பாடல் : பூம் பூம்
இசை : சஞ்சே
பாடல் வரிகள் : சேவியர் & சஜித் ( ஆங்கிலம் )
குரல்கள் : எம்.சி ஜீவா, சஜித், டாட்டூ த ராப்பர்.
தயாரிப்பு : TBB Entertainment, London.
பாடல் :
மினு மினு விழியில மிஸ்ஸானேன்
மன்மதக் கலையில பாஸானேன்
கனவில கனவில கிஸ்ஸானேன்
உன்னாலே யூகே டு மதுர – பூம் !
அடிக்கடி இடையில தூசானேன்
தக தக அழகில புஸ்ஸானேன்
உனதிரு இதழில ஜூஸானேன்
யூகே டு மதுர பூம் பூம்
கள்ளூறும் மேனியடி
கதகளி ஆடுமடி
பாத்தாலே போதையேறும்
சோமபானக் கிண்ணமடி
கஞ்சாவும் தோக்குமடி கண்ண பாத்தா – அடி
மூச்சுக்கே மூச்சு முட்டும் முன்ன பாத்தா
விளையாட வா – கொஞ்சம்
கொள்ளையிட வா – உன்
மேனியிலே ஆயகலை கற்றுத் தர வா.
முத்தமிட வா – ஒரு
குத்தமில்ல வா – அட
அச்ச மட நாணமெல்லாம் அழகில்லை வா
ஃ
ஆங்கிலம்
ஃ
லட்டான தேகம்
கட்டான மேகம்
எட்டியே நின்னா
கிட்டாது வேகம்
தட்டித் தட்டித் தானே செய்வாங்க சிற்பம்
தட்டாமநீ நின்னா கிட்டாது சொர்க்கம்
பெட்டைம் ஸ்டோரி
கிக்கான சாரி
மூன்லைட் மேனி
வித்தையை காமி
பொத்திப் பொத்தி வெச்சா தாங்காது மேகம்
கட்டிலிலே காலுரெண்டும் தூங்காத நாகம்
ஃ