“டிப்ஸைப் படிங்க, லைஃப்ல ஜெயிங்க” எனும் எனது புதிய நூலை பிளாக் ஹோல் மீடியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அவள் விகடன், பெண்ணே நீ, தமிழ் ஓசை களஞ்சியம், ஹெல்த், ஜூனியர் விகடன் போன்ற இதழ்களில் வந்த கட்டுரைகளின் தொகுப்பே இது.
ஆரோக்கியமான விமர்சனங்கள் இந்த நூலுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தினமணி இதை “சிறந்த நூல்” என பிரகடனப் படுத்தியிருப்பது கூடுதல் மகிழ்ச்சி.
சாதாரண விஷயங்களுக்குள் ஒளிந்திருக்கும் பல அசாதாரண உண்மைகளை இந்த நூல் படம் பிடிக்கிறது என நம்புகிறேன். எனது அனுபவப் பாடத்தில் கிடைத்தவையும், எனது தொழில் நுட்ப அனுபவத்தில் கிடைத்தவையும், நான் படித்ததில் என்னை வசீகரித்தவையும் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
வாய்ப்புக் கிடைத்தால் படித்துப் பாருங்கள்,
படித்தால் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
தினமணி இதழில் வெளியான விமர்சனம்
விலை : 130 ரூபாய்கள்
பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர் , சென்னை – 16
9600086474
91-44-43534303/ 43534304
You must be logged in to post a comment.