என்னைப் பற்றி

xavier-portrait-small.JPG
வாழ்க்கை என்பது ஒரு யாத்ரீகனின் பயணத்தைப் போன்றது. இதில் கவனிப்புகளே பிரதானம். பயணத்தின் நீளங்களையோ, அகலங்களையோ, ஆழங்களையோ, உயரங்களையோ நிர்ணயம் செய்து விடமுடியாத சாலை நமக்கு முன்னால் நீண்டு கிடக்கிறது.

இடுக்கமான நெரிசல் நிறைந்த சந்து ஒன்றில் காரோட்டும் கவனம் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை ஆக்கிரமிக்கிறது. யாரையும் காயப்படுத்தாமலும், காயப்படுத்துபவர்களுக்கு எதிராய் குரல் எழுப்பத் தயங்காமலும், உடன் பயணிப்போருடன் அளவளாவி சிரிக்க முரண்டு பிடிக்காமலும் தொடர்கிறது எனது பயணம்.

இந்தத் தளத்தில் நீங்கள் கம்பனின் கவிதைக் கூறுகளையோ, சேக்ஸ்பியரின் ரசனைக் கூறுகளையோ சந்திக்காமல் போகலாம், ஆனால் நீங்கள் நினைக்கும் சிலவற்றைச் சொல்லியிருப்பேன். காரணம் நான் வானத்திலிருந்து பூமியைப் பார்க்கும் வல்லூறல்ல, பூமியிலிருந்து பூமியைப் பார்க்கும் சிறு மண்புழு.

வாழ்க்கையும் எழுத்துகளும் அன்பை மட்டும் முன்னிறுத்துகையில் வணக்கத்துக்குரியவை ஆகி விடுகின்றன. வெறுப்பையோ, பிரிவினைகளையோ உருவாக்காமல் நட்பையும், அன்பையும், தகவல்களையும் பகிரவேண்டும் என்பதே என் எழுத்துகளின் நோக்கம். காலத்தின் பாதையில் பல எழுத்துகள் தவறிழைத்திருக்கலாம், காயப்படுத்தியிருக்கலாம், பாதை விலகியிருக்கலாம். நண்பர்களாகிய உங்களிடம் அதற்கா பணிவான மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்னமாய் மாறி அல்லன விடுத்து நல்லன எடுத்து நட்புடன் தொடர்க என அன்புடன் வேண்டுகிறேன்.

எனது நூல்கள்

1. ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும் (கவிதை)

2. மன விளிம்புகளில்(கவிதை)

3. நில் நிதானி காதலி (கவிதை)

4. கல் மனிதன். (கவிதை)

5. இயேசுவின் கதை/ஒரு புதுக்கவிதைக் காவியம். (கவிதை)

6. அன்னை ( அன்னை தெரசாவின் வாழ்க்கை ) (கவிதை)

7. கி.மு / விவிலியக் கதைகள் ( கதைகள் )

8. இயேசு என்றொரு மனிதர் இருந்தார் (வரலாறு )

9. கிறிஸ்தவம் – ஒரு முழுமையான வரலாறு

10. அலசல் – கட்டுரைத் தொகுப்பு.

11. ஷாரூக்கான் – Man of Positive Energy

12. ராஜபக்ஷே – சூழ்ச்சியும், தந்திரமும்

13. ராகுல்காந்தி – மாற்றங்களின் நாயகன்

14. டிப்ஸைப் படிங்க, லைஃப்ல ஜெயிங்க

15. வாங்க ஜெயிக்கலாம் ( கட்டுரைகள் )

16. குழந்தைகளால் பெருமையடைய வேண்டுமா ? ( கட்டுரைகள் )

17. ஐ.டி யில் வேலை வேண்டுமா ? (வழிகாட்டும் நூல் )

18. ஏன் சாப்பிட வேண்டும் மீன் ?

19. சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம் (தினத்தந்தி தன்னம்பிக்கைக் கட்டுரைகள் )

20. நிக் வாயிச்சஸ் : வாழ்க்கை வரலாறு.

21. நீயும் வெல்வாய் (தன்னம்பிக்கை நூல் )

22. தெரியும் ஆனா தெரியாது

23. வெள்ளக்காரன் சாமி ( சிறுகதைகள் )

24. வேலை நிச்சயம் ( வழிகாட்டும் நூல் )

25. சேவியர் கவிதைகள் காவியங்கள் ( உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை)

26. அன்னை .. வாழ்க்கை அழகானது.

27. இயேசு வரலாறு

28. சாலமோன் . நீதிமொழிக் கவிதைகள்

29. பெண் . ரகசியமற்ற ரகசியங்கள்

30. படிகளில் அமர்ந்திருக்கும் கதைகள்.

*
பயணத்தின் பாதையில் சில மலர்கள்…

1. வழியோரம் நதியூறும் – கவிதைக்குக் கிடைத்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பாராட்டு

2. சன் பண்பலை மற்றும் சன் டிவி இணைந்து நடத்திய “வைரத்தின் நிழல்கள்” கவிதைப் போட்டியில் “என்ன சொல்லி விழுகிறது” எனும் தலைப்பில் எழுதிய கவிதைக்கு முதல் பரிசு. வைரமுத்து கையால் பரிசும், பாராட்டும்.

3. கிறிஸ்தவ தமிழ் இலக்கியப் பேரவை வழங்கிய 2006ம் ஆண்டுக்கான சிறந்த நூல் விருது இயேசுவின் கதை நூலுக்கு

4. குமரி மாவட்ட அன்னை தெரசா நற்பணி மன்றத்தினரின் பரிசு அன்னை நூலுக்கு

5. சுஜாதா அவர்களால் ‘புது நானூறு’ பகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை ‘வரவேற்பாளர்’.

6. மரத்தடி – திண்ணை இணைந்து நடத்திய அறிவியல் புனை கதைப் போட்டியில் சுஜாதா அவர்களால் முதல் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஏலி ஏலி லாமா சபக்தானி’

7. கவிப்பேரரசு அவர்கள் தனிப்பட்ட முறையில் பாராட்டிய ‘மனசே லவ் பிளீஸ்’ கவிதைக் கதை.

8. கவிஞர் அறிவு மதி, கவிஞர் முத்துகுமார், கவிஞர் யுகபாரதி ஆகியோரால் பாராட்டப்பட்ட சில கவிதைகள்.

9. தமிழ் உலகம் நடத்திய கவிதைப் போட்டியில் பரிசு

10. உயிரெழுத்து குழுவினர் ‘அன்புடன்’ வழங்கிய கவித் தென்றல் எனும் பட்டம்.

11. லண்டனைத் தலைமையாய்க் கொண்டு இயங்கும் “டி.பி.பி” குழுவினரின் ஆல்பங்களுக்காய் எழுதிய 50க்கும் மேற்பட்ட பாடல்கள். ( ஒன்வே, காதல் வேகம், மன்மதா, யாரிவன், பைரவன், பிளாக் அன்ட் வயிட் ….. ). ஒரு பாடலைப் பாடிய ஆனந்தம் 🙂

12. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சில கவிதைகள்

13. ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், பசுமை விகடன், சக்தி விகடன், கல்கி, குமுதம், தமிழ் ஓசை, தை, புதிய பார்வை, த சண்டே இந்தியன், மங்கையர் மலர், பெண்ணே நீ, தேவதை, மனோரமா இயர் புக், திண்ணை, அம்பலம், தமிழோவியம், காதல், சிங்கை இணையம், அந்தி மழை, அம்பலம், தினம் ஒரு கவிதை, நிலாச்சாரல், சங்கமம், ஹெல்த்கேர், நம்ம அடையாளம், இணைய குழுக்கள்… போன்றவற்றில் படைப்புச் சுவடுகள் பதிக்கக் கிடைத்த வாய்ப்பு

14. தினத்தந்தி இதழில் தொடர்ந்து இயங்கும் வாய்ப்பு. “சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்” தொடருக்குக் கிடைத்த பிரமிப்பூட்டும் வரவேற்பு. கம்ப்யூட்டர் ஜாலம் பகுதியில் தொடர்ந்து இயங்கும் ஆனந்தம்.

15. தினத்தந்தி ஆன்மீக மலரில் “பைபிள் மாந்தர்கள்” தொடர்.

16. தேசோபகாரி கிறிஸ்தவ ஆன்மீக இதழில் வேர்களை விசாரிப்போம் தொடர்.

17. ஜெர்மனியில் வெளியாகும் “வெற்றிமணி” இதழில் எழுதும் படைப்புகள்.

18. சிவத் தமிழ் இதழ் ( ஜெர்மன் ) கட்டுரைகள்.

19. ஜெயா தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி பேட்டிகள், பகிர்வுகள்.

20. ஜெருசலேம் பல்கலைக்கழக ‘பரம எழுத்தோவியர்’ பட்டம்.

21. கவிதை உறவு .. சிறந்த நூலுக்கான பரிசு, குழந்தைகளால் பெருமையடைய வேண்டுமா நூலுக்கு.

22. சர்வதேச அளவில் நடத்தப்பட்ட பாரதிதாசன் கவிதைப்போட்டியில் கிடைத்த இரண்டாம் பரிசு.

&
23. கவுரவ டாக்டர் பட்டம் .. எருசலேம் பல்கலைக்கழக இலக்கியப் பிரிவு.
எழுத்துக‌ளை வாசிப்போம்
இத‌ய‌ங்க‌ளை நேசிப்போம்.

:
ந‌ட்புட‌ன் ப‌ய‌ணிப்போம்.

:

writerxavier@gmail.com

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை. அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
.::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

172 comments on “என்னைப் பற்றி

  1. “நான் வானத்திலிருந்து பூமியைப் பார்க்கும் வல்லூறல்ல, பூமியிலிருந்து பூமியைப் பார்க்கும் சிறு மண்புழு.”

    நல்ல வரிகள் . ..

    -மிகவும் ரசிக்கும் படியாக
    இருக்கிறது உங்கள் தளம்

    Like

  2. நன்றி தோழி. வருகைக்கும் பாராட்டுக்கும். தொடர்ந்து வாசியுங்கள், கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

    Like

  3. உங்கள் வலைப்பூ படித்து மகிழ்ந்தேன், வாழ்த்துக்கள்

    என் சுரேஷ், சென்னை

    Like

  4. மிக ந்ன்றாக இருந்தது… ந்ம்மால் நிர்ண்யம் செய்ய முடியாத சாலை ந்மக்கு முன்னால் விரிந்து கிடப்பது தான் வாழ்வின் சுவாரஸயமே சேவியர்…… திருப்பங்கள் இல்லாத் நேர் கோட்டால் ந்ல்ல கோலங்கள் மட்டுமல்ல ந்ல்ல அநுபவங்களும் கிடைக்காமல் போகலாம்…… தொடரட்டும் உங்கள் பயணமும் ஸ்நேகமும்…..

    Like

  5. இடுக்கமான நெரிசல் நிறைந்த சந்து ஒன்றில் காரோட்டும் கவனம் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை ஆக்கிரமிக்கிறது. யாரையும் காயப்படுத்தாமலும், காயப்படுத்துபவர்களுக்கு எதிராய் குரல் எழுப்பத் தயங்காமலும், உடன் பயணிப்போருடன் அளவளாவி சிரிக்க முரண்டு பிடிக்காமலும் தொடர்கிறது எனது பயணம;

    oooooooooooo…!! nallathu.

    Like

  6. அன்புடையீர்

    தங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. என்னையும் தங்கள் முயற்சியில் இணைத்துக் கொள்ளுங்கள். மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறது தமிழ் சமூகம். எழுத்து மூலம் எதிர்த்துக் குரல் கொடுப்போம். சமூகத்திற்கு இல்லை எல்லை. எல்லை கட்ட முயல்வோரை சேர்ந்தே முறியடிப்போம்.

    அன்புடன்
    எழுத்தாளர் ஒளிர்ஞர்

    Like

  7. அசத்துகிறீர்கள் நண்பரே ! ! இன்று தான் எனது முதல் வருகை உங்கள் இணைய தளத்திற்கு ! ! வருவேன் அடிக்கடி ! !

    Like

  8. நான் எங்கிருந்து உங்கள் தளத்தை கண்டு பிடிதேன் என்றே எனக்கு நினைவில்லை. ஆனால் ஒன்று மட்டும் சாட்டையால் அடித்த உன்மை. உன் தளத்திள் இளமை பொங்குது என்று நினைத்து அடுத்த பக்கம் போனேன், அங்கு அறிவிற்க்கு விருந்து வைத்திருக்கிறாய். அடுத்த பக்கத்தில் கிளுகிளுப்புக்கு பந்தி வைத்திருக்கிறாய்.
    அழகு, அழகு உன் தளம் அழகு.
    தனிப்பட்ட முறையில் நிறைய பெயருக்கு உன் தளத்தை அறிமுகப்படுத்தும் தவறை நான் செய்து விட்டேன்!!!
    அன்புடன்,
    முகுந்தன்

    Like

  9. enakum oru vaippu kedaithathu ungal karuthukkalai padikka ……attagasam ……would like to know your comments on Professor Loganathans Killing in US virginia University….he went there after studying here and worked there fo…..our government sponsoring the entire familys trip to US after his death…..now their family members accepting a job in US and deciding to settle there —— ungal karuthukkalai ariya avalai irukiren

    Like

  10. Nanri Xavier…..
    ungalai ponra saditha manithan illai…..
    satharana oru jeevan naan…
    unagalodu valaiil ula vara virumbum ungalai ponra oru yathrigan…..
    avalavu thaaan ennai patri…..
    ungal ezhuthukal avapothu en manthai thottu selvathundu….
    thotaabetta megam pol thoduvathae theriyamal (engayo padithathu) :-))
    nermai pathivu nanrai irukirathu….
    en manathil ulla kumural angae kotti kedakirathu……..
    varairuthiyil vasantham vesa vazthukaludan….
    Nadodi!!!!!

    Like

  11. இன்று தான் தளத்தைப் பார்வையிட்டேன்…
    முதன் முதலில் படித்த கட்டுரையே மனதை என்னவோ செய்கின்றது..
    தொடரட்டும் தங்தள் பணி…

    வாழ்த்துக்கள் சேவியர்.

    ‘தூறல்’- வலைப்பதிவில் Side Bar -ல் தளங்களின் பெயர்களைக் கொண்டுவருவது பற்றி எழுதிவிட்டேன். சோதித்துப் பார்த்தீர்களா?

    Like

  12. நல்ல வர்ணனை சேவியர்..

    வாழ்க்கைப் பயணத்தின் நெளிவு சுளிவுகளை நல்ல வரிகளில் வடித்திருக்கிறீர்கள்… வல்லூறு-மண்புழுக்களைப் பற்றிய ஒப்பீட்டையும் சேர்த்து.

    நான் உங்கள் xavi.wordpress.com தளத்தைச் சில முறை தரிசித்திருக்கிறேன்.. எல்லாவற்றிற்கும் முன்னால், உங்களின் ‘மனசே லவ் ப்ளீஸ்’ கவிதைக் கதையைப் படித்திருக்கிறேன்.. அருமையான படைப்பு.

    என்.சொக்கனின் உங்களைப் பற்றிய விமர்சனமும் அருமை. நல்ல கடினமான உழைப்பாளி என்றும், யோசிக்க, முயற்சிக்கத் தயங்காதவர் என்றும் அவர் கூறியிருப்பது உங்களைப் பற்றி மற்றவர் அறியத் தரும் நல்ல கருத்து.

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    தோழமையுடன்,
    இராகவன் என்ற சரவணன் மு.

    Like

  13. நன்றி ராகவன். வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும். என் படைப்புகள் மீதான அறிமுகம் உங்களுக்கு ஏற்கனவே இருப்பதை அறிந்து மகிழ்ச்சி. அடிக்கடி வாருங்கள்.

    Like

  14. பாராட்டுக்கு உரிய பணி உங்களுடையது., போதுமான தேடலும் பொருத்தமான எழுத்தாழுமையும் இருக்கும் உங்கள் பயணம் இனிதே தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    Like

  15. பாராட்டுக்கு உரிய பணி உங்களுடையது., போதுமான தேடலும் பொருத்தமான எழுத்தாழுமையும் இருக்கும் உங்கள் பயணம் இனிதே தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    மிக்க நன்றி இளைய தம்பி. உங்கள் வாழ்த்துக்களுக்கு என் வணக்கங்கள் !

    Like

  16. கற்பனைக் கலையரங்கில்
    கருத்துக்கள் வரவேற்க,
    பேனா முனை நடனமாட,
    எழுத்துக்களின் அரங்கேற்றம்..

    ஆருமை புலவரே !!

    Like

  17. மிக்க நன்றி வலையில் உங்களை போன்ற தோழர்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
    வணக்கம்

    Like

  18. How to make comments in Tamil. Kindly let me Know. i will be expecting your reply as soon. Thanks in Advance.

    By

    Anbesivam

    Like

  19. Xavier – dont have words to say, I just like it…. just today I have visited your webpages, fantastic, keep it up… I will visit often (apologies, I dont know how to type in tamil), Nandri….

    Like

  20. //Xavier – dont have words to say, I just like it…. just today I have visited your webpages, fantastic, keep it up… I will visit often (apologies, I dont know how to type in tamil), Nandri….

    //

    மனமார்ந்த நன்றிகள் சரண்.

    Like

  21. //மிக்க நன்றி வலையில் உங்களை போன்ற தோழர்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்//

    நன்றி தரேசு. தொடர்ந்து வாருங்கள்

    Like

  22. Xavier – Nilacharal inayathil ungal “thanimai” paditthen…. its fantastic, once I finished reading, I am speechless for sometime, felt like I am missing something…. definitely It shaked me….. (I am going to speak to my parents now) … I will keep reading your kathai…..

    Like

  23. kldsjfklsdajfkdsn dsfkldsjkfjdskl djfkljdsfsd dflkdsjklfjdskl jfdjsklfds fdskfjkldsnfmdsklfjdsklfnkldsjfkldsfkljdsklfkldsjkl clksdmclkds klmnklds kl klj klj kljclk jkl jkl jk;l

    Like

  24. அன்புள்ள சேவியர் ஐயா,

    தங்கள் தளத்தில் உள்ள அனைத்துப் படைப்புகளையும் தேன் கூடு மூலம் இன்றுதான் படிக்க நேர்ந்தது. தங்கள் படைப்புகள் அனைத்தும் மிக அருமை. மேலும் நல்ல நல்ல படைப்புகளை கொடுக்க வாழ்த்தி வேண்டுகிறேன்.

    என்றும் அன்புடன்,
    பெ. செந்தில் அழகு.

    Like

  25. please publish this and enjoy (cut and pasted):-

    ஒரு கணவன் ஒர் மனைவி ஒர் மாமியார் (மனைவியின் தாயார்) மூவரும் இஸ்ரேல் நாட்டிற்க்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டனர்.
    போன இடத்தில் மாமியார் மண்டையைப் போட்டுவிட்டார். கணவன் அங்குள்ள தூதரகத்தை அணுகி, உடலை என்ன செய்யலாம் என்று கேட்டார்.
    அதற்க்கு தூதரக அதிகாரிகள், “இங்கு புதைப்பதாயின் $1000 செலவாகும், உங்கள் நாட்டிற்க்கு எடுத்து செல்வதாயின் $10,000 ஆகும்” என்றனர்.
    சிறிது நேரம் யோசித்த கணவன் “ஐயா உடலை எனது நாட்டிற்க்கே எடுத்து செல்கின்றேன்” என்றார். தூதரக அதிகாரிகளுக்க ஆச்சரியம் ஆகா இவரல்லவா உண்மையான மருமகன், மாமியார் மீது என்ன அன்பு. 10 மடங்கு செலவு செய்து உடலை ஊருக்கு எடுத்து செல்கின்றாரே என மருகனைப் பாராட்டினர்.

    அத்ற்கு மருமகன் சொன்னார்:
    “ஐயா, உங்கள் நாட்டில் 2000 வருடங்களுக்கு முன் ஒருவர் இறந்து அவரைப் புதைத்தபின் மூன்றாம் நாள் திரும்ப உயிருடன் எழுந்தார். எனது மாமியார் விடயத்தில் நான் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க முடியாது. எங்கள் ஊரில் புதைத்தால் புதைத்ததுதான், திரும்ப எழுந்ததாக எல்லாம் சரித்திரம் கிடையாது. என்வே 10 மடங்கு செலவானாலும் பரவாயில்லை எனது ஊருக்கே கொண்டு செல்கின்றேன்”

    சத்தியமாக இது எனது சொந்த அனுபவம் இல்லை.
    களத்தில் யாராவது மாமியார்கள் இருந்தால் என்னை மன்னிக்க

    Like

  26. sir,

    You are doing very good Job. Please keep it up. I will spread ur site to my friends. write something about agriculture the thing going to burn the entire world shortly.

    senthil kumar
    namakkal

    Like

  27. Dear Sir,

    You r doing very good job. Recently i was visit your site. It’s so amazing. Keep it up your great job for us in future also.

    Thanks & Regards
    Lakshmipathy from Sudan

    Like

  28. மாமியார் கதை மிக அருமை. நானும் ஒரு மாமியார்தான்!இதுக்கெல்லாம் என்ன மாமியார் சங்கம் அமைத்து போராட்டமா நடத்த முடியும் கன்டு கொள்ளாமல் போக வேன்டியதுதான். என்ன சொல்றீங்க?

    Like

  29. wav my dear i will read your site today, your words are like a gold no no there is no words to say about your thoughts. i am marathian, but i like tamil more, enakku kamban veandam, sakespiere veandam anbarea, ean theriyuma, anbarea need enakku avargalai pol katchi tharugirai, neerdhan kambamn,neerdhan sakespiere. unnai patriya thelivu arpudham, naan migavum rasikkirean vunnaiyum vun valai thalathaiyum.

    mealum valarattum un pani
    ivan un anban

    nanban

    Like

  30. அன்பு சேவியரே அருமையாக இருக்கின்றது உங்கள் அலசல் அசத்தல் என்று தலைப்பிடலாம் போல் இருக்கிறது பாராட்டுக்கள்

    உங்கள் பதிவில் வாசித்துப்பாருங்கள் என்று வரிசையாக அழகாக அடுக்கியீருக்கறீர்களே அது எப்படி என்று எனக்குத் தெரிவித்தால் நன்றியுடையவனாக இருப்பேன் எனது பதிவில் அப்படி செய்ய எனக்குத் தெரியவில்லை சொல்லித்தாருங்களேன்

    Like

  31. நன்றி நண்பன்.

    ஸலாம், அதெல்லாம் பெரிய விஷயமில்லைManage – Categories பக்கம் சென்று நீங்கள் வகைப்படுத்தலாம்.

    Like

  32. Dear Xavier,

    Really Nice…. Nalla thmizhi parkum pothu manathikku mighavum santhosamaga ullathu…. thodarattum ungal pani…

    Anbudan,
    Prabhakar.

    Like

  33. //after a very loooong period i found a good writer. thanks. keep the work well

    //

    மனம் திறந்த பெரிய பாராட்டு இது நண்பரே… மனமார்ந்த நன்றிகள்.

    Like

  34. your poems are good-imagery-conceptualisation.and words-Your kavithai on muthal muththam becomes great with your final words on your child’ muththam. Fantastic. I sometime write poems in English e.g.

    The Village

    In the morning of my youth
    I lived in a village
    a beautiful village

    Cities were far away
    But people were so near
    Waters were so placid and
    not as murky as they are now

    In the dawn of my old age
    I still live in a village
    The horrendous global village
    -Siva suthan
    k.sivabalan, Oslo, Norway

    Like

  35. வருகைக்கு நன்றி சிவபாலன்.

    உங்கள் ஆங்கிலக் கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது….

    Cities were far away
    But people were so near

    – அற்புதம் !!!

    Like

  36. தொடரட்டும் உங்கள் பயணம் . I request You to kindly include viewers questions and clarifications about internet

    Like

  37. மிகவும் ரசிக்கும் படியாக
    இருக்கிறது உங்கள் தளம்
    பாராட்டுக்கள்

    Like

  38. Actually its been quite sometime since I read good tamil…
    your writings are so refreshing..

    tamil ini endrum vaazhum!!!

    Like

  39. //Actually its been quite sometime since I read good tamil…
    your writings are so refreshing..

    tamil ini endrum vaazhum!!!
    //

    மனமார்ந்த நன்றிகள் சுபா. உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் மேலும் எழுத வைக்கும் 🙂

    Like

  40. //மிகவும் ரசிக்கும் படியாக
    இருக்கிறது உங்கள் தளம்
    பாராட்டுக்கள்//

    மனமார்ந்த நன்றிகள் 🙂

    Like

  41. I watch your interview in TV (may be SUN or VIJAY) two years before.It was interesting. Recently I was able to reach this site. It’s very interesting.U r very keen in maintaining the the site

    for information I ve launched a site recently (Ungal alvukku illai, ) visit//www.malliyappusanthi.com

    Thanks
    Thilgar
    Srilanka

    Like

  42. அன்பின் திலகர், மிகவும் ஆனந்தமாக இருக்கிறது உங்களை இங்கே சந்திப்பது. இரண்டு வருடத்திற்கு முன் நடந்த பேட்டியையே நினைவு வைத்துப் பாராட்டியதற்கும், வருகை புரிந்து உங்கள் கருத்துக்களைச் சொன்னதற்கும் மிக்க நன்றி. உங்கள் தளத்தில் சந்திப்போம் . 🙂

    அடிக்கடி வாருங்கள்

    Like

  43. Xavier – simply superb…I was worring that i will go slowly in to this machine world and due to work and other problems.

    But i thank GOD – i see people like you who always think and write about the meaning of life and human being…It is something like watering a plant which is dying for water…

    Keep it doing …

    Like

  44. வாழ்க்கையை மிகவும் ரசித்து அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்; வாழ்த்துக்கள்! மென்மேலும் தங்களுடைய ஆக்கங்களை பதியவும்! நன்றி!!

    Like

  45. /Xavier – simply superb…I was worring that i will go slowly in to this machine world and due to work and other problems.

    But i thank GOD – i see people like you who always think and write about the meaning of life and human being…It is something like watering a plant which is dying for water…

    Keep it doing
    //

    மனதுக்கு தெம்பூட்டும் வாசகங்கள். மனமார்ந்த நன்றிகள். வருகைக்கும், வஞ்சகமில்லா பாராட்டுகளை வழங்கியமைக்கும்.

    Like

  46. //வாழ்க்கையை மிகவும் ரசித்து அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்; வாழ்த்துக்கள்! மென்மேலும் தங்களுடைய ஆக்கங்களை பதியவும்! நன்றி!!

    //

    மிக்க நன்றி செவத்தப்பா.. அடிக்கடி வாங்க.

    Like

  47. அழகாக இருக்கிறது பக்கங்கள்.
    பயனுள்ள பல தகவல்கள்.
    கூகுளில் சீனிச்சம்பல் தேடினேன். கிடைத்தது.
    அம்மா செய்த முறையிலேயே எழுதியுள்ளீர்கள்.
    அதையும் சுவைபட எழுதியுள்ளீர்கள்.
    தொடருங்கள்.

    Like

  48. அன்பரே தமிழுக்கு தான் எத்தனை
    ஈர்ப்பு சக்தி. அரபு நாட்டில உழைக்க
    வந்தவன் நான், உழைப்பு போக எஞ்சிய நேரத்தில் தமிழைத் தேடி வருகையில் அழகிய தமிழால் ஆன பூஞ்சோலையைக் கண்டேன் நண்பரே! வாழ்த்துக்கள்… வினாடிகள் வழியிட்டால் வரவேண்டும் நம் நட்பை வளர்க்க… அன்புடன் இளங்கோவன், அமீரகம்.

    Like

  49. அன்பின் இளங்கோவன், உங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள். அடிக்கடி வாருங்கள்…

    Like

  50. அன்பின் சேவியர் உங்கள் சொந்த ஊர் எங்கே?, குடும்பம் மற்றும் செய்திகளை அறிய ஆவல். உங்கள் வலையில் சொல்லாத & என்னிடம் சொல்லக்கூடிய விஷயங்கள் சொல்லலாம்..

    நீங்கள் எங்கே வசிக்கின்றீகள்?

    சில வரிகள் வந்து விழுந்தன
    உங்களின் வலையினைப் பார்த்ததும்

    காற்றில் கசிந்த அவளின்
    ஈர கூந்தலின் மணம்
    இன்னும் என்னுள்ளே
    மனதை விட்டு நீங்காமல்
    உள்ளது!
    அவளின் நினைவா
    எந்தன் உணர்வா யார்
    காரணம்?

    அன்புடன் இளங்கோவன், அமீரகம்

    Like

  51. அன்பின் இயக்குனர் திரு,அழகப்பனுக்கு இனிய வாழ்த்துக்கள்.. வண்ணத்துபூச்சியின் காட்சிகளை கண்டு மகிழ்ந்தேன் ஐயா. அதனுடன் தொடர்புள்ள விருந்தினர் பக்கத்தில் என் பங்களிப்பை செலுத்த முடியாத பட்சத்தில் என் இனிய நண்பர் சேவியரின் பக்கத்தினை இரவல் கொண்டு உங்களுக்கு மடல் அனுப்புகின்றேன். இரண்டு நண்பர்கள் எனக்கு கிடைத்ததற்கு உங்கள் இருவாருக்கும், அதற்கு வழிகாட்டியாக இருந்த அந்த இறைவனுக்கும் என் நன்றிகள் அன்புடன் இளங்கோவன், அமீரகம்

    Like

  52. //அன்பின் இயக்குனர் திரு,அழகப்பனுக்கு இனிய வாழ்த்துக்கள்.. வண்ணத்துபூச்சியின் காட்சிகளை கண்டு மகிழ்ந்தேன் ஐயா. அதனுடன் தொடர்புள்ள விருந்தினர் பக்கத்தில் என் பங்களிப்பை செலுத்த முடியாத பட்சத்தில் என் இனிய நண்பர் சேவியரின் பக்கத்தினை இரவல் கொண்டு உங்களுக்கு மடல் அனுப்புகின்றேன். இரண்டு நண்பர்கள் எனக்கு கிடைத்ததற்கு உங்கள் இருவாருக்கும், அதற்கு வழிகாட்டியாக இருந்த அந்த இறைவனுக்கும் என் நன்றிகள் அன்புடன் இளங்கோவன், அமீரகம்//

    உங்கள் அன்புக்கு நன்றி …

    Like

  53. //அன்பின் சேவியர் உங்கள் சொந்த ஊர் எங்கே?, குடும்பம் மற்றும் செய்திகளை அறிய ஆவல். உங்கள் வலையில் சொல்லாத & என்னிடம் சொல்லக்கூடிய விஷயங்கள் சொல்லலாம்..

    நீங்கள் எங்கே வசிக்கின்றீகள்?

    சில வரிகள் வந்து விழுந்தன
    உங்களின் வலையினைப் பார்த்ததும்

    காற்றில் கசிந்த அவளின்
    ஈர கூந்தலின் மணம்
    இன்னும் என்னுள்ளே
    மனதை விட்டு நீங்காமல்
    உள்ளது!
    அவளின் நினைவா
    எந்தன் உணர்வா யார்
    காரணம்?
    //

    நான் குமரி மாவட்டத்தில் ஒரு கிராமம். நீங்கள், கவிதை நன்றாக எழுதுகிறீர்களே !!! வலைத்தளம் வைத்திருக்கிறீர்களா ?

    Like

  54. மிக்க மகிழ்ச்சி… ஒரு சின்ன எறும்பாக உங்கள் வலையில் உள்ள தமிழ்த் தேனை சுவைக்க வந்தேன்.. இந்த எறும்பை வலையில் விட்டதும் அல்லாமல்… அன்போடு விசாரிகின்றீகளே.. அதுவே எனக்கு இந்த வருட பொங்கல் & தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே… வலைத்தளம்… இன்னும் சில நாட்களில் வரும் உங்கள் வரவேற்பை நோக்கி. அன்புடன் இளங்கோவன், அமீரகம்.

    Like

  55. அன்பின் செவியர்..

    இன்று முதன் முதலாய் ஓர் வலையை துவங்கியுள்ளேன்… அதைப் பாருங்கள்… எப்படி வலையை வளர்ப்பது என்று சொல்லிக்கொடுங்கள் நண்பரே…
    வலையின் முகவரி: http//elangovan68.blogspot.com
    உங்கள் வரவில் என் வலை தான் கொஞ்சம் பூக்கட்டுமே. அன்புடன் இளங்கோவன்

    Like

  56. ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா!

    உங்கள் உழைப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் சேவியர் ..

    இப்படிக்கு
    அயல் நாட்டு நண்பன்
    ரிசாத்

    Like

  57. Dear Mr.Xavier,
    Vazhthukkal,indru than nan parkiren,ithu remba nallavisayam,tamil fonts problem,neengal itha valai thalathin moolamaga tamil i ulagam muluvathum kondu sellungal,unga valai tamilai kondu serkum uruthiyaga nandi.

    Like

  58. நிலத்துக்கு உரமிடும் மண்புழு
    மக்கள் மனதுக்கு உரமிடுகிறது உங்கள் எழுத்து.நன்றாக நெளியுங்கள்

    Like

  59. /நிலத்துக்கு உரமிடும் மண்புழு
    மக்கள் மனதுக்கு உரமிடுகிறது உங்கள் எழுத்து.நன்றாக நெளியுங்கள்//

    நன்தி கோமா 🙂

    Like

  60. மிகவும் சிறந்த வலைப்பூ Mr.சேவியர். The speciality in your blog is that it has no words hurting others.Keep it up.
    Best regards.

    Noor Mohideen KNR

    Like

  61. ”நான் வானத்திலிருந்து பூமியைப் பார்க்கும் வல்லூறல்ல, பூமியிலிருந்து பூமியைப் பார்க்கும் சிறு மண்புழு”
    நண்பரே நீங்கள் மேற்சொன்ன வார்த்தைகள் எவ்வளவோ வேதனைகளோடும் மனவோட்டங்களோடும் இருந்த எனக்கு மிகவும் உணர்லுபூi;வ ஆதரவாக இருந்தது. நன்றி. உங்கள் பணி தொடரவேண்டும்.

    அவுஸ்ரேலியாவில் இருந்து
    டேனியல் ஈஸ்வர்

    Like

  62. //”நான் வானத்திலிருந்து பூமியைப் பார்க்கும் வல்லூறல்ல, பூமியிலிருந்து பூமியைப் பார்க்கும் சிறு மண்புழு”
    நண்பரே நீங்கள் மேற்சொன்ன வார்த்தைகள் எவ்வளவோ வேதனைகளோடும் மனவோட்டங்களோடும் இருந்த எனக்கு மிகவும் உணர்லுபூi;வ ஆதரவாக இருந்தது//

    இதை விட மகிழ்ச்சியளிக்கக் கூடிய வார்த்தை ஏது… ? நன்றிகள் நண்பரே..

    Like

  63. அருமையான வலைத்தளம் தோழரே!

    பயனுள்ள தகவல்கள் கிடைக்கின்றன.

    உங்கள் கட்டுரைகள் பயனுள்ளவையாக இருக்கின்றன. வாழ்த்துகள்.

    கேமரா போன் பற்றிய பதிவை நான் முத்தமிழ் மன்றத்தில் பதிய, உங்கள் அனுமதி தேவை.

    அதற்காக என்னுடைய நன்றியை முன்னமே தெரிவிக்கிறேன்.

    அன்புடன்
    பரஞ்சோதி
    http://www.muthamilmantram.com

    Like

  64. வாழ்த்துகள் சேவியர்..
    இன்னும் பல சமூக நல அக்கறையுள்ள பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்கிறேன்..
    My best wishes for ur bright future..:)

    Like

  65. /வாழ்த்துகள் சேவியர்..
    இன்னும் பல சமூக நல அக்கறையுள்ள பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்கிறேன்..
    My best wishes for ur bright future..:)/

    நன்றி கிருபாகரன்… 😀

    Like

  66. நல்லதொரு கவிதை படித்தேன். இன்றுதான் தற்செயலாக நுழையநோிட்டது. அருமை. நிறைய எழுதுங்கள். ரசிப்பதற்கு நாங்கள் இருக்கிறோம்!

    Like

  67. //நல்லதொரு கவிதை படித்தேன். இன்றுதான் தற்செயலாக நுழையநோிட்டது. அருமை. நிறைய எழுதுங்கள். ரசிப்பதற்கு நாங்கள் இருக்கிறோம்!//
    நன்றி சுபா….

    Like

  68. I dont truly know what you talking about right here. This cant be the only way to think about this can it? It appears like you understand a lot, so why not explore it more? Make it more accessible to everyone else who might not agree with you? Youd get a lot more individuals behind this should you just stopped making common statements.

    Like

  69. Excellent blog! I genuinely love how it’ s easy on my eyes and also the details are well written. I am wondering how I could be notified whenever a new post has been made. I have subscribed to your rss feed which should do the trick! Have a nice day!

    Like

  70. I’ m currently blogging for a (poor) living for someone else… but I like it. You’ ve inspired me to keep doing it, and look to doing it for myself soon

    Like

  71. இந்த 1904 போட்டோவ என்னைக்கு மாத்த போறீங்க.. !?

    Like

  72. I found your weblog site on google and check a number of of your early posts. Proceed to keep up the excellent operate. I simply additional up your RSS feed to my MSN Information Reader. Searching for ahead to studying more from you later on!? I’m typically to blogging and i actually admire your content. The article has actually peaks my interest. I’m going to bookmark your website and maintain checking for new information.

    Like

  73. அருமையான வலைத்தளம் தோழரே!

    பயனுள்ள தகவல்கள் கிடைக்கின்றன.

    உங்கள் கட்டுரைகள் பயனுள்ளவையாக இருக்கின்றன. வாழ்த்துகள்.நிலத்துக்கு உரமிடும் மண்புழு
    மக்கள் மனதுக்கு உரமிடுகிறது உங்கள் எழுத்து….,உங்கள் படைப்புகளை எங்கள் புதிய மாத இதழ்லில் உங்கள் பெயருடன் இடம் பெற உங்கள் அனுமதி தேவை ,நன்றி

    Like

  74. இன்றுதான் நான் முதல் முதலாக உங்களுடைய இந்த வலைதளத்தை பார்கின்றேன்,

    மிகவும் அருமை.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    Like

  75. இன்றுதான் நான் முதல் முதலாக உங்களுடைய இந்த வலைதளத்தை பார்கின்றேன்,மிகவும் அருமை.வாழ்த்துக்கள்

    Like

Leave a comment