“கன்னிமை” விற்பனைக்கு !: இளம் பெண்களின் புது டிரெண்ட்.

 

EFG103

 

பாத்திரம் பண்டத்தை அடகு வைத்து பள்ளிக்குப் போனதெல்லாம் பழைய கதை. இப்போது அடகு வைக்கத் துவங்கியிருப்பது கன்னித் தன்மையை.

மேலை நாடுகளில் இப்போதெல்லாம் பரவலாக அடிபடும் பேச்சு “கன்னித் தன்மை விற்பனைக்கு” விளம்பரங்கள் தான்.

படிப்பதற்குப் பணமில்லை எனவே எனது கன்னித் தன்மையை நல்ல விலைக்கு விற்கலாம் என இருக்கிறேன். ஏலத்தில் அதிக தொகைக்குக் கேட்பவர்களுடன் நான் “ஒரு நாள் முதல்வி” யாக உல்லாசமாய் இருக்க சம்மதிக்கிறேன் என சமீபத்தில் ஒரு இளம்பெண் இணையத்தில் தனது கற்பை ஏலமிட்டிருக்கிறாள்.

போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்டு தோற்றுப் போனவர்களைத் தாண்டி சுமார் 6.4 இலட்சம் ரூபாய்களுக்கு ஒரு தொழிலதிபர் அவளை ஏலமெடுத்து அவளுக்கு “உதவி”யிருக்கிறார்.

பதினெட்டு வயதான எலீனா பெர்சியா எனும் இந்த ரொமானியன் பெண் தற்போது வசிப்பது ஜெர்மனியில்.

இவளை ஏலமெடுத்தவர் இவளை விமானத்தில் வெனிஸ் நகருக்கு வரவைத்து, கன்னித் தன்மை குறித்த மருத்துவ 12சான்றிதழ்களைச் சரிபார்த்து, விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி, ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பொழுதைக் கழித்திருக்கிறார்

 

 

 

ஒரு முப்பத்தைந்து இலட்சம் ரூபாய்க்கு என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என நினைத்தேன். ஆனால் வெறும் ஆறு இலட்ச ரூபாய்க்கு ஏலம் போனதில் வருத்தம் தான் (!!??) என்கிறார் இந்த மாணவி. எனினும் இந்தப் பணத்தை வைத்து படிக்க முடியும் எனும் நம்பிக்கையும் இருக்கிறது என்கிறார் நல்ல பிள்ளையாட்டம்.

 

சினிமாவில் வரும் கதாநாயகன் போல ஒருவரை எதிர்பார்த்தேன் ஆனால் கிடைத்த நபர் 46 வயதான குள்ளமான ஒரு தொழிலதிபர். என்ன செய்வது இருந்தாலும் …  என விவரிக்கிறார் தனது அனுபவங்களை.

கல்வி என்பது ஒழுக்கத்தையும், அறிவையும் போதிப்பது. அதை அடையவே இப்படிப்பட்ட ஒழுங்கற்ற வழிகளை நாடவேண்டியிருக்கிறதே எனும் அதிர்ச்சி ஒருபுறம் எழ, மேலை நாடுகளின் வால் பிடிப்பதை பெருமையாய் கருதும் நம் நாட்டு மக்கள் இதை ஒரு முன்னுதாரணமாய் கொண்டு விடுவார்களோ எனும் பயம் இன்னொரு பக்கம் எழுகிறது !

 

இவளுடைய பெற்றோருக்கு விஷயம் தெரியுமா ? சட்டத்தில் இதற்கெல்லாம் இடமுண்டா ? இப்படி உலகுக்கெல்லாம் மேடை போட்டுச் சொல்கிறாளே இதனால் எதிர்காலம் பாதிக்காதா ? போன்ற உங்களுடைய கேள்விகளை எலீனா பெர்சியாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளவும் ( அதற்குரிய கட்டணம் எத்தனை என்பது உட்பட )

 

 

பதின் வயதினருக்கானது ….

முழுக்க முழுக்க பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று இன்றைய பதின் வயதினரை ஒழுங்காகத் தூங்குங்கள் என எச்சரிக்கிறது

தூங்காதே தம்பி தூங்காதே என பாடியதெல்லாம் பழைய கதை. இப்போது இளைஞர்களையும், பதின் வயதினரையும் பார்த்து தூங்குங்கள், தூங்குங்கள் என துரத்தும் காலம். அவர்களைத் தூங்காமல் இருக்க வைப்பதற்காக ஊடகங்கள் பயனற்ற அரைகுறைக் கலாச்சார நிகழ்ச்சிகளை நிதமும் அரங்கேற்றிக் கொண்டே இருக்கின்றன.

நள்ளிரவுக்கு மேலும் விழித்திருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், கணினியில் விளையாடுவதும், செல்போனில் அளவளாவுவதும் என இன்றைய இளசுகளுக்கு தூக்கத்தைத் தவிர்க்கும் வழிகள் ஏராளமாய் இருக்கின்றன.

இவையெல்லாம் உடல்நலத்துக்கு பெரிதும் தீங்கானது, போய் தூங்குங்கள் என பெரியவர்கள் சொன்னாலும் இந்த பதின் வயதினர் அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை. அப்படிப் பட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாய் வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த இந்த ஆய்வின் முடிவு ஒழுங்கான தூக்கம் இல்லாத பதின் வயதினருக்கு உயர் குருதி அழுத்த நோய் வரும் என அதிர்ச்சிச் செய்தியை அறிவித்திருக்கிறது.

ஒழுங்கான தூக்கம் இல்லாதவர்கள் அதிக எடையுடையவர்களாய் மாறும் அபாயம் இருப்பதாக முன்பு ஒரு ஆராய்ச்சி முடிவு வெளியிட்டிருந்தது. இப்போது அதைவிட அச்சுறுத்தல் தரும் இந்த ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது.

உயர் குருதி அழுத்தம் என்பது இதய நோய் உட்பட பல்வேறு பெரிய நோய்கள் வருவதற்கான காரணமாகி விடக் கூடும் என்பதால் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் முக்கியத்துவம் பெறுகிறது.

முழுக்க முழுக்க பதின் வயதினரின் உடல் நலம் தொடர்பாய் நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையில் கலந்து கொண்ட அனைவரும் 13 க்கும் 19க்கும் இடைப்பட்ட வயதினர் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களில் சுமார் நாற்பது விழுக்காடு பேர் குறைந்த தூக்கம், அல்லது நிம்மதியற்ற தூக்கத்தையே கொண்டிருப்பதாக தெரிய வந்திருப்பது கவலைக்குரியதாகும்.

பல்கலைக்கழக தூக்கம் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவு இயக்குனர் சூசன் ரெட்லைன் இது பற்றிக் குறிப்பிடுகையில், இதுவே முழுக்க முழுக்க பதின் வயதினரை வைத்து நிகழ்த்தப்படும் தூக்கம் தொடர்பான முதல் ஆராய்ச்சி என தெரிவித்தார். இதன் முடிவு தூக்கம் தொடர்பான மற்ற ஆராய்ச்சி முடிவுகளை விட அச்சுறுத்தக் கூடியது என அவர் கவலை தெரிவித்தார்.

தற்போதைய வாழ்க்கை முறை பதின் வயதினரை பல்வேறு விதமான கேளிக்கைகளுக்குள் இழுத்துச் சென்று அவர்களுடைய நேரத்தையும், உடலையும் வீணடிக்கிறது. கிடைக்கும் ஓய்வு நேரத்தில் உடலுழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுவது இரவில் நல்ல தூக்கத்துக்கு உத்தரவாதம் தரும். அதை விடுத்து வெறுமனே தொலைக்காட்சி எனும் தூக்குக் கயிற்றில் தொங்கினால் வாழ்க்கை நலமிழக்கும், அர்த்தமிழக்கும்.

ஆண்கள் கவனத்துக்கு !

முன்பெல்லாம் நீரிழிவு (சருக்கரை) நோய் வயதானவர்களுக்கு மட்டுமே வரும் எனும் நிலை இருந்தது. ஆனால் தற்போதைய வாழ்க்கை முறை இள வயதினரையும் இந்த நோய்க்குள் அமிழ்த்தியிருக்கிறது.

உலகெங்கும் இன்று பல கோடிக்கணக்கான இளைஞர்கள் நீரிழிவு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயாளிகளின் அவஸ்தைகளில் இப்போது குழந்தையின்மை அச்சமும் புகுந்து கொண்டிருக்கிறது.

நீரிழிவு நோயாளிகளின் உயிரணுக்கள் வீரியம் இழந்ததாக இருக்கின்றன எனவும் இதனால் இவர்கள் குழந்தையில்லா நிலைக்குத் தள்ளப்படும் ஆபத்தும் அதிகரித்திருக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த அதிர்ச்சியூட்டும் தகவலின் வீரியத்தை அதிகரிக்கும் விதமாக கருத்தரித்தாலும் மனைவியருக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என அவர்கள் அச்சமூட்டுகின்றனர்.

வாழ்க்கைச் சூழல் இளைஞர்களை ஆரோக்கியமற்ற உணவுகளுக்கும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கும் தள்ளி விட்டது. எனவே இளைஞர்கள் போதிய உடற்பயிற்சி இல்லாமலும், ஆரோக்கியமான பழக்கங்கள் இல்லாமலும் அதிக எடை உட்பட பல்வேறு உடல் பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். இவையெல்லாம் நீரிழிவு நோய் தாக்குதலுக்கு முக்கியமான காரணிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

குழந்தையின்மைக்குக் காரணம் பெண்கள் என்னும் தவறான சிந்தனைகளை இந்த ஆராய்ச்சி அழித்திருக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்குள் வர ஆண்களை எச்சரித்திருக்கிறது.

ஒரு நாள் உறவு : ஆண்கள் / பெண்கள் பார்வையில்.

“ஒரு நாள்” மட்டும் கொஞ்சிக் குலாவி உடலுறவு கொள்ளும் குறுகிய கால உறவுகளைக் குறித்து ஆண்களும் பெண்களும் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த ஆராய்ச்சியில் இறங்கியது டர்காம் பல்கலைக்கழகம்.

இந்த அனுபவத்தைப் பெற்ற பெண்கள் பெரும்பாலும் குற்ற உணர்வில் உழல்வதாகவு

ம், இனிமேல் இத்தகைய உறவுகள் வேண்டாம் என மறு நாள் காலையில் (தான்) அவர்கள் நினைப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

ஆண்களில் 23 விழுக்காட்டினரும் பெண்களில் 58 விழுக்காட்டினரும் இந்த அனுபவத்தை (எல்லாம் முடிந்தபின்) சீச்..சீ என்றிருக்கின்றனர்.

1743 பேரைக் கொண்டு விரிவாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி பெண்களின் மன நிலையையும், ஆண்களின் மனநிலையையும் பட்டியலிட்டிருக்கிறது.

அதாவது பெண்கள் நீண்டகால உறவுப் பிணைப்பையும், கரிசனை, அன்பு, கவனிப்பு கலந்த துணையையும் விரும்புவதாகவும், ஆண்கள் “அழகான” பெண்ணை விரும்புவதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. ( இதுக்கு ஆராய்ச்சி வேற தேவையா என முணுமுணுப்பவர்கள் இதன் வழிகாட்டி ஆனி கேம்பெல்லை தொடர்பு கொள்ளவும்)

தாங்கள் பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும், நினைத்ததை விட மோசமானதாகவே இந்த அனுபவம் இருப்பதாகவும் பல பெண்கள் வருத்தம் தெரிவித்திருக்கையில், தனக்குக் கிடைத்த துணை அழகாய் இல்லை என்றே பல ஆண்கள் வருத்தம் தெரிவித்தார்களாம்.

தேவையற்ற ஆராய்ச்சிகளுக்காக பணத்தை விரயமாக்குவது மேலைநாட்டினருக்கு ஒரு பொழுதுபோக்காகவே ஆகிவிட்டது. இந்த ஆராய்ச்சிக்குச் செலவான பணத்தை ஹெய்திக்கு அனுப்பி அங்குள்ள ஏதேனும் ஒரு குழந்தைக்கு ஒரு நேர உணவை கொடுத்திருக்கலாம். புண்ணியமாவது கிடைத்திருக்கும்.

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.

இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம்.

அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு. முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை.

இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது. உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.

அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.

முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.

பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக்கும் கல்லறைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில், தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.

பாலியல் கல்வி : எனது பார்வையில்.

kid.jpg

கேள்வி : “பாலியல் கல்வி தேவையா?”
பதில் : “சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை”

இப்படி ஒரு கேள்வி பதிலை சமீபத்தில் மிக மிகப் பிரபலமான வார இதழ் ஒன்று பிரசுரித்திருந்தது.

பாலியல் கல்வியின் தேவையும், பாலியல் கல்வி என்பது என்ன என்பதையும் முதலில் அவருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் எனப்படுகிறது.

பாலியல் கல்வி என்பது வாத்சாயனாரின் காமசாஸ்திரத்தை விலாவரியாகக் கற்றுக் கொடுக்கும் விஷயம் போலிருக்கிறது என்றே தான் பெரும்பாலானவர்கள் கருதிக் கொள்கின்றனர்.

இதற்குக் காரணம் பாலியல் என்பதே உடலுறவு என்பது மட்டும் தான் என்னும் சிந்தனை நமக்குள் நுழைக்கப்பட்டது தான்.

பாலியல் கல்வியை பள்ளிக்கூடங்களில் பயிற்றுவிப்பதை விட தொலைக்காட்சி வழியாகக் கற்றுக் கொடுக்கலாம். அப்போது தான் பெற்றோரும் கூடவே இருந்து குழந்தை சரியாக கற்றுக் கொள்கிறதா, தேவையானவை மட்டும் தான் கற்றுக் கொடுக்கப்படுகிறதா என்பதை கவனிக்க முடியும்.

மேற்குறிப்பிட்ட தத்துவத்தை உதிர்த்தது நானல்ல, ஒரு பிரபல வார இதழின் “தலையங்கம்” ! பள்ளிக்கூடத்தில் குழந்தை பாடமாகக் கற்பதை விட வீட்டில் அமர்ந்து படிப்பதே சிறந்ததாம்.

அப்படியெனில் ஒவ்வொரு குழந்தையின் வயது வாரியாக, வகுப்பு வாரியாக பாடங்கள் எடுப்பது எப்படி என்பதும், கற்றுக் கொள்ளவேண்டிய மாணவர்களை விட்டு விட்டு குழந்தைகளும் கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

மட்டுமன்றி “தேவையானது” என்பதை ஒவ்வொரு பெற்றோரும் எப்படி நிர்ணயிக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ஆசிரியர்களிடம் சங்கோஜப்படும் குழந்தைகள், பெற்றோர் முன்னிலையில் சகஜமாக கற்றுக் கொள்ளும் என்பதையும் ஏற்றுக் கொள்வதற்கில்லை.

இந்தியாவில் நிகழும் பாலியல் கொடுமைகளை தினம் தோறும் பத்திரிகைகளில் வாசித்தும், எயிட்ஸ் நோயாளிகள் அதிகம் கொண்ட நாடு எனும் பட்டியலில் இடம்பெற்றும், 80 விழுக்காடு குழந்தைகள் குடும்ப உறவினர்களால் ஏதோ ஒருவகையான பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள் என்னும் புள்ளி விவரங்களைத் தெரிந்திருந்தும் பாலியல் கல்வியை மக்கள் எதிர்ப்பது வியப்புக்குரியதாய் இருக்கிறது.

பாலியல் கல்வி என்ன என்பதையும் பாலியல் கல்வியில் இடம்பெறப்போகும் பாட திட்டங்கள் என்ன என்பதையும் முடிவு செய்து அரசு பெற்றோருக்குத் தெரியப்படுத்தலாம். இதன் மூலம் குழந்தைகள் என்ன கற்றுக் கொள்கிறார்கள் என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள முடியும்.

இரண்டாவதாக, மேலை நாட்டு பாலியல் கல்வி முறையிலிருந்து வேறுபட்டு நமது பாலியல் கல்வி முறை இருத்தல் நலம். மேலை நாடுகளில் சொல்லப்படும் “திருமணத்திற்கு முன்பான பாதுகாப்பான உடலுறவு” போன்றவற்றையும், கருவுறாமல் இருக்க செய்ய வேண்டியவை பற்றியும், உடலுறவு வகைகள் பற்றியும் சொல்லாமல் இருக்கலாம்.

அதற்குப் பதிலலக திருமணத்திற்கு முன்பான உடலுறவு தீமையானது என்பதையும், நமது கலாச்சாரம் குறித்தும், குடும்ப உறவுகளின் தேவை குறித்தும் விளக்கலாம்.

பால்வினை நோய்கள், அதுகுறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு இருத்தல் மிக மிக அவசியம். மேலும் வாழ்க்கை முறை பாலியல் வளர்ச்சியில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களை விளக்குதல் அவசியம். இதன் மூலம் புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை மாணவர்கள் விலக்கும் வாய்ப்பு உண்டு.

மிக மிக முக்கியமாக பாலியல் கல்வி குறித்து ஆசிரியர்களுக்கு தெளிவான வரையறையும் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும்.

அமெரிக்காவிலேயே பாலியல் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் நிறைய பாடங்களை சொல்லாமல் விட்டு விடுவதாகவும், அதற்குக் காரணம் அவர்களுக்கு அதில் போதிய பயிற்சி இல்லாமல் இருப்பதும், சொல்வதற்கு தயங்குவதுமே காரணம் என நியூயார்க் ஆராய்ச்சி ஒன்று கடந்த வாரம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

பாலியல் கல்வி தேவையானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் சரியான அணுகுமுறையுடனும், தெளிவான பார்வையுடனும், உறுதியான வரைமுறையுடனும் அதை அரசு செயலாக்கம் செய்ய வேண்டியது அவசியம்.

ஆபாசப் படங்களும், ஆஸ்கர் விருதும் !

evan.jpg

ஆஸ்கர் விருதுகள் அனைவருக்கும் தெரியும். ஆபாசப் படங்களுக்கான ஆஸ்கர் விருது ?

கடந்த வார இறுதியில் லாஸ் வேகசில் நடந்திருக்கிறது ஆபாச படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா. !!! ஏகப்பட்ட பார்வையாளர்களுடன்(இருக்காதா பின்னே) கோலாகலமாக நடந்திருக்கிறது விழா.

கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் தயாரான ஆபாச திரைப்படங்களின் எண்ணிக்கை 12,000! இதையெல்லாம் எப்ப பார்த்து, எப்படி பார்த்து, என்ன முடிவெடுத்தார்களோ ?

ஈவன் ஸ்டோன் என்பவர் சிறந்த நடிகருக்கான (இப்படியும் சொல்லலாமா ?) விருதைப் பெற்றிருக்கிறார். அவருக்கு வயது 43 ! ( அட.. அதுல கூட வயசானவங்க தான் சூப்பர் ஸ்டார் போல). தல சுமார் அறுநூறு – எழுநூறு படம் நடிச்ச்சு பட்டைய கிளப்பியிருக்காராம். நிறைய விருது வாங்கி அசத்தியிருக்காராம்.

கண்ணீர் மல்க மல்க சிறந்த நடிகைக்கான விருது யார் வாங்கினது என்று தெரியவில்லை 

ஆபாசப் படங்களுக்காக எவ்வளவோ உழைக்கிறோம், நமது திறமை அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று நிகழ்ச்சியை நடத்தியவர் உணர்ச்சி பொங்க உரையாற்றியிருக்கிறார்.

அங்கே ‘ஆபாச’ உடை அணிந்து வந்தார் என்று யாரும் வழக்குப் பதிவு செய்ய மாட்டார்கள் என நம்பலாம்.

என்னென்ன தலைப்புகளில் விருதுகள் வழங்கப்பட்டிருக்கலாம் என்னும் கற்பனையை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

அடுத்த முறை ‘அந்த மாதிரி’ படம் வாங்கினால், எத்தனை ஆஸ்கர் விருது வாங்கியிருக்கிறது என்பதைப் பார்த்து வாங்குங்கள்.
🙂

மகளை மணந்த தந்தை !

_44249940_india_jalpaiguri_map203.gif


தனது சொந்த மகளையே அவளுடைய பதினைந்தாவது வயதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அலி என்பவர் திருமணம் செய்திருக்கிறார்.

அந்த திருமணத்திற்கு அவர் சொன்ன காரணம் “கடவுளின் கட்டளை”. அல்லா சொல்லிவிட்டார் என்று தன்னுடைய மனைவியிடம் சொல்லி திருமணம் செய்து கொள்ள அனுமதியும் வாங்கியிருக்கிறார் அவர்.

இந்த விஷயம் நடந்து ஐந்தாறு மாதங்களாகியிருக்கின்றன. இப்போது அந்தப் பெண் தன்னுடைய தந்தையால் தாயாகியிருக்கிறாள்.

இந்த விஷயம் கேள்விப்பட்ட கிராமத்தினர் கொதித்துப் போயிருக்கின்றனர். அந்த கோபம் கொலையாக மாறும் முன் காவல் துறையினர் அலியையும், அவர் மனைவியையும் காப்பாற்றியிருக்கின்றனர்.

இவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து இவர்களை விடுதலை செய்து “நீதியை” நிலைநாட்டியிருக்கிறது நீதி மன்றம். குறைந்த பட்சம் ஒரு மைனர் பெண்ணை திருமணம் செய்த குற்றத்துக்காகவேனும் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பது கிராமத்து மக்களின் கோரிக்கை.

கோபக் கிராமத்தினருக்குப் பயந்து கணவனும் மனைவியும் தலைமறைவாகியிருக்கின்றனர் இப்போது.

கடவுளுக்கு ஒரு விண்ணப்பம்: இப்படி தேவையற்ற திருமணங்களைச் செய்யச் சொல்லி உங்கள் பக்தர்களை வற்புறுத்தாதீர்கள்.

மனிதர்களுக்கு ஒரு விண்ணப்பம் : கடவுளிடம் எதையும் எழுத்து மூலம் வாங்கிக் கொண்டு செயல்படுங்கள். சட்டம் ஆதாரங்களை எதிர்பார்க்கும்.

செக்ஸ் டே !!! லீவ் எடு கொண்டாடு !!!

suv.jpg

சோவியத் யூனியனின் சிதைவுக்குப் பின் ரஷ்யா சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று மக்கள் தொகை விகிதத்தில் ஏற்பட்டுள்ள சரிவு. இந்த சரிவை நிவர்த்தி செய்வதற்கு ரஷ்ய அரசு பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது.

இந்தியாவில் மக்கள் தொகையை எப்படி கட்டுக்குள் வைப்பது என்பது குறித்து ஆளாளுக்கு தலையைப் பிய்த்துக் கொண்டு திட்டங்களை வகுத்து வருவது போல ரஷ்யாவில் எப்படி அதிகரிப்பது என்று தலையைப் பிய்க்கிறார்கள்.

இரண்டு குழந்தைகள் அல்லது அதற்கு அதிகமான குழந்தைகள் உள்ளவர்களுக்கு கல்வி, வீட்டுப் பொருட்கள் போன்றவை வாங்க பல இலட்சம் ரூபாய்களை ரஷ்ய அரசு இலவசமாகவே வழங்கி வருகிறது.

மைய ரஷ்யாவான Ulyanovsk பகுதியிலுள்ள கவர்னர் கடந்த புதன் கிழமையை “குடும்ப உறவு தினம்” என்று அறிவித்தார். அன்றைய தினம் அலுவலகப் பணிகளை விட்டு விட்டு எல்லோடும் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று மனைவியுடன் காதலுடன் கசிந்துருகி காமத்தில் திளைத்திருக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

அன்றைய தினத்திலிருந்து சரியாக ஒன்பது மாதங்கள் கழிந்து அதாவது ஜூன் பன்னிரண்டாம் தியதி பிறக்கும் குழந்தைகளுக்கு பல பரிசுகள் வழங்கப்படுமாம். தொலைக்காட்சி, கார் போல பல பரிசுகள் இந்த பரிசுப் பட்டியலில் உண்டு. இந்த ஆண்டு “வெற்றிகரமாக” குழந்தை பெற்றுக் கொண்டவர்களில் பம்பர் பரிசாக ஒரு SUV கார் வழங்கப்பட்டிருக்கிறது !

கடந்த மூன்று ஆண்டுகளாகவே செயல்பட்டு வரும் இந்தத் திட்டத்தினால் அந்தப் பிராந்தியத்தில் சுமார் 4.5% பிறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது என்பது ஆஹா.. செய்தி !

சரி.. இந்த விஷயத்தை மட்டும் இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் பண்ண முடிஞ்சிருந்தா பிரச்சனை எப்பவோ முடிஞ்சிருக்குமே !!!

சென்னைக்கு விடிவு காலம் ?

சென்னையிலுள்ள அனுமதி பெறாத விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது வரவேற்கத் தக்கது.

அனுமதி பெற்ற அனுமதி பெறாத எனும் கட்டுப்பாடுகள் இன்றி முக்கியமான சாலைகளில் நிறுவப்பட்டிருக்கும் விளம்பரப் பலகைகளை அகற்றுவது உண்மையிலேயே சென்னையை அழகுபடுத்தும்.

சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சிதறடிக்கும் முக்கியமான பணியை இந்த விளம்பரப் பலகைகள் செய்கின்றன.

சமீபத்தில் ஒரு விளம்பரம் ஆண்களின் ஆடைக்கானது என்பதை நம்பவே முடியாதபடி பெண் ஒருத்தி உள்ளாடையுடன் இருக்கும் கவர்ச்சிப் படத்துடன் நகரை ஆக்கிரமித்திருக்கிறது. சென்னை வாசிகளுக்குத் தெரிந்திருக்கும்.

ஆஹா… உச்சகட்டம் விளம்பரம் இன்னொரு பக்கம், ஆடைகள், நகைகள் என எங்கும் விளம்பர மயம்.

பெரும்பாலான விளம்பரங்கள் பெண்களை மையப்படுத்தியே அதுவும் ஆபாசமாக முன்னிலைப்படுத்தியே வருவது கவலைக்குரியது.

உதாரணத்துக்குத் தான் இந்த விளம்பரம்.

விளம்பரப் பலகைகள், அரசியல் வாசம் வீசும் கட்டவுட்கள், ரசிகர் மன்ற டிஜிடல் பேனர்கள், இவை ஏதும் இல்லா சென்னை நினைத்துப் பார்க்கவே சுகமாக இருக்கிறது.

கலைஞர் செய்த நல்லசெயல்களின் பட்டியலில் இதுவும் சேரட்டும்

dc-ad.jpg