் பாட்டியை தனியே விட்டு விட்டு பாவம் சம்பாதித்து விட்டார் இயக்குனர். இருந்தாலும் வலிந்து திணிக்கப்படும் சுப்ரமணியபுரக் குப்பை வன்முறைகள், அங்காடித் தெருச் செயற்கைச் சோகங்கள் ஏதும் இல்லாமல் நிறைவாய் படத்தை முடித்திருப்பதில் மனம் நெகிழ்ந்து விடுகிறது.

  அற்புதமான Vimarsanam.

  Like

 2. மிஸ்கின் அவர்களே, ஒருத்தன்கிட்ட இருக்கும் பொருளை திருடிக் கொண்டு போய், அதை பாலிஷ் பண்ணி ஒரிஜினல் சொந்தக்காரனை விட நன்றாக வைத்திருப்பது எல்லாம் வேறு விஷயம், முதலில் நீ திருடன் அதற்க்கப்புறம் நீ என்ன செய்திருந்தாலும், இந்த உண்மையை மாற்றப் போவதில்லை. The God Father- ஐத் திருடிய மணிரத்னம், மற்றும் உம்மை போன்றவர்களை கொண்டாடும் முட்டாள்களை என்ன சொல்வது?

  Like

 3. அவ்வப்போது இசையைத் தவழ விட்டு கண்மூடிக் கிடப்பது ஒரு சோம்பேறிச் சுகம். //

  Intha varigalai rasithen… Unmaiyileye athu oru rajasugam thaan

  Like

 4. //உம்மாச்சி என்றால் என்ன!.

  கடவுளின் பெயரா!..

  //

  “ஜெகதீஸ்வரனுக்கே” தெரியாத ஒரு விடையா ? 😉

  Like

 5. /உம்மை போன்றவர்களை கொண்டாடும் முட்டாள்களை என்ன சொல்வது?
  //

  அறிவுஜீவியாய் தன்னைக் கருதிக் கொள்பவர்கள் பாராட்டாமல் இருந்தாலே போதுமானது! 🙂

  Like

 6. அன்புடையீர், நான் தங்களது பதிவு பதிவு குறித்தோ, தங்களைப் பற்றியோ எதுவும் சொள்ளவில்லை. என்னுடைய கருத்து தங்களது மனம் வருந்தும்படி செய்திருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். இவர் எப்படித்தான் படத்தை எடுத்திருந்தாலும், இன்னொருத்தருடைய கதையை திருடியவன் என்ற இமேஜ் தான் கண் முன்னே நிற்கிறது, என்னால் அதை மறந்து இந்த திரைப் படத்தை பார்க்க முடியவில்லை. அது மட்டுமல்ல சமீபத்தில் விஜய் TV யில் நடந்த நிகழ்ச்சியில் எல்லோரும் இவர் ஏதோ சொந்தமாக சாதித்து விட்டது போலவும், சிறந்த படைப்பாளி போலவும் ஒரு மாயையை திரை உலகினர் எல்லோரும் உருவாக்கிக் கொண்டிருந்தனர். உண்மையில் இந்த படைப்புக்குச் சொந்தக்காரன் வேறு எவனோ, இன்னொருத்தன் படைப்பைத் திருடி அதை தன்னுடையது என்று சொன்னதோடு மட்டுமன்றி, அதை மற்றவர்கள் புகழவும் கேட்டுக் கொண்டிருக்கிறான். அதே போல மணிரத்னம் படங்கள் அத்தனையும் [மவன ராகம் தவிர] திருடப் பட்டவைதான். ஆனாலும் மீடியாக்களும், பத்த்ரிகைகளும் இந்த ஆளை ஏத்து….ஏத்து என ஏத்தி வைத்திருக்கிறார்கள். அதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மற்றபடி என்னுடைய பின்னூட்டம் நேரடியாக மிச்கினைப் பார்த்து கேட்பது போல , தங்களை எதுவும் சொல்லவில்லை.

  Like

 7. அன்பின் ஜெயதேவ். நன்றி. உங்கள் பின்னூட்டத்துக்கும் பார்வைக்கும். நான் இரண்டு திரைப்படங்களையும் ஒப்பிட்டேன் அவ்வளவு தான். மிஷ்கினின் எடுத்தாள்கையை எங்கும் நான் நியாயப்படுத்தவில்லை. நந்தலாலா கிகுஜிரோவின் பாதிப்பில் பிறந்த குழந்தை என்பதை மறுக்கவும் இல்லை. வாய்ப்புக் கிடைத்தால் கிகுஜிரோவைப் பாருங்கள்.

  Like

 8. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்???????… திருட்டை ஒழிக்க முடியாது! 😉 🙂

  Like

 9. //பாஸ் நம் பிளாக் மீடியாவின் புத்தக கண்காட்சி ஸ்டால் நம்பர் என்ன?.

  //

  இந்த தடவை ஸ்டால் எடுக்கவில்லை. மீனாட்சி புக் ஸ்டோர் உட்பட நான்கைந்து இடங்களில் கிடைக்கும் !

  Like

 10. /திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்???????… திருட்டை ஒழிக்க முடியாது//

  திருடுறதுக்கு எதுவுமே இல்லைங்கற நிலமை வந்தா ? 🙂 😉

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s