தைப் பொங்கலும், ஜீன்ஸ் பெண்களும்

  

காலண்டர்கள்
சிவப்பு
மைல் கல்லில்
பொங்கல்  என்கின்றன.
 
கிளிக்கினால்
பூச்சிந்தும் இணைப்புகளுடன்
மின்னஞ்சல்கள்
வாழ்த்துச் சொல்கின்றன
 
ஃபேஸ்புக் வாசிகளின்
வால்களில்
வாழ்த்துச் சுவரொட்டிகள்
ஒட்டப்பட்டிருக்கின்றன.

அவசரக் விரல்களுக்காய்
டுவிட்டர் கிளிகள்
வாழ்த்துத் தானியங்களை
கொத்தி விதைக்கின்றன.

கைக்கெட்டும் தூரத்து
நண்பனுக்கும்
ஆர்குட்டு தான் வசதிப்படுகிறது
வாழ்த்துச் சொல்ல.

இணையம் இல்லா
அப்பாவிகளுக்காய்
எஸ்.எம்.எஸ் கள்
நட்சத்திரப் புள்ளிகளுடன்
டிஜிடல் கரும்புகளை
ஏற்றுமதி செய்கின்றன.

செல்போனும் இல்லாதவர்கள்
சபிக்கப்பட்டவர்கள்
அவர்களுக்கு
விழாக்கால வாழ்த்துகள்
தடைவிதிக்கப்பட்டிருக்கின்றன.

பொங்கலுக்குக்
கொம்பு கழுவ
மாடுகிடைக்காத அவஸ்தையில்
டிஷ் கிராமங்களும்
திகைக்கின்றன.

“வாட்ஸ் பொங்கல் மாம் ?”
எனும்
மெட்ரிகுலேஷனின் கேள்விக்கு
இட்ஸ் சம் டமிலர் ஃபெஸ்டிவல் டியர்
என்கின்றனர்
கழுத்தில் டேக் மாட்டிய ஜீன்ஸ் மம்மிகள்.
 

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

16 comments on “தைப் பொங்கலும், ஜீன்ஸ் பெண்களும்

 1. இட்டீஸ் ஸம் தமிலர் பெஸ்டிவல். தமிலர் என்ற பெயராவது ஞாபகம் வந்ததே? அதுவே பொங்கல் கொண்டாடியதற்குச் சமன். இல்லையா?

  Like

 2. //“வாட்ஸ் பொங்கல் மாம் ?”
  எனும்
  மெட்ரிகுலேஷனின் கேள்விக்கு
  இட்ஸ் சம் டமிலர் ஃபெஸ்டிவல் டியர்
  என்கின்றனர்//

  ரொம்ப ரசிச்சேன்.

  http://kgjawarlal.wordpress.com

  Like

 3. ஹஹா அருமை அருமை அருமையிலும் அருமை.
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என் LATEஆனா வாழ்த்துக்கள். 😀

  Like

 4. /ஹஹா அருமை அருமை அருமையிலும் அருமை.
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என் LATEஆனா வாழ்த்துக்கள்//

  நன்றி 🙂

  Like

 5. ////“வாட்ஸ் பொங்கல் மாம் ?”
  எனும்
  மெட்ரிகுலேஷனின் கேள்விக்கு
  இட்ஸ் சம் டமிலர் ஃபெஸ்டிவல் டியர்
  என்கின்றனர்//

  ரொம்ப ரசிச்சேன்
  //

  நன்றி ஜவஹர்.. ரொம்ப நாளைக்கு அப்புறம் வரீங்க, ரொம்ப நன்றி 🙂

  Like

 6. //இட்டீஸ் ஸம் தமிலர் பெஸ்டிவல். தமிலர் என்ற பெயராவது ஞாபகம் வந்ததே? அதுவே பொங்கல் கொண்டாடியதற்குச் சமன். இல்லையா//

  சொல்லியதற்கு நன்றி சொல்லுகிறேன் 🙂

  Like

 7. Kavithai Vendumanal Arumayaga Irukkalam. Anal Innum Tamil manam engum veesi konduthan irukkindrathu. Endume Azhikka mudiyathu Nam Parambariyamum,Pandigaigalum.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s