பைபிள் மாந்தர்கள் 51 (தினத்தந்தி) இறைவாக்கினர் எலிசா

52 இறைவாக்கினர் எலிசா

பண்டைக் காலத்தில் வாழ்ந்த இறைவாக்கினர்களில் மிகவும் முக்கியமானவர் எலிசா. இவருடைய வாழ்க்கைக் காலம் கிமு 850 களுக்கு முன்பே ஆரம்பித்து 780 களுக்குப் பின்பும் தொடர்ந்தது என்பது வரலாறு. அகசியா, யோராம், ஏகூ, யோவகாசு மற்றும் யோவாசு போன்ற ஐந்து மன்னர்களுடைய காலத்தில் இவருடைய பணி விரிந்திருந்தது.

எலிசாவின் குரு எலியா. எலியா கடவுளிடம் எடுத்துக் கொள்ள இருந்த தருணத்தில் எலியா எலிசாவை நோக்கி,

“என்னை கடவுள் எரிகோ நகருக்கு அனுப்பியிருக்கிறார் நீ இங்கேயே இரு” என்றார். எலிசாவோ “உம்மை விட்டுப் பிரியவே மாட்டேன்” என்றார். எலியா இவ்வுலகை விட்டுப் பிரியும் நாள் இது தான் என்பதை அறிந்திருந்ததால் ஐம்பது இறைவாக்கினர் அவருடன் இருந்தார்கள்

எலியாவும், எலிசாவும் யோர்தான் ந‌திக்க‌ரையில் வ‌ந்தார்க‌ள்.எலியா த‌ன‌து போர்வையைச் சுருட்டி ந‌தியை அடித்தார். த‌ண்ணீர் வில‌கி வ‌ழிவிட்ட‌து. ம‌றுக‌ரைக்கு இருவ‌ரும் சென்ற‌ன‌ர்.

எலியா எலிசாவிட‌ம், “ச‌ரி, நான் விண்ண‌க‌த்துக்கு எடுத்துச் செல்ல‌ப்ப‌டும் முன் உன‌க்கு என்ன‌ வேண்டும் ?” என்று கேட்டார். “உம‌து ஆவி, இரும‌ட‌ங்காக‌ என்னிட‌ம் இருப்ப‌தாக‌” என்றார் எலிசா. சொத்துக‌ளில் இர‌ண்டு ப‌ங்கைக் கொடுப்ப‌து த‌லைச்ச‌ன் ம‌க‌னுக்குரிய‌ உரிமை என்கிற‌து உபாக‌ம‌ம் 21:17. இத‌ன் மூல‌ம் எலிசா எலியாவின் த‌லைச்சன் மகனாகும் உரிமையைக் கேட்டார்.

எலியாவோ, ” உன்னிட‌மிருந்து நான் எடுத்துக் கொள்ள‌ப்ப‌டும் போது நீ என்னைப் பார்த்தால் அது கிடைக்கும். இல்லையேல் கிடைக்காது” என்றார்.

திடீரென‌ நெருப்புக் குதிரைக‌ள் நெருப்புத் தேருட‌ன் பாய்ந்து வ‌ந்து இருவ‌ருக்கும் இடையே நின்ற‌ன‌. சுழ‌ற்காற்று அடித்த‌து. எலியா விண்ண‌க‌த்துக்கு எடுத்துக் கொள்ள‌ப்ப‌ட்டார். அவ‌ரிட‌மிருந்து விழுந்த‌ போர்வை தான் க‌த‌றி அழுத‌ எலிசாவுக்குக் கிடைத்த‌து.

அந்த‌ப் போர்வையை எடுத்து “எலியாவின் க‌ட‌வுளாகிய‌ ஆண்ட‌வ‌ர் எங்கே இருக்கிறார்” என்று சொல்லிய‌ப‌டியே யோர்தான் ந‌தித் த‌ண்ணீரில் அடித்தார் ! த‌ண்ணீர் பிள‌வுப‌ட்டு, நீரின் ந‌டுவே ஒரு வ‌ழி தோன்றிய‌து !

இந்த‌ நிக‌ழ்ச்சியைப் பார்த்த‌ ம‌ற்ற‌ இறைவாக்கின‌ர்க‌ள் எல்லோரும், எலியாவின் ஆவி எலிசாவின் மீது வ‌ந்திருக்கிற‌து என‌ அவ‌ரின் பின்னால் அணிதிர‌ண்ட‌ன‌ர்.

அத‌ன் பின்னால் எலிசாவின் செய‌ல்க‌ள் எல்லாம் விய‌க்க‌ வைக்கும் அதிச‌ய‌மாக‌ இருந்த‌ன‌.

எரிகோவில் ஒரு நீரூற்று இருந்த‌து. க‌ச‌ப்பான‌ த‌ண்ணீருட‌ன், தாகத்துக்கும் உதவாமல், விளைச்ச‌லுக்கு உத‌வாத‌ வ‌கையில் இருந்த‌து.

“கொஞ்ச‌ம் உப்பு கொண்டு வாருங்க‌ள்” என்றார் எலிசா. உப்பு வ‌ந்த‌து. உப்பைத் த‌ண்ணீரில் கொட்டிய‌ எலிசா, “இன்று முத‌ல் ஆண்ட‌வ‌ர் இதை ந‌ல்ல‌ நீராய் மாற்றியிருக்கிறார்!” என்றார். அது அப்ப‌டியே ந‌ட‌ந்த‌து !

அங்கிருந்து அவ‌ர் பெத்தேலுக்குச் செல்லும் போது சிறுவ‌ர்க‌ள் கூட்ட‌மாய் வ‌ந்து “வ‌ழுக்கைத் த‌லையா… வ‌ழுக்கைத் த‌லையா” என‌ கிண்ட‌ல‌டித்த‌ன‌ர். எலிசா திரும்பிப் பார்த்து அவ‌ர்க‌ளைச் ச‌பித்தார். அவ்வ‌ள‌வு தான் காட்டிலிருந்து இர‌ண்டு பெண் க‌ர‌டிக‌ள் சீறிப் பாய்ந்து வ‌ந்து அந்த‌ சிறுவ‌ர் கூட்ட‌த்தை க‌டித்துக் குத‌றிய‌து.

இறைவாக்கின‌ர் ஒருவ‌ரின் ம‌னைவி ஒருமுறை வ‌ந்து எலிசாவிட‌ம் அழுதாள்.

“என் க‌ண‌வ‌ன் இற‌ந்து விட்டான். இர‌ண்டு ம‌க‌ன்க‌ள் உண்டு. க‌ட‌ன்கார‌ர்க‌ள் வ‌ந்து பிள்ளைக‌ளை அடிமையாக்கிக் கொண்டு செல்ல‌ வ‌ந்திருக்கிறார்க‌ள். காப்பாற்றுங்க‌ள்”

வீட்டில் என்ன‌ இருக்கிறது

“கொஞ்ச‌ம் எண்ணை ம‌ட்டும்”

“ச‌ரி, ப‌க்க‌த்திலிருக்கும் வீடுக‌ளிலிருந்தெல்லாம் காலி பாத்திர‌ங்க‌ள் வாங்கு. அதில் அந்த‌ எண்ணையை ஊற்று.” எலிசா சொன்னார்.

அந்த‌ப் பெண் அப்ப‌டியே செய்தாள். என்ன‌ ஆச்ச‌ரிய‌ம் ! கொஞ்ச‌மாய் இருந்த‌ எண்ணை வீடு முழுக்க‌ இருந்த‌ பாத்திர‌ங்க‌ளெல்லாம் நிர‌ம்பிய‌து. எல்லா பாத்திர‌ங்க‌ளிலும் ஊற்றி முடித்த‌தும் எண்ணை தீர்ந்த‌து.

அந்த‌ப் பெண் ஓடிப் போய் எலிசாவிட‌ம் அதைச் சொன்னாள்.

“அதை விற்று க‌ட‌னை அடை. மிச்சத்தை வைத்து வாழ்க்கை நடத்து” எலிசா சொன்னார். !

பிள்ளைப் பேறு இல்லாத‌ சூனேம் ந‌க‌ர‌ப் பெண் ஒருத்திக்கு இவ‌ருடைய‌ இறைவாக்கினால் குழ‌ந்தை பிற‌ந்த‌து. சில ஆண்டுகளுக்குப் பின் அந்த‌க் குழ‌ந்தை இற‌ந்து போன‌து. அந்த‌த் தாய் எலிசாவிட‌ம் வ‌ந்து அழுதாள். அவ‌ர் அந்த‌க் குழ‌ந்தைக்கு உயிர் கொடுத்தார் !!!

ஒரு முறை விஷம் கலந்த உணவிலிருந்து விஷத்தை நீக்கினார். அந்த உணவை மக்கள் உண்டார்கள். இன்னொரு முறை இருப‌து வாற்கோதுமை அப்ப‌ங்க‌ளையும், கொஞ்ச‌ம் தானிய‌ங்க‌ளையும் எடுத்து ஆண்ட‌வ‌ர் பெய‌ரால் நூறு பேருக்கு வ‌ழ‌ங்கினார். அவ‌ர்க‌ள் வ‌யிறார‌ உண்ட‌பின் மீதியும் இருந்த‌து !

இப்ப‌டி எலிசா எனும் இறைவாக்கின‌ர் செய்த‌ அற்புத‌ங்க‌ள் அனேக‌ம். தொழுநோய் குண‌மாக்குத‌ல், உயிர்ப்பித்த‌ல், அப்ப‌ம் ப‌லுக‌ச் செய்த‌ல் என இவருடைய பல புதுமைகள் இறைமகன் இயேசுவின் புதுமைகள் ஒத்திருப்பது வியப்பானது !

*

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s